Advertisement

ப்ச் இன்னும் கால் பண்ணல இனிமேதான் பண்ணனும்! என்ன பண்றதுன்னு தெரியலடா ஒரு க்ளூ கூட கிடைக்க மாட்டிங்கிது சாதாரணமா விட முடியல நம்ம வீட்டுலயும் பொண்ணுங்க இருக்காங்க அவங்கள பாக்கும் போதெல்லாம் எனக்கு இந்த கேஸ் தான் ஞாபகம் வருது ஒரு பொண்ணு ரெண்டு பொண்ணு இல்ல மொத்தம் பதினைஞ்சு பேர்!, கடத்துனான்! அவங்கள என்ன பண்ணான்? இப்போ அவன் எங்க இருக்கான்! அந்த பொண்ணுங்க எல்லாரும் உயிரோட தான் இருக்காங்களா? இல்ல ஏதாவது பண்ணிட்டானான்னு ஒவ்வொன்னையும் யோசிக்க யோசிக்க எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போல இருக்குடா, நைட்டு கண்ண மூடினா தூக்கமே வர மாட்டிங்கிது எப்டி கண்டுபிடிக்க போற? அவனுக்கு என்ன தண்டனை வாங்கி கொடுக்க போறேன்ற கேள்வி வண்டு மாதிரி மண்டைய கொடையிது இந்த நேரம் பாத்து சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க என்ன பண்றதுன்னே தெரியலடா?” என்று மனதில் உள்ளதை கொட்டியவன் தலையை கோதி இருக்கையின் பின்னால் சாய்ந்து கொள்ள

பொறுமையா யோசி விஷ்ணு எதையும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய கூடாது  அவசரப்பட்டு ஒரு காரியம் பண்ணதுனால தான் இப்போ நா சஸ்பெண்ட் ஆகி உக்காந்துருக்கேன் என்ன ட்ரான்ஸ்பர் பண்ணறதுக்கு பேச்சு வேற நடந்துட்டு இருக்கு சரி அத விடுஎன்றவன்யோசிச்சு பாரு ஏதாவது ஒரு க்ளூ கிடைக்கும் எங்கயோ தப்பு பண்ணிருக்க யோசிஎன்று அவன் சிந்தனையை கூர்மையாக்க 

என்ன யோசனை செய்தும் அவனுக்கு சந்தேகம் உண்டாகும் படியான எந்த சம்பவமும் நினைவில் எட்டவில்லைஇல்லடா சரியான ரூட்ல தான் போயிருக்கேன் தப்பு பண்ண சான்ஸே இல்ல விஜி” 

அன்னைக்கு வைத்திக்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சுன்னு யாரோ ஒருத்தர் உனக்கு போன் பண்ணதா சொன்னியே அந்த ராங் கால் யாருன்னு கண்டுபிடிச்சிட்டியா?” என்று கேட்டதும்

.. காட்…! இதை எப்டி மறந்தேன் நீ சொன்னதும் தான் ஞாபகம் வருது ஒரு நிமிஷம்என்று கட்டுபாட்டு அறைக்கு போன் செய்தவன்ஹாலோ நா  விஷ்ணு பேசுறேன் ஒரு இன்ஃபர்மேஷன் வேணும் நா ஒரு நம்பர் தரேன் அது யாரோட நம்பர்ன்னு எனக்கு சொல்றிங்களா?” என்று மொபைல் எண்ணை கொடுக்க

ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார்என்ற காவலர்சார் அந்த நம்பர் வினோத்ன்ற பேர்ல ரிஜிஸ்டர் ஆகிருக்குஎன்று விலாசம் முதல்

கொண்டு அனைத்தையும் கூற நன்றி கூறி அணைப்பை துண்டித்தவன்க்ளூ கிடைச்சுருச்சு சீக்கிரம் வாஎன்று அவசரப்படுத்தினான் விஷ்ணு

எங்கடா!” என்றவனைஅத போற வழியில சொல்றேன் சீக்கிரம்என்று கூறி அழைத்து சென்றவன், வைதேகி பணிபுரியும் பள்ளியின் முன் பைக்கை நிறுத்திவிட்டு பள்ளியின் முதல்வரை அணுகி அனுமதி வாங்கி கொண்டு வினோத்திற்காக வரவேற்பாளர் அறையில் காத்திருக்க

சார் என்ன கூப்பிட்டீங்களாமே! என்ன விஷயம் சார்என்று பள்ளி முதல்வரிடம் வினோத் பவ்யமாய் கேட்க

உங்கள பாக்கணும்னு சொல்லி ரெண்டு பேர் வந்துருக்காங்க பக்கத்து ரூம்ல தான் வெய்ட் பண்ணுறாங்க போய் பாருங்கஎன்று கூறியதும் 

யோசனை செய்தபடி அறைக்குள் நுழைந்தவன் விஷ்ணுவை கண்டதும்சார் நீங்களா? எதிர்பாக்கவே இல்ல சொல்லுங்க சார் என்ன விஷயம் என்ன பாக்கணும்னு சொன்னிங்களாமே?” 

ஆமா வினோத்! அன்னைக்கு வைதேகிக்கு ஆக்ஸிடன்ட்டுன்னு பொய் சொன்னது.. நீங்க தானே?” என்றதும் வினோத்தின் முகம் வெளிரியது திகைப்பில் உடல் நடுக்கம் காண 

சொல்லுங்க வினோத் ஏன் அப்டி சொன்னிங்க வைதேகி மேல உங்களுக்கு அப்டி என்ன கோபம் சொல்லுங்க! கால் பண்ணலன்னு மட்டும் சொல்லிராதிங்க எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்து தான் பேசுறேன், உண்மைய சொல்லுங்க! நீங்களா பண்ணிங்களா! இல்ல யாராவது அப்டி கால் பண்ண சொன்னாங்களா?” என்று விசாரிக்கும் தோணியில் அதட்டி கேட்க

வேறு வழியில்லாமல் பொந்துக்குள் அகப்பட்ட எலியை போல சரணாகதி அடைந்து உண்மையை கூற தொடங்கினான்சார் நீங்க என்மேல கோபப்படுறது நியாயம் தான் நான் தான் கால் பண்ணேன்!” என்றவன் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டுஆனா.. வைதேகி மேல எனக்கு எந்த கோபமும் இல்ல அவங்க எனக்கு தங்கச்சி மாதிரி, எனக்கு அந்த நேரத்துல அப்டி சொல்றத தவிர வேற வழி தெரியல நா அப்டி சொல்லலன்னா என்னோட பையன கொன்னுருவேன்னு மிரட்டுனாங்க எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல, எனக்கு இருக்குறது ஒரே பையன் அதான் ஏன் எதுக்குன்னு கேக்காம வைதேகிக்கு ஆக்சிடன்ட்டுன்னு பொய் சொன்னேன் எதையும் நா வேணும்னு பண்ணல சார், உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லிருந்தாங்க ஆனா இப்போ நீங்க ஆதாரத்தோட கேக்கும் போது பொய் சொல்ல விரும்பல, நா சொன்னேன்னு வெளிய யார்கிட்டயும் சொல்லிறாதிங்க ப்ளீஸ் சார் என்னோட உயிருக்கு ஆபத்துனா நா அப்பவே உண்மைய சொல்லிருப்பேன் ஆனா என்னோட பையன் உயிருக்கு கேரண்டி இல்லன்னு சொல்லி மிராட்டுனாங்க சார்என்று பயத்தோடு இறைஞ்சினான்

பயப்படாதீங்க வினோத் நா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்என்று இளக்கம் நிறைந்த குரலில் பேசியவன்அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமா?” 

இல்ல சார் போன்ல தான் பேசுனாங்க என்னோட பையனை வீடியோ எடுத்து மிரட்டுனாங்க முகம் எதுவும் தெரியல சார்என்றிட

ஓகே மறுபடியும் அந்த ஆள் உங்களுக்கு கால் பண்ணா எனக்கு இன்ஃபர்ம் பண்ணுங்க சரியாஎன்றவன்வைதேகிக்கிட்ட எதுவும் சொல்ல வேணாம் சும்மா வந்துட்டு போனேன்னு மட்டும் சொல்லிருங்கஎன்று விட்டு பள்ளியில் இருந்து வெளியே வர விஷ்ணுவின் அலைபேசி சிணுங்கியது துவாரகேஷ் தான் அழைத்திருந்தான் 

சொல்லுடா டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்க

டேய் சீக்கிரம் கிளம்பி  ஹாஸ்பிடல் வா எதையும் விளக்கமா சொல்றதுக்கு டைம் இல்ல எந்த வேலையா இருந்தாலும் அப்றம் பாத்துக்கலாம் உடனே கிளம்பி வாஎன்று அவசரமாக கூறிவிட்டு மறுமுனையில் போனை வைத்துவிட

என்ன விஷ்ணு யார் போன்ல?

துவாரகா தான்! சீக்கிரம் கிளம்பி ஹாஸ்பிடல் வர சொல்றான் அவனுக்கு என்னாச்சுன்னு தெரியல எதையும் சொல்லாம வச்சுட்டான் ஏதாவது முக்கியமான விஷயமா தான் இருக்கும்! ரொம்ப பதட்டமா வேற பேசுனான், இப்போ பேசுறதுக்கு டைம் இல்ல என்னன்னு போய் பாக்கலாம்என்று இருவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்

குற்றவாளிக்கு சிகிச்சை அளிக்கும் அறை வாயிலில் குறுக்கும் நெடுக்குமாக தவிப்புடன் நடந்து கொண்டிருந்தான் துவாரகேஷ்என்ன சார் அவங்க வந்துட்டாங்களா? சீக்கிரம் வர சொல்லுங்க இன்னும் கொஞ்ச நேரம் தான் அவருக்கு டைம் எது கேக்குறதா இருந்தாலும் சீக்கிரமா கேளுங்க!” என்று தூண்டியவர்போன் பண்ணி வர சொல்லுங்கஎன்று கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட

அழைப்பு விடுக்க வேண்டி பேண்ட் பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்தவன் இருவரும் வேகமாக உள்ளே வருவதை கண்டுசீக்கிரம் வாங்கஎன்று உள்ளே அழைத்து சென்றான் துவாரகேஷ்

சொல்லு சதீஷ் விஷயம் என்னன்னு சொல்லு யார் உன்ன இப்டி பண்ண சொன்னாங்கன்னு சொல்லுஎன்று ஊக்கவிக்க, விஷ்ணு படுத்திருந்தவனின் மிகஅருகில் சென்றுசொல்லு!எதுக்காக இப்டி பண்ண? உன்ன இப்டியெல்லாம் பண்ண சொன்னது யாரு?” என்று சன்னமான குரலில் கேட்டான்

துவாரகேஷ் தனது அலைபேசியில் உரையாடலை வீடியோ எடுக்க ஆரம்பித்தான் ஆக்சிஜன் மாஸ்கை எடுத்தவன் விஷ்ணுவின் கைப்பற்றிசாரி சார் என்னால உங்க வேலைக்கு பங்கம் வந்துருச்சு அதுக்காக நா மன்னிப்பு கேட்டுறேன் இந்த மாதிரி பண்ணலன்னா என்னோட தங்கச்சிய கொன்னுருவேன்னு மிரட்டுனான் அதனால தான் அவன் சொன்னதையெல்லாம் அப்டியே சொன்னேன் நிஜமாவே எனக்கு வாழ விருப்பமில்ல சார் பாவப்பட்ட பணத்துல இத்தனை நாள் வாழ்ந்தேன்னு நினைக்கும் போது உடம்பெல்லாம் கூசுது அதான் இந்த மாதிரி ஒரு முடிவெடுத்தேன் உங்க நல்லதுக்கு தான் இந்த கேஸை எடுத்து நடத்த வேணாம்னு சொன்னேன்என்றவன் தன் சுயசரிதையை சொல்ல தொடங்கினான்

என்னோட பேர் சதீஷ் பிடெக் படிச்சிருக்கேன், இருந்த ஒரு நி..லத்தை வித்து கஷ்ட..ப்பட்டு வீட்டுல படிக்க வச்சாங்க! ஒரே.. பையன் ரெண்டு அக்கா ஒரு தங்கச்சி ..அழகா போய்ட்டுருந்த குடும்பத்துல .. .. இடி விழுந்த மாதிரி!, அப்பா திடீர்னு இறந்து போயிட்டாரு அதுக்கப்புறம் அம்மா தான் என்ன படிக்க வச்சாங்க! நானும் படிச்சு முடிச்சேன், பல கனவுகளோட! ஆனா எனக்கு பிடிச்ச வேலை தான் கிடைக்கல இளம் வயசு அப்போ எனக்கு தெரியல!, யாரும் குறையா பே..சிற கூடாதுன்னு படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை தான் பாப்பேன்னு வெட்டிய சுத்திட்டு இருந்தேன்” 

அக்கா ரெண்டுபேருக்கும் கல்யாண வயசு ரெ..ரெ..ண்டு பேரையும் எப்டி கறையேத்து..றதுன்னு தெரியாம அம்மா தவிச்சிட்டு இருந்தாங்க, ஏதாவது ஒரு வேலைக்கு போடா படிச்சிட்டு வெட்டியா சுத்திட்டு இருக்கயேன்னு அப்பப்பா புலம்புவாங்கஎன்று வார்த்தைகள் திக்கி திக்கி உச்சரித்து உணர்ச்சியற்று புன்னகை புரிந்தவன் 

..அப்ப தான் எனக்கு ஒரு ஜாப் ஆஃபார் வந்துச்சு என்னோட தகுதிக்கு ஏத்த எனக்கு பிடிச்ச வேலைன்னு நினைச்சு நானும் அவங்க சொல்ற எல்லாத்தையும் கேள்வி கேக்காம பண்ணேன்! ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை என்கிட்ட ப்ளட் சாம்பிள் கொண்டு வந்து கொடுப்பாங்க வெ..ரி.. இம்பார்ட்னட் ன்னு அதுல குறிச்சிருப்பாங்க, நானும் அது என்ன குரூப்ன்னு அவங்க கிட்ட சொல்லி ரிப்போர்ட் ரெடி பண்ணி கொடுப்பேன் ஆனாஅவங்க கொண்டு வர ப்ளட் சாம்பிள் எல்லாமே நெகட்டிவ் தான் எதுக்கு அந்த குறிப்பிட்ட ப்ளட் சாம்பிள் கேக்குறாங்கன்னு அவங்ககிட்டயேகே..க்.. கேட்டுருக்கேன் வேலைய மட்டும் பாருன்னு சொல்லிருவாங்க நானும் நமக்கு எதுக்கு வம்புன்னு பேசாம இருந்துடேன், ஆனாஅன்னைக்கு நைட் நா பாத்த காட்சி இன்னும் என்னோட கண்ணுக்குள்ளயே இருக்கு சார்என்று விம்மி கண்ணீர் வடித்தவன்இப்டி சட்டத்துக்கு புறம்பா யாருக்குமே தெரியாம கொடுமையான காரியம் செஞ்சவங்களுக்கு  வேலை பாத்துருக்கேன்னு நினைக்கும் போது அறுவருப்பா அசிங்கமா இருக்கு சார்என்று கூறியவன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான் நா வறண்டு வார்த்தைகள் பிரள தொடங்கின

Advertisement