Advertisement

உண்மையாவே உனக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இல்லன்னு எனக்கு தெரியும்? கொலை பண்ற அளவுக்கு நீ போக மாட்டேன்னும் எனக்கு தெரியும் அந்த அளவுக்கு நீ ஒர்த் இல்ல!, என்னோட டவுட்ட கிளியர் பண்ண தான் நீ கொலை பண்ணேன்னு பொய் சொன்னேன் இப்போ எனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு, இன்னும் எந்த கேஸும் பைல் பண்லா!” என்றவன் “கதிர் இன்னொரு முறை உன்ன இந்த மாதிரி எண்ணத்தோடு பார்த்தேன் சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டிருவேன் இன்னைக்கு நைட்டே மூனுபேரும் மதுரைக்கு கிளம்பிருக்கணும்” என்று எச்சரித்தவன் “ஜோதி!” என்று அழைக்க 

வேகமாக முன்னே வந்து நின்றவனிடம் “இவங்க ட்ரெயின் ஏறிட்டாங்கலான்னு பாத்துட்டு வந்து சொல்லுங்க” என்று அவர்களுடன் அவனையும் அனுப்பி வைத்துவிட்டு துவாரகாவிடம் திரும்பி “நீ ஏண்டா இப்டி பாக்குற?”

இவங்க கடத்துனவங்கன்னா.. அப்ப இவன் யாரு விஷ்ணு? எதுக்கு நம்மகிட்ட பொய் சொல்லணும் உனக்கு என்ன புரிஞ்சிச்சு இவன் யாருன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று துவாரகா குழப்பத்தில் மண்டை காய்ந்து கேட்க 

இவன பாத்த உடனே கண்டுபிடிச்சுட்டேன் நேத்து சொன்னியே கார் வேகமா வந்து ஆக்சிடன் பண்ண பாத்துச்சுன்னு அது வேற யாருமில்ல இவன் தான் சிசிடிவி எதுக்கு இருக்கு!, இன்னைக்கு காலையில கோவிலுக்கு போகும் போது பாத்தேன் வீட்டுக்கு முன்னாடி இவனும் நீ சொன்ன அந்த காரும் நிக்கிறத கொஞ்சம் கேர்லசா இருந்துட்டேன்” என்றவன் “கொலை பண்ணத யாரும் அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க அதுவுமில்லாம கேக்காத ஒரு விஷயத்தை தானா முன்னாடி வந்து சொல்றான்னா!, அப்ப ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன் இவன் சொல்றதுல பாதி உண்மை பாதி பொய் இருக்குன்னும் தெரிஞ்சுக்கிட்டேன் இவன் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுக்க தான் அவன் சொன்னதை நம்புற மாதிரி நடிச்சேன்” என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க

ஹாலோ ஏசிபி” என்று திமிர் கலந்த குரலில் ஏளனமாய் அழைத்தவன் ” பாஸ் சொன்னாரு அவன் ரொம்ப புத்திசாலி நீ பொய் சொல்றயா இல்ல உண்மைய சொல்றயான்னு நம்புற மாதிரி நம்பி உன்கிட்ட போட்டு வாங்க பார்ப்பான் எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னு சொல்லி தான் என்ன அனுப்பி வச்சு உங்ககிட்ட இந்த மாதிரி நடந்துக்க சொன்னாரு” என்று களிப்பு பொங்க கூறியவன் 

எனக்கு ரொம்ப நாள் வாழணும்னு ஆசை துளி கூட இல்ல ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் அதுவும் உங்க நல்லதுக்கு தான் நா கிரிமினலா இருக்கலாம் உங்க மேல உள்ள அக்கறையில சொல்றேன் நீங்க இந்த கேஸ்ஸ எடுத்து நடத்துறது அவ்ளோ சரியில்ல பட்ட அனுபவத்துல சொல்றேன் சார்” என்று கழுத்தில் கட்டியிருந்த கருப்பு கயிறை வேகமாக இழுக்க வெள்ளி நிறத்திலான தாயத்து மட்டும் கையில் வந்தது, கண்ணிமைக்கும் நேரத்தில் தாயத்தில் இருந்த வெள்ளை நிற பவுடரை நாசியின் வழியே உள்ளிழுத்தவன் “அவனோட ஆட்டத்துக்கு இது ஆரம்பம்னு நம்புறேன் இதுவரைக்கும் இந்த சாக்கடையில இருந்து எப்டி தப்பிக்க போறேன்னு தெரியாம இருந்தேன் அதுக்கு வழி கிடைச்சிருச்சு” என்றவாறே வாயிலும் மூக்கிலும் செங்குருதி வழிய தரையில் சரிந்தான் விசாரணைக்கு அழைத்து வந்தவன் 

அவனின் செயலில் இருவரும் திடுக்கிட்டு போக பதறி கொண்டு அருகில் சென்ற விஷ்ணு “ஏய்.. என்ன பண்ணிருக்க ச்சே! இங்க பாரு டேய் டேய் நீ யாரோட ஆளு எதுக்கு இப்டி பண்ண!” என்று அவன் கன்னம் தட்டி கேட்டவன் தயாத்தை எடுத்து பேண்ட் பாக்கெட்டினுள் துளைத்து விட்டு 

டேய் துவாரகா சீக்கிரம் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணு போ” என்று அவசரப்படுத்த 

வார்த்தைகள் தள்ளாட பெரும்பாடு பட்டு பேச தொடங்கினான் “எந்த பிரயோஜனமும் இல்லங்க எதுக்கும் தயரா தான் வந்தேன் என்னோட உயிர் எனக்கு தேவையில்ல இதுவரைக்கு நா செஞ்ச மாபாதகமான வேலைக்கு எனக்கு நானே கொடுத்துகிட்ட தண்டனை அவங்க சொன்ன மாதிரியே நா செஞ்சுட்டேன்” என்றவன் மூர்ச்சை அடைந்துவிட சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனை அழைத்து சென்றனர், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை நடந்து கொண்டிருந்தது 

யார் பண்ணிருப்பா எதுக்காக இப்டி பண்ணனும் நா நினைச்சது ஒன்னு ஆனா நடக்குறது வேற மாதிரி இருக்கே” என்று விஷ்ணு பலத்த சிந்தனையில் மூழ்கி இருக்க

சிகிச்சை அளித்து வெளியே வந்த மருத்துவரிடம் “சார் இப்போ அவன் எப்டி இருக்கான் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே?” துவராகா பதட்டத்துடன் கேட்டான்

இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது சார் ரொம்ப சீரியஸ் தான் எதுவும் சொல்ல முடியாது  சயனைடு சாப்பிடருந்தா கூட பரவாயில்ல ஆனா அளவுக்கு அதிகமா சுவாசிச்சிருக்காறு மருந்தோட எபேக்ட் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு ஹார்ட் பிட் ரொம்ப கம்மியாகிட்டே வருது நுரையீரல் ரொம்ப பதிக்கப்பட்டிருக்கு எவ்ளோ நேரம் தாங்குவருன்னு தெரியலை மேபி கோமாக்கு கூட போகலாம் அப்டி போயிட்டா எங்களாலா ஒன்னும் பண்ண முடியாது சார் பாக்கலாம் எந்த அளவுக்கு ட்ரீட்மென்ட் சாத்தியமாகுதுன்னு” என்று தான் பயின்ற படிப்பையே படமாக விளக்கிவிட்டு செவிலிய பெண்மணியிடம் பேசிக்கொண்டே இடத்தை விட்டு நகர்ந்துவிட 

மருத்துவர் கூறிய பதிலில் சிந்தனை கலைந்த விஷ்ணுவிற்கும் துவாரகாவிற்கும் கலக்கம் உண்டானது சம்பவம் காவல் நிலையத்தில் நடந்ததால் ஒருவேளை அவனுக்கு ஏதேனும் நேர்ந்தால் மேலிடத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் வேலை கூட பறிபோகலாம் என்பதை எண்ணியவன் அடுத்து என்ன செய்வது என்று சிந்தனையில் உழன்று கொண்டிருக்க விஷ்ணுவின் அலைபேசி சிணுங்கியது 

அன்னௌன் நம்பர் என்று திரையில் மின்னிய எண்ணை கண்டு யூகித்து கொண்டான் அழைப்பது யார் என்று? “ஹாலோ” என்று குரலில் இறுக்கத்தை காட்டி பேச

ஹாய் விஷ்ணு” எதிர் முனையில் குதூகலத்துடன் வார்த்தைகள் வந்தன “பாவம்ண்டா நீ, நா விரிச்ச வலையில இப்டி வந்து மாட்டிக்கிட்டயே! நீ ஒன்னு நினைச்ச அத நா எப்டி மாத்தினேன் பாத்தியா? எதுக்கும் தயரா தான் அவன அனுப்புனேன், சரி அத விடு நா உனக்கு போன் பண்ணதே வேற ஒரு விஷயத்தை சொல்றதுக்காக தான்! இப்போ உடனே டிவிய ஆன் பண்ணி நியூஸ் வச்சு பாரு அப்டியே உனக்கு ஒரு முக்கியமான போன் கால் வரும் உன்னோட கமிஷ்னர் சார் என் மூலமா உனக்கு கொடுக்குற பிறந்த நாள் பரிசு என்னைக்கும் மறக்க முடியாத பரிசு மறுக்காம அதையும் அக்சப்ட் பண்ணிக்கோ” என்று நினைத்த காரியம் கைகூடிய எக்களிப்பில் போனை அணைத்து விட 

மறுமுனையில் அழைப்பு உயிர் இழந்து பல நிமிடங்கள் கடந்தும் அலைபேசியையே வெறித்து கொண்டிருந்தான் விஷ்ணு சட்டென எண்ணத்தில் பொறி தட்ட அவசரமாக வரவேற்பில் இருந்த பெண்மணியிடம் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க சொல்லி செய்தி சேனலை வைத்தவன் திகைத்து போனான்

ஓ மை காட் இது எப்போ நடந்துச்சு யார் நியூஸ்க்கு சொன்னது” என்று அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்று இக்கட்டான நிலையில்  சிந்தித்து கொண்டிருக்க மீண்டும் அலைபேசி சிணுங்கியது கமிஷ்னர் என்ற எண்ணிலிருந்து, 

பரபரப்பாக மொபைலை உயிர்பித்தவன் “சொல்லுங்க சார்! சார் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல! சார் நா சொல்றத கொஞ்சம் கேளுங்க! சார் முதல என்ன பேச விடுங்க! சார்! சார்!..” என்று அவனை பேசவிடாமலே விஷயத்தை கூறிவிட்டு அணைப்பை துண்டித்து விட்டார் உயர் அதிகாரி கைலாசம்

ச்சே..” என்று காலை தரையில் உதைத்து தலையை அழுந்த கோதி கொண்டவன் தன் தவறை எண்ணி தலையில் கை வைத்த வண்ணம் அமர “என்ன விஷ்ணு நீயூஸ்ல என்னென்னமோ சொல்றாங்க கடைசில இப்டி ஆகிருச்சேடா யார் நியூஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிருப்பாங்க அதுவும் வீடியோவோட” என்று நடப்பது எதுவும் புரியாமல் கேட்ட துவாரகா “கமிஷ்னர் என்ன சொன்னாரு” என்று தோளில் கைவைத்து கேட்க

பக்காவா பிளான் பண்ணிருக்கான் இது எதுவுமே தெரியாம முட்டாள் மாதிரி இருந்துருக்கோம் ச்சே..! என்ன சொல்றதுனேன் தெரியல துவாரகா” என்றவன் துவாரகாவை நிமிர்ந்து பார்த்து” நாம ரெண்டுபேரையும் ஒரு மாசத்துக்கு சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க நாளைக்கு விசாரணை கமிஷன் நம்ம ரெண்டுபேரையும் ஆஜர் ஆகா சொல்லி கமிஷ்னரோட ஆர்டர்” 

என்னடா சொல்ற நாமா எதுவும் பண்ணல அவனோட முடிவை அவனா தேடிக்கிட்டான் அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?, இப்போ அவனோட நிலைமை என்னனு கூட அவருக்கு தெரியாது? என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை எதுவும் கேக்கலை நடந்தது எதுவுமே தெரியாம சஸ்பெண்ட் பண்ணி விசாரணை கமிஷன் வைக்க முடியுமா? எனக்கு ஒண்ணுமே புரியல” என்று ஆயாசமாய் கூறியவன் விஷ்ணுவின் அருகில் அமர

அதான் சொன்னேனே பக்காவா பிளான் பண்ணிருக்கான் டேமிட் நம்மள வேலைய விட்டு துக்கணும்னு தான் இவ்வளவும் பண்ணிருக்கான் நா கெஸ் பண்றது சரின்னா விசாரணை முடிஞ்சதும் நம்மள டிரான்ஸ்பர் பண்ணலாம் இல்ல அதிகபட்சமா தண்டனை கூட கிடைக்கிற மாதிரி பண்ணலாம்னு நினைக்கிறேன்” என்று ஆருடமாய் கூற 

என்னடா என்ன தான் நடக்குது அவன் எதுக்கு நம்மள ட்ரான்ஸ்பர் பண்ணனும் நாம என்ன தப்பு பண்ணோம் தண்டனை வாங்கி கொடுக்கிற அளவுக்கு?” 

என்ன துவா இது கூடவா புரியல அவனோட கேஸ்ல தீவிரம் காட்டுறதே அவனுக்கு பயத்தை உண்டு பண்ணிருக்கும்” என்றவன் “சரி விடு! இத எப்டி டீல் பண்ணணுமோ அத நா பாத்துகிறேன் நீ இங்கயே இருந்து அவன இஞ்ச் பை இஞ்சா வாட்ச் பண்ணு ஒருவேளை யாராவது அவன பாக்க வரலாம்? இன்னைக்கு மைண்டே சரியில்ல மூட் அவுட்டா இருக்கு நா கமிஷ்னர போய் பாத்து நடந்தத சொல்றேன் புரிஞ்சு கிட்டா சரி, ரெண்டு கான்ஸ்டபிள வர சொல்லிருக்கேன் அவங்க வந்ததும் என்ன ஏதுன்னு பாத்துட்டு நீ கிளம்பு அப்றம் லோக்கல் இன்ஸ்பெக்டர் கொஞ்ச நேரத்துல வந்துருவாறு”என்று கூறிவிட்டு விடைபெற்று கிளம்ப

சரியென்று விட்டு மருத்துவரை பார்க்க சென்று விட்டான் துவாரகா மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தவனை செய்தியாளர்கள் சூழ்ந்து கொள்ள எப்படி சமாளிப்பது என்ன கூறுவது என்று யோசனை செய்து கொண்டிருந்தவனால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை “சார் விசாரணைன்ற பேர்ல நீங்க தான் அவர கொலை பண்ணிட்டிங்கன்னு சொல்றாங்க அது உண்மையா? ” என்று தனியார் செய்தி சேனலில் இருந்து ஒருவர் கேட்க 

மற்றோருவனோ “சார் என்ன நடந்துச்சு உண்மைய மறைக்க பாக்கதிங்க நீங்க அரஸ்ட் பண்ண ஆளு இப்போ உயிரோட இருக்காறா? அவருக்கு என்னாச்சு? நிஜமாவே அவரா பாய்சன் சாப்டாரா இல்ல நீங்க சாப்பிட சொல்லி வற்புறுத்துனிங்களா?” என்று தாறுமராய் கேள்வி கணைகளை தொடுக்க

அவர்கள் கேட்கும் கேள்வி அவனுக்கு கோபத்தை விளைவித்தாலும் கோபத்தை அடக்கி கொண்டு “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலா அவரு இப்போ நல்லா தான் இருக்காருன்னு நா சொல்ல விரும்பலை  ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு இப்போதைக்கு அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும் நீங்க எதிர்பாக்குற ஆதராம் சீக்கிரம் உங்களுக்கு வரும் எல்லாம் கண்டுபிடிச்ச பிறகு உங்களுக்கு ரிப்போர்ட் பண்ணலாம்னு இருந்தேன் அதுக்குள்ள யாரோ ஒருத்தர் முந்திக்கிட்டாரு இதுவும் நல்லது தான்” என்று பேட்டி அளித்து கொண்டிருக்கும் போதே வட்டார காவல் ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் வேகமாக பத்திரிகையாளர்களை விலக்கி கொண்டு முன்னே வந்தவர்கள் “சாரி சார் எம்பி பிரச்சாரம் பண்ற இடத்துக்கு பந்தோ பஸ்துக்காக போயிருந்தோம் நீங்க போங்க சார் நாங்க பாத்துக்குறோம் துவாரகேஷ் சார் இங்க தானே இருக்காரு நீங்க கிளம்புங்க சார்” என்று அனுப்பி வைக்க 

சரி பாத்துக்கோங்க” என்று விட்டு நேராக கமிஷ்னர் அலுவலகம் விரைந்தான் விஷ்ணு..!

தொடரும்…

நிழல் ஆடும் நினைவில் ரெண்டு களவாடி தருவேன் இன்று கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன்

உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்

Advertisement