Advertisement

அருவியில் குளித்து மறைவான இடத்தில் உடைமாற்றி வந்தவளுக்கு.,  சிவா தன் சிறுவயது தோழன் என்பதை மீறி அவனிடம் இருந்த நட்பு அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.,

       இவனை போய் என்ன எல்லாம் நெனச்சிட்டேன்.,

          திரும்பி வரும் போது அவனோடு வந்த பயணத்தை மிக ரசித்து கொண்டே வந்தாள்., இளம் சாரல் மழையில் நனைந்து கொண்டே.,

     அவனும்என்ன இப்போ சந்தோஷமா இருக்கா“., என்று கேட்ட படிநீ ஒரு நாள் என்ட்ட சொன்ன ஞாபகம் இருக்கா., இதே மாதிரி மழை பெய்யும் போது அந்த அருவியில் போய் குளிக்கணும்., இந்த மாதிரி பைக்ல டிராவல்  பண்ணனும் அப்படின்னு.,  இப்ப கிட்டத்தட்ட அரைமணிநேரம் டிராவல்., மரங்கள்  சூழ்ந்த இடம் பாதுகாப்பான இடம் அது  தெரிஞ்சு தான் கூட்டிட்டு வந்தேன்., இல்லாட்டி உன்னை கூட்டிட்டு வருவேனா  லூசு., வரும் போது  பயந்து போய் பாதி நேரம் கண்ணை மூடிகிட்டே வந்த“., என்று சொன்னான்.

     

அவள் சிரித்தபடி அவன் தோளில் அடித்தாள்., எரும இதெல்லாம் பர்ஸ்டே  சொல்ல மாட்டியா., வரும்போதும் டிராவல் என்ஜாய் பண்ணி இருப்பேன் இல்ல“., என்று அவள் சொன்னாள்.

        அவனோஇல்லையே நீ இதுக்கு முன்னாடி என்ட்ட வேற மாதிரி சொன்னீயே.,  அப்படி பைக்ல ஸ்பீடா டிராவல் பண்ணனும்., அப்படி திக்கு திக்கு திக்கு திக்குனு இருக்குற மாதிரி இருக்கணும்., நெஞ்செல்லாம் படபடன்னு அடித்துக்கனும் அப்படின்னு  நிறைய சொன்ன மாதிரி இருந்துச்சு.,  அதனால தான் சொல்லாமல் கூட்டிட்டு வந்தேன்., அப்ப உனக்கு படபடவென அடித்துச்சி இல்ல“.,  என்று கேட்டான்.


     அவளோஆமா டா.,  என்னைக்கோ ஒரு நாள் ஏதோ ஒரு படத்தை பார்த்துட்டு சொன்னேன்., அதுக்காக இப்படியா பயங்காட்டி விடுவ.,  என்ஜாய் பண்ணாம விட்டுடேனே“., என்று சொல்லிக் கொண்டே திரும்பி வீட்டிற்கு போகும் பயணத்தை ரசித்து அனுபவித்தபடி சென்றாள்.

    அவன் சொன்னது போலவே அவளை கல்லூரி வாசலில் சரியான நேரத்தில் இறக்கிவிட., அவளும் கல்லூரி பஸ்சில் ஏறி வீடு சென்றாள்.

      வீட்டிற்கு செல்லும் அந்த பாதையில் நடக்கும் போது தான்.,  உடை பற்றிய ஞாபகமே வந்தது., ‘ஐயோ காலையில் இந்த டிரஸ் போடலையே., அம்மா கேட்டா என்ன சொல்ல‘.,  என்று நினைத்தவள்.,

                 வீட்ல ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்., என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தாள்.

        அவள் நல்ல நேரமோ என்னமோ வீட்டின் பக்கவாட்டில் அம்மாவும்., சிவா அம்மாவும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.,

     சத்தமில்லாமல் அறைக்குள் சென்றவள்., ஈர உடையை உலரப் போட்டு விட்டு., அவசர அவசரமாக உடை மாற்றிவிட்டு நல்ல பிள்ளையாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தாள்.

         அதே நேரம் சிவாவும் அவன் வீட்டிற்குள் நுழைந்தான்., இவளோ அவனை அப்போது தான் பார்ப்பது போல கையாட்டி விட்டு., வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.,

         வெளியே இரண்டு அம்மாக்களும் எப்ப சண்டை போடும் எப்ப சேருங்க ன்னே தெரியாது என்று இருவரையும் பற்றி பேசிக் கொண்டது காதில் விழுந்தது.,

   .       சண்டைக்கு பஞ்சமே இல்லாத நாட்கள் அவை.,  இருவரும் வெளியே சேர்ந்து சுற்றினாலும் எந்த இடத்திற்கு சென்று விட்டு வந்தாலும் நிச்சயமாக அன்று பஞ்சாயத்து நடக்கும்., யாராவது பார்த்து விட்டு சொல்லி விடுவார்கள்அதன் பின்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் கூப்பிட்டு வைத்து இருவரையும் போதும் போதும் என சொல்லுமளவிற்கு திட்டி தீர்த்தாலும்., இருவரும் கேட்டுவிட்டு அதன்பின்பு நல்ல பிள்ளையாக பஞ்சாயத்தில் இருந்து செல்பவர்கள் மீண்டும் மொட்டை மாடியில் அடுத்த சதியாலோசனை நடத்துவார்கள்.

            அடுத்த ஊர் சுற்றல் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்பதை தான்.

          இன்று இருவரும் போய் வந்தது யாருக்கும் தெரியாது திடீர் பயணம்., மதுவிற்கு தெரியாமல் சிவா செய்த ஏற்பாடு., மலை பக்கம் சென்று வந்ததால் யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் தான் இருந்தனர்., ஏனெனில் அன்று சாரல் மழையும் வானம்  வேறு மேகமூட்டத்துடன் இருந்து கொண்டிருந்தால் நிச்சயமாக அதிக நடமாட்டம் இல்லை என்ற எண்ணத்தில் தான் இருந்தனர்.

       பாவம் அவர்களுக்கு புரியவில்லைபூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதுஎன்று நினைப்பது போல மழை மேகமும் மலைச்சாரலிலும் யாரும் தங்களை பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்திருக்க., பார்த்து சொன்னவர்கள் பெற்றோர் இடத்தில் சொல்லாமல் வேறு ஒரு ஆளிடம் சொல்ல அது இரண்டு பெற்றவர்களுக்கும் சேர்த்து திட்டு விழும் நிலைக்கு சென்றிருந்தது.,

            அன்று இரவு உணவு உண்டு விட்டு தன் அறைக்குச் சென்றவள்., அருவி குளியலும்., பைக்கில் சுற்றியதும் டயர்டாக உணர்ந்தவள் தூங்கி விடலாம் என்ற எண்ணத்தோடு புத்தகத்தை எடுத்து அருகில் வைத்துக் கொண்டு.,  பார்த்துக் கொண்டே இருந்தாள்.,

        பின்பு யோசித்த அவளோ  ‘இது சரிப்பட்டு வராது உண்ட மயக்கம் தொண்டனுக்கு மட்டும் தான் இருக்க வேண்டுமா., இந்த தொண்டிக்கு இருக்கக் கூடாதா‘., என்று தானாக புலம்பிக்கொண்டு பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்தி கண்ணை  சொருகும் நேரத்தில்., ” மதுஎன்ற அம்மாவின் அதட்டலான சத்தம் கேட்டது.,

          வேகவேகமாக எழுந்து அமர்ந்தவள்என்ன அம்மா“., என்றாள்.

            “கொஞ்சம் என்  கூட சிவா வீட்டு வரைக்கும் வா“., என்று சொன்னார்.

           ” சிவா வீட்டுக்கு இந்நேரத்துக்கு எதுக்கு“., என்று கேட்டாள்.

             ” ஏன் நீ இப்பவே தூங்கிய ஆகணுமா.? 10 மணிக்கு தூங்கினா ஆகாதா., மணி எட்டரை தான் ஆகுது.,  அதுக்குள்ள தூக்கமா வா“., என்று சொன்னார்.

           “போங்க வாரேன்என்று கத்தியவள்.,  வேறு எதுவும் சொல்லவில்லை.

         அதற்குள் அம்மாவும் அப்பாவும்சீக்கிரம் வா கதவசாத்த வேண்டாமா.,  திறந்து போட்டுட்டா  போக முடியும்“., என்று சத்தமாக சொன்னார்.

                  வேறு வழி இல்லாமல் அவர்கள் பின்னே சென்று நின்றாள்கதவை சாத்திவிட்டு பெற்றவர்கள் முன் செல்ல நல்ல பிள்ளையாக பெற்றவர்களின் பின்னே சென்றவளுக்கு.,  அங்கே ஹாலில் குற்றவாளி போல் நின்ற சிவாவை பார்த்ததும்ஐயையோ எவனோ  பத்த வைச்சிட்டான்  போலயே‘., என்று யோசித்தவளுக்கு தூக்கம் பறந்து போனது., ‘இன்னைக்கு எந்த  பெஸ்டிவல் நடக்க போகுது., என்னன்னு தெரியலையே‘.,  என்று திருதிருவென பார்த்தபடி வர சிவாவின் பெற்றோர்களின் அருகில் மதுவின் பெற்றோர்களும் அமர்ந்தனர்.

            சிவாவிற்கு அருகில் போய் நின்றவள் மெதுவாகஎன்னடா ஆச்சு“.,  என்று கேட்டாள்.

                 அப்போதுதான் மாடிப் படியில் யாரோ இறங்கி வரும் அரவம் கேட்டது.,  நிமிர்ந்து பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது.,

           ‘அய்யயோ இவங்க  முன்னாடியா  இன்னைக்கு பஞ்சாயத்து தொலைத்தேன் சாமிஎன்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே இரண்டு பெற்றவர்களுக்கும் அருகில் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்தவன்.,  கால் மேல் கால் போட்டுக்கொண்டு,

            “கேளுங்க மாமா“., என்று அவள்  பெற்றவரையே பேச அழைத்தான்.,

              முதல்முதலாக மெதுவாக சிவாவை பார்த்துலூசு பயலே என்னடா பஞ்சாயத்து சொல்லு“., என்று கேட்டாள்.

           “எனக்கே சரியாக தெரியாது வாய மூடிட்டு அமைதியா இரு லூசே“., என்று அவனும் சொன்னான்.

         பெற்றவர்கள் நால்வரும் தான் இதுங்க இரண்டும் இன்று ஏதோ கோல்மால் பண்ணியிருக்கு போலவே.,  இவன் வேற எல்லோரையும் கூப்பிட்டு வெச்சி இருக்கானே என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

          அவன் வேறு யாருமல்ல சிவாவின் அண்ணன் சரண்.,  அவன் தான் இப்போது பஞ்சாயத்து தலைவராக அமர்ந்திருக்க பெற்றவர்களையும் சேர்த்து குற்றவாளி கூண்டில் ஏற்றி வைத்திருந்தான்.

     சரண் அவர்கள்  இருவருடைய பெற்றோரையும் பார்த்துஎன்ன தான் செய்வீங்க  வீட்டில“.,  என்று அம்மாக்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

          “அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போய்ருவாங்க.,  நீங்க இருந்து  வீட்ல என்ன செய்றீங்க.,  இவங்க ரெண்டு பேரு என்ன பண்றாங்கன்னு பார்க்கவே மாட்டீங்களா“., என்று கேட்டான்.

          இருவரும்இதுங்க ரெண்டும் இன்னைக்கு என்ன பண்ணுனதுன்னு தெரியலையே“.என்று இரண்டு பெற்றோர்களும் பேசிக்கொண்டிருக்கும் போதே

         மதுவோ விசாரணையை சிவாவிடம் திருப்பியிருந்தாள்.,  “டேய் உங்க அண்ணனுக்கு எப்ப நியூஸ் வந்துச்சு“., என்று கேட்டாள்.

       “சத்தம் போடாத டேய் லூசு எருமை., அவன் காதுக்கு கேட்டுச்சு ரெண்டு பேரையும் கைமா பண்ணிடுவான் வாய மூடிட்டு இரு“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

     “அங்க ரெண்டு பேத்துக்கும் என்ன பேச்சு.,  எப்படி பண்ண தப்ப மறைக்கலாம் னா“., என்று கேட்டான்.

            இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு குனிந்து கொள்ளவே.,  பெற்றோர்களுக்கு ஏதோ வசமாக செய்து விட்டு வந்திருக்கிறார்கள், என்று மட்டுமே தோன்றியது.

          மதுவோ மெதுவாக சிவாவிற்கு  பின் சென்று நிற்க., சரண் தான்மது முன்னாடி வா.,  தப்பு பண்ணிட்டு பின்னாடி போனா எப்படி“., என்றான். அவனின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.,

           முன்னாடி வந்தவளோ., சிவாவை பார்த்தாள்., அடுத்து வரிசையாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இருவரும் பதில் அளிக்க வேண்டும்., ‘என்ன பூதம் எல்லாம் சேர்ந்து வந்து அவர்கள் முன் கேள்வியாக நிற்க போகிறதோ‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டனர்.

           ஆனாலும் மனதுக்குள் அவர்கள் இருவரும்  சேர்ந்து வெளியே தானே போனோம்.,  இதில் என்ன தப்பு இருக்கு.,  எப்பவும் கடைக்கு போயிட்டு வருவது போல தானே போய் வந்தோம்., இதுக்கு என்ன ஓவரா பில்டப் பண்ணிட்டு இருக்கான்., வேற என்ன பிரச்சினையாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்., தாங்கள் செய்த தவறின் வீரியம் புரியாமல்..,
  

எப்போதும் கலக்கமும்குழப்பமும் கொள்ளாதே..எதுவாக இருந்தாலும் கடந்து செல்..!

Advertisement