Advertisement

                   மாலை நேரத்து மயக்கம்

1

நாம் விரும்பியது
எல்லாம் கிடைப்பதும் இல்லை.,
கிடைப்பது எல்லாம்
விரும்பப் படுவதுமில்லை.,
நினைவுகளில் மாற்றம் வந்தால்.,
நெஞ்சம் சற்றே இளைப்பாறும்.,

             அழகான மலையடிவார ஊர் சிலுசிலுவென காற்று மலையிலிருந்து உருவாகும் அருவி.,  ஊரை ஒட்டி ஓடும் ஆற்று நீர்.,  அனைத்தும் ரசிக்க தக்கவையாக இருந்தாலும்.,

      ஏனோ இன்று அவளுக்கு மனம் அது எதையும் ரசிக்கும் எண்ணத்தில் இல்லை.

       நினைவுகள் ஒவ்வொன்றாய் குளறுபடி செய்ய., இதோ கடைசி வருட படிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிய போகிறது.,  படிப்பு முடிந்தவுடன் திருமணம் என்னும் சூழ்நிலையில் தான் மனதைக் குழப்பிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள் மதுமிதா.,

        எப்போதும் மொட்டை மாடி தான் அவள் வாசம் செய்யும் இடம்.,  அங்கிருந்து பார்த்தாலே தூரத்தில் தெரியும் மலைகள் அவள் மனதை குளிர்விக்கும்., சிலுசிலுவென எப்போதும் அடிக்கும் காற்று அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.,

         வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எப்போதும் கேலி செய்யும் அளவிற்கு மொட்டை மாடியிலேயே தவம் இருப்பாள்., அவள் வீட்டில் மட்டும் இல்லாமல்.,  அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூட அவளை.,

      “எம்மா மொட்டை மாடியில வந்து இருந்தா ஏதாவது சாமி வரம் கொடுக்கிறேன் சொல்லுச்சா., மொட்டை மாடியே கதின்னு தவமிருக்க“.,  என்று சொல்லி கிண்டல் செய்பவர்களும் உண்டு.,

            அவளோஎங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்து பாருங்க.,  அந்த மலை அவ்வளவு அழகாக தெரியும்., இந்த ஊரை ஒட்டி ஓடுற ஆறு அவ்வளவு தெளிவா தெரியும்.,  இதைவிட என்ன சந்தோஷம் வேண்டும்., எனக்கு இதை பார்த்துட்டு இருக்கிறதே ரொம்ப பிடிக்கும்“.,  என்று சொல்வாள்.

       அவள் அம்மாவும்ஆமா சோறு தண்ணி இல்லாம., அதையே பாத்துகிட்டு இருந்தேனா.,  ரொம்ப விளங்கிடும்.,  நீ எப்ப படிச்சி முடிப்ப“., என்று சத்தம் போடுவார்கள்.

          அதுமட்டுமல்லாமல் மனதிலே குழப்பமோ., கவலையோ., சந்தோஷமோ எது என்றாலும் அங்கு தான் சென்று அமர்வாள்.,

       ஆனால் இன்று இவ்வளவு குழப்பம் இருந்தும் அவளுக்கு மொட்டை மாடிக்கு செல்லும் எண்ணம்  மட்டும் வரவே இல்லை காரணம் அனைத்தும் அந்த சிவா தான்.

    அதே நேரம் அவள் யோசனையோடு அமர்ந்திருப்பதை பார்த்த அவளின் அம்மா., “மது இங்கே என்ன செய்ற.,  இப்படியே  உட்கார்ந்து இருக்க போறியா.,  மணி என்ன பாரு இருட்டி போன பிறகு  இருட்டுக்குள்ள என்னத்த தேடுவ.,  ஒன்னும் கிடைக்காது வா., வந்து சாப்பிட்டு.,  எக்ஸாம்க்கு படிச்சியா இல்லையா“.,  என்று கேட்டார்.

     அவள் அம்மாவை பார்த்து முறைப்போடுஅதெல்லாம் படிச்சாச்சி., படிச்சாச்சி“., என்று எழுந்து போனாள்.

        “மூஞ்சி தூக்குற வேலை எல்லாம் வச்சுக்காத., உன் நல்லதுக்கு தானே செய்யுறோம்., எதுக்கெடுத்தாலும் மூஞ்சி தூக்குற., ஒரே பிள்ளை ன்னு செல்லம் கொடுத்து உங்க அப்பாக்கு கெடுத்து வச்சிருக்காரு பாரு., அவரை சொல்லனும்“., என்று சொன்னார்.

          “உங்களை யாரு செல்லம் கொடுக்க சொன்னா“., என்று கேட்டாள்.

       “அது தான் தப்பு பண்ணிட்டோம்“., என்றார்.

          “ஒரே பிள்ளை., ஒரே பிள்ளை ன்னு சொல்லாதீங்க., இன்னொரு பிள்ளை வேண்டாம்னு  நானா சொன்னேன்“.,  என்று சொல்லி விட்டு கோபமாக தன் அறைக்குள் நுழையும்போது.,

          அவளை வெளியே அழைத்து வந்து கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்தார்.,


            “இப்ப போய் படிஎன்று சொன்னார்.

           புத்தகத்தோடு அமர்ந்த பிறகு புத்தகத்தின் மீது கவனம் செல்லாமல் பழைய நினைவுகளை அசை போட தொடங்கினாள்.

      ‘எல்லாம் இந்த சிவா வால வந்தது., அவன் மட்டும் எல்லாரும் கேட்கும் போது ஒழுங்கான பதில் சொல்லி இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது., என்கிட்ட சரி சரின்னு சொல்லிட்டு அப்புறம் வந்து அப்படியே மாத்தி சொல்லுறான்.,  கையில கிடைக்கட்டும் லூசு பையன்., எங்க போனானோ தெரியலையே..,

      எனக்கு அகைன்ஸ்ட் பதில் சொன்ன நாளில் இருந்து இப்ப வரைக்கும் என் கண்ல மாட்டாம ஏமாத்திட்டு சுத்துறான்.,  அதுக்கு முன்னாடி மது மது., சொல்லிட்டு தேடி ஓடி ஓடி வர வேண்டியது.,  பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் ஒரு தடவை போன் பண்ணுறது.,

       இப்ப தப்பிச்சி போயிட்டே இருக்கான்., கைல கிடைக்கட்டும்., கைமா பண்ணிடுறேன்‘., என்று சொல்லி மனதிற்குள் பொரிந்து கொண்டிருந்தாள்.

         அதே நேரம் அவள் போன் அடிக்க, ‘ஒழுங்கா முழுசா கூட நினைக்க விட மாட்டாங்க‘., என்று போனை எடுத்தாள்.,

    அவள் தோழி தான் நாளை மறுநாள் நடக்க இருக்கும் எக்ஸாம் பற்றி பேசினாள்.

       இவ்வளோ பேசாமல் அமைதியாக இருந்தவள்., “ஒன்னுமே ஓடலை.,  என் நிலைமையை பாரு., எல்லாம் இந்த சிவா நாயால வந்தது., என் ட்ட எவ்வளவு நம்பிக்கையா  பேசினான் தெரியுமா.,

        பிரச்சனை வந்த உடனே நான் பார்த்துக்கிறேன் ன்னு பைக்ல வெளியே கூட்டிட்டு போனான்.,  கூட்டிட்டு போய் கவலையே படாத மது., என்னைய  நம்பு நான் முழுசா உனக்காக மட்டுமே பேசுவேன் என்னைய  நம்பு ன்னு திரும்ப திரும்ப சொன்னான்.,

         அதுவும் நம்புற மாதிரி சொல்லியே பேசி கழுத்தை அறுத்துட்டான் டி“., என்று சொன்னாள்.

     அவளோலூசு மாதிரி பேசாத.,  உனக்கு உங்க வீட்ல எந்த விதத்திலும் குறைவா  பண்ணலை.,  எல்லாமே நல்லபடியா தான் பண்ணி இருக்காங்க.,  அவன  பத்தி எதுக்கு யோசிக்கிற.,  அவன பத்தி தெரிஞ்சது தானே“.,  என்று சொன்னாள்.

       “அப்புறம் எதுக்கு அவ்வளவு க்ளோசா பழகினான் லூசு.,  என்ன விட அவனுக்காக மட்டும் யோசித்து சுயநலமான முடிவெடுக்கிறான் அப்படித்தானே., அப்புறம் எதுக்கு அவ்ளோ க்ளோசா பழகினா., அப்படி எனக்கு நம்பிக்கையை கொடுக்கணும்.,  இப்போ சுயநலமா இப்படி ஒரு முடிவு எடுக்கனும்., என்னால தாங்கவே முடியல என்னை ஏமாத்திட்டான்“., என்று புலம்பினான்.

      “அறிவு கெட்டு உலறிட்டே இருக்காத., ஏமாத்திட்டான்.,  ஏமாத்திட்டான்., ன்னு.,  அவங்க என்ன நினைப்பாங்கஎன்று சொன்னவள். கேட்கிறவங்க என்ன நினைப்பாங்க“., என்றாள்.

     “நினைக்கட்டுமே., ஆமா அவன் ஒரு வகையில என்னை ஏமாத்திட்டான் தான்., நம்பிக்கை கொடுத்து சொன்ன சொல் மாறினா அதெல்லாம் ஏமாத்துற லிஸ்டில் தான் வரும்“., என்று சொன்னவளை.,

                 “பரீட்சை க்கு  படிக்கிறதா இல்லையான்னு மட்டும் பாரு“., என்று சொன்னவள் நீ ஏன் டி சிவா சிவா ன்னு பொலம்பிட்டு இருக்கிற..,  கொஞ்சம் யோசிச்சிப் பாரேன் உனக்கு லைஃப் நல்லா இருக்கும்னு உங்க வீட்ல உள்ளவங்க முடிவு பண்ணி இருக்காங்க“., என்றாள்.

           ” எங்க வீட்டுல உள்ளவங்க முடிவு பண்ணட்டும்., இவன் எதுக்கு அவங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசணும்., அப்ப இத்தனை நாளா என்கிட்ட வந்து மது மது நீ  தான் முக்கியம் ன்னு சொன்னதெல்லாம் பொய் தானே.,  இப்போ அவங்க வீட்டிலயும்  ஒரு வார்த்தை சொன்னா உடனே  கேட்டு அப்படியே மாறிட்டான் இல்ல“., என்று சொன்னாள்.

                 “அடியே அவங்க பேச்சு கேட்டாங்க ன்னு  உனக்கு தெரியுமா., என்னமோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்றே., மனசுல யோசிக்கிற மாதிரி உளராத எல்லாம் சரியாயிடும் ஒக்காந்து படி., சாப்டியா இல்லையா“., என்று கேட்டு அவள் நலத்தை அறிந்த பின்பே தோழி வைத்தாள்.

  .       இவளோ மீண்டும் அவளையும் சிவாவை பற்றி யோசிக்கத் தொடங்கிய அதே நேரத்தில்.,

 

தோழி சிவாவிற்கு போன் செய்தாள். சாப்பிட்டு தான் உட்கார்ந்து இருக்கா., நீ கையில் கிடைக்கும்போது தொலைந்த., அது மட்டும் ஞாபகம் வச்சுக்கோ., அவ உன்ன நெனச்சு தான் புலம்பிக்கிட்டே உட்கார்ந்து இருக்கா“., என்று சொன்ன உடனே

            “ஐயோ புரிஞ்சுக்க மாட்டேங்கிறளா., நான் என்ன பண்ணுவேன்“., என்று சொன்னவன்., சரி நான் முடிந்த அளவுக்கு ரெண்டு நாள் கழிச்சு பார்க்க முயற்சி பண்ணுறேன்“.,  என்று சொன்னான்.

              “முதல்ல எக்ஸாம் முடியட்டும் அதுக்கப்புறம்  அவளை பார்த்து பேசிருடாஇல்லாடி அவ உன்ன தான் யோசிச்சிட்டே இருப்பா., அடிவாங்குற தான் இருந்தாலும் அதுக்கு முன்னாடி அடி வாங்கிக்கோ“., என்று சொன்னாள்.

         

Advertisement