Advertisement

மின்னல் – 23

         ஆழ்ந்த உறக்கத்தில் யாரோ எழுப்புவதை போல இருக்க மெல்ல கண் விழித்தாள் ஜீவன்யா.

பாலா தான் கிளம்பி நின்றுகொண்டு இருந்தான் அவளுக்கெதிரே. வெளியில் கிளம்பிவிட்டதை போல இருந்தது அவன் உடை.

“எங்க கிளம்பிட்டீங்க?…” என்று கண்ணை நன்றாய் அழுத்தி விழித்து அவள் வேகமாய் எழும்பவும்,

“தென்றலை கூப்பிடனும். டைம் ஆகிருச்சு ஜீவா. நீ எழுந்து அந்த ரூம் போய் தூங்கு. அதுக்கு முன்னாடி சாப்பிட்டுட்டு அப்பறமா தூங்கு…” என சொல்ல,

“இல்ல அவ்வளோ தான். தூக்கம் போய்டுச்சு. நீங்க சாப்பிட்டாச்சா?…”

“ம்ஹூம் இல்லை…” என சொல்லி தனது வாட்சை தேடிக்கொண்டு இருந்தான்.

“கொஞ்சம் இருங்க. ஈவ்னிங் ஆக போகுது. லஞ்ச் எடுத்துக்காம எப்படி போவீங்க? டைம் இருக்கும் தானே?…”

“டைம் இருக்கு. அதுக்கு முன்னாடி ஒரு ப்ரவுஸிங் சென்டருக்கு வரேன்னு சொல்லிருந்தேன். ஒரு எவிடென்ஸ் கலெக்ட் பண்ண…” என கேட்டுக்கொண்டே,

“என் வாட்சை எங்க வச்சேன்னு தெரியலையே?…” என்று சுற்றிக்கொண்டு இருந்தான் அந்த அறையையே.

“நான் தான் எடுத்து பில்லாவுக்கு கீழே வச்சிருக்கேன். கீழே விழுந்திருச்சு, கால்ல பட்டா உடைஞ்சிருமோன்னு எடுத்து வச்சேன்…” என சொல்லிக்கொண்டே அவள் பக்கத்து அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் பேசிக்கொண்டே ஓடியவளை கண்டு முகம்கொள்ளா புன்னகையுடன் வாட்சை எடுத்து கையில் கட்டிக்கொண்டான்.

கிட்சனுக்கு வர எல்லாமே தயாராக இருந்தது. குழம்பு, காய்களை எடுத்து சுட வைத்தவன் இரு தட்டுகளில் போட்டுக்கொண்டிருக்க ஜீவா வந்துவிட்டாள்.

“நான் வரேன்னு சொன்னேன்ல?…” அவசரமாய் குளித்துவிட்டு வந்தவள் அவனை கடிந்தாள்.

“அதனால என்ன? நீ வந்து சூடு செய்யனும். அதான் நானே பண்ணிட்டேன்…” என்று அவளிடம் தட்டை நீட்டிவிட்டு ஹாலுக்கு வந்தான்.

ஒன்றும் பேசாமல் மும்மரமாய் அவள் சாப்பிட்டுக்கொண்டு இருக்க தானாகவே கேட்டான் அவளிடத்தில்.

“ஜீவா, பீலிங் குட்?…” என்றதும் அவனை முறைத்து பார்த்தவள்,

“பேசாம சாப்பிடுங்க. நேரமாச்சுன்னு இப்ப கேட்கிற கேள்வியை பாரு…” என்று பேச வாய்விட்டு சிரித்தவன்,

“ஓகே ஓகே. கூல்…” என்று சொல்லி வேகமாய் சாப்பிட்டு முடித்தான்.

“போதுமா?…”

“ஹ்ம்ம், அன் டைம் ஆகிருச்சு. அதனால இது போதும்…” என சொல்லி கையை கழுவிவிட்டு வந்தவன் தன் பின்னே வந்தவளை அணைத்து விடுத்து,

“பை. டோர் லாக் பண்ணிக்கோ. வர லேட் ஆனாலும் நான் கால் பன்றேன். இல்லை மெசேஜ் பன்றேன்…” என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

பாலா சென்றதும் கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்தவள் சாப்பிட்டதை எடுத்து கழுவி வைத்துவிட்டு தலையை உலர்த்தினாள்.

வீட்டை மீண்டும் வலம் வந்தவளுக்கு பாலா சொல்லியதை போல வீட்டிற்கு என்ன தேவையிருக்கும் என பார்த்து ஒரு பேப்பரில் எழுதி வைக்க மேலும் அரைமணி நேரம் அதிலேயே நகர்ந்தது.

இரவு உணவிற்கும் அந்த பெண்மணியே வந்து சமைத்துவிடுவார் என பாலா சொல்லியிருக்க அந்த வேலையும் இன்றி இருந்தவள், பின் வானதிக்கு அழைத்து பேச ஆரம்பித்தாள்.

“என்ன ஜீவா? இந்நேரம் கூப்பிட்டிருக்க? எதாச்சும் அவசரமா?…”

காலையில் தான் வீட்டிற்கு சென்று பார்த்து வந்திருக்க இப்போது அவள் அழைத்ததும் வானதிக்கு அப்படி தான் தோன்றியது.

“ஏன் பதறிட்டிருக்க? ஒன்னும் இல்லை. சும்மா தான் கால் பண்ணேன். பாலா வெளில போயிருக்காங்க. அதான் நான் உனக்கு கூப்பிட்டேன்…”

“ஓஹ், பொழுது போகலையாக்கும்?…” என்று கிண்டலாய் வானதி சிரித்தாள்.

“ஓகே, நீ பிசியா இருந்தா வச்சிடறேன்…”

“அடி வாங்குவ நீ. சொல்லு. என்ன பன்ற? சாப்பிட்டாச்சா?…” என கேட்டு,

“நான் ஒருத்தி மணி என்ன ஆகுது? ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டைம்ல சாப்பிட்டியான்னு இப்ப கேட்கறேன் பாரு…” என்றதும் ஜீவா சிரித்துவிட்டாள்.

“என்ன சிரிப்பு?…”

“இல்லை சும்மா நீ உன்னையே திட்டிக்கிட்டேல அதான் சிரிப்பு வந்திருச்சு…” ஜீவாவும் எதையும் காட்டிக்கொள்ளாமல் பேச,

“சரிதான். ஆமா அந்த கேஸ் எப்போ ஜட்ஜ்மென்ட்க்கு வருது?…”

“போலீஸ் கஸ்ட்டில எடுத்திருக்காங்க. அந்த விசாரணை வேற இருக்கு. எனக்கு வேற எந்த விவரமும் தெரியலை…”

“சரி விடு. இப்ப போய் அதை பேசிட்டிருக்கேன் பாரு. நான் ஒரு லூசு…” என தன்னையே திட்டிக்கொண்ட வானதி,

“எத்தனை நாள் லீவ்? அட்லீஸ்ட் ஒரு பத்து நாள்?…” என கேட்க,

“பத்துநாளா?…” என யோசித்தாள் ஜீவா.

இன்னுமே அதை பற்றிய முடிவுக்கு வரவில்லையே? வேலைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

முடிந்தால் பாலாவிடம் சொல்லி அங்கே வேறு இடத்தில் வேலைக்கு கேட்போமா என்ற யோசனையும் இருந்தது.

“ஜீவா?…” வானதியின் அழைப்பில் மீண்டவள்,

“ஹ்ம்ம், வரனும்…”

“என்ன வரனும்னு இழுக்குற? வர்ர. அவ்வளோ தான்…”

“வேலைக்கு கண்டிப்பா வருவேன் வானதி. ஆனா…”

“ஏன் இத்தனை குழப்பம் உனக்கு? இங்க வரதுல என்ன சிரமம்? சரோ மேமை நினைச்சா?…” என்றவள்,

“அன்னைக்கு என்னவோ சொன்ன அவங்கக்கிட்ட என்னை நினைச்சு இப்படி நடந்து உங்க மரியாதையை ஏன் நீங்க குறைச்சுக்கறீங்கன்னு. இப்ப என்னடான்னா இத்தனை தயங்கிட்டு இருக்க?…”

“புரியுது வானதி. ஆனா இது எல்லார் பார்வையையும் உறுத்தும்…”

“எப்ப இருந்து அடுத்தவங்க பசிக்கு நீ சாப்பிட ஆரம்பிச்ச?…”

“வானதி…”

“இங்க பார், ஜீவா இங்க வந்தப்போ நீ எப்படி இருந்த? உன்னோட மூடி டைப் பார்த்து பேசாததா? ஏன், நான் கூட தான் உன்கிட்ட கோவிச்சேன்.  அதுக்கெல்லாம் அசஞ்சு குடுத்தியா என்ன?…”

“அப்போ இருந்த சூழ்நிலை வேற வானதி. இப்போ…”

“ம்ஹூம், நீ சரிப்படமாட்ட. நான் உனக்கு எதுவும் சொல்லனும்னு இல்லை. ஆனா நீயே யோசி. தெளிஞ்சா எனக்கு போன் பண்ணி சொல்லு. ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன். இப்படியே நீ இந்த ரூட்ல யோசிச்சா நீ எங்கயும் வேலை செய்ய முடியாது…”

“அப்படியெல்லாம் இல்லை…”

“என்னவும் செஞ்சுக்கோ. ஆனா பயந்து நிக்காத. அவ்வளோ தான்…” என வானதி போனை வைத்துவிட்டாள்.

மொபைலை வைத்துவிட்டு யோசனையுடன் ஜீவா அமர்ந்திருக்க நேரம் கடந்து கொண்டே இருக்க அமர்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.

பாலா தென்றலுடன் வந்த பின்பு தான் எழுந்து செல்லவே செய்தாள். தனக்கும் சேர்த்து மூவருக்குமே டீயை வைத்தவள் தென்றலுக்கு கொடுத்துவிட்டு அன்றைய வகுப்பை பற்றி கேட்டாள்.

“நெக்ஸ்ட் வீக்ல இருந்து ரிவிஷன் வைக்கறாங்க க்கா. பப்ளிக் எக்ஸாம் வர வரைக்கும் எக்ஸாம்ஸ் இருந்துட்டே இருக்கும்…”

“போர்ஷன் தான் முடிஞ்சதுல. அதனால ரிவிஷன் இருந்துட்டே இருக்கும்…”  பாலாவும் சொல்ல,

“ஆமா மாமா, நாளைக்கு ஸ்கூல் இருக்கு. இனி சண்டேவும் லீவ் இல்லை. ஸ்பெஷல் கிளாஸ்…”  தென்றல் சொல்லவும் ஜீவா அவள் பேசுவதையே பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவளின் அதீத கவனிப்பில் பாலா ஜீவாவை அழைத்துக்கொண்டு மாடிக்கு வந்துவிட்டான்.

“எதுக்கு தென்றலை அப்படி பார்த்துட்டு இருக்க?…” என கேட்க,

“இல்லை ஸ்கூலுக்கு போனா. அங்க யாரும் எதுவும் கேட்டிருப்பாங்களோன்னு? தென்றலா சொல்வாளான்னு பார்த்தேன்…”

“சொல்லியிருந்தா?…”

“சொல்லியிருந்தா?…” என்ற யோசனை மட்டும் தான் ஜீவாவிடம். வேறு எதுவும் இல்லை.

“ஒரு விஷயம் ஜீவா, தனியா தென்றலோட இருந்தப்போ கூட தைரியமா இருந்த. ஆனா இப்போ அப்படி இல்லை நீ. ரொம்ப பலவீனமா எதையும் பேஸ் பண்ண பயந்துட்டு இருக்கிற மாதிரி இருக்கு உன்னோட ஒவ்வொரு ஆக்டிவிட்டீஸும்…”

“ஹ்ம்ம், தெரியலை. ரொம்ப தூரம் ஓடி களைச்சது மாதிரி டயர்டா இருக்கு. நிறைய மனசுக்குள்ளயே போராட்டம். இந்த ஒருவருஷம் என்னோட வாழ்க்கையில இருந்து மறைய போறதே இல்லை…” என்றவள் கையை பிடித்து அழுத்தி கொடுத்தான்.

“கஷ்டம் தான். ஆனா அதையே நினைச்சு அங்கயே நிப்பியா? இனிமே தான் நீ தைரியமா இருக்கனும். உன்னை  பார்த்து தென்றலும் துவண்டு போய்ட்டா என்ன பண்ணுவ?…” என்றதும் அரைநிமிடம் மௌனம் அவளிடத்தில்.

“வானதி போன் பண்ணினா…” அவனின் பேச்சை விடுத்து இவள் வேறு பேச,

“என்னவாம்?…”

“இல்லை நான் தான் அவளுக்கு கூப்பிட்டேன்…”

“சரி, என்னன்னு சொல்லு…”

“எத்தனை நாள் லீவ்ன்னு கேட்டா? பத்துநாள் இருக்குமான்னு?…” என்றதும் பாலாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

“பத்து நாள் வீட்டுல பகல்ல தனியா இருந்துப்பியா நீ?…” அவன் சிரிக்க,

“ம்ஹூம், என்னால முடியாது. இன்னைக்கு ஒரு நாளே முடியலை…” என்று தலையை குலுக்கிக்கொண்டு அவள் சொல்ல,

“தெரியும், இன்னைக்கு உனக்கு முடியலை தான்…” என்று அவளை அணைக்க சென்ற கையை இழுத்து தன் பின்னங்கழுத்தை தடவியபடி நமுட்டு சிரிப்பு சிரித்தான் பாலா.

“அடி தான் உங்களுக்கு…” என அவனின் தோளில் ஒரு அடி வைத்தவள் அவனை நெருங்கி கூட நிற்கவில்லை.

எப்போது வேண்டுமானாலும் தென்றல் வரலாம் என இருவருக்குமிடையில் ஒரு இடைவெளி இருந்தது.

“பேச்சை மாத்தாதீங்க…” என்றவள் இருவரும் பேசியதை சொல்ல,

“என்ன டிஸைட் பண்ணிருக்க நீ?…” என்றான்.

“நிறைய யோசிச்சாச்சு. அதுவும் இப்போ நீங்க சொன்னதும் சேர்த்து கூட…”

“ஹ்ம்ம்…”

“நான் போறேன். மண்டேல  இருந்தே போறேன் ஹாஸ்பிட்டலுக்கு…”

“வெரி குட் ஜீவா. நல்ல முடிவு தான் எடுத்திருக்க. நான் கூட வேற ஒரு யோசனையில் இருந்தேன். உன்கிட்ட கேட்டுட்டு பேசலாம்ன்னு…”

பாலா ஜீவாவின் முடிவை பாராட்டி சொல்லிக்கொண்டிருக்க காற்றில் கலைந்த முடியை ஒதுக்கியபடி அவனை புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நின்றாள்.

“ஒருவேளை உனக்கு அங்க போக விருப்பம் இல்லைன்னா ட்ரஸ்ட்ல கேட்கலாம்ன்னு இருந்தேன். ஆனா உண்மையா நீ திரும்ப அதே ஜாப்க்கு போறேன்னு சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு…”

“ஹ்ம்ம், இதுவரைக்கும் இருந்தது எதுவுமே இல்லை. இனிமே தான் உண்மையான மனுஷங்க யாருன்னு தெரிஞ்சுக்க போறேன். வாழ்க்கையோட இன்னொரு பக்கத்தை பார்க்க போறேன்…”

“குட், குட். கீப் இட் அப்…” என்று சிரித்தான்.

அதற்குள் பாலாவிற்கு வர போனில் பேசிக்கொண்டிருந்தவனை பேசி முடிக்கட்டும் என்பதை போல பார்த்துவிட்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சுற்றி இருந்த அத்தனையும் அருகருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகள். சற்று தள்ளி அடுக்குமாடி குடியிருப்புகள் இப்படி இருந்தது.

அவள் அங்கேயே சுற்றி நடந்து வர பேசி முடித்தவன் தானும் அவளருகே சென்றான்.

“இங்க நீங்க குடி வரும் போதே இவ்வளவு வீடுகள் இருந்துச்சா?…” என கேட்க,

Advertisement