ஆனால் அவளுக்கு கால் பிசகி இருப்பதும் காலில் கட்டுப் போட்டு இருப்பதையும் அவள் மயக்கத்தில் இருப்பதையும் பார்த்தவர்கள் தான்.

     “ஏன் இப்படி இருக்கா”, என்று கேட்டனர்.

       “அது தான் தெரியல கிட்டத்தட்ட ரொம்ப நேரமா இதே நிலை தான், அதிர்ச்சி மயக்கம் ன்னு சொல்றாங்க, ஆனா ஏன் இவ்வளவு நேரம் மயக்கம் இருக்கு அப்படின்னு இப்ப வரைக்கும் புரியல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மருத்துவர்களும் அடுத்தடுத்த கட்ட மருந்துகளை அவளுக்கு ட்ரிப்ஸ் மூலம் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    வீட்டினர் அனைவரும் சென்று பார்த்துவிட்டு வந்த பிறகு அமைதியாக இருந்தவன், உள்ளே சென்று அவள் கையை பிடித்தபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.

   இடை இடையே முனங்கல் சத்தம் வந்ததாக நர்ஸ் சொன்னார். அதை யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளுடைய பயம் புரிந்திருந்தது.

   ஏனென்றால் அவள் தான் ‘முதலில் லாரி மோத வருவதை பார்த்திருந்தாள், அதன் விளைவாகவே இருந்த பயமும், இந்த அதிர்ச்சி மயக்கத்திற்கு காரணமாக கூட இருக்கலாம்’, என்று நினைத்திருந்தான்.

     நான்கு மணி நேரத்திற்கு பிறகு அனைவரையும் பயங்காட்டி விட்டு கண்விழித்தவள்,  எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாலே ஒழிய யாரிடமும் எதுவும் பேசவில்லை.

சில நிமிடங்கள் பார்த்தவள், பின்பு அமைதியாக கண்மூடி படுத்து விட்டாள்.

“என்ன இது, அவள் எதுவும் பேசலையே” என்று அனைவரும் நினைத்தாலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.

மருத்துவர் வரும்போது அவரிடம் சந்தேகத்தை கேட்டனர்.

   “விடுங்க அவங்களே தெளிந்து வரட்டும்”, என்று சொன்னார்கள். சரி என்று வீட்டினர் கேட்டுக் கொண்டனர்.

       மீண்டும் விழித்த பிறகு மருத்துவ பரிசோதனையில் அனைவரையும் வெளியே செல்ல சொல்லி விட்டு,

     அவளிடம் மருத்துவர் மெதுவாக பேச்சுக் கொடுத்தார்.

    “ஏன் யார்கிட்டயும் எதுவுமே பேசல, எல்லாரையும் பார்த்துட்டு அப்படியே இருந்துகிட்டீங்க, யார்கிட்டயும் எதுவும் சொல்ல தோணலையா”, என்று கேட்டார்.

     “டாக்டர் எனக்கு கண்ண மூடினாலே, அந்த லாரி வந்ததும், அவங்க  பதட்டமாகி காரைத் திருப்ப ட்ரை பண்ணதும் தான் ஞாபகம் வருது, எனக்கு அந்த இன்சிடென்ட் தவிர வேறு எதுவுமே நினைக்க தோண மாட்டேங்குது,  கண்ணுக்கு  அப்படித்தான் பிம்பமா தோணுது, சோ எனக்கு கண்ணு மூடுன உடனே தூங்குற மாதிரி ஏதாவது டேப்லெட் அல்லது இன்ஜெக்ஷன் கொடுக்குறீங்களா”, என்று டாக்டரிடம் கேட்டாள்.

            டாக்டரோ “மருந்து, இன்ஜெக்ஷன் ஓகே தான், சரி இப்ப நான் கொடுக்கிறேன் நீங்க தூங்கிடுவீங்க, கண்ணை மூடினால் தூக்கம் வரும் சரி, ஆனா இதுக்கு அப்புறம் இந்த நினைப்பு வராதுன்னு என்ன நிச்சயம்., பயத்தை விட்டு நீங்க வெளியே வர ட்ரை பண்ணனும் புரியுதா”, என்று சொன்னார்.

        “சரி” என்று தலையாட்டியவள்.

     “ஆனால் எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கே”, என்று சொன்னாள்.

    “யார்கிட்டயாவது பேசுங்க, சொல்லுங்க, அப்படின்னா உங்களுக்கு சரியாயிடும்”, என்று சொன்னார்.

     “பேசத் தோணலையே”, என்று சொன்னாள்.

“ஒரு டாக்டர் ரெடி பண்ணட்டுமா, அவங்க கிட்ட சின்னதா ஒரு கவுன்சிலிங் ரெடி பண்ணித் தரட்டுமா, அவங்க  கிட்ட பேசிட்டிங்கனா,  மனசு விட்டு ஃபுல்லா பேசி முடிச்சிட்டீங்கன்னா,  கொஞ்சம் ஃப்ரீ ஆயிடுவீங்க, என்ன சொல்றீங்க”, என்று கேட்டார்.

      “இல்ல இப்ப வேண்டாம்”, என்று சொன்னாள்.

        “இல்ல நீங்க பேசணும், பேசினா தான் மைன்ட் ப்ரீயா  ஆகும், நீங்களும் ரிலாக்ஸ் ஆவீங்க, இல்லாட்டி அதே நினைவு தான் வரும்”, என்று சொன்னார்.

      “இப்ப வேண்டாம், நானே சொல்றேன்”, என்று சொன்னாள்.

     “நீங்க பேசி தான் ஆகணும், வீட்ல நீங்க நார்மலுக்கு வந்து தான் ஆகணும், எப்பவும் எதையாவது நீங்களே திங்க் பண்ண கூடாது, முதல்ல அதிலிருந்து வெளியே வாங்க, எல்லாருக்கும் அது ஷாக்கா தான் இருக்கும், ஏன் கொஞ்சம் இப்படி யோசிச்சு பாருங்களேன், அந்த இடத்துல நீங்க இருக்குறீங்க, உங்க ஹஸ்பன்ட் காரை திருப்புறாரு, ஆனாலும் அடிபட்டுருச்சு, இப்ப இரண்டு பேருக்கும்  அடிபட்டுருச்சு, அவர் தான் உங்களை ஆஸ்பிட்டல்ல கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணாரு, நீங்க பதட்டத்துல மயங்கிட்டீங்க, ஆனா இப்படி யோசிச்சு பாத்தீங்கன்னா, உங்களுக்கும் இது புரியும்,  ஆனா அவர் தான் ட்ரைவ் பண்ணி இருக்காரு. மோத போகுதுன்னு தெரியுது,  தெரிஞ்சும் தப்ப தான் முயற்சி எடுத்திருக்காங்க, எல்லாம் பார்த்தும் தைரியமா இருந்து தான் உங்களை கூட்டிட்டு வந்து இருக்காரு,  அதே மாதிரி தான் இப்போ உங்களையும் பார்த்துக்கிறார்,  வீட்டில் உள்ளவர்களையும் பேசி சமாளிக்கிறார்,  நீங்க ஓகே வா ஆனா தான், அவரு ரெண்டு நாள்ல அவரோட ஒர்க்க பாக்க முடியும், நீங்க இப்படி யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா, அவர் உங்களை பற்றி யோசிப்பாரா, இல்ல அவரு வொர்க் பார்க்க போவாரா, யோசிங்க”, என்று கேட்டார்.

    சற்று நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு “மாத்திக்க முயற்சி பண்றேன் டாக்டர், ஆனா கவுன்சிலிங் அந்த மாதிரி எதுவும் வேண்டாம்”, என்று சொன்னவள்.

    “எனக்கு இந்த ஹாஸ்பிடல்ல அட்மாஸ்பியரே கூட கொஞ்சம் என்னவோ மாதிரி இருக்கு”,என்றாள்.

      அவரும் “கண்டிப்பா நாளைக்கு மார்னிங் அனுப்பிறேன், சரியா”, என்று சொன்னார்.

       “ப்ளீஸ் வேண்டாமே, நான் இன்னைக்கே வீட்டிற்கு போறேன்”, என்றாள்.

     “இப்பவே நைட் ஆயிருச்சு, இன்னைக்கு நைட் மட்டும் இருந்துட்டு, காலையில போங்க”, என்று சொல்லும் போதும்,

     “இல்ல டாக்டர், வீட்டிற்கு ” என்றாள்.

     அவர்களோ “இல்ல இல்ல, உங்களுக்கு டிரிப்ஸ்ல மருந்து போய்கிட்டு இருக்கு,  தூங்குவதற்கு இன்ஜெக்ஷன் தர சொல்றேன், கொஞ்சம் தூங்குங்க, நாளைக்கு காலைல நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்த்துட்டு நான் உங்களை அனுப்புகிறேன்”, என்று சொன்னார்.

     “சரி” என்று மனமே இல்லாமல் தலையாட்டிக் கொண்டவள், பின்பு அமைதியாக சாய்ந்து அமர்ந்தாள்.

     அறையில் இருந்து வெளிவந்த மருத்துவர்,  சரணை பார்த்து, “அவங்க மைண்ட் ரொம்ப டிஸ்டர்பா இருக்காங்க, வேற ஒன்னும் இல்ல பிரியா விடுங்க, ரிலாக்ஸ் ஆயிடுவாங்க, அவங்க கிட்ட சொல்லி இருக்கேன், கவுன்சிலிங் பார்க்கலாமா ன்னு கேட்டதற்கு வேண்டாம் ன்னு சொல்லிட்டாங்க, ஜஸ்ட் அவங்களோட மைண்ட் செட் பதட்டம் பயம் இதைத் தவிர இப்ப ஒன்னும் இல்ல, நீங்க பயப்படற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல, நார்மலுக்கு வந்துருவாங்க, இப்ப தூங்குறதுக்கு மட்டும் லைட்டா ஒரு இன்ஜெக்ஷன் கொடுக்கலாம், அவங்க தூங்கட்டும்,  அவங்க  சொல்றது என்னன்னா,   கண்ண மூடினாலே அந்த ஆக்சிடென்ட்  அந்த லாஸ்ட் 10 மினிட்ஸ் மட்டும் தான் மைண்ட்ல சுத்துது, கண்ணுல  தெரியுது அப்படின்னு சொல்றாங்க, சோ அவங்க நல்ல தூங்கட்டும், நாளைக்கு காலைல நான் சொல்றேன்,  வீட்டுக்கு போகணும்னு கேட்டாங்க,  காலைல அனுப்புறேன்னு சொல்லி இருக்கேன்,  காலைல அவங்களோட கண்டிஷன் பாத்துட்டு அனுப்புறேன், உங்களுக்கு ஒர்க் இருந்தா நீங்க போய் பாருங்க”, என்று அவனிடம் மரியாதையாகவே சொன்னார்.

     அவனும் “இல்ல டாக்டர் நாளைக்கு லீவு தான்”, என்று சொன்னவன், “ஓகே நான் இப்ப பாக்கலாமா, பேசலாமா”, என்று கேட்டான்.

       “ஆக்சிடென்ட் பத்தி மட்டும் பேசாதீங்க, மத்த எதை பத்தினாலும் பேசுங்க, ஏன்னா அவங்களுக்கு ஆக்சிடென்ட் பத்தி பேசினா திரும்பத் திரும்ப அது மட்டும் தான் ஞாபகம் வரும், கொஞ்சம் மறக்கட்டும்”, என்று சொன்னார்.

  “சரி” என்று சொன்னபடி அவன் மட்டும் உள்ளே செல்ல போனவன் திரும்பி வீட்டினரை பார்த்து,  “ஒரு பத்து நிமிஷம் நான் மட்டும் கொஞ்சம் பேசிட்டு வரேன், அதுக்கப்புறம் நீங்க போய் பாருங்க”, என்று சொல்லி விட்டு சென்றான்.

      உள்ளே அவன் வரவும் சாய்ந்து அமர்ந்திருந்தவள், அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்,

அவளுக்கு டாக்டர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது,  “அவர்  ஸ்டெடியா இல்லன்னா, உங்களை மாதிரி பயந்திருந்தா, இப்போ உங்களை யாரு பார்த்துப்பா, அவரை யார் பார்த்துப்பா, யோசிச்சு பாருங்க”, என்று சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்தவள், சற்று அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உண்மை தானே” என்று நினைத்துக் கொண்டவள், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

   அருகில் வந்தவன் அவள் அருகே அமர்ந்து, அவளை தன்னோடு சேர்த்து பிடித்த படி, “என்ன ஆச்சுடா மது” என்று கேட்டான்.

     “ஒன்றும் இல்லை” என்று லேசாக அவனை திரும்பிப் பார்த்து சொன்னவள்.

அவனை மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கவும்,  மறுபடியும் அவளிடம் “என்ன ஆச்சு மது,  ஏன் இப்படி பாக்குற”, என்று கேட்டான்.

      தலையை மட்டும் ஆட்டியவள் அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

அவனும் கையைப் பிடித்து இருக்க, சற்று நேரத்தில் அவன்  கையில் இருந்து கையெடுத்தவள், அவன் கைக்குள் கையை கொடுத்து அவன் தோளில் சாய்ந்து மீண்டும் அவன் கையை சுற்றி பிடித்தாள்.