பார்த்திபனின் வார்த்தைகள் யாருக்கும் பிடித்தமில்லை எனதான் தோன்றியது.. ஆனால், புவனாம்மாவை தாக்கியது, பார்த்திபனின் கேள்வி.. ‘ஆம்.. நான் கேட்கலை.. ஏன் அப்படி பெண் விரும்புவாள்.. என சந்தேகம் கூட கொள்ளவில்லை.. ஐயோ! என்ன நடக்கிறது’ என அதிர்ந்து போனார், புவனம்.
பத்மாவும், நிர்மலாவும்.. பார்த்திபனை ‘நீ சின்ன பையன்.. உனக்கு யார் சொன்னது.. ஈசன் சொன்னாரா.. பவி சொன்னாளா.. நீ எப்படி சொல்கிறாய்.. பவி, அதெல்லாம் அப்படி இல்லை’ என பலவாறாக அவனை நெருக்கினர். பாவம் பார்த்தி தனக்கு தெரிந்த அளவில் சொன்னான். ‘பவிக்கும், ஈசன் சர்ர பிடிக்கும்.. உங்களுக்காகதான் அமைதியாக இருக்கா..’ என சொன்னவன் அமைதியாக திண்ணையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
சங்கருக்கு, தர்மசங்கடம்.. யாருக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.. சங்கரின் மனைவி அமைதியாக “இப்போ எல்லாம் பிள்ளைகள் எங்கே நம்ம பேச்சை கேட்க்குது, எதோ பவியாக இருப்பதாள்.. இப்படி வீட்டிலேயே இருக்கிறாள்” என்றார் சுருக்கென.
இவர் நல்லவிதமாக சொல்லுகிறாரா.. இல்லை, தாக்குகிறாரா என தெரியவில்லை நிர்மலாவிற்கு. பத்மாவை பார்த்தார் ஓரபார்வையில், நிர்மலா.
பத்மா.. ‘பார்த்தியா.. உங்க அண்ணியை..’ என ஒருமுறைப்பை தந்தாள். நிர்மலா தலை குனிந்துக் கொண்டாள்.
புவனத்திற்கு, பெண்ணை பற்றி சொல்லவும்.. மீண்டும் தன்மீதே கோவம் வந்தது.. ‘தப்பாகிவிட்டதே.. இனி எப்படி என்ன நடக்க போகிறதோ’ என எண்ணிக் கொண்டார்.
!@!@!@!@!@!@!@!@@!@!
முத்து மருத்துவர், ஈசனிடம்.. பவி விஷயத்தை சொல்லுவதா.. வேண்டாமா.. என யோசித்துக் கொண்டிருந்தார். அவருக்கு.. ‘பெண் வீட்டில் ஒத்து போகவில்லை’ என தெரிந்தது.. இல்லையெனின், இந்த நேரத்திற்கு திருமணமே முடிந்திருக்குமே.. அதனால், நம்மால்.. ஏதும் பிரச்சனை வர கூடாது என எண்ணி அமைதியாக இருந்தார்.
ஈசனுக்கு, காலையில் கிரௌண்ட்க்கு வந்ததும்தான் தெரிந்தது.. ‘சாம்பவியை பெண் பார்க்க இன்று வருகிறார்கள்’ என.
பார்த்திபன், ஈசன் விஷயத்தில் தலையிட கூடாது எனத்தான் இருந்தான். எந்த வகையிலும் ஈசனும் பார்த்திபனை நாடவில்லை.. குறிப்பால் கூட ஈசன் உணர்த்தவில்லை.. ‘நான் உன் அக்காவை விரும்புகிறேன்’ என, எந்த வகையிலும் காட்டிக் கொள்ளவில்லை.
மேலும் புவனாம்மாவிடம் ‘பேசுவது.. கேட்பது..’ என எந்த விஷத்திலும் ஈசன், பார்த்திபனை இழுக்கவில்லை. அதனால், பார்த்திபனும் தள்ளி நின்றுக் கொண்டான்.
ஆனால், பார்த்திபன் மனதிற்கு ஈசனை இயல்பாகவே பிடிக்குமே, அதனால்.. ஈசன் என்ன செய்கிறான் என தெரிந்துக் கொள்வான். அதனால், ஈசன் புவனாம்மாவிடம் பேசுவது.. கேட்பது.. ஈசனின் அம்மா அழைத்து பேசுவது எல்லாம் பார்த்திபனுக்கு தெரியும்.
ஆனாலும், ஏதும் வீட்டில் கேட்டுக் கொள்ள முடியாதே. அதனால், அமைதியாக இருந்தான். ஆனால், இன்று ஈசனின் மேல் கோவம் வந்தது.. ‘ஏன் இவ்வளவு அசால்ட்டா இருக்கார்.. உண்மையாக இவர் பெண் கேட்டாரா..’ என எண்ணம் கூட வந்தது அவனுக்கு.
எனவே கொஞ்சம் கோவத்தில்தான் வந்தான் கிரௌண்ட்க்கு. வந்தவன், காலை நேர உடற்பயிற்சிக்கு செல்லும் முன்பே.. ஈசனிடம் ‘காலை நேரத்திற்கு விடுப்பு வேண்டும்’ என கேட்டான். பிள்ளைகள் கோச்சிங் வருமே.. அதனால், தான் வர முடியாது என விடுப்பு கேட்டான் பார்த்திபன்.
‘ஏன்..’ என ஈசன் கேட்க்கவும்.. பார்த்திபன் அவரை இமைக்காமல் பார்த்தபடி.. ‘சமியை பெண் பார்க்க வருகிறார்கள்..’ என்றான்.
ஈசன் உணமையாகவே எழுந்து நின்று தன் அதிர்வை காட்டினான். அதிர்வுதான்.. ஈசனுக்கு. இன்னும் முயற்சி செய்யலாம் என எண்ணி இருந்தவனது நிலை இப்போது தலைகீழாக மாறிய அதிர்ச்சி. எனவே, பார்த்திபனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை ஈசனால், அத்தனை தடுமாற்றமாக இருந்தான் ஈசன்.
இப்போது, ஈசனுக்கு, பார்த்திபனின் முறைப்பு ஏன் என புரிகிறதே.. அதனால் பார்த்திபனை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை ஆசிரியனால். ஏதேதோ பாரம் அழுத்த தொடங்கியது அவனை ‘எப்படி.. என்ன.. சொல்லுவது இவனிடம்.. ‘இது எப்படி இவ்வளவு சீக்கிரம் டா.. என கத்துவதா.. இல்லை, எனக்கு வாய்ப்பே தராத எங்கள் குடும்ப நிலையை சொல்லுவதா.. எல்லாம் தெரிந்தும், அமைதியாக ஏற்றுக் கொண்டு.. நிற்கிறாளே.. என்னவள்!.. அவளை சொல்லுவதா.. என்ன சொல்லி எப்படி விளக்குதுவது என் நிலையை இவனுக்கு…’ என தடுமாறி நிற்கிறான் ஈசன்.
ஈசன், அந்த அதிகாலையில்தான் அழைத்தான் சாம்பவியை. அப்போதுதான் புவனம் பார்த்தார். அதன்பின் ஈசன் வெறுத்து.. பார்த்திபனிடம் சொன்னான் ‘உங்க வீட்டில் அப்படி என்ன டா.. கோவம். ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா டா.. எத்தனை முறை பேசி இருக்கிறேன்.. அ..அப்புறம் எங்க வீட்டுக்கும், உங்க வீட்டுக்கும் என்ன டா வித்யாசம்’ என பார்த்திபனை திட்டி தீர்த்தான். சொல்ல போனால்.. மனதில் இருந்ததை சுதந்திரமாக கொட்டினான்.
ஈசன், பேசிக் கொண்டே அவளுக்கு அழைத்துக் கொண்டே இருந்தான். அப்போது.. அவளிடமிருந்தும் பதிலில்லை.. பார்த்திபனிடமிருந்தும் பதிலில்லை ஈசனுக்கு.
ஈசன் மீண்டும் கத்தினான் ‘சொல்லு டா அவ கிட்ட.. அவளுக்கும் என்னை பிடிக்கலையாம்..’ என அந்த வார்த்தைகளை சொன்னான். அதைதான் பார்த்திபன் தன் தமக்கையிடம் சொன்னான்.
!@!@!@!@!@!@!@!@!
ஆக, ஈசன்.. அலண்டு போய் அமர்ந்தவன்தான்.. இன்னமும் எழுந்துக் கொள்ளவில்லை கிரௌண்டிலிருந்து.. அங்கேயே அமர்ந்திருந்தான். மனதில் ஓடிக் கொண்டே இருந்தது ‘இந்நேரம்.. அவர்கள் வந்திருப்பார்கள்.. பார்த்திருப்பார்கள்.. கிளம்பியிருப்பார்கள்..’ என ஓடிக் கொண்டே இருந்தது. இவனும், அதை ஒதுக்க நினைக்கிறான் முடியவில்லை.
வீட்டிலிருந்து அழைப்பு வந்துக் கொண்டே இருக்கிறது ஈசனுக்கு. ஈசன் அதை ஏற்கவில்லை. எனவே கமலேஷ் கிரௌண்ட் வந்தான் இப்போது.. ஈசனை அலுவலக அறையில் பார்க்க.. எதோ பிரம்மை பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்.
கமலேஷ்க்கு, அதிர்ச்சி. தம்பியின் அருகில் சென்று “டேய்.. டேய்..” என தட்டிதான் ஈசனை எழுப்பினான்.
ஈசன் “என்ன டா, நீ எங்க இங்க” என்றான்.
இப்போதுதான் கமலேஷ்க்கு உயிரே வந்தது.. “எங்க போன்.. ஏன் எடுக்கலை போனை.. என்ன பண்ற.. சாப்பிட வரலை, காலையில் வந்த கிரௌண்ட்க்கு.. இன்னும் என்ன பண்ற.. வா முதலில் வீட்டுக்கு போலாம். வா” என்றான் அதட்டலாக.
ஈசன் “ச்சு… நீ போ.. நான் வரேன்” என்றான்.
கமலேஷ் தம்பியின் அருகே அமர்ந்து “என்ன டா.. ஏன், அந்த பெண்ணு ஞாபகமா” என்றான் நிதான குரலில்.
ஈசன் “இல்ல.. அந்த பொண்ணை இனி நான் நினைக்க கூடாதாம்.. அவளை பெண் பார்க்க வந்திருக்கங்களாம்..” என்றான் எழுந்து நின்றுக் கொண்டு.
கமலேஷ் “என்னதாண்ட சொல்றாங்க.. நம்ம வீட்டிலிருந்து எல்லோரும் போய் மல்லுகட்டிட்டாங்க.. சாரி பொண்ணு கேட்டாங்க.. இன்னமும் என்னதான் டா வேண்டுமாம்..” என்றான் சலிப்பாக.
ஈசன் பொரிந்தான் “டேய்.. பேசாத டா.. அண்ணன்னு பாருக்கிறேன்.. செய்யறதெல்லாம் நம்ம செய்தாச்சு.. இப்போ போய்.. நல்லவன்னு சொன்ன ‘எப்படின்னு’ கேட்க்கதான் செய்வாங்க. ச்சு… சரி விடு.. நீ போ.. கொஞ்சம் நேரத்தில் நான் வரேன்” என தன் அண்ணனை அனுப்ப நினைத்தான் ஈசன்.
கமலேஷ் “விடு.. உடனே எல்லாம் நடந்திடுமா, என்ன?.. நம்ம ஊருக்கு வந்து பெண்ணை பார்த்திருக்காங்க.. ஏதாவது பண்ணுவோம்..” என்றான் குதர்க்கமாக.
ஈசன் “டேய்.. அப்பா… கமலேசா.. அப்படி எல்லாம் யோசிக்காத… நான் பார்த்துகிறேன்.. நீ போ ப்பா.. நல்ல நேரத்தில்..” என்றான்.
கமலேஷ் “இல்ல டா… இப்படி..” என எதோ சொல்ல.. ஈசன் தலைக்கு மேலே ஒரு கும்பிடு போட்டான்.. வாசல் நோக்கி வழியை காட்டினான்.
கமலேஷ் “ஓ… நல்லவன்… நீ… அப்படிதானே..” என்றான்.
ஈசன் ஓய்ந்து அமர்ந்தான்.
அண்ணன் “டேய்… டென்ஷன் ஆகாத டா.. நாளைக்கே நாம் திருப்பியும் போய் பேசுவோம்.. நீ கவலை படாதே டா…” என்றான் இத்தனை நேரமிருந்த.. விளையாட்டை விடுத்து அக்கறையாக சொன்னான்.
ஈசன், தன் கையை காற்றில் ஆட்டி.. “ச்சு, இனி அப்படி செய்ய கூடாது டா” என்றான்.
அண்ணன் ஏதும் பேசாமல் கிளம்பிவிட்டான்.
ஈசனுக்கு உணவு வீட்டிலிருந்து வந்தது. உண்டான்.. வீடு செல்லவில்லை. அங்கேயே அமர்ந்துக் கொண்டான். விடை வேண்டும்.. போல இருந்தது.. ‘அப்போதே சொல்லிவிட்டனர் விடை’ என அறிவு சொல்லியது. ‘இல்லை, அதில்லை என் விடை..’ என யோசித்துக் கொண்டே இருந்தான்.