Advertisement

ராகவ் நிலாவை திட்டியதை பார்த்த சுவாதி வாய் பொத்தி சிரித்துகொண்டிருந்தாள்..

அதை பார்த்த ராகவ் அவளை முறைத்து விட்டு பேச ஆரம்பித்தான்..

 ராகவிற்கு தெரியும் அவன் தற்பொழுது இந்த பிரச்சனையை தலையிட்டு தீர்க்கவில்லை என்றால் இன்று நாள் முழுவதும் சகுந்தலா சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார் என்று தெரியும்..

 இப்பொழுதே அவன் தலையிட்டு பிரச்சினை என்னவென்று கேட்டு தெரிந்து கொண்டால் பிரச்சினையை சமாளிக்க முடியும் என்று நினைத்தான்..

  நிலாவிற்கு என்னவென்று கேட்டதே போதுமானதாக இருந்தது.

காலையில் இருந்து நடந்தவற்றை அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டாள்..

 நிலா ஒன்றையும் மிகைப்படுத்தியோ இல்லாததை இட்டுக்கட்டியோ கூறவில்லை அதனால் சுவாதி அதை மறுக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள்..

” இங்க பாருங்க உங்க மூணு பேருக்கும் பொதுவா சொல்றேன் கேட்டுக்கோங்க. நீங்க என்ன வேணும்னாலும் அடிச்சுகிட்டு திட்டிகிட்டு அழுங்க அதை என்கிட்ட கொண்டு வரக்கூடாது.. இங்க இருக்கிற ரெண்டு தொல்லை போதாதுன்னு நீ வேற ஏண்டி என் உயிரை எடுக்கிற?..

” ஏய் சுவாதி காலையில் அவ சாப்பாடு வாங்கி கொடுத்தா வேணான்னு சொல்லிட்டு போகவேண்டியது தானே அதைவிட்டு ஏன் நீ திட்டிட்டு போன?.. எங்க இருந்து உனக்கு இந்த பழக்கம் வந்தது.. வீட்டுல இருக்குற ஒருத்தவங்க சாப்பிடறதை கணக்கு பார்க்குற பழக்கம்..

                  ” உனக்கு வாய் ரொம்ப அதிகம்னு எனக்கு தெரியும் சுவாதி. இனி அந்த வாய உன்னோட மட்டும் வைத்துக் கொண்டால் நல்லது..

நான் அவளை பிடிச்சு கட்டிக்கிட்டேனோ பிடிக்காம கட்டிகிட்டேனோ அது என்னோட பிரச்சனை.. அவ இந்த வீட்ல என்னோட பொண்டாட்டியா இருப்பா. அம்மா அவளை ஏதும் தப்பு செய்தால் கேட்கிறதும் திட்டுறதும் வேற விஷயம் ஆனால் நீ அவளை அப்படி திட்டி மதிக்காமல் நடக்கிறது இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும்.. நீயும் நாளைக்கு இன்னொரு வீட்ல வாழ போற பொண்ணு உனக்கும் ஒரு நாத்தனார் இருந்து இப்படி எல்லாம் நடத்தினால் எப்படி இருக்கும்னு நீ நினைத்து பாரு.. ” என்று தங்கையிடம் கூறிவிட்டு தாயிடம் திரும்பி.

” என்ன பொறுத்த வரைக்கும் நீங்க எனக்கு எப்பவுமே ஒரு நல்ல அம்மாவா இருந்ததில்லை.. உங்ககிட்ட எவ்வளவு நகை பணம் இருக்கின்ற விஷயம் எனக்கு தெரியும்.. ஆனா எனக்கு தெரியாதுனு நீங்க நினைச்சிட்டு இருக்குறது உங்களோட தப்பு.. உங்ககிட்ட அவ்வளவு காசு பணம் இருந்தும் நீங்க எங்களை இப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் வச்சுட்டு இருக்கிறது ஏன் என்ற காரணம் மட்டும் எனக்கு இன்று வரையும் தெரியாது..

உங்க கிட்ட அவ்வளவு பணம் இருந்தும் நான் ஒரு தொழில் தொடங்க போறேன்னு தெரிஞ்சும் நான் வட்டிக்கு வாங்குறேன்னு ஓடி திரியும் போது நீங்க எனக்கு அந்த பணத்தை தந்து உதவி செய்யல..

 உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லன்னா..

 உங்களோட பணம் என்று சொல்லாமல் யாரிடமாவது வாங்கி தந்த பணம் என்று சொல்லியாவது நீங்களே உங்க பணத்தை எனக்கு வட்டிக்கு தந்திருந்தாலும் எனக்கு அது பெரிய பிரச்சினையா தெரிந்திருக்காது..

இப்படி வட்டிக்கு காசு வாங்க வழி இல்லாமல் அலைந்து திரிஞ்சு ஒரு இடத்தில் பணம் வாங்கி அதை கட்ட முடியாமலுக்கு இவளோட அப்பன் என் தலையில் இவளை கட்ட வேண்டிய அவசியமும் வந்திருக்காது..” என்று ராகவ் கூறும்போது நிலாவின் முகம் சுருங்கி விட்டது..

அதை பார்த்தும் பார்க்காதது போன்று ராகவ் அவன் மனதில் இருந்தவற்றை இதுதான் சந்தர்ப்பம் என்று தாயிடம் கொட்ட ஆரம்பித்தான்..

    ” ஆனா பாருங்க உங்களால எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு பாதிக்கப்பட்டு இருக்கிறது நான் மட்டும்தான்.. இந்த காலேஜுக்கு இப்பதான் போய் ரெண்டு வருஷம் அதனால என்னால லோன் எடுக்க முடியாமல் போயிடுச்சு.. இல்லன்னா எனக்கு யாரோட பணமும் தேவைப்பட்டிருக்காது. இப்படி ஒரு கஷ்டமும் நான் பட்டிருக்க மாட்டேன்..

 எந்த நேரத்துல அந்த பணத்தை வாங்கி அந்த போர்ட் எடுத்தேனோ அது இன்னமும் பிரச்சனையாவே இருக்கு.. அதை நான் கொடுத்துட்டு திரும்ப வேற ஒரு போர்ட் வாங்கி தொழில் செய்யத்தான் போறேன்.. அது கட்டாயம் வெற்றிகரமாக அமையதான் போகுது… அப்ப என்கிட்டயும் போதுமான அளவு பணம் இருக்கத்தான் போகுது உங்களுக்கும் ஒரு கஷ்டம் வரும்.

 அப்ப வந்து நீங்க என்கிட்ட பணம் கேட்டு நிக்க கூடாதுன்னு வேண்டிக் கொள்ளுங்க..

 இவ இந்த வீட்டோட மூத்த மருமக நாளைக்கு குமரனுக்கும் கல்யாணம் நடக்கும் அவன் பொண்டாட்டியும் இந்த வீட்டுக்கு வருவா இப்ப நீங்க இந்த வீட்ல அதிகாரம் பண்ணுற மாதிரி. அப்பவும் பண்ணி பாருங்க அவன் குணம் தெரியும் உங்களுக்கு.. இனி மாமியார் மருமகள் நாத்தனார் சண்டைனு இனி இந்த வீட்டில் பஞ்சாயத்து வரக்கூடாது.. இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும்.. ” என்று கூறிவிட்டு அவன் குளிக்க சென்று விட்டான்..

 எப்பொழுதுமே அமைதியான ராகவ் இன்று இந்த விஷயத்தில் தலையிட்டு பேசியது மட்டுமல்லாமல் தாயிடம் மனக்குமுறல்களையும் கொட்டி விட்டு சத்தம் போட்டு சகுந்தலாவிடமே பேசி விட்டு சென்றதால் சகுந்தலாவும் வாய் திறந்து எதுவும் பேச முடியாத நிலையில் நின்றார்..

[ எப்புடி பேச முடியும்.. பணம் தின்னி கழுகுகிட்ட பணம் இருக்கிறது இவனுக்கு எப்புடி தெரியும். யார் சொல்லி இருப்பான்னு யோசனையில் சகுந்தலா இருந்தார்..]

 அப்பொழுது கடலுக்குச் சென்ற குமரனும் நடேசனும் வந்து சேர்ந்தார்கள் வீட்டுக்கு..

 வரும்பொழுது நடேசன் போதையில் தான் வந்தார்..

 வீட்டுக்குள் வந்தவர் நிலாவைப் பார்த்து யார் என்று கேட்டார்?..

 நேற்று இரவு நிலா வீட்டுக்கு வரும் பொழுது நடேசன் அப்பொழுது போதையில் இருந்தபடியால் ராகவ் நிலாவின் திருமணம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை..

 இன்று நிலா எழுந்து அறையை விட்டு வெளியே வருவதற்கு முன்பாக நடேசனும் குமரனும் கடலுக்கு தொழிலுக்கு சென்று விட்டு தற்பொழுது போதையில் வந்திருப்பதால் அவருக்கு வீட்டில் நடப்பது என்னவென்று தெரியாமல் போய்விட்டது..

 அவர் கேள்விக்கு சகுந்தலா பதில் சொல்லு முன் அன்றைய அவரது உழைப்பின் பாதியை சகுந்தலாவிற்கு கொடுத்தார்.. தாயின் கைக்கு போய் சேர்ந்த அடுத்த நொடியே குமரன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சூதாடுவதற்கு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்..

 அப்பொழுது வீட்டின் நிலையையும் தினமும் நடப்பதையும் ஓரளவுக்கு நிலா தெரிந்து கொண்டாள்..

 சகுந்தலாவே சென்று இரவு சமைப்பதற்கு தேவையான அரிசி மற்றும் தேவையான பொருட்களை கடையில் வாங்கிக் கொண்டு வந்து நிலாவின் கையில் கொடுத்து இரவு சமையலை முடிக்குமாறு கூறிவிட்டு சென்றார் சகுந்தலா..

 சமையல் அறையில் தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் இல்லாததால் அதை சிரமமாக நினைக்காமல் நடேசன் எடுத்து வந்த மீனை சுத்தம் செய்து 

அங்கிருந்த அம்மியில் மசாலா அரைத்து சமைக்க ஆரம்பித்தாள் நிலா..

அவள் நினைத்தபடி அவ்வீட்டில் சமைக்க ஆரம்பித்துவிட்டாள்.. அவள் சமைத்த உணவை அனைவரும் ருசித்து உண்ண வேண்டும் என்று நினைத்தது நிறைவேறியதால் மகிழ்ச்சியாகவே சமைத்து முடித்தாள்..

 நிலா சமைத்து முடித்ததை கூறியதும் சகுந்தலா நேரத்தை பார்த்துவிட்டு உணவுகளை எடுத்து அந்த ஹாலில் வைக்குமாறு கூறினார்..

 நடேசன் இன்றளவும் கடைப்பிடித்து வரும் பழக்கம் தினமும் இரவு உணவை அனைவரும் ஒன்றாகவே அவ் வீட்டில் உண்பார்கள்..

 இது எப்பொழுதும் வழமையான ஒன்றாகும்..

 அவளும் அனைத்து உணவுகளையும் எடுத்து வந்து தரையில் வைத்ததும் அவரவர்கள் உணவு தட்ட எடுத்து வைத்து அவரவர் தினமும் இருக்கும் இடத்தில் சம்மணம் இட்டு அமர்ந்து இருந்தார்கள்..

 இந்த பழக்கத்திற்கு நிலா புதியவள் என்பதால் ராகவ் அவனுக்கு அருகில் இருக்கும் இடத்தில் நிலாவை அமர வைத்தான்..

 அப்பொழுது எடுத்துச் சென்ற பணமும் தீர்ந்து உணவு நேரமும் வந்ததை தெரிந்த குமரன் சரியாக அவனது தட்டில் உணவு எடுக்கும் பொழுது வந்து சேர்ந்தான்..

 போதை சற்று குறைந்த நேரம் பார்த்து சகுந்தலா ராகவ் மற்றும் நிலாவின் திருமணத்தை பற்றி கூறி இருந்தார் ..

 அதைக் கேட்ட நடேசன் சற்று மகிழ்ந்து போனார் என்பது உண்மைதான்..

 புது மருமகளின் சமையலை நடேசன் உண்மையில் ரசித்து தான் உண்டார்..

 ஆனால் அதை வெளியே சொல்லி பாராட்டி பழக்கம் இல்லை..

 சகுந்தலாவோ சுவாதியோ சமைத்தால் சில நேரங்களில் உணவில் உப்பு கூடி சுவையில் மாற்றம் இருந்தாலும் நடேசன் உடனடியாக முகத்திற்கு நேராக திட்டி உணவு தட்டை வீசிவிட்டு செல்பவர் தான்..

 ஆனால் இதுவரை அவர்கள் சமைத்ததையோ இன்று நிலா சமைப்பதையோ மட்டும் பாராட்ட முன்வரவில்லை..

 ஒரு மனைவி கணவனின் மனதில் உடல் பசியை தீர்த்து சுகத்தை கொடுத்து மனதில் இடம் பிடிக்கிறாளோ இல்லையோ ஆனால் வயிற்றுப் பசியை சமையல் ருசியின் மூலம் காட்டிவிட்டால் அவள் நீக்கமற கணவனின் மனதில் நிறைந்து விடுவாள் என்பது ஓர் உண்மை..

 அனைவரும் திருப்தியாக உணவை உண்டார்கள்..

 நிலா உணவு உண்பதை நடேசனும் ராகவும் அடிக்கு ஒரு தரம் பார்த்து வைத்தார்கள் ஆனால் எதுவும் பேசவில்லை..

 சாப்பிட்டதை எடுத்து சுத்தப்படுத்தி சமையல் அறையும் சுத்தப்படுத்திவிட்டு மனதிற்கு திருப்பியா சமைத்து உண்ட சந்தோசத்தில் நடேசன் சகுந்தலா என வீட்டில் அனைவரும் இருக்கும் பொழுது இந்த வீட்டை மாற்றி அமைக்கும் அவளது திட்டத்தை பற்றி மொத்த செலவையும் அவளே ஏற்று செய்வதாக கூறினாள் நிலா..

 அவள் பேசியவற்றை கேட்டதும் அன்று காலையில் தான் இதைப்பற்றி இனி பேச வேண்டாம். என்று திட்டி விட்டு சென்றதை மீறி அவள் பேசிய கோபத்தில் அவளது கையைப் பிடித்து யாரும் எதிர்பாராத வண்ணம் அறைக்குள் இழுத்துச் சென்றான் ராகவ்..

 வீட்டினர் அனைவரின் முன்பும் அவன் செய்தது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் ஏதோ சந்தோஷமான மன நிலையில் இருந்ததால் அதை பெரிது படுத்தாமல் ராகவை பார்த்து என்னவென்று கேட்டாள்..

” ஏய் நீ என்ன குட்டி பாப்பா வாடி?.. ஒரு சபையில நிறைய ஆட்கள் இருக்கும்பொழுது சரி வீட்டிலும் சரி எப்படி சாப்பிடணும்னு தெரியாதா?.. நீ சாப்பிடும்போது மென்று சாப்பிடாமல் அது என்ன பச் பச் பச் சத்தம் எழுப்பி சாப்பிடுற.. உனக்கு பக்கத்தில் இருந்து சாப்பிடுறவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசித்து பார்த்தியா?.. ஒரு வாய் சோறு சாப்பிடுவதற்கு ஒருவாய் தண்ணி குடிக்கிற நீ.. தண்ணியும் சோறும் ஒரே டைம்ல வயிற்று உள்ள போனால் எப்படி சாப்பாடு செரிமானம் அடைந்து உடம்பில் எப்படி சத்து சேரும்… அப்புறம் இப்படியே நோஞ்சான் குஞ்சு மாதிரி இருந்தா என்னை எப்படி தாங்குவ?..

அறிவு வேணாம்?. இப்போ உனக்கு வயசு 19.. இப்ப சிக்குனு ஃபிகரா இருக்கிற நீ. இதே மாதிரி சாப்பாடு பழக்கத்தை தொடர்ந்து வச்சிருந்தேன்னு வை இன்னும் ஐந்து வயசு போனால் இன்னும் மூணு மடங்கு சைஸ் ஆகிடுவடி.. அப்புறம் எல்லா பக்கமுமே சதை தொங்கும் ஆன்டி ஆயிடுவ..” என்று அவனுக்கு சொந்தமான அவளை கண்ணால் தலை முதல் கால் வரை வருடி பார்த்து கூறினான்..

 அவனின் பார்வையை தாங்க முடியாமல் கூச்சத்தில் நெளிந்தபடியே நின்றாள் நிலா..

 நான் உன்னை வாட்ச் பண்ணின மாதிரி.. அப்பாவும் உன்னை பார்த்துட்டு தான் இருந்தார்.. நீ சாப்பிடும் போது இனி சத்தம் வரக்கூடாது.. அப்புறம் சாப்பிட ஆரம்பிச்சு முடியிற வரைக்கும் அடிக்கடி தண்ணீர் குடிக்கிற இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவருடைய வாயாலயே திட்டுவாங்குவ..”

                ” நான் இன்னைக்கு காலையில சொன்னேன் தானேடி.. இந்த வீட்டு விஷயத்தை பத்தி பேசாத நீ. அதை வீட்டுக்காரங்க பார்த்துக் கொள்வாங்க என்று..

 நான் என்ன சொன்னாலும் கேட்க கூடாது என்ற முடிவில் இருக்கியா நீ?..

 எங்க அம்மா கிட்ட காசு இல்ல அவங்க கஷ்டப்படுறாங்கனு உனக்கு தெரியுமா?..

 உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் இனி தலையிட வேண்டாம்.. நீ இந்த வீட்டில இருக்க முடிஞ்சா இரு..

 வீட்டை மாத்துறேன் அதை மாத்துறேன்னு உன்கிட்ட பணம் இருக்கின்றதை காட்டி நீயா போய் அவங்க கிட்ட சிக்கிடாத. உன் பணம் மொத்தமுமே காலி பண்ணிடுவாங்க..

 நான் இங்க பிறந்து இதே வீட்ல வளர்ந்தபடியால் எனக்கு இதெல்லாம் கஷ்டமா தெரியலை.. ஆனா என்னை மாதிரி நீங்க என்ன ஏழையா?.. பணக்கார வீட்டு சீமாட்டி..

 இந்த வீட்டு அட்மாஸ்பியர்ல இருக்க முடிஞ்சா இரு.. இல்லை என்றால் நீ போய்கிட்டே இருக்கலாம்..

 நீ என்னை விட்டு போனா உன்னை தேடி வரவும் மாட்டேன்..

 உன் நினைப்பில் தாடி வச்சிட்டு தெரு தெருவா சுத்துவேன்னு நீ நினைக்க தேவையில்லை.. ” என்று கூறி அறையை விட்டு வெளியேறினான்..

 ராகவ் வெளியேறியதும் தான் அவன் கூறியவற்றை நினைக்க ஆரம்பித்தாள்..

மதி பாட்டியும் அவனும் ஒரே மாதிரி சொல்வதால் கொஞ்சம் இந்த வீட்டை மாற்றியமைப்பதை தாமதிக்கலாம் என்று இறுதியில் முடிவெத்தாள் நிலா..

நான் வாத்திக்கு தொல்லையா?..

என்ன வார்த்தை சொல்லிட்டான்.. இருக்க விரும்பினால் இரு இல்லன்னா போ என்று சொல்லிடானே..

இப்ப பிகர் அப்புறம் ஆன்ட்டி ஆகிடுவேன்றான்..

பிடிக்கலயாம் ஆனா மேல இருந்து கீழ வரைக்கும் உத்து உத்து பார்ப்பானாம்..

திருட்டு வாத்தி வரட்டும் இன்னைக்கு..

ஆனாலும் இந்த வாத்தியை பிடிக்கதான் செய்து..” என்று அவனின் பேச்சையும் அவனையும் பற்றியே நினைத்திருந்தாள் நிலா..

 அறையை விட்டு வெளியே வந்தவன். இன்று அவனது வழமையான குடியை குடிக்க கூடாது என்று நினைத்து இருந்தான்..

ஆனால் காதலின் ஆரம்ப புள்ளி செய்த சதியால் அவளை உத்து உத்து பார்த்ததால் அவள் ஏற்றிய போதையை பியர் போதையின் மூலம் அந்த போதையை போக்க நினைத்தான்..

ஆனால் முடியுமா?..

இரண்டு பெக் உள்ளே போனதும் அவன் மறக்க நினைத்த அவள் முகம் பிரகாசமாக ஒளி வீசியது..

வார விடுமுறை வேறு இரண்டு பெக் நான்கு ஆகியது.. தள்ளாடி தள்ளாடி வீட்டுற்கு வந்து அறைக்குள் சென்று கதவை பூட்டியவன்..

எதிரே புது மனைவி கால்களை குறுக்கி தலையணை அணைத்து படுத்திருந்த அழகு அவனை அவள் பக்கம் இழுக்கவும்


அவனும் எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லாததால் அவள் மீதே விழுந்தான்..

நாளை நடப்பது அறிந்தால் வாழ்வு சுவாரசியம் இன்றி போய்விடும்..

Advertisement