Advertisement

“இல்ல சித்தப்பா நீங்க போங்க நா கோயிலுக்கு போயிட்டு தான் போவேன் உங்களுக்கு லேட் ஆகிரும் நா நடந்தே போய்கிறேன் ஸ்கூல் பக்கத்துல தானே இருக்கு” என்றதும் “சரிம்மா” என்று கூறிவிட்டு அலுவலகம் கிளம்ப எழுந்து சென்று விட 

மடிக்கு சென்று கூந்தலை உலர வைத்து கொண்டிருக்க “வைத்தி எங்கம்மா இருக்க அம்மா போன் பண்ணிருக்கா பாரு” என்று கீழிருந்து கேட்ட குரலில்

“சித்தி நா மேல இருக்கேன் மேல வாங்க” என்றதும் மாடிக்கு வந்த சாவித்ரி “இந்தா அம்மா உன்கிட்ட பேசனுமாம்” என்று அலைபேசியை கொடுத்துவிட்டு  சென்றுவிட 

“சொல்லும்மா எப்டி இருக்க? அப்பா எப்டி இருக்காரு? இப்போ அப்பாவோட உடம்புக்கு பரவாயில்லயா? டாக்டர் அடுத்து எப்ப வர சொல்லிருக்காரு” என்று மாடி படிகளில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க 

“எங்களுக்கு என்னம்மா நாங்க நல்லா இருக்கோம் நீ எப்டி இருக்க, சென்னை போய் ஆறு மாசம் ஆகிருச்சு ஒரு தடைவை ஊருக்கு வந்து அப்பாவ பாத்துட்டு போயே எப்பவும் உன் பேர தான் சொல்லிகிட்டே இருக்காரு” என்ற இந்திராணியின் குரல் தழுதழுத்தது மகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு அழுகையை வர வழைக்க

பெற்றவர்களை பார்க்க வேண்டும் என்று அவளுக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன சில காலம் தானே இந்த தவம் என்றெண்ணி கொண்டவளுக்கும் கண்கள் கலங்கியது “அம்மா இப்போ தான் வேலையில ஜாயின் பண்ணிருக்கேன் கொஞ்ச நாள் போகட்டும் நா கண்டிப்பா வறேன், அப்பாவ பாத்துக்கோங்க என்ன நினைச்சு நீங்க யாரும் கவலை பட வேணாம் நா நல்லா இருக்கேன்னு அப்பாகிட்ட சொல்லுங்க” என்று தேற்றியவள் “அம்மா மாமாவும் அத்தையும் எப்டி இருக்காங்க” என்று தயங்கியபடி கேட்க 

மறுமுனையில் பெரும் அமைதி நிலவியது “என்னம்மா! அம்மா.. லைன்ல இருக்கீங்களா?”

“ம் இருக்கேன்ம்மா! என்ன சொல்ல அவன் பண்ண காரியத்துக்கு உசுரோட இருக்குறதே பெருசு ஏதோ  இருக்காங்கம்மா, அத்தை தான் மனசு தாங்காம வந்து புலம்பிட்டு போவாங்க மாமா என்கிட்ட பேசுறதே இல்ல, ரொம்ப மனசொடுஞ்சு போயிட்டாரு அவன் பண்ண தப்புக்கு இவரு சங்கடப்படுறாரு, அவர அப்டி பாக்கவே கஷ்டமா இருக்கு! என்ன பண்ணறது நாம ஒன்னு நினைச்சு எல்லாம் ஏற்பாடு பண்ணோம் அது வேற மாதிரி முடிஞ்சு போச்சு” என்று மனம் பொறுக்காமல் ஆற்றாமையாய் வெளிப்படுத்த

“நடக்குறது தானே நடக்கும் நம்ம கையில எதுவும் இல்லம்மா, மாமாவ கவலைப்பட வேணாம்னு சொல்லுங்க நடந்தத நா மறந்துட்டேன் நீங்களும் மறக்க முயற்சி பண்ணுங்க முடிஞ்சு போனத நினைச்சு யாரும் வறுத்தபட வேண்டாம் அதனால எந்த பிரயோஜனமும் இல்ல வேதனை தான் மிஞ்சும்” என்றவள் “எனக்கு டைம் ஆச்சு நா நாளைக்கு போன் பண்ணி பேசுறேன்ம்மா” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்

முதல் நாள் வேலை அதுவும் பள்ளி ஆசிரியை என்பதால் சற்று படப்படப்பாக இருந்தாள் வைதேகி, இடைவரை நீண்ட  கூந்தலை கடின பட்டு கொண்டையிட்டவள் ஆசிரியருக்கே உரித்தான மிதமான ஒப்பனையில் கிளம்பி வெளியே வர,

“வா வைத்தி உனக்கு பிடிச்ச பால் பணியாரம் பண்ணிருக்கேன்” என்று தட்டில் சூடாக கோலிகுண்டை போல் வெள்ளை நிறத்திலான பணியாரத்தை பரிமாற

“ம்ம்..” என்று ரசித்து ருசித்தவள் “டேஸ்டுல உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல சித்தி பிரமாதமா இருக்கு அம்மாவும் செய்வாங்க ஆனா உங்க அளவுக்கு டெஸ்ட் வராது அவங்களுக்கு” என்று புகழாரம் பாடியவள் போதுமானளவு பணியாரங்களை கபளீகரம் செய்து முடித்துவிட்டு “சரி சித்தி நா கிளம்புறேன் ஈவ்னிங் எப்ப வருவேன்னு தெரியாது கிளம்பும் போது கால் பன்றேன்” என்று கூறி ஜெகநாதன் சாவித்ரி இருவரையும் ஒன்றாய் நிறுத்தி காலில் விழ

அவள் செயலில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சன்னமாய் புன்னகைத்து கொண்டு “நல்லா இரும்மா உன் மனசு போல எல்லாம் நல்லாதாவே நடக்கும்” என்று வாழ்த்தி விட்டு வேகமாக கணவனின் சட்டை பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார் சாவித்ரி

மறுப்பு கூறாமல் புன்னகைத்தபடி வாங்கி கொண்டவள் “இப்டின்னா தினமும் கால்ல விழலாம் போலயே” என்று கண்சிமிட்டி குறுப்புத்தனதுடன் கூற

“உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம் வைத்தி குழந்தை இல்லாத ஏக்கத்தை தீக்குறது நீயும் அவனும்” என்றவர் சட்டென நிறுத்தி கொண்டு “நீ ஒருத்தி தான் உனக்கு இல்லாததா” என்று கண்கள் கலங்கிட கூறவும்

“சவிம்மா என்ன இது சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு முதல் நாள் வேலைக்கு போறா சந்தோசமா அனுப்பி வைக்காம நீயும் அழுது அவளையும் அழ வைக்கிற,பாரு நீ கண்கலங்குறத பாத்து அவளும் அழுகுறா” என்று மனைவியை ஆறுதல் படுத்தினார் ஜெகநாதன்

தாயும் மகளும் பாசத்துடன் ஒருவரை ஒருவர் ஆறுதலாக அணைத்து கொள்ள வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது “நா போய் பாக்குறேன்” என்று கதவை திறந்த ஜெகநாதன்

எதிரில் ஆறடி உயரத்தில் வாட்ட சாட்டமாய் கஞ்சி போட்ட சட்டை துணியை போல விரைப்பாய் இறுகிய முகத்துடன் இதழில் பட்டும்படாமல் மெலிதான புன்னகையை உதிர்த்தபடி நின்றிருந்தவனை கண்டு “அட வாடா விஷ்ணு எப்டி இருக்க? எவ்ளோ.. நாளாச்சு உன்ன பாத்து உள்ள வா” என்று அழைக்க

“யாரு வந்துருக்காங்க” என்றவாறே வாசல் வந்த சாவித்ரி வாசலில் நின்றிருந்தவனை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டார் “அத்தை” என்று தயங்கி அழைத்தவன் மேல் கோப பார்வையை வீசிவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட

 “நீ  உள்ள வாடா உன்னோட அத்தைய பத்தி தான் உனக்கு தெரியுமே எதுனாலும் உள்ள வந்து பேசிக்கலாம்”

 “இல்ல மாமா அத்தை கூப்ட்டா தான் வருவேன் நா பண்ண காரியத்தை யாராலயும் அவ்ளோ சீக்கிரத்தில மறக்க முடியாது அவங்க கோபம் நியாயமானது தானே அவங்க கூப்பிடட்டும் நா வறேன்” என்று தீர்க்கமாய் கூறிவிட்டு அசையாமல் ஆணியாடித்தர் போல நின்று கொண்டான் விஷ்ணு காவல் துறையில் உதவி ஆணையராக மதுரையில் பணியாற்றியவன் விரும்பி ஏற்று சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு யாயிடமும் சொல்லாமல் வந்துவிட்டான்

“நீ அவளுக்கு மேல பிடிவாதம் பிடிக்கிற” என்று அலுத்து கொண்டு உள்ளே சென்று மனைவியை சாமதனம் செய்ய தொடங்கினார் “சவி அவன உள்ள வான்னு கூப்பிடு நீ கூப்பிட்டா தான் வருவேன்னு பிடிவாதம் பண்றான், ப்ளீஸ் உன்னோட கோபத்தை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு அவன கூப்பிடு” 

“என்னால அவன கூப்பிட முடியாதுங்க உள்ள வரணும்னா வரட்டும் இல்லனா அப்டியே போகட்டும் அவன் யாரு எனக்கு? அவன நான் எதுக்கு கூப்பிடனும்? எனக்கு என்ன உரிமை இருக்கு?” என்று பொங்கியவர் “அன்னிக்கு அத்தனை பேர் அவன் கால்ல விழாத குறைய கேட்டோமே கொஞ்சமாவது மனசு இறங்கி வந்தனா இன்னைக்கு எந்த முகத்தை வச்சுட்டு இங்க வந்துருக்கான் என்னால அவன் கிட்ட பேசமுடியாது” என்று முறுக்கி கொண்டு நிற்க

நடப்பது எதுவும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தவள் “யார் வந்துருபாங்க..” என்ற யோசைனையோடு “சித்தப்பா யாரு வந்துருக்காங்க சித்தி எதுக்கு இவ்ளோ கோபப்படுறாங்க” என்று வாசலில் இருப்பவன் யார் என்று தெரியாமல் கேட்க

சங்கடத்துடன் அவளை பார்த்தவர் “விஷ்ணு வந்துருக்கான்ம்மா உள்ள வாடான்னா இவ கூப்பிட்டா தான் வருவேன்னு வெளியவே நிக்கிறான்” என்றதும் மகிழ்ச்சியில் பச்சை இலையாய் துளிர்த்த மனம் மறு நிமிடமே கருகி போன சருகை போல காற்றில் கரைந்து இருந்த இடம் தெரியாமல் போனது 

 சாவித்ரியின் அருகில் வந்து “சித்தி உள்ள வான்னு ஒரு வார்த்தை கூப்பிடுங்க வீடு தேடி வந்தவங்கள வெளிய நிக்க வைக்கிறது நல்லா இல்ல, எதிரியாவே இருந்தாலும் உள்ள வச்சு பேசுறது தான் நல்லது அவரு உங்க அண்ணனோட பையன் சம்பந்தப்பட்ட நானே நடந்த எல்லாத்தையும் மறந்துட்டேன் நீங்க முடிஞ்சத நினைச்சு கோபப்படுறது கொஞ்சம் கூட சரியில்ல சித்தி போங்க போய் அவர உள்ள கூப்பிடுங்க”  

“நீ மறந்துட்ட ஆனா என்னால எதையும் மறக்க முடியலம்மா மனசு ஆற மாட்டிங்கிது” என்று குரல் கமர கூறியவரை அணைத்து ஆறுதல்படுத்தி இருவரும் அனுப்பி வைத்தனர்

ஒவ்வொரு நொடியும் குற்றவுணர்ச்சி மோலோங்கி தவிப்புடன் வாசலில் நின்று கொண்டிருந்தவனை முகம் பாராமலே “உள்ள வா” என்று வேண்டாத விருந்தாளியை போல அழைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று ஐக்கியமாகி கொள்ள

உள்ளே வந்தவன் ஓரமாய் நின்று கொண்டிருந்தவளை கண்டு திகைத்தவன் இதயம் படபடவென அடித்து கொள்வதை உள்ளங்கயை அடக்கி மறைக்க பாடுபட்டவன் திகைப்பை மறைத்து கொண்டு “ஹாய் வைத்தி” என்றான் வலுகட்டாயமாக வரவழைத்து கொண்ட புன்னகையை சிந்தியபடி 

“எப்டி இவரால மட்டும் எதுவும் நடக்காத மாதிரி பேச முடியிது” என்று மனம் குமுறியவள் அவனை சட்டை செய்யாமல் “சித்தப்பா எனக்கு டைம் ஆச்சு நா கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அவனை கடந்து செல்ல

அவள் பார்வையில் தெரிந்த கேள்விக்கு விடை தெரிந்தாலும் அதை கூறும் மனநிலை அவனுக்கு இன்னும் எழவில்லை, மனதின் வலியை மறைத்து கொண்டு முயன்று புன்னகை வரவழைத்தவன் ஜெகநாதனை பார்த்தான் அவன் மனநிலையை கண்டு கொண்டரோ என்னவோ 

“சரி நீ போய் குளிச்சுட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடு எனக்கு வேலைக்கு நேரமாச்சு ஈவ்னிங் வந்து பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு அலுவலகம் கிளம்பி சென்றுவிட 

பெருமூச்சை வெளியிட்டவன் தன் அலைபேசியை எடுத்து துவாரகேஷ் என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு வந்ததை அறிவித்துவிட்டு வேலையை கவனிக்க தொடங்கினான்.  

தொடரும்

காற்று தீ போல கண்மூடி தனமாய் என் சோகம் சுடர் விற்று எரியுதுடா

மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா

யாரிடம் உந்தன் கதை பேச முடியும் வார்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்

பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா

பூவனமும் போர்க்களமாய் மாறுதட

 காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா

உன்னை விட கல்லரையே பக்கமடா.

Advertisement