Advertisement

2

ஏக்கங்கள்  ஏங்கி
போகிறது
கனவுகள் என்று
கைசேருமோ
என்ற எண்ணத்தோடு.,

          பழைய எண்ணங்களுக்குள் சென்றவளுக்கு.,  சிவா அவன் தான் அவளுக்கு முன் வந்து நின்றான்.

       கல்லூரிக்கு சென்ற புதிதில் நடந்தவைகளை நினைத்துக் கொண்டாள்., பஞ்சாயத்து இல்லாத நாட்களே இல்லை அப்படி ஒரு பஞ்சாயத்து சந்தித்தது அன்று தான்.,  அது…..

   அதிகாலை நேரம் எழுந்து வந்தவள் வீட்டிலிருந்து பார்க்கும்போது தெரியும் மலை முகடுகளையும்.,  அதன்மேல் தவழும் மேகங்களையும் ரசித்துக்கொண்டு பனியின் குளிரில் கையை கட்டிக்கொண்டு குளிரோடு சேர்த்து மலை முகட்டையும் ரசித்துக்கொண்டிருந்தாள்.

          ஆனால் அவள் அம்மாவோமது உள்ள வா.,  வெளிய நிக்காத  மழை பெய்ய வேண்டிய காலத்தில் பனிபொழிந்துட்டு இருக்கு., காலம் கெட்டு., சீசன் எல்லாம் மாறி போய்கிட்டு இருக்கு“.,  என்று சொல்லும்போதே பனியோடு சேர்த்து சிறு சிறு மழை துளிகளும் விழத்தொடங்கியது.

     “பனியும்., மழையும் சேர்ந்தா.,சளி புடிச்சிறாம.,  உள்ள வா“., என்று அதட்டலாக அழைத்து விட்டு சென்றுவிட்டார்.

      சற்று நேரத்தில் சூடான டீயோடு மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தவள்., டீயை ரசித்து ருசித்து பருகியபடி., தன்னை ஈர்த்த இயற்கையை சேர்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

       அதேநேரம் உள்ளறையில் இருந்து அம்மாவின் சத்தம் கேட்டது., “வெளியே வேடிக்கை பார்த்துட்டே  இருந்தா எப்படி.,  காலேஜுக்கு கிளம்ப கெளம்புற வழியை பாரு., படிக்கிறத தவிர மீதி எல்லா வேலையும் பாரு“., என்று  பிள்ளைகள் இருக்கும் எல்லா வீட்டிலும் கேட்கும் வசவு தான் கிடைத்தது.,

         அதைக் கேட்டுக் கொண்டே எழுந்து செல்ல., அவள் போனில் அழைப்பு மணி அடித்தது., யார் எனப் பார்த்ததும்இந்த லூசு எதுக்கு இப்ப கூப்பிடுறான்.,  வீட்டுக்கு தெரிஞ்சா தொலைஞ்சேன்“., என்று சொன்னபடி போனை எடுத்துக் கொண்டு வேகவேகமாக அறைக்குள் ஓடியவள்.

              போனை எடுத்தவுடனே., “எருமமாடே எத்தனை தடவ சொல்லியிருக்கேன்., வீட்டில இருக்கும் போது கூப்பிடாதே ன்னு“., என்று எதிர்ப்பக்கம் ஹலோ சொல்லும் முன்னே கத்தினாள்.

        எதிர் புறம் இருந்த எருமை மாடான அவனோ மிகவும் கூலாக., “சொல்றத கேளு இப்படி பயந்துட்டே இருந்தே னா., என்கிட்ட பேச கூட மாட்ட., அதனால நீ என்ன பண்ற இப்ப காலேஜ்க்கு போ.,  மத்தியானத்துக்கு மேல காலேஜ் கட் அடித்துவிட்டு வெளியே வா., நான் வர்றேன்“., என்று சொன்னபடி போனை வைத்துவிட்டான்.

          இவள் பதில் சொல்லும் முன்னே போனை வைக்க.,  ‘எரும பதில சொல்றதுக்குள்ள போனை வைச்சிட்டான்., இன்னைக்கு கடைக்கு எங்கேயும் சுத்த கூட்டிட்டு போவானோ., இப்படி போனோம் ன்னு., வீட்டுக்கு தெரிஞ்சா கொலையா கொன்னுருவாங்க‘.,  என்று யோசித்துக் கொண்டே போனை வைத்தவள்.,
கல்லூரிக்கு கிளம்பி தொடங்கினாள்.

   அவசர அவசரமாக கல்லூரி கிளம்பிய உடனே போனை எடுத்து சைலன்ட் மோடில் போட்டு., தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.,

      அவன் சொன்னது போல வெளியே வரவேண்டும் என்று நினைத்தாலும்.,  மனதிற்கு ஏனோ படபடப்பாய் இருந்தது.

     வீட்டிற்கு தெரியாமல் ஏதோ தவறு செய்வது போல உணர்ந்தவள்., ‘இந்த லூசு பயலுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது., இவன் பேசாம சொல்றான் வீட்டுக்கு தெரிஞ்சா  கொலை விழும்‘., போவதைப் பற்றி பிறகு  யோசிக்கலாம் என்று நினைத்துக்கொண்டே கல்லூரி பேருந்தில் ஏற போனாள்.

     பின்னாடியே வந்த மதுவின் தாயோஇங்க பாருடி கிளைமேட் சரியில்லாமல் இருக்கு., மழையில் நனைந்து தொலைந்து விடாதே., வீடு வந்து ஒழுங்கா சேரலை கொன்னுடுவேன்“.,  என்று சொன்னார்.

      அவளோ தன் தாயை முறைத்துக் கொண்டு கிளம்பி சென்றார்., ‘என்னமோ சின்னப் பாப்பா மாதிரி பொத்தி பொத்தி வைக்கிறாங்க., கொஞ்சமாவது ப்ரியா விடுறாங்களா.,  எல்லாரும் இங்க இருக்குற காலேஜுக்கு வண்டியில போறாங்க.,  என்னைய மட்டும் காலேஜ் பஸ்ஸில் ஏற்றி அனுப்புறாங்க., பாக்குறவங்க என்ன நினைப்பாங்க., சரியான லூசு குடும்பத்தில் வந்து பிறந்திருக்கேன்‘.,  என்று மனதிற்குள் தன் வீட்டை திட்டிக்கொண்டே கல்லூரி சென்று சேர்ந்தாள்.

         மனம் முழுவதும் படபடப்பாய் இருந்தாலும்., கல்லூரிக்கு வந்து இறங்கியவுடன் மனதிற்குள் எப்பொழுதும் போல நண்பர்களோடு உற்சாகமாய் பொழுதைப் போக்க தொடங்கினாள். படிக்கிறார்களோ இல்லையோ நண்பர்களுடன் ஒன்றாக நேர த்தை போக்கி கொண்டே சுற்றிக் கொண்டிருந்தாள்.

    மதிய உணவிற்கு பிறகு ஆசிரியரிடம் தலைவலி என்று சொல்லிவிட்டுலைப்ரரி இருக்கேன்என்று பெர்மிஷன் வாங்கி விட்டு.,

       தோழிகளிடம் மட்டும்பஸ் கிளம்பும் நேரத்தில் வந்து விடுவேன்“., என்று சொல்லி விட்டுயாரிடமும் சொல்லாதே சரியாக பஸ் வரும் நேரத்திற்கு  பஸ்க்கு வந்து விடுவேன்என்று சொல்லி விட்டு சென்றாள்.

            அவளோநீ பண்றது சரி இல்ல.,  உங்க வீட்டுக்கோ இல்ல அவன் வீட்டுக்கோ தெரிஞ்சா கொன்னுருவாங்க“., என்று சொன்னாள்.

       “அது அப்புறம் பாத்துக்கலாம்“., என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு சென்றாள் இளம் கன்று பயமறியாது என்பதை இவள் எப்போது தான் உணர்வாளோ.,

       இவள் வெளியே வரும் நேரம் சரியாக சிவாவும் வந்து நின்றான்., “லூசு சிவா ஏன்டா வர சொன்ன.,  நீ பேசாம காலேஜ் கட் அடிச்சிட்டு வா ன்னு காலங்காத்தால வீட்டுக்கு போன் பண்ற., வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா“.,  என்று சொன்னாள்.

     “அதெல்லாம் பார்த்துக்கலாம் வா வா.,  வந்து வண்டியில ஏறு“., என்று சொன்னான்.

         அவளோ அவனையே  பார்த்தபடிடேய் இது உன் வண்டி இல்லையேடா., உங்க அண்ணன் வண்டி தானே“., என்று கேட்டாள்.

         “நீ தான இந்த மாதிரி வண்டியில் போகணும் சொன்ன, அது தான் அவன் ஊரில் இல்லாத நேரத்தில் எடுத்துட்டு வந்துட்டேன்“.,  என்று சொன்னான்.

     “உங்க அண்ணன் வண்டியில நான் வரமுடியாது., வெளியே வண்டில வந்தேன் தெரிஞ்சுச்சு., வீட்ல தொலைச்சிடுவாங்க., லூசு பயலே நான் என்ன மற்ற பிள்ளைகளை மாதிரி முக்காடு போட்டுட்டா  வர முடியும்“., என்று சொன்னாள்.

       “வெளியே உன் மூஞ்சி தெரியக்கூடாது னா., முக்காடு போட்டு வா போகலாம்“., என்று சொல்லி அழைத்துக் கொண்டு சென்றான்.

         “டேய் எங்க கூட்டிட்டு போற“., என்று சொல்ல மலையடிவாரத்தில் இருக்கும் கல்லூரியிலிருந்து மலைமேல் ஏறி கூட்டிக் கொண்டு சென்றான்.

          வேகமாக செல்ல இவளுக்கோ படபடவென மனது அடித்தது. ‘என்னதான் இருந்தாலும் எவ்வளவு தான் பழகி இருந்தாலும்., எப்படி இவனை நம்பி வண்டியில் ஏறினேன்.

         அதுவும் யாரிடமும் சொல்லாமல்.,  வீட்டிற்கு தெரிந்தால் ஐயையோ.., போகும் வழியில் ஏதாவது ஆனால்‘., என்று பல விதமான கற்பனைகள் பரவ மனம் முழுவதும் திக் திக்கென்று அடித்துக்கொண்டது.,

           “டேய் மெதுவா போடா., எனக்கு பயமா இருக்கு., எங்க கூட்டிட்டு போறஎன்று கத்திக் கொண்டே வந்தாள்.

       அவனும்சத்தம் போடாம வா., உன்னை என்ன கடத்திட்டா போறாங்க.,  உன் பெர்மிஷனோடத்தான் கூட்டிட்டு போறேன்“., என்று அவன் கத்தினாலும்.,

      இவ்வளோஐயோ லூசு பய எங்க கூட்டிட்டு போறான்னு கேட்காம இவன் கூட வர்றேன் சொன்னது தப்பா போச்சு.,  எப்பவும் மாதிரி கடைக்கு கூட்டிட்டு போவான்னு நினைச்சேன்., எங்கேயோ கூட்டிட்டு போறானே.,  காட்டுக்குள்ள போறான்., பயமா இருக்கே போன் கூட சிக்னல் எடுக்க மாட்டீக்கே‘., என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள்.,

          சுற்றிலும் மரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது போல வண்டி செல்ல., அவளுக்கு மீண்டும் பதட்டம் கூடியது., ‘ நல்லவன் என்று நம்பினாலும்., எத்தனை தான் பழகி இருந்தாலும்., காலம் கிடக்கும் கிடப்பில் இவனை நம்பி வந்தது தவறோ‘., என்று பதற தொடங்கியிருந்தாள்.

         கண்ணை இறுக மூடி அமைதியாக இருக்க., சற்று நேரத்தில் வண்டி நிற்கவும்., அதேநேரம் சாரல் அடிக்கவும் சரியாக இருந்தது.,

       கண்ணை திறந்து பார்த்தவளுக்கு தன் கண்ணை நம்பவே முடியவில்லை.,  அவள் எப்பொழுதோ., அவனிடம் ஆசைப்பட்டு சொன்னது., இந்த அருவிக்கு வந்து குளிக்க வேண்டும் என்று.,  சிவாவை பார்த்துதேங்க்யூ சிவா“., என்று கொஞ்சலாக சொன்னாள்.

        அவனோ அவளை பார்த்து  “இவ்வளோ நேரம் வண்டியில் வரும்போது என்னை மனசுக்குள்ள திட்டிட்டு வந்த.,  இந்த பயல நம்பி வந்தட்டோமே., இவன் கடத்திக் கொண்டு போய் எங்காவது விட்டுருவானோ ன்னு தானே நினைச்ச.,

        உன்னைய வித்தா ஒரு ரூபாய்க்கு கூட   கொடுத்து எவனும் வாங்க மாட்டான்., போ போ ஆசை தீரக் குளித்துட்டு சீக்கிரம் வந்து சேரு.,  காலேஜ் முடியுற நேரம் காலேஜ் பக்கத்திலேயே விடுறேன்., அப்படியே பஸ் ஏறி வீட்டுக்கு போயிரு.,  வீட்டுக்கு தெரிஞ்சா உங்க அம்மா என்னை கொன்னுடுவாங்க ., பக்கத்து வீட்டில் இருந்துக்கிட்டு நீ செய்ரதுக்கெல்லாம் நானும் சேர்ந்து திட்டு வாங்கிட்டு இருக்கேன் எரும“., என்று திட்டிவிட்டு சென்றான்.

     “நீ தான் டா லூசு., எரும எல்லாம்., சொல்லியிருந்தா டிரஸ் எடுத்துட்டு வந்திருப்பேன் இல்ல“., என்றாள்.

          “அதெல்லாம் நேத்து உங்க அம்மா காயப் போட்ட டிரஸ் ஒரு சுடிதாரை எடுத்து வச்சிருக்கேன்., அது கூட உங்க அம்மாவுக்கு தெரியலை“., என்றான்.

           “அடேய் அப்ப போன வாரம் காணாமல் போன என்னோட பாந்தினி ஷால் எடுத்தது நீ தானா“., என்றாள்.

       “அய்யோ பாவம் ன்னு எடுத்துட்டு வந்தா ஏன் சொல்ல மாட்ட., குளிக்க போறீயா இல்ல கிளம்புவோமா“., என்ற உடனே அருவியை நோக்கி சென்றாள்.

          

Advertisement