அதைப் பார்த்தவனோ சற்று நேரம் அமைதியாக இருந்தான். பின்பு சிரித்துக்கொண்டே ‘எவ்வளவு பெரிய எக்ஸ்பிளநேஷன்’ என்று நினைத்தவன்,
‘ஏன் அவளுக்கு திடீர்னு சந்தேகம் வந்துச்சு’ என்று யோசித்து விட்டு, ‘சரி போய் கேட்டுக்குவோம்’, என்று நினைத்தவன்.,
அவள் சொன்னது போலவே காரை இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு மெடிக்கல் ஸ்டோரில் நிறுத்தி விட சொன்னான்.
பின்பு டிரைவர் இறங்கி செல்ல போக, “இல்ல நானே வாங்கிக்கிறேன், நீங்க இருங்க”, என்று சொல்லி விட்டு அவனே போய் வாங்கி வந்தான்.
அவள் சொன்னது போல தான் இருந்தது, யாருக்கும் அவனை சரியாக அடையாளம் தெரியாது, என்பது புரிந்து கொண்டவன் காரை திரும்பிப் பார்த்தான்.,
கார் சற்று தள்ளி இருந்ததால், அதிலிருந்த ஜட்ஜ் என்ற போர்டும் தெரியாமல் இருக்க, சத்தமே இல்லாமல் வாங்கிக் கொண்டு திரும்பியவன் அவளை நினைத்து சிரித்துக்கொண்டான்.
அவள் சொன்னது உண்மைதானே எத்தனை பேருக்கு இங்கு இருக்கும் அதிகாரிகளை எல்லாம் தெரியும், யாருக்கும் அந்த அளவு தெரியாது,
‘பொதுமக்களை பொறுத்தவரை அவர்கள் எல்லாம் தனி தீவில் இருப்பவர்கள் போல தான் இருக்கிறார்கள், யாரைப் பற்றியும் அதிகமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள விரும்புவதில்லை, யார் ஆண்டாலும் என்ன என்ற எண்ணம் தான் மக்களிடையே அப்படித்தானே நாடும் இருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தவன்,
மற்றவர்கள் செல்லும் வரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்., அவளும் அவனிடம் கேட்க தயங்கினாள்.
அனைவரும் சென்ற பிறகு அவள் கையில் அவன் கிட்டை கொடுத்து விட்டு, “நான் எதிர்பார்க்கிறதும் எதிர்ப் பார்க்காமல் இருப்பதும் இருக்கட்டும்., நீ ரொம்ப யோசிக்காதே” என்று சொல்லிவிட்டு,
“திடீர்னு என்ன சந்தேகம் உனக்கு”, என்று கேட்டவன். மற்ற விவரங்களை கேட்டான் .
அவளோ தனக்கான நாளை மட்டும் சொன்னவள், “மிச்சத்தை அப்புறம் சொல்றேன்”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
ஆனால் அவளும் பரிசோதனை செய்து பார்க்கவில்லை, கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது. சரி மெதுவாக பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தவள்,
இரவு உணவிற்கு பிறகு அவன் தான், “என்ன டெஸ்ட் பார்த்தியா”, என்று கேட்டான்.
இவளோ, “இல்ல இன்னும் ரெண்டு நாள் போகட்டுமே” என்று சொன்னாள்.
அவனும் “நானும் அது தான் யோசிச்சேன், ஆனா சொன்னா நீ தப்பா நினைக்க கூடாதே ன்னு யோசிச்சிட்டு சொல்லல”, என்று சொல்லிவிட்டு “ரொம்ப யோசிக்காத மது” என்று அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அதன் பிறகு அவன் எப்போதும் போல தன் அலுவலக வேலையில் மூழ்கி விட, இவள் தான் பாட்டை கேட்ட வண்ணம் வீட்டில் உள்ள மற்றவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இரவு அவன் மார்பில் சாய்ந்த படி அவனிடம் கதை பேசிக் கொண்டிருந்தவள், வீட்டிற்கு உதவிக்கு வரும் பெண் சொன்னதை எல்லாம் சொல்லி விட்டு, “இது போல தான், நாம் அன்று ஊருக்கு கிளம்பும் போதும் கேட்டார்கள், ஆனால் அன்று முகம் மிக பளபளப்பாக இருப்பதாக சொன்னார்கள், ஆனால் இன்று முகம் வாடி இருக்கிறது, வெளுத்து இருக்கிறது, என்று சொன்னார்கள்., எதற்கும் டெஸ்ட் பண்ணி பாருங்க”, என்று சொன்னதாக சொல்லியவள்,
“என்னை வெயிட் தூக்காதீங்க, சட்டு சட்டு ன்னு எந்த வேலையும் செய்யாதீங்க, அப்படின்னு சொன்னாங்க, அதனால தான் ஒரு டவுட் வந்துச்சு, ஏற்கனவே போன தடவை டாக்டர் சொன்னாங்க இல்ல, எந்த சிம்டம்ஸ் ம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க அதனால தான் சரி அதையும் பார்த்துருவோமே, அப்படின்னு தோணுச்சு”, என்று சொன்னாள்.
அவனும் “ஓகே பாப்போம்” என்று அவளிடம் சாதாரணமாக சொன்னாலும், அவனுக்கும் மனம் ஒரு எதிர்பார்ப்பை தாங்கி தான் இருந்தது.
மறுநாளே பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று நினைக்கும் போதே, ‘வேண்டாம் பொருத்ததே பொருத்தோம், இன்னும் இரண்டு நாள் பொறுக்கலாம்’ என்ற எண்ணத்தோடு சோதனை செய்வதை தள்ளிப் போட்டாள்.
அதை அவனிடம் சொல்லவும் செய்தாள், அவனும் “சரி” என்றான்.
இரண்டு நாள் கழித்து, அவன் காலை வாக்கிங் சென்றிருந்த நேரத்தில் அதிகாலையிலேயே பரிசோதனை செய்தாள்,
ஒரு கோடு நன்றாக தெரியும் படியும், மற்றொரு கோடு லேசாகவும் இருந்தது.
அதை பார்த்த போது அவளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது, இல்லை சரியாக தெரியவில்லையே என்ற பயமும் இருந்தது.
அவன் வருகைக்காக காத்திருந்தவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, ‘எப்படி இருந்தாலும் மருத்துவரிடம் செல்ல வேண்டும்’ என்ற எண்ணம் மட்டும் உறுதியாகி இருந்தது.
வாக்கிங் முடித்து வந்தவன் எப்போதும் போல இவளோடு கிச்சனுக்கு சென்றான்.
காலை உணவுக்கு செய்வதற்கு உதவுவதற்காக நிற்க, இவளோ காபியை மட்டும் கலந்து கொடுத்து விட்டு, தனக்கும் காபியை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள்,
தயக்கத்தோடு அவன் முகத்தை பார்க்க,
“என்ன ஆச்சு மது” என்றான்.
“இல்ல எனக்கு டவுட்டாவே இருக்கு” என்றாள்.
“ஏன் டெஸ்ட் போட்டு பாருன்னு சொல்லிட்டேன்ல” என்றான்.
“டெஸ்ட் போட்டு பார்த்ததுல தான் டவுட்டா இருக்கு”, என்று சொன்னாள்.
“டெஸ்ட் போட்டு பார்த்ததில் என்ன டவுட்”, என்று கேட்டான்.
“அது ஒரு கோடு திக்கா இருக்கு, இன்னொரு கோடு ரொம்ப லைட்டா இருக்கு, அப்ப என்னவா இருக்கும், டாக்டர்கிட்ட போய் கன்ஃபார்ம் பண்ணிடுவோமா”, என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
அவனும் அவளை சிரித்தபடியே பார்த்து இருந்தான், “எல்லோரும் பாஸ்டிவ் ரிசல்ட் அ எப்படி எப்படியோ சொல்லுவாங்க, ஆனால் நீ சொல்லுற பாரு”, என்றவன்,
இவளும் சிரித்தபடி டெஸ்ட் செய்த கிட்டை அவன் கையில் கொடுக்க, அதை பார்த்தவன், “ஓகே டாக்டர் அப்பாயின்மென்ட் வாங்கிட்டு போலாம், நீ எந்த வேலையும் செய்யாதே” என்று சொன்னான்.
காலை உணவுக்காக லேசான உணவாக செய்கிறேன் என்று மட்டும் சொன்னாள்,
அவனும் “நீ செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, நான் வெளியே வாங்கிட்டு வர சொல்றேன், நீ எதையும் செஞ்சு ஹெல்த்துக்கு எதுவும் பிராப்ளம் வந்திடக் கூடாது, அதனால பொறு”, என்று சொன்னவன்,
அது போலவே தனது டிரைவரிடம் சொல்லி உணவை மட்டும் வாங்கி வர சொன்னவன், மதிய உணவை எப்போதும் உணவு சமைப்பவர்களிடம் சொல்லி சமைக்க செய்தான்.
இவளோ அவன் கிளம்பி கொண்டிருக்கும் போது, “இன்னொரு தடவை டெஸ்ட் போட்டு பார்ப்போமா, இன்னொரு கிட் வாங்கிட்டு வரீங்களா”, என்று கேட்டாள்.
“ரொம்ப யோசிக்காதே, ரிலாக்ஸா இரு, ரெண்டு கோடு இருக்குல்ல அப்புறம் என்ன”, என்றான்.
“இல்ல, அந்த இன்னொரு கோடு ரொம்ப லைட்டா இருக்கே”, என்று சொன்னாள்.
“வர்ற நாள் தானே ஆகியிருக்கு, வெயிட் பண்ணு நம்ம டாக்டர் அப்பாயின்மென்ட் வாங்கிட்டு போலாம், இன்னைக்கு ஏதாவது டாக்டர்ஸ் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க முடியுமான்னு பார்க்கிறேன், இல்லாட்டி என்னைக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குதோ அன்னைக்கு போலாம்”, என்று சொன்னவன்.,
அவளை வீட்டில் ஓய்வெடுக்கும் படி சொன்னான், அது மட்டும் இல்லாமல் அவன் வீட்டிற்கு வேலைக்கு என்று வருபவர்களிடம் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்ளும் படியும், ஜூஸ் ஏதாவது இடையில் வந்து செய்து கொடுக்கும் படியும் சொல்லிக் கொண்டிருந்தான்.