Advertisement

கொடுத்த அடி பத்தலையா? இப்டி தேடி வந்து மறுபடியும் அடி வாங்குற பாவம் பாத்து விட்டது தப்பா போச்சு உன்னோட ப்ளான் ஃபிலாப் ஆகிருச்சு இனி ஒன்னும் செய்ய முடியாது! ஒழுங்கு மரியாதையா சரண்டர் ஆகிரு அது தான் உனக்கு நல்லது” என்று விஷ்ணு மிரட்ட

டேய் என்னோட விஷயத்துல நீ தேவையில்லாம தலையிடுற உன்மேல செம்ம கோபத்துல இருக்கேன், நீ தான் அவள பிடிக்கலைன்னு சொல்லிட்டல அப்றம் என்னடா உன்னோட பிரச்சனை?” என்றவன் கோபமாக “கைக்கு எட்டினத வாய்க்கு கிடைக்காம பண்ணிடயே உன்ன நா சும்மா விட மாட்டேன்டா” என்று அவன் மேல் பாய ஒருவருக்கொருவர் சட்டையை பற்றிக்கொண்டு உருண்டு புரண்டு சண்டையிட்டு கொண்டிருந்தனர்

பைக்கை நிறுத்தி விட்டு வந்த விஜயன் “ஏய் லூசு இப்டி வேடிக்கை பாக்க தான் வேகமா இறங்கி வந்தியா உன்னையெல்லாம் ஒரு ஆளுன்னு போலீஸ்ல சேத்தானே அவன சொல்லணும் போடி போய் வேற யாரவது இருக்கங்களான்னு பாரு” என்று அவள் தலையில் கொட்ட 

சுர்ரென்று கோபம் தலைக்கேற “தலையில அடிக்கிற வேலை வச்சுக்காத அப்றம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றவள் “மூஞ்சிய பாரு எப்ப பாத்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு” என்று முணுமுணுத்து கொண்டே பின்பக்கம் சென்றாள்

விஷ்ணுவும் கதிரும் ஒருவரை ஒருவர் திமிறி கொண்டு சண்டையிட்டு கொண்டிருக்க இடையில் புகுந்து இருவரையும் பிரித்து விட்டவன் “இங்க பாரு கதிரு ஒழுங்கா சரண்டர் ஆகிரு தப்பிச்சு ஓடனும்னு நினைச்ச உன்ன என்கவுண்டர் பண்ண வேண்டியது வரும் எது வசதின்னு நீயே யோசிச்சு சொல்லு” என்று விஜயன் நிதானமாக துப்பாக்கியை கையில் ஆட்டி கொண்டே கூற

திமிறி கொண்டிருந்தவன் என்கவுண்டர் என்றதும் மேலும் கீழும் மூச்சு வாங்க “என்ன! என்கவுண்டரா? நா என்ன தப்பு பண்ணேன் அந்த பொண்ண கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ண நினைச்சேன் அது தான் நடக்கலையே? கிட்னாப் கேஸ்ல தானே அரஸ்ட் பண்ணுவீங்க! அதுவும் புகார் கொடுத்தா தானே!” என்று நானும் பெத்த படிப்புதான் என்று காட்டும் விதமாய் பேச

டேய் லூசு கடத்துனதுக்காக உன்ன அரஸ்ட் பண்ணல கொலை பண்ணிருக்க அதுவும் ஒரு போலீஸ” என்று விஷ்ணு கூறவும் கதிர் நடுங்கி போனான் 

என்ன! கொலையா? நானா! என்ன புதுசு புதுசா சொல்றிங்க நா சென்னைகே இன்னைக்கு காலையில தானே வந்தேன் நா எந்த கொலையும் பண்ணல” என்றவன் “டேய் விஷ்ணு பாத்துட்டு சும்மா இருக்கயே சொல்லுடா நா கொலை பண்ற அளவுக்கு போவேனா தப்பு பண்ணுவேன் இல்லன்னு சொல்லல ஆனா கொலை பண்ணமாட்டேன் அந்த அளவுக்கு எனக்கு தைரியம் இல்லடா என்னோட கிரானைட் குவாரிய சீல் வச்சுட்டேங்கிற கோபத்துல உன்ன பழிவாங்க தான் நா வைத்திய கடத்தி கல்யாணம் பண்ண நினைச்சேன் நா எந்த கொலையும் பண்ணல” என்று அச்சத்தில் நடுங்கிய குரலில் கூறியவனின் முகத்தில் வியர்வை சுரப்பிகள் ஊற்றை பெருக்கின

கருணாகரன் யாருன்னு உனக்கு தெரியாது? நேத்து அவர நீ தானே கொலை பண்ண உன்னோட ஆள் எல்லாத்தையும் எங்க கிட்ட சொல்லிட்டான்” என்று விஜயன் கூறவும்

அய்யோ.. என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியலையே? யாரு கருணாகரன் அவர நா முன்னபின்ன பாத்தது கூட இல்ல? டேய் வைதேகிய கடத்துனேன்னு பழி வாங்காதடா நா எதுவும் பண்ணல” என்று கிட்டத்தட்ட அழும் நிலையில் பணிந்தான் கதிரேசன்

அப்ப எதுக்கு இந்த பங்களாவுக்கு வந்த அதுவும் மர்டர் நடந்த இடத்துக்கு இது உன்னோட வீடு தானே!” என்று விஷ்ணு கேட்க

இல்ல இது என்னோட இடம் இல்ல இதோ இந்த எருமை தான் சொன்னான்” என்று அருகில் இருந்த முருகனை அறைந்தவன் 

இந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்கன்னு அதனால தான் இந்த இடத்துல வச்சு வைதேகிய கல்யாணம் பண்ணலாம்னு கடத்திட்டு வர சொன்னேன் தயவு செஞ்சு என்ன விட்டுருங்க நா எந்த தப்பும் பண்ணல” என்றவன் விஷ்ணுவிடம் திரும்பி “இனி உன்னோட விஷயத்துல தலையிட மாட்டேன் இப்போவே நா மதுரைக்கு கிளம்புறேன் நீ இருக்குற பக்கமே நா வர மாட்டேன்” என்று மன்றாட 

அவ்ளோ சுலபத்தில உன்ன விட்டுற முடியாது நீ ஒன்னு சொல்ற? உன்னோட கூட்டாளி ஒன்னு சொல்றான்? நீ முதல ஸ்டேஷனுக்கு வா! அங்க வச்சு விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா யாரு உண்மைய சொல்றாங்க பொய் சொல்றாங்கன்னு தெரிஞ்சிரும்” என்ற விஜயன் “போனவள இன்னும் காணோமே” என்று எண்ணி கொண்டு “டேய் நீ இவனையும் இவனோட ஆளுங்க ரெண்டுபேரையும் ஜீப்பில ஏத்து நா வந்துடுறேன்” என்று பின் பக்கம் செல்ல 

தீவிரமாக யோசனை செய்த வண்ணம் நின்றிருந்தாள் வைஷாலி  “இவள…!” என்று பல்லை கடித்தவன் கோபத்துடன் அருகில் சென்று “ஏய் உன்ன என்ன பண்ண சொன்னேன் என்ன பண்ணிட்டு இருக்க வா கிளம்பலாம் உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு என்ன தான் பண்ண போறேன்னோ” என்று அலுத்து கொள்ள

அவன் கோபத்தை ரசித்து கொண்டே “பரவாயில்ல கோபத்துல கூட அழகா தாண்டா இருக்க” என்றவள் “நீ மட்டும் என்ன கட்டிக்கோ நீ எதுவும் பண்ண வேணாம் உனக்கு என்ன தேவையோ எல்லாத்தையும் நானே பாத்து பாத்து பன்றேன் விஜி கண்ணா” என்று காதல் பேச

பல்லை கடித்து கொண்டு அவளை உறுத்து விழித்தவன் “உனக்கு அவ்ளோ தான் மரியாதை முன்னாடியே சொல்லிருக்கேன் இந்த மாதிரி எண்ணத்தோட என்கிட்ட பேசா தன்னு உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? என்ன ஜென்மமோ ச்சீ” என்று கோபமாக மொழிந்துவிட்டு செல்ல

அவன் செல்வதை பார்த்து கொண்டிருந்தவள் “வைசு எப்டி தான் இவன உன்னோட வழிக்கு கொண்டுவர போறயோ ரொம்ப கஷ்டம் தான்” என்று சோகமாக முகத்தை வைத்து நொந்து கொண்டே அவன் பின்னே சென்றாள் 

வைதேகியை வீட்டில் விட்டுவிட்டு துவாரகேஷ் வந்து விட “துவாரகா நாம ஜீப்பில போலாம் பின்னாடியே விஜியும் வைசுவும் வரட்டும்” என்று கூறியதும் துவாரகேஷ் ஜீப்பில் ஏறி கொள்ள 

பைக்கின் பின்னால் ஏற முயன்றவளை தடுத்து நிறுத்தியவன் “நீ ஒன்னும் என்கூட வர வேணாம் ஜீப்பில போய் ஏறிக்கோ” என்று சீறினான் விஜயன்

வரும் போது உங்க கூட தானே வந்தேன் இப்போ எதுக்கு  ஜீப்பில போக சொல்றிங்க வரும் போது எப்டி வந்தேனா அதே மாதிரி தான் வருவேன்” என்று மிடுக்காக பேசிவிட்டு வைசாலி பின்னால் ஏறிக்கொண்டாள் 

அவள் ஏறியதும் வேகமாக பைக்கிலிருந்து இறங்கியவன் “டேய் விஷ்ணு நா அவன் கூட ஜீப்ல போறேன் பைக் ஓட்ட தெரிஞ்சிருந்தா ஓட்டிட்டு வர சொல்லு” என்று சாவியை அவள் முன்னால் விட்டேரிய வைசுவின் முகம் சுருங்கி போனது “உனக்கு மட்டும் தான் கோபம் வருமா? எனக்கும் வரும்!” என்று வேகமாக இறங்கியவள் அவன் முகம் பாராமல் ஜீப்பின் பின் பகுதியில் சென்று ஏறி கொள்ள 

நீங்க சண்டை போடுற இடமாடா இது சீக்கிரம் இவன கூட்டிட்டு போகணும் உங்க பஞ்சாயத்த அப்றம் வச்சுக்கோங்க” என்ற துவாரகாவின் தலையில் கொட்டியவள் “உன்னோட வேலைய மட்டும் பாரு” என்று வெடிக்க

ஏய் அவன் மேல இருக்குற கோபத்தை ஏண்டி என்மேல காட்டுற” என்றவன் டிரைவரிடம் “அண்ணா வண்டிய எடுங்க” என்று கூற ஜீப் கிளம்பியது

சரி விஜி என்ன வீட்டுல விட்டுட்டு நீ ஸ்டேஷன் போ நா வீட்டுக்கு போய்ட்டு ட்ரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்றதும் “சரிடா” என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய 

விஜி” என்று விஷ்ணு தயங்கி அழைத்தான்

என்னடா ஏதாவது சொல்லானுமா?”

உனக்கு வைசுவ பிடிக்கலையா? உன் பின்னாடியே நீ எப்ப அவ காதலை ஏத்துப்பேன்னு சுத்திட்டு இருக்கா நீ ஏ அவள ஏத்துக்க மாட்டிங்கிற!” என்று கவலை தேய்ந்த குரலில் கேட்க

உணர்ச்சியற்று புன்னகைத்தவன் “என்ன விஷ்ணு எல்லாம் தெரிஞ்ச நீ கூடவா இப்டி பேசுற! என்னோட வாழ்க்கையில இனி காதல்ன்ற பேச்சுக்கே இடமில்ல போதுண்டா நா பட்ட வேதனை ஒருத்தி கொடுத்துட்டு போன வலியவே இன்னும் மறக்க முடியாம தவிச்சிட்டு இருக்கேன் இதுல இனொன்னு வேறயா?” என்று விரக்தியாய் பேசியவன் இருசக்கர வாகனத்தை உறுமினான், பெருமூச்சை வெளியிட்டபடி விஷ்ணு ஏறி கொள்ள எமஹா வேகம் எடுத்தது.

 

தொடரும்…

 

அது நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு அது ஏன் மறந்தது

மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும் நினைவே காதலடி

சலனம் சபலம் மயக்கம் குழப்பம் இணைந்தால் காதலடி

எழுத்தே இல்லா கவிதை இதுபடித்தால் எங்கே புரிகிறது..

Advertisement