Advertisement

இப்போது அதற்கும் மேல் நொந்துகொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒரு தீயை பாலாவினுள் பற்ற வைத்துவிட்டார்கள் அரங்கநாதனும், மயூரனும்.

துளி தீ துகள் விழுந்த மூங்கில் காடாய் மொத்தமாய் பரவி எரிந்து வெடித்துக்கொண்டிருந்தான் அவன்.

தனது மொபைலை எடுத்துக்கொண்டு தனியே சென்றவன் ஷேஷாவிற்கு அழைத்தான்.

“கேஸ் ஆரம்பிக்கனுமே பாலா? இந்த டைம் கால் பண்ணிருக்க?…” ஷேஷாவின் கேள்வியில் அங்கே நடந்ததை சொல்லிய பாலா, தன்னுடைய திட்டத்தையும் கூற,

“ஆர் யூ சூர்?…” என்றான் ஷேஷா.

“எஸ் ஸார், இனி டிலே பண்ண வேண்டாம்….”

“நீ சொன்னா எனக்கு நோ அப்ஜெக்ஷன். டூ இட்…”

“ஸார் உங்களுக்கு ஒன்னும்…”

“ஹேய் மேன், இது ஏற்கனவே நாம டிஸைட் பண்ணினது. நோ வொர்ரி. பத்ரியை நான் கேர் பன்றேன்…”

“ஓகே ஸார்…”

“நீ கேட்டது இன்னும் பிப்ட்டீன் மினிட்ஸ்ல உன் கைல இருக்கும். இப்ப பவனை அனுப்பறதா இருக்கேன்…”

“ஓகே, நான் சொல்லும் போது பவன் வந்தா போதும்…”

“ஓகே, பெஸ்ட் ஆஃப் லக் பாலா…” என சொல்லி  வைத்துவிட்டான் ஷேஷா.

பேசி முடித்து உள்ளே நுழைந்தவன் இன்னும் ஜட்ஜ் வராமலிருக்க தன்னுடைய இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.

எதிரே அரங்கநாதன். பரபரப்பாய் கையில் இருந்த பேப்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார். உடன் ஆளவந்தனும்.

அத்தனை டென்ஷன் முகத்தில். நெற்றி எல்லாம் வியர்த்திருந்தது பாலா வந்தமர்ந்ததை கண்டதுமே.

என்ன பேச போகிறானோ என்று வேறு அவனையும் அவ்வப்போது நோட்டமிட்டுக்கொண்டார்.

அத்தனைபேரும் ஆர்வமாக காத்திருந்தார்கள் வாதத்தினை கண்டு களிக்க. எப்போதும் அரங்கநாதன் பாலாவின் வாதங்கள், எதிர்வாதங்கள் மற்றவர்களுக்கு பெருந்தீனி தான்.

இன்று சொல்லவா வேண்டும்? பாலா வெற்றி பெருவானா? என ஒருசாராரும், எப்படி தனது சம்பந்தியாக போகிறவரை அரங்கநாதன் விட்டுவிடுவார்? அவர் தான் ஜெயிப்பார் என ஒருசாராரும் பேசிக்கொண்டார்கள்.

நீதிபதி வரவும் அத்தனைபேரும் எழுந்து நிற்க சற்று நேரத்தில் மயூரனின் பெயர் அழைக்கப்பட அவர் வந்து கூண்டில் நிற்கவும் அரங்கநாதன் தனது வாதத்தை துவங்கி வைத்தார்.  

மயூரன் குற்றமற்றவர் என்றும், இந்த வழக்கும் ஜோடிக்கப்பட்டது என்றும், நிறுவனத்தின் பெயரில் நடந்த குற்றங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பேசி முடித்தவர் உடனே மயூரனின் தம்பியை தயாராக இருக்கும்படி சொல்லி கண்ணசைத்துவிட்டு தனது வாதத்தின் ஆரம்பத்தை முடித்து வைத்தார்.

“எதிர் தரப்பு வக்கீல் தங்கள் வாதத்தை துவங்கலாம்…” என நீதிபதி சொல்லவும் பாலா எழுந்து வந்தான்.

“உங்க பெயர்?…” மயூரனிடம் கேட்க,

“மயூரன்…”

“வெல், மிஸ்டர் மயூரன்…” என்றதில் அழுத்தத்தை கொடுத்தவன்,

“ப்யூச்சர்ஸ் பில்டர்ஸ் உங்களோடது தானே?…”

“ஆமா, என்னோடது தான்…” மயூரன் மிக கவனமாக வார்த்தைகளை கோர்த்து பேச ஆரம்பித்தான்.

“இத்தனை வாய்தாவுக்கு அப்பறம் இன்னைக்கு கோர்ட்ல ஆஜராகனும்னு உங்களுக்கு தோணினதுக்கு என்னுடைய முதல் வாழ்த்துக்கள்…” என பாலா சிரிப்புடன் சொல்ல,

“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்…” என அரங்கநாதன் எழுந்து நின்று,

“இது வழக்கிற்கு சற்றும் சம்பந்தமில்லாத பேச்சு. இந்த வாழ்த்து இப்போது அவசியமற்றது…” என சொல்ல,

“அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்…” என்றார் நீதிபதி.

“உட்காருங்க அரங்கநாதன். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை…” என்ற பாலா ஆளவந்தானை பார்த்து தனது உதடு குவித்து தாடையை ஒற்றை விரலால் சொரிய பதறி போன ஆளவந்தான்,

“இந்தா ஆரம்பிச்சுட்டான். வெக்கமே இல்லாம என்ன காரியம் பன்றான் கூடுன சபையில? பாவி மவனே, உன்ன ஒத்த பார்வை பார்க்க விடுறியா? …” என முனங்கிக்கொண்டு பார்வையை திருப்பிவிட்டார்.

அரங்கநாதனிடம் அப்போதே படபடப்பு ஆரம்பித்துவிட்டது. மயூரனை பார்த்துக்கொண்டே அவர் அமர்ந்துவிட,

“ஸார் முகமெல்லாம் வேர்த்துருக்குது….” என கைக்குட்டையை நீட்டினர் ஆளவந்தான்.

“யோவ்…” என நாக்கை மடித்துவிட்ட அரங்கநாதன் இருக்கும் இடமறிந்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார்.

“நீங்க சொல்லுங்க மிஸ்டர் மயூரன், உங்க ப்யூச்சர்ஸ் பில்டர்ஸ் சென்னைல எத்தனை பிரான்ச் ஆபீஸ் இருக்குது?…”

“மூணு பிராஞ்ச்…”

“மூணுமே நீங்க தான் ரன் பன்றீங்களா? ஐ மீன் உங்க நேரடி பார்வைல தான் இயங்குதா?…”

“எஸ் அப்கோர்ஸ்…” மயூரன் சொல்ல அவன் என்ன கேட்க வருகிறான் என்றே மயூரனுக்கு விளங்கவில்லை.

“இந்தியா ஃபுல்லா உங்களுக்கு எத்தனை ஆபீஸ் இருக்கும்? அதாவது எந்தெந்த சிட்டீஸ்ல ப்யூச்சர்ஸ் பில்டர்ஸ் கிளை இருக்குன்னு கேட்டேன்….” என்று கேட்டு அதற்கும் பதிலை வாங்கிக்கொண்டான்.

“சோ உங்களோட சோர்ஸ் மத்த மாநிலங்கள்ல இருந்தாலும் உங்களோட மெயின் பிரான்ச் இங்க தான் இல்லையா?…”

“எஸ்…”

“லாஸ்ட்டா நீங்க கல்கத்தா எப்போ போனீங்க?…” என பாலா அதில் கேட்க திடுக்கிட்டு போய்,

“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்…” என மீண்டும் எழுந்தார் அரங்கநாதன்.

அவரை திரும்பி பார்த்த மயூரனுக்கு அரங்கநாதனின் எச்சரிக்கும் பார்வை ஏன் என தெரியவில்லை.

“யுவர் ஹானர், நான் சரியான பாதையில தான் போயிட்டு இருக்கேன்….” என்று பாலா சொல்ல,

“அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்…” என மேஜையை தட்டினார் நீதிபதி.

“நீங்க சொல்லுங்க மிஸ்டர் மயூரன்…” என பாலா அழைக்க இன்னும் மயூரன் அரங்கநாதனை தான் பார்த்தான்.

“மிஸ்டர் மயூரன், இங்க என்னை பாருங்க. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க…” என கேட்க,

“நான் கல்கத்தா போய் அஞ்சு மாசம் ஆகிடுச்சு…”

“எதுக்காக போனீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?…”

“அங்க நாங்க கட்டிட்டிருந்த பில்டிங்கல ஒரு சின்ன இஷூ. அதை சால்வ் பண்ண தான் போயிருந்தேன்…”

“ஓஹ், அந்த சின்ன இஷூ என்னன்னு சொல்ல முடியுமா மிஸ்டர் மயூரன்?…”

“அது…” என்று மீண்டும் அரங்கநாதனையே பார்க்க அதில் பாலாவும் அரங்கநாதன் பக்கம் திரும்பி,

“என்ன மயூரன் இதுக்கு உங்க லாயர் அரங்கநாதன் ஸார் என்ன பதில் சொல்லனும்னு எதுவும் சொல்லி குடுக்கலையா?…” என்றான் நக்கலாக.

பாலா எதற்கு வருகிறான் என்று அரங்கநாதனுக்கு விளங்கிவிட்டது. மயூரனை இயலாமையுடன் பார்த்தவர் கண்ணசைக்க பல்லை கடித்தார் மயூரன்.

இருந்த இன்னொரு வாய்ப்பும் போனது. இனி தனது தம்பியை காட்டி தான் தப்பிக்க முடியாதென தெரிந்துபோனது.

“மிஸ்டர் மயூரன்?…” என அழுத்தி பாலா அழைக்க அவனை குனிந்து பார்த்தார்.

“அப்ரூவர் ஆயிடலாம் போல இருக்கா? ஆனா அதுக்கும் நோ யூஸ். என்னன்னு  தெரியலையா?…” என்று பாலா கேட்க,

“ஹான்…” என மயூரன் பார்த்தார்.

“என்ன தலை சுத்துதா மயூரன்?…” என பாலா பொருள்பட சிரித்தவன்,

“இன்னும் இருக்குடி மாப்ள உனக்கு…” என்று மெல்லிய குரலில் சொல்ல மிரண்டு நின்றார் மயூரன்.  

ஆதாரங்களின் ஆவணங்களை காட்டாமலே மயூரன் அரங்கநாதன் இருவரும் தொண்டைக்குழியில் முள் மாட்டிய உணர்வுடன் தவிக்க அதனை ஆற அமர ரசித்தான் பாலமுரளிகிருஷ்ணா.

Advertisement