Advertisement

“போங்க, கிட்சன்ல நின்னுட்டு…”  

“இதுவரைக்கும் கோர்ட்ல கூட வாய்தான்னு நான் கேட்டு வாங்காத ஆளு. உன்கிட்ட கேட்க வச்சு என் விரதத்தை கெடுத்திடுவ நீ…”

“அதுக்கு?…” என கேட்டவள் அவனின் முகத்தில் கொப்பளித்த குறும்பில் முறைப்புடன் பார்த்தாள்.

“என்ன?…”

“நான் கொஞ்சம் பேசனும்…”

“ஹ்ம்ம் பேசேன்…” என்றபடி விலகியவளை அணைப்பிற்குள் நிறுத்தினான்.

“இல்லை, இப்படி இல்ல. அங்க போலாம்…”

ஜீவாவின் முகம் சற்றே தீவிரமாக மாறி இருக்க பாலாவும் தன் பிடியை தளர்த்திவிட்டு,

“வா…” என்று ஹாலுக்கு அழைத்து சென்றான்.

“சொல்லு, என்ன பேசனும்? நேத்து நைட்டும் இப்படித்தான் வந்து நின்ன? இப்பவும் கூட. என்ன விஷயம்?…” என்று கேட்கவும் எச்சிலை கூட்டி விழுங்கியவள்,

“அன்னைக்கு நீங்க தென்றலை வச்சுட்டு சொன்னதால என்னால எதுவும் பேச முடியலை? கூட டாக்டரும் இருந்தார். எப்படி சொல்லன்னு அமைதியா இருந்துட்டேன்…”

சொல்லும்பொழுதே அவளின் விரல்கள் எல்லாம் நடுங்க ஆரம்பிக்க அவற்றை அழுத்தமாய் பிடித்து தன்னுடன் விரல் கோர்த்துக்கொண்டான்.

“ஹ்ம்ம்…” ஜீவா எதை பற்றி பேச வருகிறாள் என ஓரளவு யூகம் தான். அவளே சொல்லட்டும் என பார்க்க,

“நீங்க கோர்ட்ல சொன்ன மாதிரியோ, இல்லை தென்றல்கிட்ட சொன்ன மாதிரியோ இல்லை. எனக்கு தெரியும் நான் என்ன செஞ்சேன்னு. தென்றலுக்காக தான் அவ நிம்மதிக்காக நான் எதுவும் மறுத்து சொல்லலை…”

“ஓஹ்…” பாலாவின் பார்வை அவளின் முகத்திலேயே இருக்க ஜீவாவிற்கு இப்போதும் வியர்த்தது.

“பாலா ப்ளீஸ், என்னால இதை உங்ககிட்ட சொல்லாம மறைக்க முடியாது…”

“முதல்ல சொல்லு ஜீவா, கேட்டா தானே விஷயம் தெரியும்…” என்றான்.

“அன்னைக்கு அந்த கொலை. இல்லை, அம்மா எதுவும் செய்யலை. நான், நான் தான். என்னால தான்…” சொல்லும்பொழுதே கண்ணீர் திரண்டு உருண்டுவிட்டது அவளின் கண்ணில் இருந்து கன்னத்திற்கு.

“அந்த கொலை செஞ்சது நான் தான். எனக்கு தெரியும். அம்மா இல்லை…”

“ஹ்ம்ம் தெரியும்…” என்றான் அசால்ட்டாக அவளின் கண்ணீரை விரல்கொண்டு துடைத்தபடி.

“என்ன?…” என அவள் அதிர்ச்சியுடன் பார்க்க,

“நான் தான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன்ல. நீ எத்தனை கொலை செஞ்சிருந்தாலும் நான் பார்த்துப்பேன்னு. எனக்கு எல்லாம் தெரியும்ன்னு…” என்றவனை நம்பமுடியாமல் பார்த்தாள்.

“அப்போ நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு அந்த வீடியோவை பார்த்துட்டு அம்மான்னு நினைச்சு வாதாடலையா?…” என கேட்க,

“இல்லை…” என்றான் மறுப்பாய் தலையசைத்து.

“அறிவே, அப்படி கண்டதே காட்சின்னு சும்மா இதுதான்னு நினைச்சுட்டா நான் ஒரு கேஸ்ல இறங்க முடியும்? அதுவும் இவ்வளவு பெரிய கேஸ்ல. அப்பவே பார்த்துட்டேன். ஆனா அங்க எனக்கு சில சாதகமான விஷயங்கள் நடந்தது. ஒரிஜினல் காப்பியும் என்கிட்டே. சோ…” என கையை கத்தரிப்பதை போல காண்பிக்க,  

“என்னால நம்ப முடியலை. இந்த விஷயம் இப்ப இல்லைன்னாலும் திரும்ப வெளில தெரிஞ்சா?..”

“தெரியாது. தெரியும் போது பார்த்துக்கலாம்…”

“பாலா…” என பேச வந்தவளை அப்படியே அள்ளி தன் மடியில் கடத்தினான்.

“என்ன?…” என்று அவளின் வியர்த்திருந்த முகத்தை புறங்கையால் துடைக்க,

“கொலை கொலை தானே?…”

“ஆமா…”

“அதை செஞ்சுட்டு இப்பவும் பாருங்க. என் கை அதை நினைச்ச நடுங்குது பாலா…”

“என்னை பிடிச்சுக்கோ. நடுக்கம் போயிரும்…” என அவளின் கைகளை எடுத்து தன் கழுத்தில் மாலையாய் கோர்த்தான்.

“நீங்க சீரியஸாவே நினைக்க மாட்டீங்களா? நான் சொல்ல வரது…” என மீண்டும் அவள் சொல்லியதையே சொல்ல,

“ஜீவா ஸ்டாப் இட். இந்த பேச்சு இன்னைக்கு தான் லாஸ்ட். அது கொலையே இல்லை. நீ செய்யவும் இல்லை. புரியுதா?…” என்றான் அதட்டலாக.

“பாலா…”

“பாலா தான் ஜீவா…” என ஆறுதலாய் அவளின் தலையை வருடியவன்,

“இதை நினைச்சு தான் பயந்துட்டே இருந்தியா நீ?…” என கேட்க ஆமாம் என்று தலையசைத்தவளை ஆசை பொங்க பார்த்தவன்,

“சரியான ஆளுடி நீ. இவ்வளோ பெரிய க்ரிட்டிக்கலான கேஸ்ல இதை உடைக்க முடிஞ்ச என்னால உன்னை சேஃப் பண்ண முடியாதா?…” என்றவன் அவளை மேலும் பேசவிடாமல்,

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் மாதிரி இப்போ என் ஆப்போசிட்ல இருந்து என்னை அட்ராக்ட் பண்ணிட்டு இருக்க நீ…”  என்றான் உடனே பேச்சை வேறு திசைக்கு எடுத்து சென்று.

அதுவரை அவள் அவன் மீது அமர்ந்திருப்பதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் தன்போக்கில் பேச்சில் இருந்தவள் இப்போது திகைத்து பார்க்க,

“ரொம்ப பேசிட்ட. பேசாத பேசாதன்னு சொல்லி கேட்காம. ம்ஹூம். அதுவும் நாம தனியா இருக்கும் போது பேசற பேச்சா? கொலை கொலைன்னு…” என்றவனின் பெருவிரல் கன்னத்திலிருந்து இதழ்களில் வந்து முற்றுகையிட,

“நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க…” என எழுந்துகொள்ள போனவள் இடையில் அழுத்தம் கொடுத்து இடதுகையால் இறுக்கி பிடித்தான்.

“ஷ் ஜீவா…” என்றதோடு வார்த்தைகளுக்கு விடைகொடுத்து அவளின் இதழ்களில் நனைந்தான்.

ஜீவாவின் மறுப்புகள் எல்லாம் மாயமாகிவிட அவனின் மடியே மஞ்சமாகி போக அவளின் அலைப்புறுதல்கள் காற்றில் ஆவியானது.

மெல்ல மெல்ல அவளை பிரித்தெடுக்க முயன்று மீண்டும் தன் வார்த்தைகளற்ற வாதிடலை மென்மையாய் தொடர்ந்தான்.

கண்கள் மூடிக்கொள்ள அவனின் செய்கைக்கு இசைந்து கொடுத்து அவளும் தன் அணைப்பை இறுக்க காலிங் பெல் சத்தத்தில் இருவரும் கலைந்தனர்.

“ஊஃப்…” என்று தன்னை நிதானப்படுத்தியவன்,

“ஜீவா…” என்று அவளை எழுப்பி நிறுத்தினான். இன்னுமே அதிலிருந்து மீளாமல் இருந்தவளை கன்னம் தட்டியவன்,

“ஜீவா, நீ ரூம்ல இரு. நான் யாருன்னு பார்க்கறேன்…” என சொல்லி அனுப்பிவிட்டு வாசல் கதவை திறந்தான்.

அங்கே வானதியும், சோலையம்மாவும் நின்றிருக்க ஆச்சர்யமாக பார்த்தவன் பின் புன்னகையுடன்,

“உள்ள வாங்க…” என அழைத்து ஜீவாவை அழைக்க வந்தான்.

அதற்குள் முகத்தை கழுவிவிட்டு வந்து அவனெதிரே நின்றவள் முகத்தை துடைக்க டவலை எடுத்துக்கொண்டு,

“உங்களுக்கு தெரிஞ்சவங்களா?…” என கேட்க,

“நமக்கு தெரிஞ்சவங்க. வானதியும் அவங்க அம்மாவும் வந்திருக்காங்க….” என சொல்லி அவளின் முகத்தில் நீருடன் படிந்திருந்த முடிகளை விலக்கி ஒதுக்கிவிட்டு,

“இப்போ ஓகே வா நீ?…” என கேட்க,

“அச்சோ போங்க நீங்க. நான் வரேன்…” என்று வெளியே வந்தாள்.

“வா வானதி, வாங்க ஆன்ட்டி…” என்று வேகமாய் அவர்கள் அருகே வந்தமர்ந்ததும் பாலாவும் வந்துவிட்டான்.

“சும்மா பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம் தம்பி…” என சோலையம்மாள் சொல்ல,

“அதுக்கென்ன, எப்ப வேணும்னாலும் வாங்க. ஜீவாவுக்கும் சந்தோஷமா இருக்கும்…” என்ற பாலா,

“நீங்க பேசிட்டு இருங்க. இப்ப வந்திடறேன்…” என சொல்லி தன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டான்.

அவர்கள் பேசட்டும் என்று அவன் ஒந்து வந்ததும் வானதியும், சோலையம்மாவும் ஜீவாவிடம் முதல்நாள் வந்த விவரங்களை கேட்டுக்கொண்டார்கள்.

“என்னடி தூங்கிட்டு இருந்தியா? முகமெல்லாம் நனைஞ்சு போய் துடைக்காம இருக்கே?…” என வானதி கேட்வும் தனது சுடிதார் துப்பட்டாவால் முகத்தை துடைத்தாள்.

“தூக்கம் வர மாதிரி இருந்ததா அதான் பேஸ் வாஷ் பண்ணேன்…” என சமாளித்தாள் ஜீவா.

“என்ன பொண்ணு நீ? தென்றலை கொஞ்ச நாள் எங்க கூட அனுப்பிட்டு நீ இங்க சந்தோஷமா இருக்க வேண்டியது தானே? பிடிவாதம் பன்றியே? எங்களால அந்த தம்பிட்ட எதுவும் பேச முடியாது. நீயும் கேட்கமாட்டிக்க…” என குறைபட்டுக்கொண்டார் சோலையம்மாள்.

“இப்போ என்ன ஆன்ட்டி? நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்….” ஜீவா சமாளிக்க,

“எது ஆளுக்கு ஒரு ரூம்லயா?…” என்று அதட்டியவர் அதற்கு மேல் மகளையும் வைத்துக்கொண்டு பேச முடியாமல் அமைதியாகிவிட்டார்.

வானதி ஜீவாவையே ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தவள் அவளின் உடையையும் பார்த்துவிட்டு,

“கல்யாணம் ஆன புது பொண்ணு மாதிரியே தெரியலை. இப்பவும் நம்ம கேம்பஸ்க்குள்ள நார்மலா நீ வீட்டுல இருக்கற மாதிரியே இருக்கு….” என்று வானதி சொல்ல,

“ஒரு சேலையை எடுத்து கட்டினோமா, தலைக்கு பூவை வச்சோமான்னு இல்லாம வீட்டுல போடற சுடிதார போட்டிருந்தா அப்படித்தான் தெரியும்….” என்ற சோலையம்மாள்,

“இங்க வா. இப்படி திரும்பி…” என்று தான் வாங்கி வந்த பூவை எடுத்து ஜீவாவின் தலை நிறைய வைத்துவிட்டார்.

“இதை தென்றலுக்கு குடுத்துரு…” என தனி கவரில் எடுத்து காண்பிக்க,

“உனக்கும், தென்றலுக்கும் பிடிச்சதா கொஞ்சம் பலகாரம் வாங்கியிருக்கோம். வச்சுக்கோ. அவ வந்ததும் குடுத்திரு. அம்மா உனக்கு பொடி எல்லாம் அரைச்சு தந்திருக்காங்க. அவசரத்துக்கு யூஸ் ஆகும்ல…”  என்று ஒரு பையை காண்பித்த வானதி,

Advertisement