14

   தேனிலும் கசப்பிருக்கும்
இனிப்பிலும் துளி உப்பிருக்கும்
காற்றிலும் காதல் உண்டு
கோபமும் உண்டு,
உன் காதல் மட்டும்
எப்படி கலப்பு அற்ற
அன்பு அக்கறையை
அள்ளித் தருகிறது,
நீ அருகில் இருந்தால்
போதும், என் நாட்கள்
அனைத்தும் நலம் பெற,

  10 மாதங்கள் முடிந்து இருந்த நிலையில்,  காலை சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது உதவிக்கு இருந்த உதவியாளர்,  இவள் எடுக்க போன பொருளை பார்த்து விட்டு , “யம்மா யம்மா வெயிட் தூக்காதீங்கம்மா, இப்படி சட்டு சட்டுன்னு எதையும் தூக்காதீங்க”, என்று சொன்னார்.

     இவ்ளோ “எப்பவும் செய்ற வேலை தானே”, என்றாள்.

         அவரோ “அதுக்காக சொல்லலாமா, உங்க முகம் வெளிறி இருக்கு”, என்று சொல்லி, “எதுவும் நல்ல செய்தியாமா”, என்று கேட்டாள்.

     இவளோ அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “இல்ல இன்னும் ரெண்டு நாள் இருக்கு, ஒருவேளை வரதுக்கு முன்னாடி முகம் அப்படி தெரியுமோ என்னவோ,  அதனால இருக்குமோ”, என்று கேட்டாள்.

      “அப்படி எல்லாம் இல்லமா, நீங்க எதுக்கும், டெஸ்ட் எல்லாம் எடுத்து பாக்கறாங்க இல்ல, அந்த மாதிரி பாருங்களேன்”, என்று சொன்னார்.

       இவளோ எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே, “சரி வேலையை முடிச்சிட்டு அப்புறம் பார்க்கலாம்”, என்று சொன்னாள்.

          அவரும் “தப்பா எடுத்துக்காதீங்க, ஒருவேளை தலைக்கு ஊத்திட்டீங்கன்னா ஒன்னும் இல்லை, இல்லைனா இந்த மாதிரி சட்டு ன்னு வெய்ட் தூக்கி வேலையை செய்யாதீங்க, அதுக்கு தான் சொல்லுறேன்”, என்றார்.

      “சரி நான் பாத்துக்கிறேன், இனிமேல் தூக்கல போதுமா”, என்று சொல்லிவிட்டு தொடர்ந்து வேலையை செய்தாள்.

ஆனால் மனமும் பழைய நாட்களில் டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.

    சிலருக்கு அப்படி இருப்பது எதுவும் அடையாளம் தெரியாது என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

     அப்போது நடந்த சம்பவத்தில் ஆக்சிடென்ட் மட்டுமே அனைவருக்கும் தெரியும், கரு கலைந்தது வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது.,

     ‘அந்த சமயமும் இது போல தான் ஊருக்கு கிளம்பும் போது இந்த அம்மா கேட்டார்கள்., ஆனால் தனக்குத்தான் தெரியவில்லை’ என்று நினைத்தவள்.,

        ‘இந்த முறை நிச்சயமாக டெஸ்ட் போட்டு பார்க்க வேண்டும்’ என்று நினைத்தாள்.

     ஆனால் சரணை டெஸ்ட் கிட் வாங்கிட்டு வரச் சொல்ல யோசனையாக இருந்தது.

     ‘அதிகமான எதிர்பார்ப்பு வந்துட்டா கஷ்டம், பேசாம நம்மளே போய் வாங்கிடலாமா’ என்று யோசித்தவள், ‘இல்ல அதுக்கும் ஏன் எதுக்குன்னு கேட்பாங்க, யோசிப்போம் மத்தியானம் லஞ்சுக்கு வரும் போது சொல்லிவிடலாம், இப்ப சொல்ல வேண்டாம்’ என்று நினைத்தவள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்பு காலை உணவை சரண் ற்கு கொடுத்து அனுப்பி விட்டு அவளும் சாப்பிட்டு விட்டு எப்போதும் போல தனது வேலைகளை மட்டும் பார்த்து விட்டு மற்ற வேலைகளுக்கு ஆள் வந்து செய்வார்கள், என்று ஒதுக்கி போட்டு இருந்தாள்.,

      மதியம் சரண் உணவு உண்டு விட்டு கோர்ட்டுக்கு கிளம்பும் போது சரணிடம் போய் நின்றவள்.

       “எனக்கு  மெடிக்கல் ஸ்டோர்ல ஒரு பொருள் வாங்கணும், வாங்கிட்டு வந்துடுவீங்களா”, என்று கேட்டாள்.

        அவனும் “மெடிக்கல் ஸ்டோர்லயா, என்ன வாங்கணும்”, என்று கேட்டான்.

    “எழுதிக் கொடு, நான் ரிட்டன் வரும் போது டிரைவரை விட்டு வாங்கிட்டு வர சொல்றேன்”, என்று சொன்னான்.

      இவளோ அவனைப் பார்த்து முறைத்தபடி, “இதெல்லாம் டிரைவர் வாங்க கூடாது, நீங்க தான் வாங்கணும்”, என்றாள்.

     “ஏய் இவ்வளவு நாள் நீ தான போய் வாங்கிட்டு இருந்த”, என்று அவள் அவனை மாதாந்திர தேவைக்காக வாங்க சொல்கிறாள் என்று நினைத்துக் கொண்டு கேட்டான்.

     இவளோ “நீங்க கிளம்புங்க, நான் உங்களுக்கு மெசேஜ் பண்றேன், அதுக்கு அப்புறமா அதை டிரைவர்ட்ட வாங்க கொடுக்கவா, வேண்டாமா ன்னு முடிவு பண்ணுங்க”, என்று சொன்னாள்.

       “நான் போய் வாங்கினா, பார்க்கிறவன் என்ன நினைப்பான்”, என்றான்.

      இவளோ “அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டான், இந்த கோர்ட்ரஸ் தாண்டி ரெண்டு தெரு தள்ளிப் போங்க, அல்லது மெயின் ரோடு தாண்டி அந்த பக்கமா இருக்கிற கடைக்கு போங்க, உங்க கார்ல இருக்குற  ஜட்ஜ் போர்ட்டை  தூர எடுங்க, அப்ப யாருக்கும் உங்களை யாருன்னு தெரியாது, போய் வாங்கிட்டு வாங்க”, என்று சொன்னாள்.

        “அடிப்பாவி” என்று சொன்னாள்.

     “பின்ன உங்களை என்ன ஊருக்கேவா தெரியும், யாருக்கும் தெரியாது, இந்த ஊர் கலெக்டரே போய் நின்னா கூட இவங்க தான் கலெக்டர் ன்னு யாருக்கும் தெரியாது, கலெக்டர் பெயர் தெரியுமான்னு கேளுங்க, அதுவே தெரியாது”, என்று சொன்னாள்.

      “ஓஹோ அப்ப என்னையும் தெரியாது”,என்றான்.

      “ஆமாமா யாருக்கும் தெரியாது, கோர்ட்டுக்கும், இந்த கோர்ட்ரஸ் க்கும், உங்க கோர்ட்டுக்கு வர கிரிமினல்ஸ் இவங்களுக்கு மட்டும் தான், உங்கள பத்தி தெரியும்”, என்று சொன்னாள்,

    “அடிப்பாவி” என்றவன் “மெசேஜ் பண்ணு”, என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே கிளம்பவும், இவளும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே நின்றாள்.

    வாசல் வரை சென்றவன், இவளிடம் திரும்பி வந்து, “என் இமேஜை டேமேஜ் பண்ண நீ ஒருத்தி போதும், என்னாம்மா காலை வாருற”, என்றான்.

     இவளோ “இமேஜ்னு ஒன்னு இருக்கா, என்ன”, என்று கேட்டாள்.

     அவளையே பார்த்த படி நின்றவன், “அடிப்பாவி” என்று சொல்லி விட்டு “மெசேஜ் அனுப்பு மறந்துறாத” என்று சொல்லி விட்டு போக திருப்பவும் ,

      இவளோ அவன் வாசலுக்கு போகும் முன் வேகமாக கையை பிடித்து நிறுத்தியவள், அறைக்குள் அழைத்து வந்தவள், அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அவனும் அவளை அணைத்தபடியே, “என் சட்ட கசங்கிரும்”, என்று சொன்னான்.

     “வேண்டாம், எரிச்சல் படுத்தாதீங்க, அப்புறம் வேணும்னே கசக்கி விட்டுருவேன்”, என்று சொல்லிவிட்டு,

      “நான் எதுக்கு சொன்னேன்னு, மெசேஜ் பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு புரியும், இப்போ ஒர்க் எவ்ளோ இருக்கு”, என்று கேட்டாள்.

       “நாலு மணி வரை கோர்ட்டில் ஒர்க் இருக்கு, அதுக்கு அப்புறம் ஆபீஸ் வொர்க் கொஞ்சம் இருக்கு, முடிச்சிட்டு தான் வருவேன்”, என்று சொன்னான்.

    “நீங்க ஆபீஸ் வொர்க் ஸ்டார்ட் பண்ணும் போது எனக்கு மெசேஜ் பண்ணுங்க, நான் என்ன வேணும்னு சொல்றேன்”, என்று சொன்னாள்.

     “ஏன் மேடம் இப்ப அனுப்ப மாட்டிங்களா”, என்று கேட்டான்.

     “கோர்ட்ல கேஸ் ஒழுங்கா முடிங்க போங்க”, என்று சொல்லி அனுப்பினாள்.

    அவனும் அவளை திரும்பி பார்த்து “நான் பேசாம கோர்ட்டுக்கு தான் போனேன், நீ தானே கைய புடிச்சி இங்க கூட்டிட்டு வந்த, நீ தான முதலில் ஹக் பண்ண”, என்றான் .

   இவளோ “நீங்க தானே என்ன கல்யாணம் பண்ணிங்க”, என்று அவனை பார்த்து கேட்டாள் .

அவனும் “ஆமாமா நான்  கல்யாணம் பண்ணேன் “, என்று சொன்னவனிடம்.,

     “நீங்க தானே லவ் பண்ணீங்க”, என்று கேட்டாள் .

     “ஆமா நான் தான் லவ் பண்ணேன்” என்று சொல்லவும்,

   “அப்ப அனுபவிங்க” என்று சொல்லி, அவனை “கிளம்புங்க கிளம்புங்க” என்று சொல்லி அனுப்பினாள்.

     “வரவர உனக்கு வாயும் கூடிருச்சு, கொழுப்பும் கூடிருச்சு, இரு வந்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

    பின்பு அவன் சொன்ன நேரத்தை கணக்கிட்டு, அவன் போன் செய்யும் முன்பே இவள் ‘பிரக்னன்சி கிட் வேண்டும்,  ஆனால் உண்மையில் இருக்குமா? என்று தெரியாது, அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம், திடீரென ஒரு சந்தேகம் அதனால் தான் கேட்கிறேன்’, என்று விரிவாக ஒரு மெசேஜை போட்டு விட்டாள்.