Advertisement

குழப்பத்துடன் உள்ளே நுழைந்தவனை ஏறிட்ட விஷ்ணு “என்னடா என்னாச்சு முகம் ஏன் இப்டி இருக்கு!” என்று கேட்க

“ஒன்னுமில்ல அப்றம் சொல்றேன்” என்றவன் சுற்றி இருந்தவர்களை கண்களால் குறிப்பு காட்டவும் புரிந்து கொண்டவன் போல தலையசைத்தான் விஷ்ணு

சஞ்சுவிற்கு அதிரடியான அர்ச்சனை தொடங்கியது  “பொம்பள பிள்ளை ஒரு இடத்துக்கு போனமா வந்தோமான்னு இல்லமா எங்கடி போய் சுத்திட்டு வர்ற” என்ற அமிர்தா கதவோரத்தில் இருந்த மூங்கில் பிரம்பை கையில் எடுக்க 

வேகமாக சாவித்திரியின் பின்னால் சென்று தஞ்சமடைந்தவள்”ஆன்ட்டி அடிக்க வேணாம்னு சொல்லுங்க ஆன்ட்டி சின்ன பொண்ணு தானே என்னோட பிரெண்ட்ட பாத்ததும் பாக்காமா பேசாமா எப்டி வர்றது அதான் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன், அவ கூட பேசுனதுல நேரம் போனதே எனக்கு தெரியல நா பண்ணது தப்பு தான் சாரி கூட கேக்குறேன் அடிக்க வேணாம்னு சொல்லுங்க ஆன்ட்டி” என்று கெஞ்ச 

தூவாரகாவிற்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை”முட்டைக்கோஸ் வாயில வர்றதெல்லாம் பொய் என்னம்மா நடிக்கிறா..!” என்று குலுங்கி குலுங்கி வாய்மூடி சிரிக்க 

அவனை கண்டு தீயாய் முறைக்க தொடங்கினாள் சஞ்சளா அவள் முறைப்பதை கண்டு கொண்ட அமிர்தா “அந்த தம்பிய ஏண்டி முறைக்கிற” என்று அதட்டியர் துவராகாவிடம்  “எங்கப்பா இருந்தா..” என்று கேட்க

“அத ஏ ஆன்ட்டி கேக்குறிங்க கடைக்கு போய் விசாரிச்சுட்டு வரும் போது தான் பாத்தேன்” என்றவன் “சொல்லவா?” என்று ஒற்றை ஒருவம் உயர்த்தி கேலி இழையோடும் சிரிப்போடு விழி பாஷையில் கேட்க  

“ப்ளீஸ் வேணாம் சொல்லிறாதிங்க ப்ளீஸ் ப்ளீஸ்” என்று விழிகளில் அச்சத்தை நிரப்பி மன்றாடியவளை கண்டு மனம் இளகியவன் அவளை பார்த்து கொண்டே “அவ பிரெண்ட் கூட பேசிட்டு இருந்தா ஆன்ட்டி இவ மேல தப்பு இல்ல அந்த பொண்ணுக்கு ஏதோ பாடத்துல சந்தேகமாம் அத கிளியர் பண்ணிட்டு போன்னு சொல்லவும் இவளால மறுத்து பேச முடியல! அதான் நேரம் போனது கூட தெரியாம பேசிட்டு இருந்துருக்கா” என்று கூறவும் அப்பாடா என்று பெருமூச்சுவிட

“பாடத்துல சந்தேகம்னா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சொல்லி தர வேண்டியது தானே அது என்ன வீதியில நின்னு சொல்லித்தறது கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கிறாளா?, போனவள காணோமேன்னு வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு நின்னுட்டு இருந்தா சந்தேகத்தை தீர்த்துட்டு வரேன்னு சாதரணமா சொல்றா நீ முதல வீட்டுக்கு வா அங்க வச்சு பேசிக்கிறேன் வாடி வீட்டுக்கு” என்றவருக்கு கோபத்தில் கண்கள் சிவந்திருந்தது 

“இல்ல நா வரல இன்னைக்கு ஆன்ட்டி வீட்டுலயே படுத்துகிறேன் அங்க வந்தா நீ அடிப்ப நா வர மாட்டேன்” என்றவள் “ஆன்ட்டி நா இன்னைக்கு இங்க அக்கா கூட படுத்துகிறேனே ப்ளீஸ் என்ன அனுப்பிராதீங்க அங்கிள் சொல்லுங்க” என்று கணவன் மனைவி இருவரிடம் வேண்ட 

சிரித்து கொண்டே “நீ இத கேக்கணுமா?” என்றவர் “அமிர்தா சஞ்சு இன்னைக்கு இங்கயே படுத்துகட்டும் நீ போ அவ காலையில வருவா சின்ன பொண்ணு தானே விடு” என்று ஜெகநாதன் சமாதானம் பேச

“காலையில வீட்டுக்கு தானே வந்தாகணும் அப்ப வச்சுக்கிறேன் இப்டியே விட்டா சரி வராது நாளைப்பின்ன என்ன தான் குறை சொல்லுவாங்க என்ன பிள்ளை வளர்த்து வச்சுறுகன்னு” என்றவர் அடிக்க பிரம்பை ஓங்க சாவித்ரியை ஒட்டிய வண்ணம் மறைவாக நின்றுகொண்டாள் 

“சரி சரி விடு அமிர்தா உன்கூட இருக்குற வரைக்கும் தானே இப்படியெல்லாம் விளையாட்டு தனமா நடந்துக்க முடியும் கல்யாணமாகி போற வீட்டுல இப்டி இருக்க முடியுமா? விடு சின்ன பொண்ணு தானே” என்று சாவித்ரியும் பரிந்து பேச

“உங்களுக்கு தெரியாது க்கா தினமும் இவள நினைச்சு நா கவலைப்படுறது, எங்க!, அம்மா வளத்த பொண்ணு அதான் தறிகெட்டு போயிருச்சுன்னு யாரும் சொல்லிரு வாங்களோன்னு பயந்து பயந்து ஒவ்வொரு நாளையும் கடத்திட்டு வறேன், ஆனா அத பத்தி கொஞ்சமாவது கவலைப்படுறாளா? அவரு போனபிறகு எனக்குன்னு இருக்குற ஒரே சொந்தம் இவ மட்டும் தான்! இவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்றம் நா எப்டிக்கா” என்று முழுவதையும் கூறமுடியாமல் வார்த்தைகளை விழுங்கியவர் ஆதங்கத்தை கண்ணிரின் வழியே காட்டி

“காலம் ரொம்ப கெட்டு போயிருக்கு பாத்து நடந்துக்க சொல்லி கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க எனக்கு வேலை இருக்கு” என்று சாவித்ரியிடம் கூறியவர் “காலையில சீக்கிரம் எழுந்து வா எக்ஸாம் இருக்கு நீ பாட்டுக்கு எட்டு மணி வரைக்கும் தூங்கிட்டு இருக்காதா” என்று மகவிடம் கூறிவிட்டு சென்றுவிட

கண்கள் கலங்கிய நிலையில் நின்றிருந்தாள் சஞ்சளா இதுவரை அமிர்தா அழுது அவள் பார்த்ததில்லை இன்று, தானே அவர் அழுகைக்கு காரணம் ஆகிவிட்டோமே என்றவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது 

“ப்ச் நீ ஏன் கண் கலங்கி நிக்கிற வா வந்து சாப்பிடு” என்று அமர வைத்தவர் அனைவருக்கும் பரிமாறினார், அருகில் அமர்ந்திருந்தவள் உணவை வெறித்து கொண்டிருப்பதை கண்டு அவள் கைப்பற்றிய துவாரகேஷ் ” அம்மா தானே பேசுனாங்க! எதுவும் நினைக்காம சாப்பிடு எல்லாம் சரியாகிரும்” என்றதும் மனதிற்கு ஆறுதல் கிடைத்தது போன்ற உணர்வு உண்டாக வலிய வரவழைத்த புன்னகை சிந்தியவள் அமைதியாக உண்ண தொடங்கினாள் 

உண்டு முடித்த உணவு பாத்திரங்களை பெண்கள் இருவரும் எடுத்து வைக்க சாவித்ரியும் ஜெகநாதனுக்கு தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர் விஷ்ணுவும் துவாரகாவும் மாடிக்கு சென்று விசாரணை பற்றி விவாதிக்க தொடங்கினர் சாலையில் நடந்த நிகழ்வை பற்றி துவாரகா கூறவும் “நம்பர் நோட் பண்ணியா? என்ன கலர் கார்? உள்ள எத்தனை பேர் இருந்தாங்க யூகமா சொல்ல முடியுமா?” என்று விசாரிக்கும் தோணியில் கேட்க

“டேய் என்ன பேச விடு நீ பாட்டுக்கு அடிக்கிட்டே போற! எனக்கு தெரிச்சத சொல்றேன்” என்றவன் “ஐ டென் மாடல் மாதிரி தான் இருந்தது கார் ரொம்ப அடிவாங்கி இருந்தது விஷ்ணு ரெட் கலர், நம்பர்.. சரியா தெரியலை அவள விலக்கிவிட்டு கீழ விழுந்ததுல எதையும் சரியா கவனிக்க முடியலை” என்று கூற

“மாமாவுக்கு அடிபட்டது கூட தற்செயலா நடந்த மாதிரி இல்ல! என்கிட்ட சொன்ன மாதிரியே விபத்தை ஏற்படுத்திருக்கான் லேசான காயம் தான் ஆனா… இதை இப்டியே விட கூடாது துவாரகா, செண்டிமென்டா பிளாக்மெயில் பன்றான் இப்டியெல்லாம் பண்ணா இந்த கேஸ்ல இருந்து நா விலகிருவேன்னு நினைச்சுருக்கான் எடுத்த கேஸ்ஸா முடிக்காம நா இதுல இருந்து பின்வாங்க மாட்டேன்” என்று அறுதியிட்டு கூறியவன் முகத்தில் அத்தனை கடினம் 

பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி கொண்டே வைதேகியும் சஞ்சளாவும் கதை அளந்து கொண்டிருந்தனர் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு சாதகமாக வைதேகியே துவாரகாவை பற்றிய பேச்சை தொடங்கினாள் இது தான் நேரம் என்று எண்ணியவள் “அக்கா நீங்க மூணு பேரும் காலேஜ் வரைக்கும் ஒண்ணா படிச்சவங்களா இல்ல.. ஸ்கூல் பிரெண்டா?” என்று கேட்க

சத்தமாக சிரித்தவள் “நீ நினைக்கிற மாதிரி ஸ்கூல் பிரெண்டும் இல்ல காலேஜ் பிரெண்டும் இல்ல! அவங்க ரெண்டுபேரும் என்ன விட அஞ்சு வயசு மூத்தவங்க போலீஸ் ட்ரைனிங் பிரியட்ல ரெண்டுபேரும் பிரெண்ட் ஆனாங்க அப்ப தான் துவா அண்ணாவை எனக்கு தெரியும்” என்று வைதேகி கூற

“அவரு வீட்டுக்கு போகலையா?”

“எவரு?”

“அதான்..! துவாரகேஷ் அவர் தான்!”

“அவர் போனா என்ன போகலன்னா உனக்கென்ன அண்ணன பத்தி நீ ஏ கேக்குற!”

“இல்ல சும்மா தான் கேட்டேன் டைம் ஆச்சு அதான் வீட்டுக்கு போவாரா இல்ல இன்னைக்கு நைட் இங்க ஸ்டே பண்ணுவாறான்னு சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்” 

“ரெண்டு பேரும் ஏதோ முக்கியமான கேஸ் விஷயமா பேசிட்டு இருக்காங்க இனிமேல் தான் கிளம்புவாரு ஆன்ட்டி வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்கல”என்றதும்

“அவருக்கு அம்மா இருக்காங்களா!” என்று திகைப்புடன் சஞ்சளா கேட்க 

திடுகிட்ட வைதேகி “நீ ஏண்டி இப்டி கேக்குற!” 

“இல்ல சும்மா தான் கேக்கணும்னு தோணுச்சு” என்று சமாளித்தவள் “இதுக்கு மேல இங்க இருந்தோம் நமக்கு நல்லது இல்ல சஞ்சு” என்று எண்ணி கொண்டு “சரிக்கா எனக்கு தூக்கம் வருது நா ரூம்க்கு போறேன் நீங்க வேலைய முடிச்சிட்டு வாங்க” என்று வைதேகியின் புறம் திரும்பி பேசி கொண்டே வந்தவள் எதன் மீதே இடித்ததும் பயத்தில் துள்ளி நகர்ந்து திரும்பி பார்க்க

எதிரில் கம்பிரமாய் ஆறடி உயரத்தில் சட்டை கிழிந்துவிடும் அளவிற்கு விறைத்து கொண்டு நின்றிருந்தவனை கண்டு “பாத்து வர தெரியாது கண்ணு என்ன பின்னாடியா இருக்கு” என்று சிடுசிடுக்க

“அத நா சொல்லணும் இடிச்சதும் இல்லாம பேச்சுவேற கேக்குதா” என்றவன் “என் மேல உனக்கு என்ன தான் கோபம்! எனக்கு புரியல? என்ன உனக்கு முன்னாடியே தெரியுமா? நா ஏதாவது உன்கிட்ட தப்பா நடந்துருக்கேனா!” என்று குழப்பத்துடன் கேட்க 

“நீங்க என்ன பாத்தில்லை ஆனா நா உங்கள பாத்துருக்கேன் தினமும்!” என்று அழுத்தம் கொடுத்து கூறியவள் “உங்க மேல கோபம் இருக்கு ஆனா காரணம் என்னன்னு இப்போ சொல்ல மாட்டேன் நேரம் வரும் போது நீங்களே தெரிஞ்சுப்பிங்க அதுவரைக்கும் என்கிட்ட வம்பிழுக்காம இருங்க அது தான் உங்களுக்கு நல்லது” என்று ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரிக்கும் குரலில் கூற

அவளின் துடுக்கான பேச்சும் சட்டென எழும் சிறுபிள்ளை தனமானா கோபமும் அவனுக்குள் சிரிப்பை வரவழைக்க “அத நா சொல்லணும் முடிஞ்ச அளவுக்கு என்கிட்ட வம்பிழுக்காம இரு” என்று கூறவும் முகத்தை திருப்பி கழுத்தை வெடுக்கென்று சிலுப்பி கொண்டு சென்றவளை புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான் துவாரகேஷ்

“என்ன ண்ணா கிளம்பியாச்சா” என்று வைதேகி கேட்கவும் பார்வை விலக்கியவன் “ம் கிளம்பிட்டேன் அம்மா தனியா இருப்பாங்க சீக்கிரம் போகணும் ரொம்ப லேட் ஆகிருச்சு” என்று அவசரமாக கூற

“அப்டின்னா இந்தாங்க இத ஆன்ட்டி கிட்ட நா கொடுத்தேன்னு சொல்லி கொடுத்துருங்க” என்று டிஃபன் பாக்ஸை நீட்டினாள்

“என்னது வைதேகி ” என்று  டிப்ஃனை திறந்து பார்த்து விட்டு அவளை முறைத்து பார்க்க 

“என்ன அண்ணா அப்டி பாக்குறிங்க நா வெடிகுண்டு எதுவும் வைக்கலையே குளோப் ஜாமுன் தானே வச்சுருக்கேன்”  

“என்ன வைத்தி உனக்கு தெரியாதா நா ஏன் இப்டி பாக்குறேன்னு அம்மாவுக்கு ஏற்கனவே சுகர் ஜாஸ்தி இதுல அவங்களுக்கு பிடிச்ச ஜாமுன் கொடுத்து அவங்க கிட்ட கொடுக்க சொன்னா முறைக்காம என்ன பண்றது இப்போ தான் கொஞ்சம் கன்ட்ரோல் ஆகிருக்கு” என்றவன் “வேணாம் இத இப்ப போச்சே ஒரு வால் இல்லாத வானரம் அதுகிட்ட கொடு நல்லா சாப்பிடும்” என்று கிண்டல் மொழியில் கூற

“இப்போ யார வானரம்னு சொன்னிங்க பாத்து பேசுங்க அப்றம் பேசுறதுக்கு வாய் இருக்காது” என்று கோபத்துடன் அவனை முறைத்து கொண்டு நின்றிருந்தாள் சஞ்சளா

குரல் கேட்டு திரும்பியவன் “இவ எப்ப வந்தா அய்யோ வம்ப விலை கொடுத்து வாங்கிட்டோமே” என்று எண்ணியவன் “உன்ன தான் சொன்னேன் அதுல என்ன தப்பு! நா சரியா தான் சொல்லிருக்கேன் நிஜமாவே உனக்கு வால் மட்டும் தான் இல்ல மத்தபடி நீ அதே தான்” என்று கூறிவிட்டு

வைதேகியிடம் பேச்சை தொடர்ந்தான் “சரி வைத்தி நா கிளம்புறேன் அவன கொஞ்சம் பாத்துக்கோ” என்று விட்டு சஞ்சளாவை திமிராக பார்த்து கொண்டே செல்ல அவன் செல்வதை முறைப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் சஞ்சளா இருவரும் எலியும் பூனையுமாக பேசி கொண்டதை கண்டு சிரித்து கொண்டே வைதேகி பாலை காய்ச்ச தொடங்க

“பாத்துட்டு போறத பாரு” என்று முணுமுணுத்தவள் “நீ தான் குரங்கு பக்கி தொங்கா இன்னும் நிறைய…” என்று அவனுக்கு மனதில் அர்ச்சனை செய்து கொண்டே வேகமாக வைதேகியின் அறைக்குள் சென்று நுழைந்து கொண்டவள் எதற்காக வந்தோம் என்பதையும் மறந்து அவனை நினைத்து கோபத்தில் உழன்று கொண்டிருக்க அப்போது தான் உணர்ந்தாள் சென்றது எதற்காக என்று “ச்சே இவரு பேசுனதுல தண்ணி குடிக்க போனதையே மறந்துட்டேன்” என்று எண்ணிக்கொண்டே டைனிங் டேபிள் மேல் இருந்த தண்ணிரை மடமடவென குடித்து விட்டு ஆழ்ந்து பெருமூச்சு விட்டபடி மீண்டும் அறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள் சஞ்சளா

மூடிய இமைகளுக்குள் கருவிழிகள் அலைபாய கண்களை மூடி சிந்தனை செய்தபடி அமர்ந்திருந்தவனை கண்டு அவன் கேசத்தை அளந்து அமைதி படுத்த வேண்டும் என தோன்றிய மனதை பெரும்பாடுபட்டு அடக்கிய வைதேகி “விணு!” என்று மெல்லிய குரலில் அழைக்க

குரல் கேட்டு இமை திறந்தவன்”என்ன தேவிம்மா”  

“உங்களுக்கு பால்” என்று நீட்டியதும் எதுவும் சொல்லாமல் வாங்கி பருக தொடங்கினான் 

Advertisement