Advertisement

உன்னோட திமிரும் கோபமும் தாண்டி எனக்கு பிடிச்சதே புலியோட குகையில மாட்டுன கிளிக்கு இவ்ளோ தைரியம் கூடாது” என்றவன் ரௌத்திரத்துடன் அவள் அருகில் வந்து முகவாயை பற்றி “அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி என்னோட கன்னத்துல அடிச்சு அவமான படுத்துனயே அதுக்கு பதில் அடி திருப்பி தர வேணாம்”என்று கர்ஜித்தவன் முருகனிடம் திரும்பி

முருகா எல்லாம் ரெடியா இருக்கா?” 

எல்லாம் பக்காவா இருக்கு ண்ணே எவனும் இந்த இடத்தை கண்டு பிடிக்க முடியாது நீங்க அண்ணிய கூட்டிட்டு கிளம்பி வாங்க நா முன்னாடி போய் ஐயர் வந்துட்டாறான்னு பாக்குறேன்” என்று நகன்றவனை “ஒரு நிமிஷம் நில்லு! எங்கடா இன்னொருத்தனா காணோம் எங்க போனான்!” என்று சந்தேகம் கொண்டு கேட்க

நா மட்டும் தான் அண்ணிய தூக்கிட்டு வந்தேன்” என்றதும் “டேய் இன்னொரு தடவை என்ன அண்ணின்னு சொன்ன சொல்றதுக்கு வாய் இருக்காது” என்று கோபத்துடன் கூறியவளை அவன் கண்டுகொண்டதாக தெரியவில்லை அவளை பார்த்து நிந்தனையுடன் புன்னகைத்துவிட்டு மீண்டும் அவனிடம் பேச்சை தொடர்ந்தான் 

அங்க என்ன நடக்குது? விஷயம் தெரிஞ்சு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்குறாங்கன்னு தெரிஞ்சுக்குறதுக்காக அவன அங்கயே நோட்டம் பாக்க விட்டுருக்கேன் ண்ணே ஏதாவது ஒண்ணுன்னா நமக்கு உடனே தகவல் வந்துரும் நாமளும் உஷாராகிக்கலாம் இல்லையா!” என்று கூறவும் 

அதுவும் சரி தான் நீ போய் வேலைய பாரு நா கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என்று கூற வேகமாக அறையை விட்டு வெளியேறி கதவை சாத்திவிட்டு சென்றான் முருகன்

அவனை அனுப்பிவிட்டு வைதேயிடம் திரும்பியவன் “எந்த ஊர்காரங்க முன்னாடி என்ன அறைஞ்சயோ அதே ஊர்காரங்க முன்னாடி நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் நின்னா! எப்டி இருக்கும்..” என்று கனவுலகில் மிதக்க 

அப்டி ஒன்னு நடக்கவே நடக்காது உன்ன கல்யாணம் பண்றதும் பாழுங்கிணத்துல விழுகுறதும் ஒன்னு தான் ஒழுங்கு மரியாதையா என்ன விட்ரு அது தான் உனக்கு நல்லது” என்று கோபமாக கூற

 உரத்த சத்தத்தில் நகைத்தவன் “ஏய் ரொம்ப துள்ளாதா உன்ன பழி வாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு அத விட சொல்றயா! உன்ன எப்டி பழி வாங்க போறேன்னு மட்டும் பாரு, அதே மாதிரி அந்த விஷ்ணு பயலையும் பழி வாங்காம விடமாட்டேன் இன்னைக்கு நா இந்த நிலைமையில இருக்கிறேன்னா அதுக்கு அவன் தான்டி காரணம் ரெண்டு வருஷம் ஜெயில்ல உக்கார வச்சான்ல உன்னோட கதறலை கேட்டு அவன் கதறனும் அத பாத்து நா சந்தோஷபடனும்” என்று குரூரமாய் எண்ணம் கொண்டு பேசியவனை வெறுப்போடு பார்த்தவள் முகத்தை திருப்பி கொள்ள

பிடிவாதம் பண்ணாம இந்த சேலைய கட்டிக்கிட்டு வந்து சேரு மாமா உனக்காக காத்துட்டு இருப்பேன், தப்பிச்சு போலாம்னு மட்டும் நினைக்காத வெளிய என்னோட ஆளுங்க ரெண்டுபேரு நின்னுட்டு இருக்காங்க சீக்கிரம் வந்து சேரு” என்று கூறிவிட்டு செல்ல எத்தனித்தவனை “டேய் எரும கயிற அவுத்து விட்டா தானே நா கிளம்ப முடியும் லூசு” என்று கடிந்து கொள்ள

ஓ…சாரி செல்லக்குட்டி உன்ன கல்யாணம் பண்ணிக்க போற சந்தோஷத்துல மறந்துட்டேன் இனி மாமன மரியாதையில்லாமா கூப்பிட கூடாது சரியா” என்றவாறே  அவிழ்த்து விட, கயிறு இறுக்கிய இடம் சிவந்து கன்றி போய் இருந்தது கைகளை அழுந்த தேய்த்து கொண்டவள் அவனை வெறித்து பார்க்க ஏளனமான பார்வையை செலுத்திவிட்டு சென்றான் கரகரப்பான குரலுக்கு சொந்தக்காரன்

அவன் சென்றதும் வேகமாக சென்று கதவை தாழிட்டவள் தப்பி செல்ல வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று சுற்றிலும் பார்வையை சுழல விட கண்களில் அகப்படும் விதமாய் எதுவும் தெரியவில்லை “ஐயோ இங்க இருந்து எப்டி தப்பிக்கிறது பெருமாளே ஏதாவது ஒரு வழிய காட்டு இவன்கிட்ட இருந்து எப்டி தப்பிக்கிறது” என்று யோசனையில் உழன்றவள் எண்ணத்தில் பொறித்தட்ட ஜன்னல் அருகே சென்று யாராவது வருவோர் போவோரை அழைத்து விஷயத்தை கூறி உதவி நாடலாம் என்று எட்டி பார்த்தாள் சுற்றிலும் மரங்கள் மட்டுமே இருந்தனவே தவிர பார்ப்பதற்கு மனித நடமாட்டம் அற்ற பகுதியாக வெறிச்சோடி இருந்தது

சத்தம் போட்டு பார்க்கலாம்” என்று எண்ணியவள் சட்டென அந்த எண்ணத்தை கைவிட்டாள் “சத்தம் கேட்டு அவன் வந்திட்டான்னா அப்றம் ஒன்னும் பண்ண முடியாது” என்று நினைத்துக்கொண்டு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று அறையை நோட்டமிட துடைத்து வைத்தார் போல சுத்தமாய் இருந்தது, எந்த வழியும் இல்லை என்று மனம் சோர்ந்து போனவள் “அய்யோ அவ்ளோ தானா கடவுளே” என்று நடக்க போவதை நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் வரவா வேண்டாமா என்று துருத்தி கொண்டு இருந்தது 

கண்ணிரை வேகமாக சுண்டிவிட்டவள் “இது அழுக வேண்டிய நேரமில்ல ஏதாவது ஒரு வழி கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும் சோர்ந்து போக மாட்டேன்!” என்று வெகுவாய் சோர்விலிருந்து மீண்டவள் அடுத்து என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டு கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்படும் சத்தம் கேட்க அவசரமாக கிளம்பி கதவை திறந்தாள்

ம் பரவாயில்லையே சொன்ன மாதிரி கிளம்பிட்ட, சரி வா ஐயர் வந்துட்டாரு முகூர்த்ததுக்கு நேரம் ஆச்சு” என்று கூறி அழைத்து செல்ல 

வெறுப்போடு அவன் பின்னே சென்றவள் “ஏதாவது கைக்கு கிடைச்சா அடிச்சுப்போட்டுட்டு தப்பிச்சு போயிரலாம்” என்று அக்கம் பக்கம் பார்வையை சுழல விட ஆயுதம் போல எந்த பொருளும் இல்லை கடவுளே என நொந்து கொண்டு “இனி அவன் விட்ட வழி” என்று எண்ணி அமரந்தவள் அருகில் அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள் கட்டையான தேகம், கருவண்டை போன்ற நிறம், நிறைமாத கர்பிணியை போன்ற உப்பிய தொப்பை, தாடி என்ற பெயரில் முகத்தை மறைத்து காட்டுவாசியை போல அடர்ந்து படர்ந்திருந்த மயிர்கள், அடிக்கொரு முறை அவளை பார்த்து இளிக்கும் போது குமட்டி கொண்டு வந்தது அவளுக்கு தலை குனிந்து கொண்டவள் விஷ்ணுவின் நாமத்தை ஜெபமாய் ஜெபிக்க தொடங்கினாள் 

என்ன ஐயரே பொண்ண அப்டி பாக்குறிங்க சீக்கிரம் மந்திரத்தை சொல்லுங்க நேரம் ஆகுது” என்று அவசரப்படுத்த 

இருங்க தம்பி பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு தெரியிரதே அவா முகமே சரியில்ல ரெண்டுபேரும் சம்மதிச்சு தானே கல்யாணம் பன்றேல்” 

அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் வந்த வேலைய மட்டும் பாருங்க” என்றதும் தனக்கு தெரிந்த மந்திரங்களை அரைகுறையாக உச்சரித்து கொண்டிருந்தவன் மாப்பிள்ளையாய் அமர்ந்திருந்தவனின் கவனம் சிதறும் சமயம் அக்னி குண்டத்தில் சாம்பிரணியை போட அந்த அறை முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது 

நடப்பது எதையும் கவனிக்கும் நிலையில் அவள் மனம் இல்லை “தப்பி செல்ல வழி என்ன? அவன் வருவானா? என்னை கண்டுபிடித்திருப்பானா என்னை கூட்டிக்கொண்டு செல்வானா! விணு சீக்கிரம் வாங்க” என்று மனதின் உள்ளே கதறி கொண்டிருந்தவளின் கையை யாரோ அழுத்தமாக பற்ற!, யார் என்று நிமிர்ந்து பார்த்தவள் புலியிடமிருந்து உயிர்தப்பிய மானின் நிலையில்   விஷ்ணுவை கட்டி கொண்டு விம்ம தொடங்கினாள்

ஆறுதலாக அணைத்து கொண்டவன் “வைத்தி நீ துவாரகா கூட வீட்டுக்கு போ நா இவன கவனிச்சிட்டு வறேன்” என்று அவசரமாக கூற

மாமா நீங்க வருவீங்கன்னு நா கொஞ்சமும் நினைச்சு பாக்கலை இந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தா நிச்சயம் நா உயிரோட இருந்திருக்க மாட்டேன் என்ன வச்ச உங்கள பழிவாங்க போறேன்னு என்கிட்டயே சொல்றான் மாமா நீங்க எப்டி இங்க வந்திங்க! உங்களுக்கு எப்டி இந்த இடம் தெரியும்?” என்று தேம்பி கொண்டே கேள்விகளை அடுக்கினாள் வைதேகி 

ஆதுரமாய் தலையை கோதிவிட்டவன் விழி நீரை துடைத்துவிட்டு “கேள்வி கேக்குற இடமாடி இது எல்லாம் வீட்டுல வந்து விவரமா சொல்றேன் அத்தைகிட்ட எதுவும் உளறி வைக்காத நீ மலர் வீட்டுக்கு போயிருக்கேன்னு பொய் சொல்லிட்டு வந்துருக்கேன் சீக்கிரம் போ அவன் வந்துற போறான்” என்ற விஷ்ணு 

துவாரகாவிடம் “இவள வீட்டுல விட்டுட்டு சீக்கிரம் வா! இப்போ சீக்கிரம் கிளம்புங்க” என்று துரிதப்படுத்த

விஷ்ணு அவங்க ரெண்டுபேரும் இன்னும் வரல தனியா சமாளிச்சிருவயா?” 

அதெல்லாம் நா பாத்துகிறேன் நீங்க ரெண்டுபேரும் முதல இங்க இருந்து கிளம்புங்க” என்று கூறவும் வைதேகியை அழைத்து கொண்டு துவராகா கிளம்பி செல்ல சில மணி துளிகளில் விஜயனும் வைசாலியும் வந்து சேர்ந்தனர் பைக்கிலிருந்து வேகமாக இறங்கியவள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே ஓடிவர விஷ்ணுவை முறைத்து கொண்டு நின்றிருந்தான் கதிரேசன்

Advertisement