Advertisement

அப்பொழுது ராகவ் நிலா கை பிடித்து தடுத்து சற்று நேரம் பொறுக்குமாறு கூறி அவனும் மீதமிருந்த தண்ணீரில் முகம் கழுவி வேறு ஒரு லுங்கி அணிந்து இருவரும் ஒரே நேரத்தில் கதவை திறந்து வெளியே வந்தார்கள்..

 ராகவிற்கு தெரியும் அவன் இல்லாமல் நிலா தற்பொழுது வெளியே சென்றால் சகுந்தலா ஏதாவது அவள் மனதை காயப்படுத்துமாறு கூறுவார் என்று.. அதை தடுக்கவே இந்த முயற்சி..

 அவர்கள் அறை திறந்து வெளியே வரும் சத்தம் கேட்டதும் சகுந்தலா சமையல் அறையில் இருந்து வெளிவந்தார்..

 அங்கிருந்த யாரையும் பார்க்காமல் ராகவ் நேரடியாக தாயின் அருகே வந்து என்னவென்று கேட்டான்..

 அந்த குடும்பத்தில் தாய் தந்தை அண்ணன் தம்பி தங்கை என உறவுகள் இருக்கிறார்கள். ஆனால் இதுவரையும் யாரும் யாரோடும் பாசத்திலோ உறவிலோ உரையாடியோ மகிழ்ந்தோ யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்..

 தேவைப்பட்டால் தேவைக்கு மட்டுமே ஒருவர் ஒருவருடன் பேசுவார்கள்..

 மகன் தாயை எவ்வித பாசத்துடனும் பார்க்க வில்லை.. தாயும் எவ்வித பாசத்துடனும் மகனை பார்வையால் கூட ஆரத்தழுவவில்லை..

” அப்பா உன்கிட்ட ஏதோ பேசணுமாம் அதுதான் நேரம் ஆனதும் நானே கதவைத் தட்டினேன்..” என்றார் அவர் சொல்ல வேண்டிய தகவல் சொல்லி முடிந்தது என்ற நிலையில்..

 நிலா மிகவும் கூச்சத்துடன் நெளிந்து கொண்டு நின்றிருந்தாள்..

அவளுக்கு அங்கிருந்தவர்கள் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கி தின்றது..

 உடல் அலுப்பு கசகசப்பு போக கொஞ்சம் குளிர் நீரில் குளித்தால் போதுமானது. இவர்களை கடந்து எப்படி வெளியே செல்வது என்று யோசித்தபடி நின்றாள்..

 அந்த நேரம் பார்த்து சாரதாவும் மாலதியும் வந்தார்கள்..

 அவர்களைப் பார்த்து நடேசனும் சவுந்தலாவும் ” ஆத்தா வா வந்து உட்கார்.. வா மாலதி இரு. ” என்று அவர்களை இருக்க சொல்லிவிட்டு சகுந்தலாவின் பக்கம் திரும்பி இருவருக்கும் தேநீர் எடுத்து வருமாறு கூறினார்..

” வாங்க அத்தை இருங்க. ” சாரதா வரவேற்று இருக்க வைத்துவிட்டு மாலதியிடம் கண்ணை காட்டிவிட்டு சமையல் அறைக்கு சென்றார் சகுந்தலா..

 அதை உணர்ந்த மாலதியும் எழுந்து சென்று ” என்ன மச்சாள் ” என்றாள்.

 இங்கு வெளியே சாரதா நிலாவைப் பார்த்தார்.. அவரும் இரண்டு பெண்களை பெற்றவர் தான். நேற்று அவளது பழக்கம் தெரிந்து கொண்டவர் 

தானே அதனால் எழுந்து நிலாவின் அருகே சென்று அவள் கையை பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்று ” நிலா இரவு சாந்திமுகுர்த்தம் முடிஞ்சா என்ன?. ” என்றார்..

 இந்தக் கேள்வி நிலாவிடம் அவர் கேட்க தேவையே இல்லை அதற்கு அவருக்கு பதிலும் தேவையில்லை..

 அப்பட்டமாக நிலாவின் முகத்தில் அவர் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது..

 அவளின் முக பொலிவு காட்டிக் கொடுத்தது..

 நிலா வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டு ஆமாம் என்று தலையை ஆட்டவும் சந்தோஷத்துடன் அவளை கட்டிக் கொண்டார் சாரதா..

” இது போதும் நிலா. இனி நீ எதற்கும் கவலைப்பட தேவையில்லை. இனி உன்னோட வாழ்க்கை உன் கையில்.. வா சீக்கிரம் வெளியே போகணும்.. இல்லன்னா உன் மாமியார் நம்ம ரெண்டு பேரும் பேசுறதை பார்த்தால் நெருப்பில்லாமல் அவளுக்கு வயிறு புகையும்.. வீட்ட போய் குளிக்கலாம் நீ குளிக்கறதுக்கு தேவையான உன்னோட உடை எல்லாம் எடுத்துட்டு வா.. ” என்று அவளிடம் கூறிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தார்..

 சமையலறைக்குள் சென்ற சகுந்தலாவும் மாலதியும் ” மாலு நேற்று உங்க அண்ணாச்சி உங்க வீட்டுக்கு வந்தாரா?.. வந்த இடத்துல அந்த லட்சுமி கிழவி எதுவும் போட்டு கொடுத்துடிச்சா என்ன?.. ” என்றார்.

” இல்ல மச்சாள்.அண்ணாச்சி நேற்று வீட்டு பக்கம் வரலையே..” என்றாள்.

” சரி வா. ” என்று சகுந்தலா கூறிவிட்டு மூன்று கப்பில் தேநீர் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்..

வந்தவர் சாரதா மாலதி மற்றும் ராகவிற்கும் தேநீர் கொடுத்தார்..

 அதை பார்த்திருந்த நடேசன் ” ஏண்டி மருமக பொண்ணுக்கு எங்க. எடுத்துட்டு வரல?.. ” என்றார் சற்று கோவமாக.

 இதை எதிர்பார்க்காத சகுந்தலா என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து இருந்தார்.

 அப்பொழுது அவர்களது அறையில் இருந்து உடைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த நிலா ” நான் தான் வேணாம்னு சொன்னேன் மாமா. குளிச்சிட்டு வந்து குடிக்கிறேன்.. ” என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்..

 சாரதாவின் வீட்டுக்கு சென்று சற்று நேரம் தேவியுடன் லட்சுமியுடனும் பேசியிருந்து விட்டு அலுப்பு தீர குளித்துவிட்டு தேவியின் அறைக்குள் வந்து உடையை மாற்றிவிட்டு அங்கே அவள் வைத்து சென்ற அவளது சீப்பு பவுடர் போன்றவற்றை பயன்படுத்தி தயாராகியே வெளியே வந்தாள் நிலா..

 அதற்குள் சமையல் அறையை சுத்தம் செய்து அவளது வேலையை முடித்து விட்ட தேவியும் நிலாவும் பேசிக்கொண்டே மீண்டும் சகுந்தலாவின் வீட்டுக்கு வந்தார்கள்..

 வீட்டுக்குள் வந்த தேவி மற்றும் நிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுவாதி மற்றும் சவுந்தலாவையும் ஒரு பார்வை பார்த்தார் நடேசன்..

 சகுந்தலா வேலைக்கு செல்வதால் காலையில் குளித்துவிட்டு சென்று விடுவார்..

 ஆனால் இன்று வேலைக்கு செல்லவில்லை அவர். அதனால் குளித்து தயாராகாமல் முகம் மட்டும் கழுவி விட்டு இருந்தார்..

 சுவாதி தினமும் அவர்கள் அனைவரும் சென்றதும் வீட்டில் இருக்கும் இறுதி வேலைகளை முடித்துவிட்டு தான் குளிப்பாள்..

 அதனால் இன்று சுவாதியும் விடிந்து இவ்வளவு நேரத்திற்கு பின்பும் குளித்து தயாராகாமல் அவளும் முகாம் கழுவி விட்டே நின்றாள்..

 அதனால்தான் நடேசன் இருவருக்கும் இடையே இருக்கும் மாற்றத்தை பார்த்தார்..

 நிலாவிடம் திரும்பிய நடேசன் ” எனக்கு என் பிள்ளை கல்யாணத்தை கூட பார்க்க கொடுத்து வைக்கல.. அதனால இப்படியே சும்மா உங்களை விட முடியாது.. உன்னைப் பற்றியும் உன்னோடு குடும்பத்தை பற்றியும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. உன்னோட குடும்பம் இப்போ எங்க இருக்காங்க வர சொல்லு மருமகளே.. நல்ல நாள் பார்த்து இங்க வரவேற்ப்பு வைக்கணும்.. இல்லன்னா என் மகனுக்கும் எங்களுக்கும் கெட்ட பேர் வந்துரும்.. இங்க இருக்கிறவங்களுக்கு நீ யார் என்று கூட தெரியாம போயிரும்..” என்று நிலாவிடம் கூறிவிட்டு

 சகுந்தலாவிடம் திரும்பி ” இட்லி மாவு இருக்கா?.. எல்லாருக்கும் இட்லி ஊத்திடு நான் கறி வாங்கிட்டு வந்துடுறேன்.. சம்மந்தி வீட்ல இருந்து வந்துடுவாங்க எல்லாம் தயாராக வை.. ” என்று கூறிவிட்டு அவரது சட்டை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியேறிவிட்டார் நடேசன்..

 எப்பொழுது நடேசன் அவ்விடத்தை விட்டு செல்வார் என்று பார்த்துக் கொண்டிருந்தது போல குமரனிடம் வந்தார் சகுந்தலா..

” டேய் குமரா எப்படி டா உங்க அப்பாக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும்.. நேற்று நீயும் உங்க அப்பாவும் தானே சேர்ந்து வந்தீங்க?.. இல்ல அந்த கிழவிய பார்க்க போனாரா?.. ” என்றார்.

” தெரியலையே அம்மா நானும் காசு கணக்கு பார்த்து என் கைக்கு வந்ததும் அவர் சாராய கடைக்கு போயிட்டார். நான் கல்லு கடைக்கு போயிட்டேன்.. வீட்டு கிட்ட வந்து தான் ரெண்டு பேருமே ஒண்ணா உள்ளே வந்தோம்..” என்றான்.

 ” அட போடா கூறு கெட்டவனே அந்த ஆளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கொள் என்று சொல்லியும் நீ இப்படி சூதானமில்லாமல் இருந்திருக்க. அந்த கிழவியை எப்படியோ இடையில் சந்தித்து விட்டான். நேற்று வீட்ல நடந்தது மொத்தத்தையும் தெரிஞ்சு இருக்கான். இல்லன்னா வேற எப்புடி தெரியும்?.” என்றார்.

 அவர்கள் பேசியதை கேட்டாரோ இல்லையோ ” என்ன சகுந்தலா மகனோட ரொம்ப பாசமா பேசிட்டு இருக்க போல.. நான் தான் நடேசனுக்கு நேற்று நடந்ததெல்லாம் சொன்னேன்.. நீ என்ன எல்லாம் அவனுக்கு சொல்லுறியோ தெரியவில்லை.. வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு மனசு கலங்கி கண்ணீர் விட்டால் இந்த குடும்பமே உருப்படாமல் போய்விடும்.. உனக்கும் வாழ்ற வயசுல ஒரு பொண்ணு இருக்கு அதை மறந்துடாத.. போ போய் சொன்ன வேலையை செய் இல்லன்னா திரும்பவும் வந்து உன் புருஷன் அதுக்கும் சத்தம் போட்டுட்டு இருக்க போறான் ” என்று கூறி விட்டு மாலதியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார் சாரதா..

 நடேசன் யாரின் பேச்சையும் கேட்பாரோ இல்லையோ ஆனால் சாரதாவின் பேச்சை கேட்பார்..

 நடேசன் சாரதாவிற்கு மதிப்பு கொடுத்து அவர் பேச்சைக் கேட்பதால் சகுந்தலாவும் நடேசனுக்கு முன்போ அவர் இல்லாத நேரமோ சாரதாவிற்கு எதுவும் பேச மாட்டார்.. ஆனால் அவருக்கு முன்பே அவரை பெற்ற தாயாகிய லட்சுமியை கோவம் வந்தால் வாய்க்கு வந்தபடி திட்டுவார்..

 நடேசன் சொன்னதும் அறைக்குள் வந்து அவளது கைபேசியை எடுத்து பாட்டிக்கு அழைத்து விசயத்தை கூறி வருமாறு கூறினாள் நிலா..

 அவள் பேசியதை பார்த்திருந்து விட்டு ” ஏய் என்னடி உங்க அப்பனுக்கு சொல்லலையா அந்த ஆள் வர மாட்டானா?” என்றான் ராகவ்.

” அந்த ஆள் எல்லாம் வந்து பிரயோசனமில்லை.. வரவும் தேவையில்லை. எனக்கு பாட்டி மட்டும்தான் எல்லாம்.. சரி மாமா சொல்றத பார்த்தா நிறைய வேலை இருக்கும் போல நான் அத்தைக்கு போய் உதவியா இருக்கேன்.. ” என்று கூறிவிட்டு அறையை விட்டு நிலா வெளியேறும் போது அவள் கையை பிடித்து இழுத்தான் ராகவ்..

” என்ன வாத்தி லந்தா.. கையை விடுங்க பட்டப்பகல்ல இதெல்லாம் சரி இல்லை.. ” என்றாள்..

” அப்போ இரவைக்கு வச்சா மட்டும் சரியா?… வாடி இங்க உன்னோட கொஞ்சி குலாவ இங்க யாரும் உன்னை கூப்பிடல.. என்னடி ஸ்டிக்கர் பொட்டு வச்சிருக்க. எங்க நெத்தியில குங்குமம் காணல. இரண்டு நாள் முன்னாடி தான் கல்யாணம் நடந்துச்சு. அது கூட மறந்து போச்சா என்ன.. நேற்று வரை மறந்து இருக்கும். ஓகே ஆனால் நேற்று நைட்டு சம்பவம் நடந்ததுக்கு பிறகுமாடி இன்னும் உனக்கு கல்யாணம் நடந்த ஞாபகம் வரல?.. ” என்று கள்ள சிரிப்போடு கள்ள பேச்சு பேசியே அவளது முகத்தை செவ்வானமாக சிவக்க வைத்தான்..

 அதன்பின் சும்மா விடாமல் அவனே எழுந்து சென்று குங்குமம் எடுத்து அவளது நெற்றி வகிட்டில் வைத்து விட்டான்..

” ஏன் வாத்தி படிச்சா மட்டும் போதுமா?.. இப்ப தெரியுது இல்ல நான் ஏன் இன்னும் குங்குமம் வைக்காம சுத்துறேன்னு.. நெற்றி வகிட்டில் முதல் முதல் புருஷன் தான் குங்குமம் வைக்கணும்.. நீ தாலி கட்டின உடனே ஒன்னும் செய்யாமலுக்கு மனையை விட்டு எழும்பி கோபத்தை காட்டிட்டு வெளியே போயிட்டீர்.. அப்புறம் எப்படி நான் குங்குமம் வைக்கிறது. இனி தான் நான் தொடர்ந்து குங்குமம் வைப்பேன்..” என்று கூறிவிட்டு கையை பிடித்து இழுத்து அவனது தலையை கலைத்து விட்டு வெளியே சென்று விட்டாள்..

 அவள் நேராக சமையலறை சென்ற நேரம் சகுந்தலா ஏதோ வேலையாக இருந்தார்..

” அத்தை ஏதாவது உதவி செய்யணுமா?.. இல்லன்னா நீங்க வெளியில இருங்க நான் இட்லி ஊத்துறேன்.. ” என்றாள் நிலா.

 அவள் மீது மிகுந்த கோபத்தில் இருந்தவர் அவளது பேச்சைக் கேட்டு

” அடச் சே வாயை மூடுடி. நீ எல்லாம் ஒரு பொண்ணு தானே?. உனக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை.. அவன் தான் ஆம்பளை புள்ள நீயாவது கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாமே உன் சாந்தி முகூர்த்தை .. வீட்டுல வயசுக்கு வந்த ஆணும் பெண்ணும் இருக்கும் போது உங்களுக்கு இந்த கருமத்துக்கு இப்ப என்ன அவசரம்.. நாங்க முறைப்படி வந்து உன்னை பெண் கேட்டு எங்க மகனுக்கு கட்டிவச்சு சாந்தி முகூர்த்தம் வைக்க நாள் குறிச்ச மாதிரி இல்ல நீங்க சாந்தி முகூர்த்தம் நடத்திருக்கிங்க.. முறைப்படி சுவாதிக்கு கல்யாணம் கட்டி வச்சிட்டு தான் அவன் கட்டி இருக்கனும்.. ஆனா இங்க எல்லாம் முறைப்படியா நடந்து இருக்கு எல்லாமே தலைகீழா தானே இருக்கு.. நீ வந்து ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள என் குடும்பத்தை பிரிச்சிட்ட டி.. நீ ஒருவேளையும் பண்ணி கிழிக்க தேவையில்லை போ டி வெளிய. ” என்று சத்தம் போட்டு விட்டு சமையலை பார்க்க ஆரம்பித்தார் சகுந்தலா..

 அவரது பேச்சைக் கேட்டு நிலாவின் முகம் வாடிவிட்டது..

 வாத்தி ஏதேனும் உள்குத்து வைத்து அவளுடன் வாழ்ந்தானா?..

 நடேசன் என்ன தீர்மானம் எடுத்திருக்கிறார்?..

 இனியும் நிலாவின் வாழ்கை அந்த வீட்டில் எவ்வாறு தொடரும்..

Advertisement