Advertisement

மின்னல் – 10

            நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இப்போதெல்லாம் வானதி சரியாக பேசுவதில்லை.

ஜீவாவிற்கு அது ஏன் என புரிந்தாலும் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.

வேலையின் பொழுதில் அதன்பொருட்டு பேசிக்கொள்வார்களே தவிர்த்து அதன்பின்னர் எந்த தனிப்பட்ட பேச்சுக்களும் இல்லை.

உரிமையானதை இழந்துவிட்ட எண்ணம் ஜீவாவை வண்டாய் குடைந்தாலும் இதுவும் நல்லதிற்கு என இருக்க அது இன்னும் வானதியை கோபமூட்டியது.

கோபத்தில் இன்னும் விலகி இருக்க ஜீவாவின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முடியவில்லை.

கோபமெல்லாம் வானதிக்கு மட்டுமே. தென்றல் அங்கே எப்போதும் போலதான் போய் வந்துகொண்டு இருந்தாள்.

சோலையம்மாவும் இதை எல்லாம் கவனிக்கவில்லை. அவருக்கு எந்த வித்யாசமும் பெரிதாய் தெரியவில்லை.

அவர்கள் எப்போதும் போல இருக்க தோழிகளுக்கிடையே தான் முட்டிக்கொண்டது.

அதுவும் கடைசியில் வானதி தான் இறங்கி வரவேண்டியதாக போனது ஜீவாவிடம்.

அன்று மாலை வேலை முடிந்து வந்தவள் தென்றலை தன் வீட்டிற்கு அனுப்பிய வானதி ஜீவாவை பிடிபிடியென பிடித்துவிட்டாள்.

“அவ்வளவு கொழுப்பு உனக்கு கூடி போச்சு. ஏன் மேடம் தானா பேசமாட்டீங்களோ?…”

“நீ தான் கோவமா இருந்தியே? அதான் எதுவும் பேசலை…” ஜீவா அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்ல,

“கோவமா இருக்கேன்ற வரைக்கும் உனக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா பேசனும், என்னன்னு கேட்கனும்னு தோணலை இல்லை?…”

“கேட்டா மட்டும்? சும்மா இரு வானதி? நான் இப்போ வந்தவ தானே? நான் போய்ட்டா உனக்கு அடுத்து வேற ப்ரெண்ட்…”

“ஜீவா எனக்கு இருக்கிற கோவத்துக்கு அடிச்சுருவேன்…”

“அடிச்சுக்கோ. உனக்கு இல்லாத உரிமையா?…” அதற்கும் ஜீவா பணிந்தே பேச,

“இந்த உரிமை வெறும் பேச்சுலையும் நீ சொல்ற சில விஷயங்கள  மட்டுமே இருக்கே?…”

“வேற என்ன பண்ணும்?…”

“எனக்கு உண்மை தெரியனும், நீ ஏன் இங்க இருந்து போகனும்னு தென்றல்கிட்ட சொன்ன? அவளும் எப்போ வேணா கிளம்பிருவோம்ன்ற மாதிரி சொல்றா. அம்மா என்னை கேட்கிறாங்க…”

“அதான் அவகிட்ட கேட்டியே? பதில் சொல்லலையா என்ன?…” என்றாள் ஜீவா சிரித்தபடி.

மறுநாள் தனக்கும், தென்றலுக்கும் பள்ளிக்கு, வேலைக்கு செல்லவேண்டிய உடைகளை அய்ர்ன் போட்டுக்கொண்டே ஜீவா பேசினாள்.

“உன் தங்கச்சி தானே? அவ்வளவு சீக்கிரம் வாயை திறப்பாளா என்ன?…” வானதி நொடித்துக்கொள்ள,

“இப்ப என்னடி உன் பிரச்சனை?…” என்றால் அவற்றை வைத்துவிட்டு வானதியை பார்த்து.

“ஏன் இங்க இருந்து போகனும்னு சொன்ன? என்ன பிரச்சனைன்னு சொல்ல வேண்டாம். ஆனா போகனும்ன்ற அளவுக்கு என்ன நடந்திருச்சு?…”

“இனி எதுவும் நடக்க வேண்டாம் பாரு. அதான். புரிஞ்சுக்கோ வானதி…” ஜீவாவால் அவளுக்கு ஈடுகொடுத்து பதில் சொல்லமுடியவில்லை.

தன்னிடம் பதில் இருந்தால் பட்டென்று சொல்லிவிடுவாள். ஆனால் இது அவளுக்கே தெரியாத விடை.  

அமைதியாக தனது உடையை எடுத்து தேய்க்க ஆரம்பிக்க வானதிக்கு எரிச்சலானது.

“எந்த கோட்டையை பிடிக்க இவ்வளவு வேக வேகமா தேய்ச்சிட்டு இருக்க?…”

“கோட்டை இருந்தா தானே?…” அவளின் வலியுடன் கூடிய சிரிப்பின் பின்னால் எதுவோ பெரிதாய் இருக்கிறதென்று தோன்றியது வானதிக்கு.

அதற்கு மேலும் வார்த்தையாடவில்லை. அவளருகே அமர்ந்துகொண்டவள் வேறு விஷயங்களை வழக்கம் போல பேச ஆரம்பித்துவிட ஜீவாவும் நிம்மதியுடன் வேலையை பார்த்தாள் பேசிக்கொண்டே.

இரவு உணவு வானதி இங்கே ஜீவாவின் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்துவிட நால்வருமே அங்கே வைத்து சாப்பிட்டு முடித்து உறங்கும் வரை பேசி இருந்துவிட்டு கிளம்பினார்கள்.

அவர்கள் சென்றதும் தென்றலும் அன்றைய பாடங்களை எடுத்துவைத்து படிக்க ஆரம்பித்தாள்.

“உனக்கு எத்தனைதடவை சொல்லியிருக்கேன் வந்ததும் படி. இல்லைன்னா காலையில எந்திச்சு படின்னு. தூங்கற நேரம் படிச்சா என்ன ஏறும் தலையில?…”

“க்கா, உனக்கு தான் தெரியுமே எனக்கு காலையில எந்திச்சு படிக்க முடியாது. இப்போன்னா எல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டு நிம்மதியா தூங்குவேன். இல்லைன்னா படிக்கனுமே படிக்கனுமேன்றதுல தூக்கமும் வராது…”

“அதுக்கு ஈவ்னிங் வரவும் படிக்கனும்…”

“ஸ்கூல்லையும் படிச்சு முடிச்சு வெட்டுக்கும் வந்ததும் படிக்கவா? இங்க வந்து கொஞ்சமாவது ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா?…”

“அதுசரி, நீ தூங்கற வரைக்கும் எனக்கும் தூக்கம் வரமாட்டிக்குதே தென்றல்…” என்றவள் சோர்வுடன் கட்டிலில் சாய்ந்தாள்.

தலையணையை ஜன்னலின் மேல் சாய்த்து சாய்ந்து அமர்ந்தவள் தென்றல் படிப்பதையே பார்த்தபடி இருக்க பாலாவிடம் இருந்து அழைப்பு.

‘இவங்க ஏன் இப்ப கூப்பிடறாங்க?’ என யோசித்துக்கொண்டே தென்றலை ஒரு பார்வை பார்க்க அவள் படிப்பில் தான் தீவிரமாக இருந்தாள். போனை எடுத்தவள்,

“சொல்லுங்க…” என்றதும்,

“என்ன சொல்லுங்க? அதுவும் மொட்டையா?…” வழக்கமான துள்ளலான பாலாவின் குரல்.

ஜீவாவின் இதழோரத்தில் அவளறியாமல் சிறு புன்னகை. மனதிற்குள் குற்றால சாரல் இதமாய் வீசுவதை போல குளுமையாய் உணர்ந்தாள்.

“வேற என்ன சொல்லனும்? எனக்கு தெரியலை…”

ஜீவாவின் குரலில் இருந்த உற்சாகத்தை என்ன முயன்றும் அவளால் ஒளிக்க முடியவில்லை.

பாலாவும் உணர்ந்ததை போல அவனின் சிரிப்பு சத்தம் மெல்லியதாய் இவளின் காதை ஊடுருவ,

“சிரிக்கிறீங்களா?…”

“குட், கண்டுபிடிச்சுட்ட…”

“என்ன இந்த நேரத்துல போன்?…”

“ஹ்ம்ம், சும்மா தான். உன் ஞாபகம் வந்துச்சு. கால் பண்ணிட்டேன்…”

“எதுக்கு போன் பண்ணுனீங்க?…”  அவனின் உல்லாச மனநிலையிலும்  உரிமையான ஆழ்ந்த பேச்சிலும் சுதாரித்துவிட்டாள்.

“என்ன பன்றன்னு கேட்க தான் கால் பண்ணேன்…”

“ஒன்னும் செய்யலை தூங்க போறேன்…” தன்னைப்போல அவனுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தாள் ஜீவன்யா.

“ஓஹ், தென்றல் தூங்கியாச்சா?…”

“இல்லை. படிக்கிறா…”

“கால் வந்ததும் நான்னு தெரியுமா? ஒன்னும் சொல்லலையா அந்த மேடம்?…”

“ம்ஹூம், அவ கவனம் இங்கயே இல்லை. அவ படிக்க புக் எடுத்தா வேற எதையும் கவனிக்கமாட்டா…”

“வெரிகுட். இப்டி தான் இருக்கனும்…”

“ஹலோ நானும் படிக்கும் போது அப்படித்தான்…”

“அப்போ நீயும் குட்…”

“இப்போ எதுக்கு இந்த குட்?…”

“அப்போ சொல்ல முடியலை. அதான் இன்னைக்கு சொல்றேன். உனக்கு சொல்லலைன்னு நீ பீல் பண்ண கூடாது பாரு…”

“அதெல்லாம் பீல் பண்ண மாட்டேன். இப்ப தான் நான் படிக்கலையே?…”

“இப்ப மேல படிக்க விருப்பமா ஜீவா?…” என்றவனின் பேச்சு செல்லும் திசையை அறியாது ஏதோ மாயத்திற்கு கட்டுப்பட்டவள் போல கண்ணை மூடி பேசிக்கொண்டிருந்தாள் ஜீவா.

“ம்ஹூம், படிக்கனும்னு நினைச்சிருந்தா நான் இங்க வந்தப்போ ட்ரஸ்ட்ல கேட்டப்பவே படிச்சிருப்பேன். எனக்கு தோணலை…”

“படிச்சிருக்கலாம். நீயா தான் வேலை வேணும்னு சொல்லிட்ட…”

“அப்போ இருந்த சூழ்நிலை. என்னால வேற எதையும் யோசிக்க முடியலை…”

“ஹ்ம்ம், எல்லா சூழ்நிலையும் ஒருகாலகட்டத்துல மாறுமே ஜீவா. இப்போ மாறியிருக்கே அது மாதிரி…”

“ம்ஹூம், எதுவும் மாறலை. தலைக்கு மேல கத்தி தொங்குது. எனக்கு தென்றல் நல்லபடியா படிச்சு காலூன்றிட்டா போதும். போங்கடா நீங்களும் உங்க மிரட்டலுமாச்சுன்னு தூக்கி போட்டு போயிருப்பேன்…”

“வெரிகுட். மிரட்டறவங்க யாரா இருந்தாலும் பயப்படாம தைரியமா எதிர்த்து நிக்கனும்…”

“தைரியமா தானே இருந்தேன். இப்பவும் இருக்கேன்னு நினைக்கேன். ஆனா நம்பினவங்களே கழுத்தை நெரிக்கும் போது? அதுதான் என்னால முடியலை…”

“யார் அது? உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்தறது?…” பாலா மென்மையாக கேட்க,

“அவங்க தான் பிரபா ஆன்ட்டியோட ஹஸ்பன்ட். அந்த ஆன்ட்டி தான் எங்களை இங்க அனுப்பி வச்சாங்க. இப்ப அவங்களை எங்களால கான்டேக்ட் கூட பண்ண முடியலை. என்னாச்சோன்னு பயமா இருக்கு…”

“பயப்படாத, ஒன்னும் ஆகியிருக்காது…”

“இல்லை இவங்கலாம் மோசமானவங்க. என்னையே அவங்க சொல்றதை செய்ய சொல்லி மிரட்டிட்டு இருக்காங்க. நான் முடியாதுன்னு சொல்லியும் அந்த வீடியோவை காமிச்சு மிரட்டறாங்க….”

“என்ன?…” பாலா தன் வார்த்தைகளை அதிகம் சேர்க்காமல் அவளை தொடர்ந்து பேச வைத்தான்.  

“என்னை போய். பணத்துக்காக செய்ய எத்தனையோ பேர் இருப்பாங்க. பயந்து செய்ய நீ தான் இருக்கன்னு சொல்லி கொல…”

Advertisement