Advertisement

மாசறு எழிலே வருக!..

23

அன்றே, சாரங்கன் நர்மதா இருவரும் சென்னை கிளம்பினர். 

காதல் சாரல் அடிக்க தொடங்கியது அந்த பயணத்தில் இருவருக்கும்.. சென்னயிலிருந்து வரும் போது கொஞ்சம் கணவனிடமிருந்து தள்ளி இருந்த மனது.. கோவை வந்தது முதல்.. அவனின் நடவடிக்கையில்.. அவனிடம் தஞ்சம் அடையும் நிலையில் நின்றது எனலாம்.

அமைதியாக தள்ளி நின்று, கணவனையே நோட்டம் விட்டால் பெண் எனலாம். முன்பு போல தள்ளி நிற்காமல் தம்பிக்காக பேசியது தொடங்கி.. தம்பி கிண்டல் செய்யும் போது கூட.. தன்னை பார்த்து லேசாக சிரித்துக் கொண்டு நகர்ந்து சென்றது.. வித்யா கிண்டல் செய்த போதும் வெட்கமான கணவனின் சிரிப்பும், அதை தொடர்ந்த பார்வையும்.. என நர்மதாவிற்கு கணவனின் மாற்றம் உண்மை என புரிய தொடங்கிவிட்டது. அதனால், கொஞ்சம் கணவனிடம் பேசவும் தோன்றியது.

அந்த பயணம் முழுவதும் இருவருக்கும் அப்படி ஒரு பொன்னான நேரம் எனலாம். பழைய கதைகள்.. பிரிந்தபின் நடந்த மாற்றங்கள்.. அதை தொடர்ந்து வந்த நிகழ்வுகள் என பேச்சு திக்கி திக்கி சென்றாலும்.. ஒருவரின் நிலை என்னவாக இருந்தது என பேசி தெளிந்துக் கொண்டனர்.

திருமணம் முடித்து இத்தனை ஆண்டுகள் சென்றுதான், தத்தமது இணையை உணருகிறனர். அதுவும் ஒரு பிரிவிற்கு பிறகு.. எனும் போது, மனதுள் காதல் வேர் விட தொடங்கிவிட்டது இருவகுள்ளும். ஆனாலும் தன்னறைக்குள் கணவனை அழைக்கும் எண்ணம் வரவில்லை அவளுக்கு.. வெட்கம்தான் நின்றது முதலில். இருவரும் அதை இயல்பாக எடுத்துக் கொண்டனர்.. தங்களை மீறி.. எங்களை.. நாங்களே உடைக்கும் தருணத்தில்.. எங்கள் தாம்பத்தியம் தொடங்கட்டும் என காதலை வாழ வைத்துக் கொண்டனர்.

நாட்கள் சிறப்பாக சென்றது அந்த புது காதலர்களுக்கு.. விடிவதே.. தாங்கள்  குட் மோர்னிங் சொல்லிக் கொள்வதற்காக என்றானது. நர்மதா தன் அறையிலிருந்து வெளியே வரும் போதே குளித்து.. கணவனை காணும் ஆவலில் வருவாள். கணவனும் அவளின் ஆவலுக்கு குறையாத காதலுடன் வருவான் மனையாளை காண. அதன்பின் இருவரும் கிட்செனில் நின்றுக் கொண்டு.. பேசியபடியே சமைப்பார்.. உண்பர்.. பூஜை அறையில் ப்ராத்தனை செய்வர். 

சில நேரங்களில், அவளின் க்ளைண்ட் மீண்டிங்.. அவுட்டிங் எனும் போது.. கொஞ்சம் அசத்தலான ஒப்பணையில் வந்து நிற்பவளை பார்க்கும் போதெல்லாம்  கணவன் திண்டாடித்தான் போவான். அவள், நேரமாக.. முதலில் அலுவலகம் கிளம்பும் போது.. அவளை வழியனுப்ப என அவளின் அருகிலேயே நிற்பான்.. அவளை தொடும் தூரத்தில். 

இருவருக்கும் ஒரே மாதிரி தடுமாற்றம் வரும்.. நெருக்கத்தில் தன் துணையின் மூச்சு காற்று வெப்பத்தில்.. தடுமாற்றம் வந்தே தீருகிறது. யார் முதலில் கை விரிப்பர், போய் அவர்களின் தோளில் சாய்ந்துக் கொள்ளலாம் என இருவரின் கண்களும் இமைக்கும் நேரத்தில், ஒரு தேடுதலை நடத்தியே விடுகிறதுதான். ஆனாலும் காலை நேரம் அவர்களின் எண்ணத்தை.. தகர்த்து விடுகிறது.. அமைதியாக விடைபெற்று கிளம்பிவிடுவாள் நர்மதா. கணவனும் சிரித்துக் கொண்டே.. ‘பார்க்கிறேன்.. எப்போ என்னை தேடறேன்னு’ என கதவை தாழிட்டு உள்ளே சென்றிடுவான்.

சாரங்கனின் பிறந்தநாள்.

நர்மதாவிற்கு முதலிலேயே தெரியும்.. என்பதால் கணவனுக்கு என பரிசு வாங்கி விட்டாள். இரவு அவனுக்கு தெரியாமல் கேக் கட் செய்ய.. கேக் வாங்கி வைத்துவிட்டாள்.. அவளின் முகமே சின்ன குறுகுறுப்பில் மின்னிக் கொண்டிருந்தது.

சாரங்கனுக்கு தன் பிறந்தநாள், நாளை.. என தெரியும்.. அதை, மனைவியின் முகம் சொல்லவும்.. அவளின் மினி மினுப்பை ரசித்துக் கொண்டே, தன் லேப்பில் அமர்ந்து எதோ வேலை செய்துக் கொண்டிருந்தான்.

இருவரும் ஏதும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.. உண்டனர்.. நர்மதா உறங்க சென்றாள். சாரங்கன் வேலையில் கவனமாக அமர்ந்துக் கொண்டான்.

நர்மதா, உறங்க சென்றாள்.

சாரங்கனும், சற்று நேரத்தில் தன் அறைக்கு சென்றான் உறங்க. 

நர்மதா மணி பனிரெண்டை நெருங்கும் போது.. எழுந்து வந்தாள்.. முன்னமே வாங்கி வைத்த கேக் எடுத்து ஹாலின் நடுவில் வைத்தாள்.. பின் அரோமா கேண்டல்ஸ் ஏற்றி வைத்தாள்.. நாலு பலூன்கள் ஊதி அந்த டீபாய்மேல் ஓட்டினாள். அந்த இடமே அழகானது.. பிடித்தவர்களுக்காக எது செய்தாலும் அது அழகாகத்தானே இருக்கும்.. அப்படிதான் இந்த சின்ன ஏற்பாடும் அழகாக இருந்தது.

சரியாக பனிரெண்டு மணிக்கு.. கணவன் அறைக்கு சென்றாள். அவள் கைபட்டதும் அந்த கதவு திறந்துக் கொண்டது.. விடிவிளக்கின் ஒளியில் அயர்ந்து உறங்கும் கணவனை ஓரிரு நிமிடம் ரசித்து நின்றாள் பெண்.

பின், மெல்ல “என்னங்க.. என்னங்க..” என்றாள்.

நான்கு முறை அழைத்ததும்தான், கணவன் லேசாக கண் திறந்தான்.. அருகில் மனைவி நின்றுக் கொண்டிருக்கவும்.. “ஹாய்..” என்றபடி எழுந்தான்.. மெதுவாக. அவனுக்குதான் முன்னமே தெரியுமே.. ‘இன்று மனைவி தனக்காக ஏற்பாடுகள் செய்திற்குக்கிறாள்’ என.

நர்மதா “ஹாப்பி பர்த்டே..” என்றாள் மெல்லியக் குரலில்.

சாரங்கன் “தேங்க்ஸ்.” என்றான் சிரித்தபடியே.

நர்மதா “வாங்க.. வெளிய” என்றாள்.

சாரங்கன் “ஏன், கண்ணை கட்டி எல்லாம் கூட்டி போக மாட்டியா” என்றபடி  எழுந்து.. நடந்தான்.

நர்மதா சிரித்தாள் ஏதும் சொல்லாமல்..

ஹால் மெழுகுவர்த்தியின் உதவியால் சொர்க்கமாக காட்சியளித்து.. அதை பார்த்துக் கொண்டே வந்து கேக்கின் முன் நின்றான்.

மனையாள் “ம்.. கட் பண்ணுங்க” என்றாள்.

சாரங்கன் “ஐயோ சின்ன பிள்ளையா என்ன.. வெட்கமா இருக்கு டி” என்றான்.

மனைவியின் முறைப்பில்.. ஒன்றும் சொல்லாமல் அவனும் கட் செய்தான். மெல்லியக் குரலில் ‘ஹாப்பி பர்த்டே..’ என பாடினாள் மனையாள்.. முதல் துண்டை அவளுக்கு ஊட்டினான்.. நர்மதாவும், தன்னிலையிலிருந்து எம்பி.. கணவனுக்கு ஊட்டினாள், கைகள் நடுங்க. கணவன் அவளின் கைகளை பிடித்துக் கொண்டான், இதமாக. மெல்ல அவளின் கைகளில் இருந்த முழுவைதயும் உண்ட பின்பே அவளின் கையை விட்டான்.

அவன் விட்டதும் அவசரமாக கிட்சென் சென்றுவிட்டாள்.. கை கழுவுவதற்கு.. கணவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை, எனவே மறைந்துக் கொண்டாள், நர்மதா..

சாரங்கன் “ஹலோ கிப்ட் வேணும்..” என்றான் சிரித்துக் கொண்டே.

சற்று நேரம் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டே வெளியே வந்தாள்.. நர்மதா.

அங்கே முன்பே தான் வாங்கி வைத்திருந்த கிபிட் எடுத்து அவனின் கையில் கொடுத்தாள்.. கணவன், அவளை பார்த்துக் கொண்டே பிரித்தான்.. அழகான வெள்ளி காப்பு.. அவன் முகம் தன்போல ஒளிர்ந்தது.. “வாவ்.. சூப்பர்… தேங்க்ஸ்” என்றான்.

பின் அதை எடுத்து அவளிடமே நீட்டினான்.. நர்மதாவும் அதனை வாங்கி.. அவனின் கையில், அணிவித்தாள். இப்படியும் அப்படியுமாக இரண்டு முறை.. வைத்து.. அழகு பார்த்தான் சாரங்கன்.. “நல்லா இருக்கு.. “ என்றான்.

நர்மதா போனெடுத்தாள்.. போட்டோஸ் எடுக்க. எனவே, அவனின் அருகில் வந்து நின்றாள்.. “போட்டோ” என்றாள் கேள்வியாக.

சாரங்கன் “கண்டிப்பா..” என சொல்லி.. தன் கையை காப்பு தெரிவது போல காட்டிக் கொண்டு.. அவளின் உயரத்திற்கு தன் முகத்தை வைத்து குனிந்து நின்றான்.. நர்மதாவும் சிரித்துக் கொண்டே அழகாக புகைப்படம் எடுத்தாள்.

இருவரும் கேக் உண்டனர்.. மீதமான கேக் எடுத்து பிரிட்ஜ்ஜில் வைத்தாள்.. நர்மதா.. 

அடுத்து… என தயக்கம் இருவருக்கும்.. என்ன பேசுவது என தெரியவில்லை.. 

நர்மதா “குட் நைட்..” என தனதறைக்கு செல்ல எழுந்துக் கொண்டாள்.. சாரங்கன் “மது..” என அழைத்தபடி அவளின் அருகில் வந்தான்.. எப்போதும் போல இருவருக்கும்.. யார் கைவிரிப்பர் என கண்கள் தேட.. இப்போது எந்த கேள்வியும் இல்லாமல், கணவன் அவளை தன்னிரு கைகளில் அள்ளிக் கொண்டான்.

“அலையே சிற்றலையே.. 

கரை வந்து வந்து போகும் அலையே..

என்னை தொடுவாய் மெதுவாய் என்றால்.. 

நுரையாய் கரையும் அலையே..

தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்..

அருகில் வந்தால் இல்லை என்றாய்..”

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக தொடங்கியது அவர்களின் தாம்பத்யம்.. வன்மையான கோபங்களும்.. பிரிவுகளும்.. அதனால் ஏற்பட்ட காயங்களும் பேச்சில் குறைந்திருந்தாலும்.. இன்னும் தீரவில்லையே, எனவே, அணைப்பிலும் முத்தத்திலும் பழி தீர்த்துக் கொண்டனர் அவர்களுக்குள்ளாகவே. அதுவும் அழகானதுதான். புரிதலில் உண்டாகும் கோவமான முத்தமும், வெறித்தனமான அணைப்பும் அத்தனை ஆனந்தமானது. ஆனந்தம் பேரானந்தம் எனும் நிலையை எட்ட அதிகாலை ஆனது. 

இருவரும் நிறைந்தே இருந்தனர்.. மறுநாள் ஜானகி அழைக்கும் வரை அவர்களுக்கு விழிப்பே வரவில்லை. 

Advertisement