Advertisement

விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தவன் யாரையும் பார்க்க திறானியற்று உடைமாற்ற வேண்டி நேராக அறைக்கு செல்ல “விணு” என்ற குரல் கேட்டு திரும்பினான் விஷ்ணு  தயங்கியபடி நின்றிருந்தவளை என்ன என இமைவழியே கேட்க

நீங்க சாப்பிடவே இல்ல டைம் ஆச்சு சாப்பிடாம போறீங்களே” என்று வைதேகி கேட்கவும் 

முகம் இறுக விறைப்பாய் நின்றவன் “எனக்கு பசிக்கல காலையில கேட்ட வார்த்தைகளே மனசும் வயிறும் நிறைஞ்ச போச்சு” என்று சாவித்ரியை பார்த்து கூறிவிட்டு நகர்ந்துவிட

அப்றம் என்ன அவன் தான் பசியில்லைன்னு சொல்லிட்டான்ல நீ சாப்ட்டு கிளம்பு வேலைக்கு டைம் ஆச்சு” என்று சாவித்ரி கூற

எனக்கும் பசியில்லை சித்தி” என்று கைப்பையை எடுத்து கொண்டு கிளம்ப 

அறையில் இருந்தவாறே இருவரின் பேச்சு வார்த்தைகளை கேட்டு கொண்டிருந்தவன் வேகமாக வெளியே வந்து வைதேகியை தடுத்து நிறுத்தி”நீ இன்னும் சாப்பிடலையா? உனக்கு அல்சர் இருக்கே நேரத்துக்கு சாப்பிடனும்னு தெரியாது?” என்று கடிந்து கொண்டவன் வா உக்காரு என்று தட்டில் சாதம் வைத்து பரிமாறி “சாப்பிடு” என்று கூற

நீங்க!” 

எனக்கு பசிக்கலை சாப்ட்டு கிளம்பு எனக்கு டைம் ஆச்சு நா சீக்கிரம் போகணும்” என்று எந்தவித உணர்ச்சியும் காட்டாது அவசரப்படுத்த

எனக்கும் தான் டைம் ஆச்சு நானும் கிளம்புறேன்” என்று வீம்பாக கூறியவள் “நீங்க மட்டும் சாப்பிட மாட்டீங்களாம் நா சாப்பிடனுமா எனக்கு எதுவும் வேணாம்” என்று விசுக்கென எழுந்து கொண்டாள்

அவள் பிடிவாதம் கண்டு எரிச்சலடைந்தவன் “சொன்னா கேக்க மாட்டயா நிஜமாவே எனக்கு டைம் ஆச்சு தேவிம்மா” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே தட்டில் உணவை  வைத்து என்ன முடிவு என்பது போல புருவம் உயர்த்தி விழிகளில் வீம்பை தேக்கி பார்க்க

டேய் ரொம்ப தான் பிகு பண்ணாத பேசாம உக்காந்து சாப்டு வெறும் வயித்தோட வேலைக்கு போய்க்கிட்டு நா அமிர்தா வீடு வரைக்கும் போய்ட்டு வறேன்” என்று சாவித்ரி கிளம்பிவிட 

அவனையே பார்த்து கொண்டிருந்தவள் உதட்டை சுளித்து பழிப்பு காட்டி “ம் சாப்பிடுங்க விணு உங்க அத்தையே சொல்லிட்டாங்க” என்று கூற

அவளிடம் பார்வையை பதித்தவாறு அமர்ந்து உண்ண தொடங்கியவனை  “என்னோட கேள்விக்கு பதில் சொல்லிட்டு சாப்பிடுங்க” என்று கூறவும் வாய் வரை உணவை எடுத்து சென்றவனின் கைகள் அந்தரத்தில் நின்றது

அதானே இப்ப தான் தெரியிது எதுக்கு இந்த உபசரிப்புன்னு காரணமில்லாமா நீ இவ்ளோ அக்கறையா பேச மாட்டயே சொல்லு? என்ன தெரிஞ்சுக்கணும் நா அங்க எப்டி வந்தேன்னு தெரிஞ்சுக்கணும் அது தானே” என்றவன் “சாப்டு சொல்லவா ரொம்ப பசிக்கிது தேவிம்மா” என்று முகம் சுருக்கி கெஞ்சலாக கூற

இப்போ தானே பசியில்லைன்னு சொன்னிங்க, எவ்ளோ பசியா இருந்தாலும் அப்புறமா கொட்டிக்கோங்க முதல விஷயத்தை சொல்லுங்க விணு” என்று அவனுக்கு பிடித்த அவல்பாயசம் மிருதுவான ரவா தோசை அதற்கு எடுப்பாக பச்சை ஆரஞ்சு நிறத்திலான சட்னி என்று நாவை உறுத்தும்  உணவுகளை கண்முன் வைத்து கொண்டு கேள்வி கேட்பவளை பாவமாய் பார்த்தவன்

தேவிம்மா.. என்று இழுக்க

எனக்கு தேவை பதில் சொல்லிட்டு உங்க வயித்துக்கு போட்டுக்கோங்க என்று கறாராய் கூறிட

ராட்சசி” என்று முணுமுணுத்தவன் மறுவேடத்தில் வந்த விஷயத்தைசொல்ல தொடங்கினான்

நேற்று இரவு விஜயனுக்கும் வைஷாலிக்கும் அழைப்புவிடுத்து இருவரும் கிளம்பி வர வேண்டும் இருவரின் உதவியும் தற்சமயம் தனக்கு தேவை என்று கூறியதும் வைஷாலி மறுத்து பேசாமல் சட்டென ஒத்து கொள்ள, விஜயன் சற்று தயங்கினான்  “இல்லடா என்னால வர முடியாது என்ன மூணு மாசம் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க லீகளா என்னால உனக்கு உதவ முடியாது சாரி விஷ்ணு” என்று சங்கடத்துடன் கூற

அதான் தெரியுமே நீ வேலையில இல்லாதது கூட ஒருவிதத்துல நல்லது தான் இது லீகள் கேஸ் இல்ல விஜி நானும் துவாரகாவும் பர்ஸ்னலா எடுத்து விசாரிக்கிறோம் ரொம்ப முக்கியமான கேஸ்டா உன்னோட உதவி எனக்கு ரொம்ப தேவை” என்று குற்றம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் கூற

இவ்ளோ பெரிய கேஸ்ஸ எப்டி விஷ்ணு கண்டுக்காம விட்டாங்க! பண்ணறது யாருன்னு தெரியலையா? டிப்பார்ட்மெண்ட்ல என்ன பண்றாங்க கமிஷனர் கிட்ட சொல்லி ஏதாவது பண்ண வேண்டியது தானே!”

அங்க தான்டா பிரச்சனையே கமிஷ்னரும் இதுக்கு உடந்தை கருணாகரன் சார கொலை பண்ணதே அவர் தான் நா இந்த கேஸ்ல இன்வால்வ் ஆனது தெரிஞ்சு அவர் மூலமா எவிடன்ஸ் எதுவும் கிடைக்க கூடாதுன்னு இப்டி பண்ணிட்டாங்க” என்றவன் கருணாகரன் கொலை செய்த விஷயம் கமிஷனர் சம்பந்தப்பட்ட விஷயம் இவற்றிற்க்கெல்லாம் காரண கர்த்தாவான புதியவன் பேசிய விஷயம் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடிக்க 

விஜயனை குழப்பம் சூழ்ந்து கொண்டது “நீ சொல்றத கேட்டா நாலஞ்சு இடியாப்பத்தை பிச்சு போட்ட மாதிரி இருக்கு எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னே தெரியலையேடா எனக்கே குழப்பமா இருக்கு” என்று தீவிரமாக யோசனை செய்தவன் “சரி நா கிளம்பி வறேன் நாளைக்கு உனக்கு ப்ரத் டே தானே” என்று வாழ்த்திவிட்டு சில பொதுவான விஷயங்களை பேசிவிட்டு போனை வைத்தனர்

மறுநாள் காலை வைதேகி கோவிலுக்கு சென்றதை அறிந்து வந்தவன் கோவிலில் இருந்து கிளம்பும் வேளையில் விஜயன் போன் செய்து தங்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தவன் பிடிபட்டு விட்டான் என்ற விஷயத்தை கூறியதும் சற்று நேரத்தில் கிளம்பி வருவதாக கூறிவிட்டு இல்லம் வர சாவித்ரியின் குற்றச்சாட்டு அவன் மனதை வேதனை படுத்தியதும் இல்லாமல் கோபம் கொள்ளவும் செய்தது வைதேகியை அழைத்து வருகிறேன் என்று வெளியில் சென்றவன் துவாரகாவிற்கு போன் செய்து வைதேகி கடத்தப்பட்டதை கூற 

அவள் நடந்து வந்த சாலையின் எதிர்புறம் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து கடத்தியது யார் என்று துவாரகேஷ் அறிய முற்பட அதற்கு பலன் இல்லை கடத்தியவன் முகத்தை முழுதும் மறைத்திருந்தான், அவளை எங்கு அடைத்து வைத்திருப்பார்கள் என்று இருவரும் யோசனை செய்து கொண்டிருக்க விஜயன் போன் செய்து உடனே வருமாறு அழைக்கவும் 

பிடிபட்டவனிடமிருந்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்ற எண்ணத்தோடு விஜயன் வர சொன்ன இடத்திற்கு துவாரகாவை அழைத்து கொண்டு சென்றான் விஷ்ணு சுனாமியின் கோரபிடியில் சிக்கி தளர்ந்து தகர்ந்து இடிபாடுகள் நிறைந்து ஆதரவற்ற நிலையில் மயானமாய் காட்சி தந்தது அந்த இடம், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஆள் நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாவியை கையில் எடுத்து கொண்டு இறங்கிய துவாரகேஷ் சுற்றிலும் விழிகளை சுழற்றி ஆராய்ந்தவன்

வைதேகிய தேடாம இங்க எதுக்குடா வந்துருக்கோம் யார் இருக்காங்க” என்றவாறே தூரத்தில் கை அசைத்து அழைத்தவனை பார்த்து திகைத்த துவாராகேஷ் “டேய் இவன் எப்போ இங்க வந்தான் இவளும் கூட வந்துருக்காளா? இது தான் நீ போட்ட பிளான்னா நாசமா போச்சு போ” என்று தலையில் அடித்து கொள்ள

ஏண்டா அப்டி சொல்றா ஏன் விஜி வந்தது உனக்கு பிடிக்கலையா என்ன!” 

அவன சொல்லலடா இவன் கூடவே ஒருத்தி வந்திருக்காளே அவள சொன்னேன் நாமா ஆக்யூஸ்ட்ட அரஸ்ட் பண்ணா இவ அவன தப்பிக்க விட்டு வேடிக்கை பாக்குறவளாச்சே! அதான் கொஞ்சம் திக்குன்னு இருக்குது சரி அது இருக்கட்டும் இங்க எதுக்கு வந்துருக்கோம்”

அவசரபடாத துவாரகா அதான் நேர்லயே பாக்க போறயே அப்றம் என்ன? கொஞ்ச நேரம் பொறுமையா இரு” என்று உத்தரவு போல கூற

ஆமாண்டா எப்ப பாரு இதையே சொல்லிரு” என்று அலுத்து கொண்டவன் அவன் பின்னோடு சென்றான் 

பார்க்க வாட்டசாட்டமாக ஜம்மென்று இருந்தவனை கயிற்றால் கட்டி வைத்திருந்தான் விஜயன் கயிற்றின் பிடியில் இருந்து தப்பிக்க திமிறி கொண்டிருந்தவன் “சார் என்ன விட்டுருங்க தேவையில்லாம என்ன இழுத்துட்டு வந்து கட்டி போட்டு கொடுமை பண்றது மட்டும் அவருக்கு தெரிஞ்சது அவ்ளோ தான் பாக்குற வேலையே இல்லாம பண்ணிருவாறு உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்” என்று திமிர் கொண்டு உறுமியவனை கண்டு சுர்ரென்று கோபம் சிரத்திற்கு ஏற பளார் என அறைந்த விஷ்ணு 

வேலையில்லாம பண்ணிருவானா இப்போவே போன் போட்டு அவன்கிட்ட சொல்லு இந்தா பிடி” என்று அலைபேசியை அவனிடம் நீட்டியவன் “சொல்றதுக்கு மட்டும் தைரியம் இருக்க கூடாது செஞ்சு காட்டனும் அவன் ஒரு ஆளு அவன சொன்னதும் பயந்து உன்ன விடுருவேன்னு நினைச்சியா?, உண்மைய சொல்லு கடத்துன பொண்ண எங்க வச்சுருக்கிங்க உண்மைய சொல்லிட்டா உன்ன இப்டியே விட்டுருவேன் இல்லன்னா போலீஸ் அடி எப்டி இருக்கும்னு உனக்கு தெரியும்ல வீணா அடிபட்டு சாகாத சொல்லு! எங்க வச்சுருக்கிங்க வைதேகிய உன்னோட கூட்டாளி எங்க இருக்கான் மொத்தம் எத்தனை பேர்” என்று கட்டிவைத்தவனின் முகவாயை அழுத்தமாக பற்றி விசாரணையை தொடங்க

எனக்கு எதுவும் தெரியாது நா யாரையும் கடத்தல எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறியதையே மறுபடியும் கூறவும் சாவித்ரி பேசிய வார்த்தைகள் நினைவில் வந்து கோபத்தை விளைவிக்க தலைமுடியை கொத்தாக பற்றி முன்னும் பின்னும் ஆட்டியவன்

ஒழுங்கா உண்மைய சொல்லு நானாவது வாயால தான் கேக்குறேன் இதோ நிக்கிறானே” என்று விஜயனை கைகாட்டி “இவனுக்கு முன் கோபம் ஜாஸ்தி என்ன பண்ணுவான்னு தெரியாது நீ உண்மைய சொல்லல” என்று  கூறிக்கொண்டிருக்கும் போதே பிஸ்டல் ரக துப்பாக்கியை எடுத்தவன் முன்னும் பின்னும் இழுத்து விஜயன் அவன் தலையில் வைக்க

அவனுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவான்னு தெரியாது யார் பேச்சுக்கும் அடங்க மாட்டான் நீ உயிரோட இன்னும் கொஞ்ச நாள் வாழ ஆசைப்பட்டா உண்மைய சொல்லு கடத்துன பொண்ண எங்க வச்சுருக்கிங்க ” என்று அதட்டி கேட்க

எனக்கு எதுவும் தெரியாது” என்று மறுபடியும் கூறவே

டேய் இவன் கிட்ட என்ன பேச்சு வேண்டியது கிடக்கு ஷுட் பண்ணிட்டு அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பாப்போம் நமக்கு தான் அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்குல அத வச்சு கண்டுபிடிச்சுக்கலாம்” என்று விஜயன் சாமர்த்தியமாக தந்திரத்தை கையாண்டான்

விஜி கண்ணா சொல்றது சரி தான் டேய் விஷ்ணு என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்க இவன்கிட்ட பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்ல நீ என்ன கேட்டாலும் எப்டி கேட்டாலும் வைத்தி எங்க இருக்கான்னு சொல்ல மாட்டான் அவன என்கிட்ட கொடு நா எப்டி டீல் பண்ணணுமோ அப்டி டீல் பண்ணி உண்மைய அவன் வாயில இருந்து வர வைக்கிறேன் விஜி, நீ எதுவும் பண்ணாத அப்டி எதுவும் சொல்லலன்னா நா அவன ஷுட் பண்ணிடுறேன்” என்று தீவிரமாக வைஷாலி படபடவென்று கூற

அவளை முறைத்து பார்த்தபடி இருந்த விஜயன் “ஏய் எந்த நேரத்துல விளையாடணும்னு தெரியாது நீ இவன ஷுட்  பண்ணிருவியா? முதல துப்பாக்கிய எப்டி பிடிக்கணும்னு கத்துக்கோ அப்றம் சுடலாம்” என்று மட்டம் தட்டி பேச

எது தோசைய தானே சுடலாம்னு சொன்ன விஜி” என்று துவாரகா கேலி செய்யவும்

அவன் தலையில் ணங்கென்று கொட்டியவள் “உனக்கு இருக்குடி மவனே தனியா சிக்குவல அப்ப வச்சுக்கிறேன்” என்று கோபத்தை அருகில் இருந்தவனிடம் காட்டினாள்

Advertisement