வைதேகிக்கு அழைப்பு விடுத்து எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த விஷ்ணு “மாமா அவ எங்கயாவது பிரெண்ட் வீட்டுல இருப்பா..!” என்றவன் சட்டென நினைவு வந்தவனாக “இப்போ தான் ஞாபகம் வருது அவளோட ஸ்கூல்ல ஒர்க் பண்ற மலர் பொண்ணு இன்னைக்கு கோவிலுக்கு வந்துருந்தா அவ கூட போயிருக்கலாம் நா போய் அவள கூட்டிட்டு வாறேன் நீங்க பதட்டப்படாம இருங்க” என்று இருவரின் பதட்டத்தை தணிக்க வேண்டி பொய்யுரைக்க
“சரிப்பா நீ போய் கூட்டிட்டு வா” என்று இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட சாவித்ரி
“டேய் நில்லுடா அவ எங்ககிட்ட சொல்லாம வேற எங்கயும் போற பொண்ணு கிடையாது? பொய் சொல்லாத நீ தான் அவள ஏதோ பண்ணிருக்கணும் சொல்லு! என்ன பண்ண நல்லவன் மாதிரி வேஷம் போடாதா உன்னோட குட்டு எப்பவோ வெளிப்பட்டுருச்சு இனிமேலும் எங்கள ஏமாத்த பாக்காத அது உனக்கு நல்லது இல்ல, அண்ணே பையன்னு பாக்குறேன் உண்மைய சொல்லு அவ எங்க” என்று அவன் சட்டையை ஆவேசமாக பற்றி உலுக்க
“அத்தை உங்களுக்கு என்னாச்சு ஏ இப்டி பேசுறீங்க என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா?”
“ரொம்ப நல்லாவே தெரியும்! நீ என்ன பண்ணுவ எப்டி பண்ணுவன்னு, எதையும் மறைக்காத விஷ்ணு எங்களுக்கு இருக்குற ஒரே ஆறுதல் அவ மட்டும் தான் தயவு செஞ்சு எங்க இருக்கான்னு சொல்லு” என்னும் போதே சாவித்ரியின் குரல் உடைந்து கண்ணீரை சொரிந்தது
“சவி உனக்கென்ன பைத்தியமா! ஏ இப்டி பேசுற அவன் உன்னோட அண்ணே பையன்அதான் சொல்றான்ல ஃபிரெண்ட் வீட்டுக்கு போயிருப்பான்னு அவன் கூட்டிட்டு வரட்டும் அப்றம் பேசிக்கலாம் இப்போ நீ கொஞ்சம் அமைதியா இரு” என்று ஜெகநாதன் அதட்டி அமைதிப்படுத்த முயற்சிக்க
“உங்களுக்கு தெரியாதுங்க அன்னைக்கு கல்யாணத்துல வைதேகிக்கு பால்ல தூக்க மாத்திரைய கலந்து கொடுத்தவனே இவன் தான், நல்லவேளை அவ அத குடிக்கல” என்றவர் “அப்டி பண்ணவன் இன்னைக்கு அவள ஏதாவது பண்ணிருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?” என்றுவிட்டு கோபமாக விஷ்ணுவிடம் திரும்பி “எங்க அவன இல்லன்னு சொல்ல சொல்லுங்க பாப்போம்” என்றுஅவன் முகத்தை உறுத்து விழிக்க
குற்றவுணர்வில் தலைகுனிந்து பேச்சற்று நின்றான் விஷ்ணு அன்றைய நிலையில் அவனுக்கு அதை தவிர வேறு வழி ஏதும் தெரியவில்லை தன் தந்தையிடம் கூறி திருமணத்தை நிறுத்த சொன்னவனுக்கு ஏமாற்றம் மிஞ்சவே மனதை திடப்படுத்தி கொண்டு செய்யும் செயல் தவறென தெரிந்தும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து மரத்து போன மனதுடன் கொடுத்தனுப்பினான் “என்னடா அத்தை சொல்றது உண்மையா? நீ அப்டி பண்ணயா சொல்லு விஷ்ணு! நீ அமைதியா இருக்குறத பாத்தா எனக்கே உன்மேல சந்தேகம் வருது அவள ஏதாவது பண்ணிருப்பயோன்னு!”
“மாமா நீங்களுமா..!” என்றவன் “நா கல்யாணத்த நிறுத்துறதுக்கு தான் அப்டி பண்ணேன் அவள கொல்லுறதுக்கு இல்ல! அந்த நேரத்துல எனக்கு என்ன பண்ணனும்னு தெரியல மாமா எப்டியாவது கல்யாணத்தை நிறுத்துனா போதும்னு மட்டும் நினைச்சேன், அதனால தான் அப்டி பண்ணேன் நா பண்ணது தப்பு தான் இல்லன்னு சொல்லல” என்றவன் உணர்ச்சி பொங்க
“உங்கள விட அவ மேல எனக்கு தான் அதிக உரிமை இருக்கு! அவ உங்க பொண்ணா இருக்கலாம்! ஆனா.. தேவிம்மா என்னோட மனைவி கல்யாணம் ஆகல தான் கல்யாணத்தை நிறுத்துனவனும் அவள பிடிக்கலைன்னு சொன்னவனும் நான் தான்!, இருந்தாலும் இந்த உயிர் இருக்குற வரைக்கும் அவ தான் எனக்கு மனைவி” என்று உரிமை பேசியவன் “அவ மலர் வீட்டுக்கு தான் போயிருப்பா நா போய் கூட்டிட்டு வறேன் பதட்டப்படாம இருங்க” என்றுவிட்டு விறுவிறுவென சென்றுவிட
அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்த ஜெகநாதன் மனைவியின் புறம் திரும்பி “என்ன சவி எதுக்கு அப்டி பேசுன அவனுக்கு இன்னைக்கு பிறந்த நாள் இப்டி அவனோட மனச கஷ்டப்படுத்திட்டயே! பாவம் வேதனையோட போறான் உனக்கு அவன் மேல கோபம் இருக்கலாம் ஆனா இப்டி பழி போடுற அளவுக்கு இருக்க கூடாது அவன் எப்டிபட்டவன்! வைதேகி மேல எந்த அளவுக்கு பாசம் வச்சுறுக்கான்னு உனக்கு தெரியாதா?, நீ சொன்னத கேட்டு நானும் அவனோட மனச கஷ்டப்படுத்திட்டேன்” என்று வருத்துடன் இயம்ப
சிரித்து கொண்டே “நீங்க என்ன புரிஞ்சுகிட்டது அவ்ளோ தான்! எனக்கு தெரியும் அவன் வைத்திய கூட்டிட்டு வந்துருவான்னு, ஆனா நா ஒரு விஷயத்தை அவன் வாயால கேக்கணும்னு ஆசைப்பட்டேன் இப்போ கேட்டுட்டேன்” என்றவரின் மனதில் நிறைவு பிறந்தது
“என்ன கேக்கணும்னு ஆசைப்பட்ட?”
“வைதேகிய அவன் எந்த அளவு நேசிக்கிறான்னு!, இப்போ அவன் சொன்னத நீங்க கேக்கல கல்யாணம் பன்னலைன்னாலும் இவனுக்கு பொண்டாட்டி அவ தானம், இவ்ளோ ஆசைய மனசுல வச்சுக்கிட்டு பிடிக்கலனு எதுக்கு பொய் சொல்லணும் அதான் அவன்கிட்ட கோபப்டுற மாதிரி பேசுனேன் அவன் மேல எனக்கு கோபம் இல்ல வருத்தம் தான், எல்லார் முன்னாடியும் அன்னைக்கு என்னோட அண்ணே அக்கா மாமா எல்லாரும் தலைகுனிஞ்சு நின்னாங்களே அத நினைக்கும் போது அவன் மேல இருக்குற வருத்தம் கோபமா மாறிடுது வேற ஒன்னுமில்ல அவன் மலர் வீட்டுக்கு போய் வைத்திய கூட்டிட்டு வந்துருவான் நீங்க வேலைக்கு கிளம்புங்க டைம் ஆச்சு” என்றவர் சமையலறை புகுந்து கொள்ள தன் மனைவியின் செயலை சபாஷ் போட்டு மெச்சிக்கொண்டவர் அலுவலகம்செல்ல தயாரானார்
மூர்ச்சையில் இருந்து தெளிந்தவள் கைகால்களை அசைத்து பார்க்க அசைக்க முடியவில்லைநன்றாக நாற்காலியோடு கயிற்றால் பிணைக்கபட்டிருந்தன “யார் பண்ணிருப்பா நம்மள எதுக்கு கடத்தனும் நாம என்ன அவ்ளோ பெரிய ஆளா…?ஆனா நாம தான் எந்த சாதனையும் பண்ணலயே அப்றம் எதுக்கு சிவனேன்னு ரோட்டுல போயிட்டு இருந்த என்ன கடத்தி கொண்டுவரனும்” என்று எண்ணியவள் இருட்டில் ஏதாவது தெரிகிறதா என்று விழிகளை விரித்து துழாவ எதுவும் தெரியவில்லை
“ஹாலோ யாராவது இருக்கீங்களா..! ப்ளீஸ் இந்த கயிறை அவுத்து விடுங்களேன் ரொம்ப வலிக்கிது யாராவது இருக்கீங்களா?” என்று சத்தம் கொடுக்க எந்த பதிலும் இல்லை
“அய்யோ… இந்நேரம் வீட்டுல தேட ஆரம்பிச்சுருப்பாங்களே!, டேய் யாராவது இருக்கீங்களா இருந்தா வந்து தொலைங்கடா” என்று பொறுமையிழந்து கத்த
“ஏய் பேச்சை குறை சும்மா சும்மா கத்திக்கிட்டு இருக்காதா கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இரு எங்க அண்ணே வர நேரம்” என்று அதட்டியதும் அமைதியாக அமர்ந்திருந்தாள் வருபவன் யார் என்று அறியும் ஆவலோடு
“என்னடா முருகா தூக்கிட்டு வந்தத யாரும் பாக்கலையே” என்று கரகரப்பான குரலில் வந்தவன் கேட்க
“இல்ல ண்ணே யாரும் பாக்கல முகத்துல துணி கட்டியிருந்தேன் அதனால யாரும் பாத்துருக்கா மாட்டாங்க” என்றான் குரலில் பவ்யத்தை காட்டி
இருவரும் பேசிக்கொண்டதை வைத்து வந்திருப்பவன் தான் தலைவன் என்று புரிந்து கொண்டவளுக்கு அவனின் குரல் பரிச்சயம் போல தோன்ற அறைக்குள் நுழைந்தவன் விளக்கை ஒளிர விடவும் வைதேகிக்கு கண்கள் கூசின மயக்கம் தெளிந்ததிலிருந்து இருட்டையே பார்த்து கொண்டிருந்ததால் கண்களை சாதாரணமாக திறந்து பார்க்க முடியவில்லை
“கண்ணு கூசுதோ வேணா லைட் ஆப் பண்ணிறவா செல்லம்” என்ற குரல் மிக சமீபத்தில் கேட்டதும் திடுகிட்டவள் அவன் முகம் பார்க்க திகைத்து போனாள்
“நீயா?” என்று அதிர்ச்சியில் வாயிலிருந்து தானாக வாரத்தைகள் வெளிவர
“ஆமா நானே தான்” என்றவன் “நினைச்சு கூட பாத்திருக்க மாட்டல நா உன்ன கடத்துவேன்னு” என்று கெக்கலிட்டு சிரிக்க
“நீ எப்டி மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த!”
“அது ஒன்னும் பெரிய விஷயமில்லையே இதோ இருக்கு மதுரை, ஏ நா சென்னைக்கு வர கூடாதுன்னு உன்னோட மாமா ஏதாவது சட்டம் போட்டுருக்கானா?” என்று ஏளனம் செய்தவன் “பாவம் நீ இப்டி வந்து மாட்டிக்கிட்டயே செல்லம்”
“இன்னொரு தடைவை செல்லம்ன்னு சொன்ன வாய ஒடைச்சுறுவேன் ஒழுங்கு மரியாதையா என்ன தூக்கிட்டு வந்த இடத்துலயே கொண்டு போய் விட்ரு என்னோட மாமாவுக்கு மட்டும் நீ தான் கடத்துனேன்ற விஷயம் தெரிஞ்சது உன்னோட உயிருக்கு உத்தரவாதம் இல்ல” என்று பயம் இருந்தாலும் அதனை வெளிகாட்டி கொள்ளாமல் மிரட்டினாள்