மதுவும் “அம்மா ப்ளீஸ் என்ன விட்ரு, இப்பதான் அத்தை மாதுளம்பழம் கொடுத்தாங்க, அதை சாப்பிட்டு முடிச்சிட்டு தான், காபி குடிச்சேன், மறுபடியும் பழமா வேண்டாம் ப்ளீஸ்”, என்று சொன்னாள்.

       “அப்ப ஏதாவது செஞ்சு தரேன் சாப்பிடுறியா”, என்று கேட்டார்.

“ஏன் ஆயில் புட் சாப்பிட்டேன்னா, இன்னைக்கு என் வீட்டுக்காரர் முன்னாடி பஞ்சாயத்து நடக்கும் அது எதுக்கு வேண்டாம் போ, நீ தான் என்னை மாட்டி மாட்டி விடுறம்மா”, என்று சொல்லி விட்டு அப்படியே சோபாவில் சாய்ந்த அமர்ந்தாள்.,

       மது அம்மாவோ, “நந்தினி நீ பழம் எடுத்துக்கோ மா”, என்று சொல்லி விட்டு கிச்சனுக்கு சென்றார்.

       அவளுக்கோ நந்தினி இடம் சொல்லவும் தயக்கமாக இருந்தது,  ‘படித்துக் கொண்டிருக்கும் பிள்ளையிடம் எப்படி பேச்சை தொடங்குவது’ என்ற எண்ணம் இருந்தது.

       ‘அது மட்டுமில்லாமல் வேலைக்கு சென்ற பின்பு தான் கல்யாணம் என்று நினைப்பவளிடம் எப்படி தொடங்க’ என்று யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

     சற்று நேரத்தில் மதுவின் அம்மா சிற்றுண்டி கட்லெட் போல செய்து கொடுக்க அதில் ஒன்றை சாப்பிட்டவள், “போதும்” என்றாள்.

       சற்று நேரத்தில் அவள் அம்மா சூடாக செய்து தான் கொண்டு போய் பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு வருவதாக செல்லவும்,

     “அப்பா எங்கம்மா” என்றாள்.

        “அப்பா இன்னும் வரல’ என்றவுடன்,

      “சரி நான் வெளியே உட்கார்ந்திருக்கேன்.

     “நீங்க போய் கொடுத்துட்டு  வந்த அப்புறம் சொல்லுங்கள்., ஒருவேளை நீங்க வரதுக்கு லேட் ஆச்சுன்னா, நான் கதவை பூட்டிட்டு வாரேன் போங்க”, என்று சொன்னாள்.

        “ம்மா பின் பக்கமாக பூட்டிருக்கீங்களா”, என்று கேட்டு விட்டு வெளியே வந்து மரத்தடியில் அமர்ந்து பேச தொடங்கினாள்.

அவள் அம்மா பக்கத்து வீட்டுக்கு சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு, “நந்தி நீ யாரையாவது விரும்புகிறாயா”, என்று கேட்டாள்.

அவளோ அவளை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “ஏண்டி திடீர்னு இப்படி எல்லாம் கேட்கிறாய்” என்றாள்.

      “இல்ல உன்கிட்ட கேட்கணும்னு தோணுச்சு அதான் கேட்கிறேன்” என்றாள்.

     “இப்ப வரைக்கும் அப்படி எதுவும் தோணல, ஒரு வேலை தோணுனா சொல்றேன்”, என்று சொன்னாள்.

    அவளை பார்த்துக் கொண்டிருந்தவள், “உனக்கு அப்படி தோன்றுவதற்கு முன்னாடி, ஒரு வேலை உனக்கு லவ் பண்ணலாம் அப்படின்னு ஒரு  மைன்ட் செட் வந்தா, ஒரே ஒரு நிமிஷம் சிவாவை கன்சிடர் பண்ணு”, என்று சொல்லி விட்டாள்.

நந்தினியோ மதுவை அதிர்ச்சியாக பார்த்தாள்.

மதுவோ அவன் சொன்னதில் சிலவற்றை மட்டும் சொல்லி., “யோசிச்சு சொல்லு, அவசரப்பட்டு நீ சொல்ல வேண்டாம்”, என்று சொன்னாள்.

     நந்தினி பதில் சொல்லும் முன்  “வேண்டாம் ஓகே என்று சொல்ல வேண்டாம், ஆனா ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் வேற ஒன்னும் நான் சொல்றதுக்கு இல்ல, ஏன்னா நானும் உன் வயசு தானே,

     எனக்கு இத பத்தி எதுவும் தெரியாது, எனக்கு ஜஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் கூட கிடையாது, சிவா நல்ல பையன் அது மட்டும் சொல்லுவேன், என்னோட பிரண்டு அது மட்டும் இல்ல, என் பிரண்டுக்காக நான் சொல்றேன் அவ்வளவு தான்”, என்று சொன்னாள்.

அவளை பார்த்துக் கொண்டிருந்தவள்,  “லூசாடி நீனு” என்று சொல்லி விட்டு,  “ரெண்டு பேரும் வேலை இல்லாம தெருவுல நிக்கிறதுக்கு ஐடியா சொல்லுறீயா, போவையா வேலை கிடைக்கட்டும், எனக்கு அந்த மாதிரி ஒரு ஐடியா இல்ல, எங்க வீட்டுல முதல்ல அதர்  காஸ்ட் மேரேஜ்க்கு சம்மதிக்க மாட்டாங்க, உனக்கே தெரியும், உங்க வீட்ல நீங்க ஃபர்ஸ்ட்ல இருந்து க்ளோசா பழகுனதுனால,  உங்க அம்மா அப்பா கொடுத்துட்டாங்க,  எங்க வீட்ல அப்படி எல்லாம் கொடுக்க மாட்டாங்க ,  நீ இந்த நேரத்துல இந்த மாதிரி எதையும் போட்டு யோசிக்காத, பார்க்கலாம் சரியா, வாழ்க்கை அது போக்குல தான் போகும், நீ ரொம்ப போட்டு குழப்பாதே புரியுதா, போயி சமத்தா நல்ல சாப்பிடு உன் மாமியார் செஞ்சு கொடுப்பதெல்லாம்,  சாப்பிட்டு இரண்டு நாள் கழிச்சு ஊருக்கு போய்,

உன் புருஷன்  உன் முந்தானை பிடிச்சிட்டு சுத்துராரோ இல்லையோ,  நீ தான் அவர் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க, அந்த வேலைய மட்டும் பாரு”, என்று சொன்னாள்.

“போடி” என்று சொன்னவள்,  பின்பு “சரி நான் சொன்னதையே ஞாபகம் வச்சுக்கோ”, என்று சொல்லிவிட்டு கதவை பூட்டிக் கொண்டு இங்கு வந்தாள்.

      அவளோ வண்டியை எடுத்துக்கொண்டு தன் வீடு நோக்கி சென்றாள்.

    வீட்டிற்குள் வரவும் மதுவின் அம்மா தான், “நந்தினி எங்க” என்று கேட்டார்.

    “அவ கிளம்பிட்டா ம்மா, இந்தாங்க வீட்டு சாவி”, என்று சொல்லி விட்டு மீண்டும் சோபாவில் அமரந்தாள்.

     சரண் தான் ,”எப்பவும் உட்கார்ந்தே இருக்காத, பகல் ஃபுல்லா உட்கார்ந்தே இருந்த தானே, கொஞ்ச நேரம் நட இல்லாட்டி போய் படு போ”, என்று சொன்னான்.

     “தூக்கம் வரல” என்று சொல்லிவிட்டு அமர்ந்திருந்து கதை பேசிக் கொண்டிருக்கும் போதே,

     சிவா சொல்லி வைத்திருந்த மாங்காவும் புளியும் அவன் நண்பன் வந்து கொடுத்து விட்டு சென்றான்.

     வீட்டினர் அத்தனை பேர் முன்னிலையிலும் இருவரும் மாட்டிக் கொண்டனர்.

   சிவாவோ திருதிருவென முழிக்க, மதுவும் நகம் கடித்த படி சோபாவில் இருந்து எழுந்து நின்றாள்,

    சிவாவின் கையில் இருந்ததை பார்த்த சரண், அதை போய் வாங்கினான்.

     மாங்காய்யும் புளியம் பழமும்,  புளியங்காயுமாக இருந்தது,

      இருவரையும் பார்த்தவன் “என்னடா இது” என்று சிவாவை கேட்டான்.

        சிவாவோ “இல்ல அது வந்து மாங்கா, புளியங்கா”, என்று சொன்னான்.

      “இது எதுக்கு” என்று அவன் கேட்டான்.

     “மதுவோ நான் தான் கேட்டேன்”, என்று இங்கிருந்து சத்தம் கொடுத்தாள்.

   “இதெல்லாம் சாப்பிட்டா சளி பிடிக்கும், நீ  வேற என்னனாலும் சாப்பிடு, இந்த மாதிரி சாப்பிட்டு, சளி இழுத்துக்காதே”, என்று சொன்னான்.

    சிவாவின் அம்மா தான் “டேய் இந்த மாதிரி நேரத்துல இதெல்லாம் சாப்பிட பிடிக்கும் டா”, என்று சொன்னார்.

       “அவளுக்கு இந்த ஃபுட் தான் வேணும், அந்த புட் தான் வேணும்னு கிடையாது , எல்லாமே அவளுக்கு டேஸ்ட் புடிச்சிருந்தா சாப்பிடுவா,  அவளுக்கு இந்த பிரக்னன்சி டைம்ல வர்ற எந்த சிம்டம்ஸ்ம்  இல்ல,  நார்மலா இருக்கா,  சரியா ஆளாளுக்கு சொல்லி அவள டெம்ப் பண்ணி விடாதீங்க,  இப்ப எதுக்கு உனக்கு மாங்கா”, என்று கேட்டான்.

   இவளோ அவனை பார்த்தபடி “அதுல உப்பும் மிளகாய் தூளும்  போட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்,  அப்புறம் புளி அது டேஸ்ட் நல்லா இருக்கும்”, என்று சொன்னவள், “ப்ரெக்னன்ட் இல்லாமல் கூட இதெல்லாம் சாப்பிடலாம்”,என்றாள்.

     “நீ என்ன சின்ன புள்ளையா”, என்று கேட்டான்.

     “நான் சின்ன புள்ள தான், நீங்க சின்ன புள்ளைய கல்யாணம் பண்ணியிருக்கீங்க, பண்ணிட்டு சின்ன பிள்ளையா,  சின்ன பிள்ளையா ன்னு எல்லாம் கேட்கக்கூடாது”, என்று அவனை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தாள்.

     மதுவின் அம்மாவோ ‘சரணை பார்த்து பயந்தது என்ன,  இப்ப அடிக்கிற வாயென்ன’, என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

     சிவாவோ நமட்டு சிரிப்போடு நிற்க,

       “இங்க வா நீ, ரெண்டு பேரும் நில்லு”,என்று சொன்னான்.

     இவளோ சிவாவை பிடித்து “வாடா உங்க அண்ணனுக்கு பஞ்சாயத்து பண்றது தான் வேலை, உனக்கு மாங்கா வெட்டி தர்றேன்”, என்று சொன்னாள்.

அவனும்  ரெண்டு பேரையும் பிடித்து வைத்து  “இனிமேல் இந்த மாதிரி அவ கேட்டான்னு சொல்லி எதையும் வாங்கி கொடுக்காதே சிவா” என்று சொன்னான்.

      அவனும் “சரி” என்று தலையாட்ட,  இவளோ அவனுக்கு பின்னாடி மறைந்து கொண்டு “டேய் கொலை பண்ணிடுவேன், அவர் சொன்னார் ன்னு,  அதை வாங்கி தரமாட்டேன் இது வாங்கி தர மாட்டேன்னு சொன்னா இருக்கு, ஒழுங்கு மரியாதையா எல்லாம் வந்து சேரனும்” என்று சொன்னாள்.

      அவன் மெதுவாக திரும்பி “வாய மூடு, அவன் முன்னாடி என்ன மாட்டி விடாதே”, என்று பேசினான்.

    இவனோ  “என்ன ரெண்டு பேருக்கும் பேச்சு” என்று கேட்டான்.

    “ஒன்னுமே இல்லையே சும்மா பேசிட்டு இருக்கோம்” என்று இவள் இங்கிருந்து சத்தம் கொடுத்தாள்.

    சிவாவின் அம்மாவிற்கு தான் சிரிப்பை அடக்க முடியாமல் போயிட்டு,

சரணோ,  “இதுங்க ரெண்டையும் இதுக்குத்தாமா சேரவே விடமாட்டேன், இங்க பாருங்க, அங்க இருந்து இங்க கூட்டிட்டு வந்த உடனே
இவ என்ன வேலை பாக்குறா பாருங்க,  மாங்கா புளியங்கா ன்னு , இப்ப மட்டும் நார்மலா இருந்த இவளே ஏறி போய் பறிச்சிட்டு வந்து இருப்பா,  முடியலன்னா ஆள் விட்டு பறிக்குது பாருங்களேன்”, என்று சொன்னவன்,

      “இதுக்கு அப்புறம் இதெல்லாம் சாப்பிடக்கூடாது புரிஞ்சிச்சா, இந்த ஒரு தடவை தான், இதோட லாஸ்ட்”, என்று சொன்னான்.

    பதிலே சொல்லாமல், அவள் வேகமாக எடுக்க போகவும்,  “இப்ப கிடையாது நாளைக்கு பகல்ல சாப்பிடலாம், நைட் சாப்பிட்டு விட்டு மறுபடி எதுவும் உடம்பு முடியாம ஆயிடக்கூடாது, நோ நைட்டு கிடையாது”, என்று சொன்னவன் அவனே கையோடு எடுத்துக் கொண்டு சென்றான்.

இவளோ சிவாவின் அம்மாவை பார்த்து “அத்தை ப்ளீஸ்” என்றாள்,

“அவன் சொல்ற மாதிரி நைட் வேண்டாம், கருக்கல் ஆயிருச்சு பார்த்தியா, இதுக்கப்புறம் சாப்பிட்டா நெஞ்சுக்குள்ள நிக்கும், அது சரி வராது, நாளைக்கு பகல்ல சாப்பிடு”, என்று சொன்னார்.

      சிவாவிடம் திரும்பி “ஏண்டா உன் ப்ரண்ட் அ கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வர சொல்லி இருக்கலாம் இல்ல”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்,

  அவனும் நந்தினியிடம் இவள் பேசியதை கேட்க மறந்துவிட்டான்,  இவளும் சொல்ல மறந்து விட்டாள்.

பிறருக்கு எதையும் கொடுக்க முடியவில்லை என்றாலும் மனதார வாழ்த்துங்கள்.