Advertisement

பாலாவை அங்கே பார்த்ததும் புருவம் உயர்த்திய கிருஷ் முகத்தில் குறுஞ்சிரிப்பு வந்தது.

“என்னடா சிரிக்கிற?…” பாலா முறைத்தான் அவனை.

“நத்திங்…” என்றவன் போனை வைத்துவிட்டு பாலாவிடம் திரும்பினான்.

“உன் நத்திங் என்னை மெனித்திங்ல கொண்டுபோய் விடுது…” என்ற பாலா,

“ஷேஷா வந்தாச்சா?…” என்றான் தனது வாட்சை பார்த்துவிட்டு.

“ஆன் தி வே. நீ உள்ள போ…” என்று கிருஷ் சொல்ல,

“ஹ்ம்ம்…” என வேகமாய் உள்ளே நுழைந்தவன் பின்னோடே கிருஷ் வந்தான்.

இன்றளவும் ஷக்திக்கு கிருஷ் தான் காவல். ஷேஷாவிற்கு பவனை போல ஷக்திக்கு கிருஷ்.

அந்த கண்ணாடி கதவை நெருங்கியதுமே பாலாவிடம் லேசாய் தயக்கம். ஷேஷாவை வைத்துக்கொண்டு பேசியிருக்கிறான்.

தனியே ஷக்தியிடம் பேசியதில்லை. ஆனால் ஷேஷாவை வைத்துக்கொண்டே பாலாவை அவ்வளவு பேசுவாள் ஷக்தி.

“வாட் ஹேப்பன்ட் கிருஷ்ணா?…” கிருஷ் அவனிடத்தில் கேட்க,

“நத்திங்…” என அவன் சொல்லியதை போலவே சொல்லிவிட்டு கதவை மெதுவாய் தட்டினான்.

வெளியே மெல்லிய சத்தம் கேட்டதும் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைய அங்கே ஷக்தி தண்ணீரை குடித்துக்கொண்டு நின்றாள்.

“எஸ் மேம்…” பாலா சென்றதும் அவனை அழுத்தமாய் பார்த்தவள்,

“சிட்…” என்றாள் தன் முன்னே இருந்த இருக்கையை காண்பித்து. தானும் தன்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

மறுக்காமல் அதில் சென்று அமர்ந்தவன் அவளே பேசட்டும் என அமைதியாக இருக்க,

“ஜீவன்யாவுக்கு டிடி போட்டாச்சு பாலா…” என ஷக்தி சொல்லவும்,

“ஸ்ஸ்ஸ்…” என்று ஒற்றை கண்ணை மூடி நாக்கை கடித்தவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை.

“பேசு மேன்…” என்று அவள் மீண்டும் அழுத்தி சொல்ல,

“ஓகே மேம்…” என்றான்.

வேறு என்ன சொல்ல முடியும்? போட்டாகிற்று என இப்படி நேரடியாக விஷயத்துக்கு வந்து நிற்பாள் என கனவா கண்டான்?

“எதுக்கு இந்த ஓகே?…”

“நீங்க இப்ப டிடி போட்டாச்சுன்னு சொன்னதுக்கு தான் மேம்…” என்றதும் ஷக்தி அவனை முறைத்து பார்த்துவிட்டு,

“வேற ஏதாவது ஸார்க்கு ஆப்ளிகேஷன்?…”  

“மேம்…”

“என்ன மேம்? இது தப்பு பாலா…” என்றவள்,

“என்ன நினைச்சிட்டு இருக்க பாலா? அவளை ப்ரடேக்ட் பன்ற ஓகே. ஆனா இதெல்லாம்?…” என கையை விரித்து காண்பித்து கேட்க திருதிருவென விழித்தான்.

“இன்னைக்கு ஹாஸ்பிட்டல் ஃபுல்லா ஹாட் டாப்பிக்கே இதுதான் தெரியுமா?…” என்றதும் தலையை அசைத்தான் ஆமோதிப்பாக.

“வீட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருந்தா இந்த பிரச்சனையே இல்லை. இப்ப பாரு…” என அவனை கடிந்துகொண்டாள்.

சில நேரங்களின் ஷக்தி திட்டுவது பாலாவிற்கு அத்தனை ஆறுதலாக இருக்கும். வாயே திறக்காமல் வாங்கிக்கொள்வான்.

இப்போதும் அமைதியாக இருக்க அவனின் அமைதியில் கடுமையை  கைவிட்டவளாக அடுத்த விஷயத்திற்கு வந்தாள்.

“மொபைல் கிடைச்சிட்டுன்னு ஷேஷா சொன்னாங்க. ஏதாவது முக்கியமான விஷயம் இருந்ததா?…”

“நமக்கு முக்கியமான விஷயம் இல்லை. ஆனா முக்கியமான விஷயம் தான்…”

“பாலா…” லேசாய் சிரித்துவிட்டாள் அவனின் தீவிரமான பதிலில்.

“மேம், திட்டனும்னா முழுசா திட்டிருங்க. எனக்கு கலாய்க்கிற மாதிரியே இருக்கு…”

“எது? டிடி போட்டாச்சுன்னு சொன்னதா?…”

“மேம்…” மீண்டும் தலை சாய்ந்து நெற்றியில் கோடிழுத்து அவன் சிரிக்க,

“ஆனா கலாய் பத்தி நீ சொல்ற பாரு?…” என்று சிரித்தவள்,

“எப்படி இருக்கார் உங்க ஆளு?…” என்றாள் குறும்பாய்.

“பாவம் மேம், இருக்கார்…”

“பின்ன உன் ஆளாச்சே. பாவம் தான்…” என ஷக்தி சிரித்துக்கொண்டு இருக்க கதவு திறக்கும் சத்தத்தில் இருவருமே திரும்பி பார்த்தனர்.

உள்ளே நுழைந்தான் ஆதிஷேஷன். அவர்களின் ஷேஷா அவனுக்கான அதே நிதானமான நடையுடன் வந்துகொண்டிருந்தான்.

“வெல்கம் பாலா…” என மென்னகையுடன் சொல்லிவிட்டு ஷக்தியை பார்வையால் தழுவி நலம் விசாரித்து தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

“ஷக்தி டென் மினிட்ஸ், இந்த வொர்க் முடிஞ்சதும் கிளம்பலாம்…” என வந்ததும் தனது கணினியை உயிர்ப்பிக்க அவன் அப்படித்தானே என புன்னகையுடன் பார்த்திருந்தவள்,

“நீ சொல்லு பாலா…” என்றாள் கதை கேட்கும் பாவனையில்.

“என்ன சொல்ல?…”

“உன்னோட லவ் சர்வீஸை சொல்லு…” என்றதும் ஷேஷாவுடன் உள்ளே வந்திருந்த பவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

சற்றே சத்தத்துடன் சிரித்து பின் அடக்கிக்கொண்டான் ஷேஷாவை, ஷக்தியை கருத்தில் கொண்டு. அவனை திரும்பி பார்த்தான் பாலா.

“இருடா என் பம்பரக்கட்ட மண்டையா. தனியா வச்சுக்கறேன்…” என பவனை பார்த்து பாலா முணுமுணுக்க,

“பாலா…” ஷக்தி அழைக்கவும்,

“மேம், நானே இன்னும் அவக்கிட்ட எதுவும் சொல்லலை. சொல்ல போனா வொர்க்கவுட் ஆகிற மாதிரி தெரியலை. எதுக்கு ஆசையை வளர்ப்பானேன்னு பேசாம இருக்கேன்…”

“ஹ்ம்ம், அப்பறம்…” ஷக்திக்கு இன்னுமே சுவாரஸியம் கூடியது.  

“ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்…”

“சரி ஜீவா என்ன சொல்றா?…”

“கொஞ்சமா நஞ்சமா அவ சொல்றது? அப்படியே தீ பறக்குது. என்னை கொலைவெறியா பார்க்கறா. அவ்வளோ பேச்சு. அத்தனையும் என் மேல இருக்கற கடுப்பு. இதுல எங்க லவ் சர்வீஸ்?…” என அலுத்துக்கொண்டவன்,

“இது ஜஸ்ட்…”

“ஜஸ்ட்?…” ஷக்தியும் அவனை போலவே கேட்க அவளிடம் என்ன சொல்ல என்று விழித்தான் பாலா.

“பாலா…” ஷேஷா அழைக்கவும்,

“பேசிட்டு வரேன் மேம்…” என்று எழுந்து ஷேஷாவிடம் வந்து நின்றான் வேகமாய்.

ஷக்தியிடம் இருந்தால் இன்னும் கேள்வி கேட்பாள் என்று தப்பித்தோம் என்று ஓடி வர,

“நான் தான் பேசிட்டிருக்கேன்ல ஷேஷா?…” ஷக்தி சொல்லி எழுந்து வர,

“பார்த்து ஷக்தி…” என்றான் அவள் எழுந்த வேகத்தில்.

“ஓகே ஓகே கூல்…” என ஷக்தி அவனை போலவே சொல்ல புன்னகைத்தவன்,

“வாக் பண்ணு, பேசிட்டு வரேன்…” என்று சொல்லவும் அவனை முறைத்த ஷக்தி தனது நிறைமாத வயிற்றை பிடித்தபடி அந்த அறைக்குள்ளேயே நடக்க ஆரம்பித்தாள்.

வெளியே நட என்றாலும் அவள் கேட்கப்போவதில்லை என்று தெரிந்த ஷேஷா ஒரு தலையசைப்புடன் பாலாவின் பக்கம் திரும்பினான்.

“எங்க பெரிய ஸாரை காணும்?…” என்று ஷேஷாவின் மூத்த மகனை கேட்க,

“பார்க்ல விளையாடறான்…” என்ற ஷக்தி மேலும் பேசும் முன் அவளை திரும்பி பார்த்த ஷேஷா மீண்டும் பாலாவின் புறம் பார்த்து,

“சொல்லு, ஜீவன்யா மொபைல்ல எதாச்சும் க்ளூ?…”

“ரெண்டு நம்பர் இருந்தது. அதை விசாரிக்க சொல்லிட்டேன். அப்பறம் நாம நினைச்சது சரிதான். வீடியோ க்ளிப்பிங்க்ஸ் அனுப்பிருக்கான் ஜீவாவுக்கு. அதை வச்சு தான் நேத்து நைட் வெளில வரவழைச்சிருக்கான்…”

“ஜீவன்யாகிட்ட பேசினப்போ ஏதாவது சொன்னாங்களா?…”

“இல்லை ஸார், எதுவும் சொல்லலை. ஆனா நிறைய தடுமாறி பேசிட்டிருக்கா. அனேகமா இங்க இருந்து போக வாய்ப்பிருக்கு…”

“நோ, இனி ஜீவன்யா இந்த கேம்பஸ் விட்டு வெளில போக கூடாது…”

“சூர் ஸார்…”

“அந்த நம்பரை ட்ரேஸ்அவுட் பண்ணினதும் ஆள் கிடைச்சா உடனே பிடிக்க வேண்டாம். கொஞ்சம் விட்டு பிடிக்கனும்…” என்ற ஷேஷா,

“பவன் பாலோ பன்றதுக்கு ஷேடோ அரேஞ் பண்ணிரு…”  

“எஸ் பாஸ்…” என்றான் பவன்.

“பாலா இனி அந்த நம்பர்ல இருந்து ஜீவன்யாவுக்கு எந்த த்ரெட்னிங்கும் வர கூடாது….” என ஷேஷா பாலாவிடம் சொல்லிக்கொண்டிருக்க,

“இங்க பொண்ணுங்கன்னா அவ்வளோ ஈஸியா போச்சா? உடனே எதையாவது சொல்லி மிரட்டறது தானே வேலை. எவனுக்கும் எதிர்த்து நின்னு பேச தைரியம் கிடையாது. ஒளிஞ்சிருந்த மிரட்டி தான் ஆம்பளைத்தனம்ன்னு காமிக்கறானுங்க. இவனுங்களை எல்லாம்…” ஷக்தி கோபமாய் பேச ஆரம்பித்துவிட்டாள்.

“நீ கிளம்பு பாலா. மேடம் டென்ஷன் ஆகிட்டாங்க…” என்றான் ஷேஷா.

தலையசைத்து பாலாவும் சிரிப்புடன் ஷக்தியை பார்த்துக்கொண்டே விடைபெற பவனும் அவனுடன் சேர்ந்து வெளியே வந்துவிட்டான்.

Advertisement