Advertisement


        “என்னைய  அடிக்கிறதவ  விட ., அவ ஓடிப்போயிடலாம் பரவால்ல., ன்னு சொல்லுவா.,இல்ல தனியா ன்னா., என்ன பண்ணுவா ன்னு எனக்குத்தான் தெரியும்.,  உடனே ஊரை விட்டு ஓடி வாறீயா., இல்ல நான் ஊரை விட்டு போறேன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் வா., ன்னு  சொல்லுவா“., என்றான்.

           “அதெல்லாம் எங்க கிட்டயும் அப்படி தான் சொன்னா., நான் எங்கேயாவது போய் இருக்கேன் இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கல அப்படின்னா“., என்று  சொன்னார்
என்று சொல்லவும்.,

          “யோசிப்போம் “.,  என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவனோநம்ம செய்தது சரியா தவறா., வீட்டினரின் எதிர்பார்ப்பிற்காக  அவளது நினைவுகளை கொன்று புதைத்துமோ என்று நினைத்தவனுக்கு எல்லாம் சரியாகிவிடும்என்ற நம்பிக்கை இருந்தாலும்.,  அவனுக்கு மது முக்கியமாக தெரிந்தாள்.

            ஆனால்இப்போது அவள் வீட்டில் எதுவும் பேச முடியாதுஅவன் வீட்டிலோ பேசினால் பூகம்பமே வெடிக்கும் என்ன செய்வதுஎன்று குழம்பிப் போயிருந்தான்.

                   மது சிவா இரண்டும் பேரும்  ஒன்றுக்கொன்று சளைக்காமல் உயிரையே கொடுப்பவர்கள் என்ற அளவில் பழகியவர்கள்., எல்கேஜி கொண்டுபோய் சேர்க்கும் போது இருவர் வீட்டிலும் ஒன்றாக கொண்டு போய் பள்ளியில் விட.,  அப்போது இருந்து இருவருமே நண்பர்கள்.,

                நண்பர்கள் என்று சொல்வதை விட., அதை விட ஒரு படி மேல் தான் சிறு வயதில் வீட்டிலிருந்து ஸ்கூல்  பஸ்ஸில் ஏற்றி விட.,  இரண்டும் கையை கோர்த்துக் கொண்டு ஏறி சென்றவர்கள் தான்., இதோ இன்றுவரை பிடித்த கையை விடவில்லை.,

           அடுத்தடுத்த வீடு தான் குடுமிப்பிடி சண்டை என்பது அவர்களுக்குள் இல்லாத நாளே இல்லை.,  ஆனால் சண்டை என்பது அதிகபட்சமாக போனால் அரை மணி நேரம் நீடிக்கும்.,  அவர்கள் சண்டையை நினைத்து இரண்டு வீட்டிலும் எப்போதாவது யாருக்காவது சப்போர்ட் செய்து பேசினால் அவ்வளவு தான்., தொலைந்தார்கள்., கோபம் போன பிறகு இரண்டும் சேர்ந்து கொண்டு அவர்களை கலாய்த்து கொன்று விடும்.,

         அந்த அளவிற்கு கலகல பேர்வழி இருவரும்.,  இருவரின் நட்பும் இருவர் வீட்டிலும் அறிந்ததே.,  பள்ளிப்படிப்பை முடித்த பின்பு கல்லூரிக்கு செல்லும் போது தான் இருவரையும் வலுக்கட்டாயமாகப் பிரித்து எடுத்துக் கொண்டு போய் வேறு வேறு கல்லூரியில் சேர்த்ததுஅவனை இன்ஜினியரிங்லும் இவளை பட்டப்படிப்பிலும் என.,

           இன்ஜினியரிங் போக வேண்டும் என்று ஆசைப்பட்டவளைஒரே பொம்பள புள்ள இன்ஜினியரிங் படித்து என்ன செய்யப் போற.,  அப்புறம் வேலைக்கு போவேன்னு சொல்லுவ., போதும் போதும் நீ டிகிரி படிச்சா போதும்“., என்று சொல்லி கட்டாயப்படுத்தி கொண்டு போய் அருகில் இருந்த கல்லூரியில் சேர்த்து விட்டனர்.

              ஆனாலும் அவனுக்கு கல்லூரி இல்லாத நாட்களில் இவளும் கல்லூரி மட்டம் போட்டுவிட்டு இரண்டும் சேர்ந்து ஊர் சுற்றுகிறோம்., என்று ஊரையே கலக்கிவிட்டு தான் வருவார்கள்.,

            வீட்டிற்கு தெரியாமல் சென்றாலும் யாராவது பார்த்து சொல்லி கொடுத்து திட்டு வாங்குவது இருவருக்கும் வழக்கமான ஒன்றாகி போனது..

          அடுத்த அடுத்த வீட்டில் இருவரின் குடித்தனமும் அமைய.,  சிறுவயதிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர், ‘இவள் வீட்டில் இல்லை என்றால் நிச்சயமாக சிவாவோடு எங்கேயாவது மரத்தில் தொங்கிக்கொண்டு கூட இருக்க வாய்ப்புண்டு‘., என்பது வீட்டிலுள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும்.,

         அவன் வீட்டில் இல்லை என்றால் நிச்சயமாக இவள் கூட தான் எங்கேயாவது சுற்றிக் கொண்டிருப்பான் என்பதும் தெரியும்., ஊரில் இருவரும் சேர்ந்து சுற்றாத இடங்கள் என்பதே கிடையாது என்னும் அளவிற்கு இரண்டும் கையை கோர்த்துக்கொண்டு சுற்றினார்கள் தான்.,

                அவள் பெரியவள்  ஆன பிறகு வீட்டில் கட்டாயப்படுத்தி இருவரையும் பிரித்து வைக்க முயற்சி செய்தாலும்.,  இரண்டும் சண்டை போட்டு மீண்டும் சேர்ந்து கொண்டு சுற்றியது., மற்றவர்கள் என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு சென்றார்கள்.,  வீட்டில் உள்ளவர்களோ தலையில் கைவைத்தபடி இருந்தார்கள்.

         இருவர் வீட்டிற்கும் உறவினர் வந்தால்முதலில் இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விடுங்க., இது எப்பவும் ஒன்று போல இருக்காது., இன்னைக்கு பிரண்டா இருக்கிறவங்க நாளைக்கு எப்படினாலும் மாறலாம் ., அதனால பார்த்து பழக விடுங்க.,  பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் வைத்து விட கூடாது“., என்று சொன்னார்கள்.

            “பத்திக்கிட்டா வந்து  அணைத்து  விடுங்கஎன்று சொல்லி அவர்களை கிண்டல் செய்து வழியனுப்பவாள்,

      “அவங்க சொல்றதுல என்ன தப்பு இருக்கு., பையனும் பொண்ணும் எந்த காலத்துல., எங்க ஒழுங்கா பழகுறாங்க“., என்று சொன்னார்.

               அதனை தட்டி விட்டவள்., “ஒழுங்காக தான் இருக்கோம்என்று சொல்லி விடுவாள்., இதுபோல வேறு யாராவது வெளியில் பத்திகிடும் என்று சொன்னால்.,

        ” இருக்கவே இருக்கு பக்கத்திலேயே ஆறு.,  போய் உழுந்து அணைச்சிருவோம் போங்க“. என்று சொல்லி விட்டு செல்வாள்.

ஆனால் இருவரின் வால்தனம் மட்டும் ஊரே அறிந்தது..

        ‘தன்னை நன்கு புரிந்தவன்.,  ஆனால் தன் மனம் அறிந்தும் ஏன் இப்படி செய்தான்என்ற எண்ணம் மட்டும் அவள் மனதை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது.

         அங்கு சிவாவின் மனமும் அப்படித்தான் இருந்தது., ‘ஒருவேளை இது சரி வராமல் போனால் என்ன ஆகும்.,  அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் தன்னால் அவள் வாழ்க்கை கெட்டதாக ஆகி விடுமாஎன்ற எண்ணமும் அவன் மனதில் கிடந்து அரித்துக்கொண்டே இருந்தது.

                       ‘ஏன் தான் அப்படி ஒரு முடிவுக்கு வந்தோம் தன்னுடைய சுயநலம் தான் காரணம் எப்பேர்பட்ட சுயநலவாதியாக இருந்துவிட்டேன்., அவளைப் பற்றி யோசிக்காமல்.,  என்னையும் என் குடும்பத்தையும் பற்றி மட்டும் யோசித்தேன்.

              அவர்கள் வீட்டிற்கும் அதுதான் விருப்பம் என்று தெரிந்ததால் தானே., நானும் அப்படி சொன்னேன்.,  ஏன் இவள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள்.

                எனக்கு தெரிந்து  மற்றவர்கள்  எடுத்த இந்த முடிவு அவளுக்கு நல்லதாகவே அமையும் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாள்‘., என்று அவனும் அங்கு குழம்பிக் கொண்டு தான் இருந்தான்.

          மது எதை ஆசைப்பட்டாலும் அதை நிறைவேற்றும் அளவிற்கு சிவாவின் அன்பு இருந்தது.,  அது போல தான் மதுவும் அவனுக்கு பிடிக்கும் என்றால் அதை எப்படியாவது செய்து விடுவாள்.

                ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவனுடைய முடிவை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை., அவனும் அவளுக்காக எவ்வளவோ செய்திருக்கிறான்.,  ஆனால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது.,  ஏன் அவன் இப்படி ஒரு முடிவு எடுத்தான் என்ற எண்ணம் மட்டும் அவளை குழப்பிக் கொண்டே இருந்தது.,

              ‘நிம்மதியாக இருக்க விடமா பண்ணிட்டான் லூசு பயலே., இதுக்கு அவன் ஒரேடியா என்ட்ட., உன் கூட பேச பிடிக்கல ன்னு., என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் இல்ல னா  உன் கூட சும்மா தான் பழகினேன்.,  உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை ன்னு கூட சொல்லி இருக்கலாம்., ஆனால் ஏன் இப்படி செய்தான்என்று குழம்பித் தவித்து போனாள்.

                அவன் மனதிற்குள்ளும்நாம் தான் அவளுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றி விட்டோமோ என்று தோன்றியது.,  அவள் கண் முன் சென்றால் நிச்சயமாக தன்னை பிடித்து வைத்து சண்டை போடுவாள்., அவள் லேசாக கண் கலங்கினாளோ.,  வேறு ஏதேனும் முடிவெடுக்க துணிந்தாலோ அவளை மீறும் துணிச்சல் நிச்சயமாக சிவாவுக்கு கிடையாது., எனவே தான் அவள் கண்முன் செல்லாமல் மறைந்து மறைந்து நிற்கிறான்.

                இன்னும் இரண்டு வாரம் மட்டுமே அதுவரை இப்படியே ஒட்டி விட்டால் அதன் பின்பு அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம்.,  எப்படியும் மன்னித்து விடுவாள்.

                   முதல் தோழி அல்லவா.,  அவளை பொறுத்த வரை நானும் அப்படி தானே.,  அப்படி இருக்க என் தரப்பு நியாயத்தை அவள் புரிந்து கொள்வாள் என்று நினைத்தாலும்., தோழன் தான் என்றாலும்.,  அதைவிட குடும்ப உறவு என்பது பெரிதல்லவா என்றும் தோன்றியது.,

            எதுவாக இருந்தாலும் நிதானமாக முடிவு எடுப்போம் அவசரப்படக் கூடாது என்று நினைத்துக்கொண்டான்.

            அங்கு மதுவின் தோழியும்இந்த லூசு ஏதும் ஏடாகூடமா முடிவெடுக்ககூடாதுஎன்று நினைத்தவள்.,  ‘நாளைக்கு காலேஜுக்கு வரட்டும்.,  வரும் போது பேசிப் பார்ப்போம்என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

              இங்கு சம்பந்தப்பட்டவளோ புத்தகம் கையில் இருந்தாலும் படிக்கும் எண்ணமே இல்லை.,  எப்படி படிச்சாலும் எங்கேயும் வேலைக்கு அனுப்ப போறதில்ல.,  எதுவும் பண்ணப் போறதில்ல., வர்ற மார்க் வரட்டும்.,  இந்த எக்ஸாம் எல்லாம் முடிஞ்ச மறு வாரம் கல்யாணம் ன்னு சொல்லி இருக்காங்க.,  அப்புறம் நான் படிச்சா என்ன..,  படிக்காம போனா என்ன..,  என்ற எண்ணத்தோடு புத்தகத்தை மூடி ஒரு ஓரமாக வைத்தவள்., தலையணையில் முகம் புதைத்து சுருண்டு கொண்டாள்.

             அவள் எண்ணங்களெல்லாம் சிவாவை சுற்றியே அலைந்து கொண்டிருந்தது., ஏன்? எதற்கு ? எதனால்? என்ற கேள்விகளோடு கண்மூடியவளுக்கு பழைய காலங்கள் அவன்  உண்மையான நட்பின் அன்போடு இருந்த போது உள்ள நினைவுகள் இப்போது கண் முன் நிழலாடியது..,

      பொய்யாக இருந்தாலும் சிலவற்றை நம்பித்தான் ஆக வேண்டும்.. உண்மையாக இருந்தாலும்  ஒரு சிலதை நீ உதாசீனம் செய்து தான் வாழ வேண்டும்..!”.

Advertisement