Advertisement

விஷ்ணு அளித்த பேட்டியை பல்லை கடித்தபடி பார்த்து கொண்டிருந்தவன் எம்எல்ஏக்கு போன் செய்து உக்கிரம் சிரத்திற்கு ஏற வாட்டி எடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட அடுத்த நொடி கைலாசத்தை காய்ச்சி எடுக்க அழைப்பு விடுத்தார் எம்எல்ஏ உத்தமன் 

யோவ் என்னய்யா நடக்குது அங்க அவன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கான் நீ என்ன பண்ணிட்டு இருக்க ஏசி ரூம்ல உக்காந்துட்டு ஹாயா காத்து வாங்கிட்டு இருக்கியா? எவ்ளோ என்னன்னு கண்ணுமன்னு தெரியாம அளந்து அழுது தொலைச்சத்துக்கு நீ பண்ற கைமாறு இது தானா? அவன்கிட்ட என்ன ஆதாரம் இருக்குன்னு நைஸா கேட்டு வாங்க பாரு அவன் பாட்டுக்க கிறுக்கு தனமா ஏதாவது பண்ணிட போறான் அப்றம் எல்லாரும் கம்பி எண்ண வேண்டியது தான் இந்த அஞ்சு வருஷ அரசியல் வாழ்க்கை மட்டுமில்ல என்னோடா கௌரவம் அந்தஸ்து எல்லாம் போயிரும் மக்கள் கிட்ட இருக்குற நல்ல பேரை கெடுத்து நாசமாக்கிறாத எலெக்ஷன் வேற வருது என்னய்ய லைன்ல இருக்கியா இல்ல போய் தொலைஞ்சுட்டியா?” என்று மறுமுனையில் நிலவிய அமைதியில் மேலும் கடுப்பானவர் காச்மூச்சென்று கத்த

சார் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது நா பாத்துகிறேன் நீங்க டென்ஷன் ஆகாம இருங்க அவனுக்கு போன் போட்டு என்ன பண்ணணுமோ பன்றேன் அவருக்கிட்ட சொல்லிருங்கஎன்று பவ்யமாய் குழைந்து குழைந்து பேசியவர் மேலிடத்தில் கலந்து பேசி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஷயத்தை விஷ்ணுவிடம் கூறிவிட்டு கோபத்துடன் அமர்ந்திருந்தார் கைலாசம்விஷயம் மட்டும் வெளியே கசிந்தால் என்ன நடக்கும் எந்த எல்லைக்கும் போகலாம் மேலிடத்தில் இருந்து என்ன  நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் அதுவும் சட்டத்திற்கு புறம்பான செயல்என்று சிந்தனைகள் சிந்தையை நிறைத்து முகத்தில் கலவரம் உண்டு பண்ணியது, குளிரூட்டப்பட்ட அறையிலும் அவருக்கு வியர்வைகள் துளித்துளியாய் சொட்ட தொடங்கின 

கமிஷ்னர் அலுவலகம் வேகமாக உள்ளே நுழைய முற்பட்டவனை தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளிடம்சார பாக்கணும்!” என்றான் விஷ்ணு

ஒரு நிமிஷம் சார்என்று உள்ளே சென்று அனுமதி பெற்று கொண்டு சற்று நிமிடத்தில் வெளி வந்துசார் உங்கள வர சொன்னாரு!” என்று கூறிவிட்டு தான் இருந்த இடத்தில் முன்பு இருந்தது போலவே நின்று கொள்ள, பரபரப்புடன் உள்ளே சென்றவன் விறைப்பாய் சல்யூட் அடித்து நிற்க

என்ன பண்ணி வச்சுறுக்க இடியட் உன்னால டிப்பார்ட்மெண்ட்க்கே கெட்ட பேர் உண்டாகிருச்சு யாரு மீடியாவுக்கு இன்பார்ம் பண்ணது? அந்த லட்சணத்துலயா விசாரணை பண்ணுவ ஸ்டேஷன்குள்ள யார் இருக்காங்க இல்லன்னு பாத்து விசாரிக்க மாட்டியா?,என்ன விசாரணையா இருந்தாலும் இப்டியா கேர்லஸ்ஸா இருப்ப எதுக்காக மேன் அந்த ஆள அரஸ்ட் பண்ண சொல்லு? அவன் என்ன தப்பு பண்ணான் அரஸ்ட் பண்றதுக்கு வாரண்ட் எதுவும் வாங்குனியா? இல்ல என்கிட்ட இந்த மாதிரின்னு இன்பார்ம் பண்ணியா? உனக்கு உதவுறேன்னு சொன்னேன் தான் ஆனா உன்னோட இஷ்டத்துக்கு நீ பண்ற முட்டாள் தனமான காரியத்துக்கு என்னால உதவ முடியாது நீ பண்ண காரியத்துக்கு நானும் துணையா இருந்தேன்னு தெரிஞ்சா நாளைக்கு என்னோட பேரும் சேந்து தான் நாறும்என்று கோபத்தில் படபடவென பட்டாசாய் வெடித்தவர் ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாது தண்ணீரை எடுத்து மடமடவென குடிக்க

எந்தவித அலட்டலும் காட்டாமல் நிதானமாக பேச தொடங்கினான் விஷ்ணுசாரி சார் இந்த மாதிரி நடக்கும்னு நா கொஞ்சமும் எதிர்பாக்கல! கிட்னாப் கேஸ்ல சந்தேகப்பட்டு தான் அரஸ்ட் பண்ணோம்! ஆனா.. அவன் இப்டி ஒரு முடிவை எடுப்பான்னு நினைக்கல! நாங்க எதுவும் பண்ணல சொல்ல போனா டிப்பா விசாரிக்க கூட ஆரம்பிக்கலநீங்க நினைக்கிற மாதிரி இது பெரிய விஷயமும் இல்ல சார், அவன் இப்டி பண்ணான்னு எங்களுக்கே தெரியல? இந்த மாதிரி பண்ண சொன்னது அந்த முகம் தெரியாத குற்றவாளி தான்!, அவனே எனக்கு கால் பண்ணி அவன் போட்ட பிளான்னு திமிரா சொல்றான்! நா சொல்றத கேளுங்க சார் அவசரப்பட்டு சஸ்பெண்ட் பண்ணாதீங்க அந்த ஆர்டர கேன்சல் பண்ணுங்க அவன் ஏன் இப்டி பண்ணான்னு நாளைக்கு காலையில உங்களுக்கு கண்டிப்பா நா சொல்றேன் ஆதாரம் கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க சார்என்று தன்னிலை விளக்கம் அளிக்க

மிஸ்டர் விஷ்ணு எனக்கு உத்தரவு போடுற அளவுக்கு நீங்க பெரிய ஆள் இல்ல அத முதல புரிஞ்சுக்கோங்க! நீங்க இப்போ தானே இங்க டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துருக்கிங்க எனக்கு தெரியும் எதை பண்ணனும் பண்ண கூடாதுன்னு, சந்தேகப்பட்டு அரஸ்ட் பண்ணா விசாரிச்சிட்டு விட்டுரு வேண்டியது தானே? அத விட்டுட்டு அடாவடி தனம் பண்ணுவீங்களா? உங்கமேல இருந்த மரியாதையே போச்சு  உங்களால ஒரு ஆள் சாகக்கிடக்கிறது சாதரண விஷயமா? ஈஸியா சொல்றிங்க பெரிய விஷயமே இல்லன்னு லுக் விஷ்ணு சஸ்பென்ஷன் ஆர்டர கேன்சல் பண்ண முடியாது இது நா எடுத்த முடிவு இல்ல ஹயர் ஆபீசர் எடுத்த முடிவு நா ஒன்னும் பண்ண முடியாது!, சஸ்பெண்ட் பண்ணது பண்ணது தான் நாளைக்கு விசாரணை கமிஷன் கண்டிப்பா நீங்க ரெண்டுபெரும் ஆஜராகனும் இல்லன்னா உங்க ரெண்டுபேர் மேலயும் வேற மாதிரியான ஆக்சன் எடுக்க வேண்டியது வரும் இதையும் நா சொல்லல ஹயர் ஆபீசர் சொன்னது இப்போ நீங்க போகலாம்என்று சொல்ல வேண்டியதை அதிகாரமாய் உரைத்து விட்டு கோப்பில் கவனத்தை பதித்திருப்பதை போல பாவ்லா செய்த வண்ணம் கீழ் கண்ணால் அவனை நோட்டமிட

இருக்கையில் அமர்ந்திருந்தவரை பார்த்து சன்னமான புன்னகை சிந்தியவன்தெரியும் சார்! யார் அந்த ஹயர் ஆபீசர்ன்னுஅவருக்கிட்ட சொல்லிருங்க அவ்ளோ சீக்கிரம் இந்த விஷ்ணு இந்த கேஸ்ல இருந்து பின் வாங்க மாட்டான்னு, அவனுக்கு துணையா யார் யார் இருக்காங்கன்னு ஆதாரத்தோட கண்டுபிடிச்சு அவனையும் அவனோட கூட்டாளிகளையும் பிடிச்சு காட்டுறேன் எதுவும் பண்ண வேணாம்னு தான் இருந்தேன் ஆனா நீங்க இந்த அளவுக்கு போன பிறகு நானும் சும்மா வேடிக்கை பாத்துட்டு இருக்க போறதில்லை சார் என்ன செய்யணுமோ செய்யிறேன் இனி பேசி எந்த பிரயோஜனமும் இல்லஎன்று சவாலாக மொழிந்துவிட்டு வேகமாக வெளியேற முயன்றவனை தடுத்து நிறுத்தியவர் 

ஏதோ ஆதாரம் இருக்குன்னு மீடியாக்கு பேட்டி கொடுத்துயே அது என்ன ஆதாரம்! அதை என்கிட்ட கொடுத்துட்டு போ என்ன பண்ணணுமோ நா பண்ணிக்கிறேன் ஆர்வகோளருள ஏதாவது பண்ணி வச்சுறாதா என்னால யாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது நீ பண்ற கிறுக்கு தனமான காரியத்துக்குஎன்று உயர் அதிகாரி என்ற கர்வம் தலைக்கு ஏற சிடுசிடுப்பின் தன்மை சற்றும் குறையாமல் பேசினார் கைலாசம்

சாரி சார் ஆதாரத்தை உங்ககிட்ட கொடுக்க முடியாது! அதான் என்ன சஸ்பெண்ட் பண்ணிட்டீங்கள அப்றம் என்ன? உங்க விஸ்வசமான வேலைய யாருக்கு பாக்கணுமோ பாருங்கா எனக்கு வேற வேலை இருக்குஎன்று அமர்த்தலாக கூறிவிட்டு கூர்மையான பார்வையை செலுத்திவிட்டு வெளியேறியவனின் அலைபேசி சிணுங்கியது

அழைப்பை உயிர்பித்தவன்சொல்லு விஜிஎன்றான் சோர்வான குரலில் 

என்னடா என்னாச்சு நியூஸ்ல என்னென்னமோ சொல்றாங்க அவன் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லையே? கடைசில இப்டி ஆகிருச்சே விஷ்ணு அடுத்து என்ன பண்ண போற?” என்று மறுமுனையில் பரபரப்புடன் செய்தியின் தாக்கம் குறையாமல் கேட்க

ப்ச் எதிர்பாக்கவே இல்ல விஜி இப்டி பண்ணுவான்னு! கமிஷ்னர் நா சொல்ற எதையுமே கேக்க மாட்டிங்கிறாரு கண்டமேனிக்கு பேசுறாரு என்னையும் துவாரகாவையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க நாளைக்கு ஆஜராக சொல்லி ஆர்டர்! என்ன பண்றதுன்னு தெரியல ஒரே.. குழப்பமா இருக்குடா?, நீ சீக்கிரம் கிளம்பி ஹாஸ்பிடல் போ நா கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுறேன் தனியா என்னால எதையும் யோசிக்க முடியல அவன் பண்ணத நினைக்க நினைக்க ஆத்திரமா வருது, இந்த பிரஸ்காரங்க வேற அவங்களுக்கு தான் கேள்வி கேக்க தெரிஞ்ச மாதிரி இஷ்டத்துக்கு கேள்வி கேக்குறாங்க! இதுல பிரஸ்க்கு யார் சொன்னாங்கன்னும் தெரியல எங்களுக்கே தெரியாம வீடியோ எடுத்துருக்காங்க ப்ச் எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குடாஎன்று ஆத்திரம் பொங்க நிலைமை அவன் எல்லை மீறி செல்வதை எண்ணி செய்வதறியாது பேசினான்

டேய் கோபப்படாத பொறுமையா இரு! நா ஹாஸ்பிடல் போறது       இருக்கட்டும் நீ இப்போ எங்க இருக்கன்னு சொல்லு நா உடனே வறேன்” 

ம்.. நடு ரோட்டுல நிக்கிறேன் என்ன பண்றதுன்னு தெரியாம!” 

டேய் புரியிற மாதிரி சொல்லுடா எங்க இருக்க!” 

கமிஷ்னர் ஆபிஸ் பக்கத்துல இருக்க காஃபி ஷாப்கிட்ட நிக்கிறேன்” 

சரி நீ உள்ள வெய்ட் பண்ணு நா பத்து நிமிஷத்துல வந்துடுறேன்என்று அழைப்பை துண்டிக்க அத்தனை நேரமும் அவன் அருகில் நின்று இருவரின் சம்பாஷணைகளை தீவிரமாக கேட்டு கொண்டிருந்தாள் வைஷாலி 

விஷ்ணுவிடம் பேசிவிட்டு திரும்பியவன் அவள் மீது மோதஏய் லூசு அறிவில்ல அடுத்தவங்க பேசுறத இப்டி ஒட்டு கேக்குற அறிவுகெட்ட ஜென்மம்என்று எப்போதும் போல அவளுக்கு ஏகந்தமான வசைபாடலை பொழிய 

சுப்ரபாதம் போல செவிகளின் வழியே மூளைக்கு நிரப்பி இனிமையான கானம் போல எந்தவித பாவனையும் காட்டாமல் கேட்டு கொண்டிருந்தவள் சட்டென கைக்கொண்டு அவன் வாயை அடைத்துபோதும் நிறுத்து கண்ணா!, அடுத்தவங்க பேசுறத தானே கேக்க கூடாது? நீ ஒன்னும் அடுத்தவன் இல்ல அதுவுமில்லாம நா ஒட்டு கேக்கல என்ன பேசுறீங்கன்னு பக்கத்துல நின்னு கேட்டேன் இதுல எனக்கு தெரிஞ்சு தப்பு ஒன்னுமில்லையேஎன்று துடுக்குதனதுடன் தான் செய்ததில் தவறில்லை என்று கூற

கையை வேகமாக தட்டிவிட்டவன்ஒட்டு கேட்டதும் இல்லாம திமிரா வேற பேசுறயா?” என்று தலையில் ணங்கென்று கொட்டு வைத்துவிட்டுபோ அங்கட்டு அவசரம் தெரியாம வந்து வம்பிலுத்துகிட்டுஎன்று சிடுசிடுப்பை காட்டிவிட்டு வேகமாக கால்டாக்சி பிடித்து விஷ்ணு இருக்கும் இடத்திற்கு விரைந்தான்

யோசனை செய்த வண்ணம் எண்ணத்தில் எதுவும் பிடிபடமால் போக டேபிளில் பார்வை நிலைகுத்தி நிற்க இமைக்க மறந்து காஃபியை அருந்தி கொண்டிருந்தான் விஷ்ணு உள்ளே வந்த விஜி அவன் எதிரில் அமரவும் நினைவு கலைந்தவன்வாடா உனக்கு ஒரு காஃபி சொல்லவாஎன்க 

வேணாம் எனக்கு பதிலா தான் நீ குடிச்சுறுப்பயே எப்டியும் இது மூணாவது கப் காஃபியா தான் இருக்கும்!, சரி அடுத்து என்ன பண்ண போற! இப்போ அவன் எப்டி இருக்கான்! துவாவுக்கு கால் பண்ணயா? என்ன சொன்னான்!” என்று வரிசைகட்டி கேட்டவன்ஆன்ட்டிய சமாளிக்கிறதுகுள்ள போதும் போதும்னு ஆகிருச்சுஎன்று அலுத்து கொண்டான் விஜயன்

Advertisement