Advertisement

ஓம் நமச்சிவாய.

 மலரை மன்னிப்பாயா 11

 நிலா பேசியதை கேட்காமல். அவளை திட்டி பேசிவிட்டு அவனது பைக்கில் காலேஜுக்கு வந்து விட்டான் ராகவ்..

 எப்பொழுதுமே ஒருவர் கூட இருந்து அவர்கள் மற்றவருக்கு ஏதாவது ஒன்றை செய்து அவர்களின் கவனத்தை திருப்பியபடி இருப்பார்கள்.. அப்படி இருப்பவர்கள் திடீரென்று இல்லாமல் போனால் உடனடியாக வித்தியாசம் புரிவதில்லை..

 கடந்த ஐந்து ஆறு நாட்களாக நிலா காலேஜுக்கு வராமல் இருந்தது ஏனோ அவனுக்கு மகிழ்ச்சி என்றுதான் நினைத்தான். ஆனால் அவன் அதை உள்ளார்ந்த மகிழ்ச்சியாக அனுபவித்தனா என்பது அவனுக்கே தெரியாது..

 அதே போன்று தான் இன்றும் அவள் காலையில் அவன் மீது இருந்து எழுந்த கோலத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டான் என்பதும் அவனுக்கு தெரியாது..

 காதல் சார்ந்த சில்மிஷங்கள் ஊடல் கூடல் போன்றவை அவனுக்கு எட்டாத தூரம்..

 அவனது வகுப்பு நேரத்தில் அவன் கிளாஸில் இருக்கும் போது ஏனோ அவனை அறியாமல் நித்தியாவின் பக்கத்தில் இருக்கும் நிலாவின் இருக்கையை நொடிக்கு ஒரு முறை திரும்பி பார்த்தான் என்றால் மிகையாகாது..

 ஏன் எதற்கு பார்க்கிறான். என்று அவன் அலசி ஆராயாமல் போன போக்கில் அந்த இடத்திலேயே நொடி நேரம் அவனது பார்வை தேங்கியிருந்தே மற்றவரிடம் பார்வை சென்றது..

 ராகவ் வீட்டிலோ நிலா அனைவரும் அவரவர்கள் வேலைக்கு சென்றதும் அவள் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களின் அறையில் அமர்ந்திருந்தாள்..

இன்னும் சில நாட்களுக்கு காலேஜ் செல்லும் எண்ணம் நிலாவிற்கு இல்லை..

 வீட்டில் அவள் ஓரளவுக்கு பொருந்தினால் மட்டுமே அவளால் இங்கிருந்து காலேஜுக்கு எவ்வாறு செல்வது என்பதையும் தீர்மானித்த பின் தான் அதற்கான முடிவை அவள் எடுப்பாள்..

 இந்த வீட்டை சகல வசதிகளுடனும் கூடிய வீடாக மாற்ற அவர்களிடம் கலந்து ஆலோசிப்பது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தால் அதற்கு மாற்று வழியாக என்ன செய்வது என்பதை சற்று தீவிரமாக யோசித்தாள்..

 உடனே கைபேசியை எடுத்து பாட்டிக்கு அழைப்பு விடுத்தாள்..

 பாட்டி இன்னும் நித்தியாவுடன் கல்யாண மண்டபத்திற்கு அருகே வாடகைக்கு எடுத்த வீட்டில் தான் இருக்கிறார்..

 நித்யா காலேஜ் செல்லாமல் நிற்பதை கண்டு பாட்டியே அவளை நான் தனியாக இருப்பதாக கூறி காலேஜுக்கு அனுப்பி விட்டார்..

 காலையில் அருகே இருந்த கடையில் உணவை வாங்கி நித்தியாவும் உண்டு விட்டு பாட்டிக்கும் கொடுத்துவிட்டு தான் சென்றாள்..

 திருமணம் ஆகிவிட்டது இனி அவளது விருப்பத்திற்கு அவள் எதுவும் செய்ய இயலாத காரணத்தால் ஊரில் பாட்டிக்கு துணையாக அவள் நியமித்த அந்த பெண்ணை நேற்று இரவே சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தாள்..

 அவர் வந்து பாட்டி தங்கி இருக்கும் அந்த வீட்டில் ஒரு மாத வாடகை பணம் கொடுப்பதால் அதுவரை அங்கே இருந்து விட்டு ஊருக்கு செல்வது போன்று திட்டமிட்டு பாட்டிக்கு துணையாக இருக்க வரவழைத்திருந்தாள்..

 பாட்டிக்கு அழைப்பு விடுத்தவள் மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்.

” ஹலோ பாட்டி நான் நிலா பேசுறேன்.. “

” சொல்லுடா குட்டி உன்னோட நம்பர் தெரியாதா என்ன?. நீ இன்னும் காலேஜுக்கு இன்னைக்கு போகலையா குட்டி?. “

” இல்ல பாட்டிமா இங்க இருந்து எப்படி போறதுன்றதை திட்டமிடனும் எனக்கு கொஞ்சம் இங்க வேலை இருக்கு அதை முடிக்கணும்.. இந்த முறை அரியர் வந்தாலும் பரவாயில்லை இங்கே எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு தான் காலேஜ் போவதை பற்றி யோசிக்கணும்..”

” சரிடா குட்டி அதுவும் சரிதான் வீட்ல படிக்கிறது பற்றி என்ன சொல்கிறார்கள் என்று அவங்க கிட்டயும் கலந்து பேசி முடிவெடு.. நான் சொல்லணும் இல்ல நீ எங்கிருந்தாலும் பிழைக்க கூடிய பிள்ளை.. அது நீ வாழ போய் இருக்கிற வீடு இனிமே தனியா நீ எதுவும் முடிவெடுக்க கூடாது.. மாப்பிள்ளையிடம் முதல் நீ இதை கலந்து பேசிவிட்டு அப்புறம் பெரியவங்க கிட்டயும் கலந்து பேசி அவங்க சொல்ற முடிவை கேட்டு தான் அப்புறம் நீ முடிவு எடுக்கணும்..” என்றார் பெரியவராக. பேத்தி பிழைத்துக் கொள்வாள் என்று தெரியும். ஆனாலும் சிறு கவலை அந்த வீட்டை பார்த்து. அங்கு அவள் எவ்வாறு வாழ்வாள் என்பது மட்டும்தான் தற்போது இருக்கக்கூடிய கவலை அவருக்கு..

” சரி பாட்டி இப்போ என்ன விஷயம்னா? அவர் உங்க மகனுக்கு கொடுக்க வேண்டிய ஐந்து லட்சத்தை வட்டியும் முதலுமா நானே அவருக்கு செட்டில் பண்ணிடலாம் என்று இருக்கிறேன் பாட்டி.. அந்த கடன் தொல்லையில் இருந்து அவர் விடுவிக்கணும்.நாம இனி யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியது இல்லை என்பதை அவர் மனதில் பதிய வைத்துவிட்டால் போதும் அப்புறம் அவர் என்னோட வாழ்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்..” என்றாள்.

பாட்டியோ பண விஷயத்தில் மிகவும் சங்கடப்பட்டார். ” இருக்கிற சொத்து பத்து பணம் நகை மொத்தமும் உனக்கு உங்க தாத்தாகள் கொடுத்தது குட்டி

 அது அனைத்துமே உனக்கானது மட்டும்தான்.. பாதுகாத்து பத்திரமா உன் கையில சேர்க்க வேண்டியது மட்டும் தான் என்னோட ஒரே கடமை.. இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னு தெளிவா நீ முதல் புரிந்து கொள்ளணும்..

இப்பதான் கல்யாணம் நடந்திருக்கு உங்களுக்கு.. மாப்பிள்ளைக்கு விருப்பமில்லாமல் உன் அப்பா கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருக்கான்.. அதனால இப்போ உன்மேல் கோவமா இருக்கார்..

திரும்பவும் அந்த பணத்தை பத்தி அவர்கிட்ட பேசி உறவுக்கு இடையில் பணத்தை கொண்டு வந்து அதனால ஏதாவது பிரச்சினை வர வாய்ப்பு இருக்கு குட்டி இதை நீ கொஞ்சம் யோசிக்கணும்..

உன்கிட்ட பணம் இருக்கு அதை நீ அவருக்கு கொடுத்து கடனை அடைக்கிற அது நமக்கு சரிதான்.. ஆனா அதை அவர் நீ பணத் திமிரை காட்டுற என்று தவறாக எடுத்துவிட்டால்?.. என்ன பண்ணுறது.. இருக்கிறதும் இல்லாமல் முதலுக்கே மோசமா போயிரும்.. இப்ப அங்க என்ன சூழ்நிலை இருக்கின்றது வைத்து தான் ஒவ்வொரு ஸ்டேப்பும் ரொம்ப கவனமா நீ எடுத்து வைக்கணும்.” என்றார் மதி பாட்டி..

” இப்போ இந்த வீட்டை திருத்த வேண்டியது இப்ப முக்கியமில்லையா பாட்டி? ” என்றாள் நிலா..

” இப்ப நான் பொதுவாவே உனக்கு ஒன்னு மட்டும் தான் சொல்லுவேன் குட்டி. அங்க உனக்கு மாமா மாமியார் மச்சினன் நாத்தனார் புருஷன் எல்லாருமே இருக்காங்க..

அங்க அவங்க குணம் எப்படி. அவங்க உன்னை எப்படி நடத்துறாங்க? என்பதை கொஞ்சம் பொறுத்து இருந்து நீ பார்த்து தெரிஞ்சுக்கோ.. மெதுவா அவங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு அதையும் அந்த குடும்ப சூழ்நிலையும் என்னனும் தெரிஞ்சுக்கோ. அவங்களால் பணம் புரட்டி அந்த வீட்டை திருத்த முடியலையா?. இல்ல என்ன காரணம் என்றதையும் நாம தெரிந்து கொண்டால் மட்டும்தான் அடுத்து நாம என்ன செய்யலாம் என்று தீவிரமா யோசிச்சு உன் புருஷன் கிட்டையும் கலந்த ஆலோசித்து சரியான முடிவு எடுக்கலாம்..

 எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பணத்தை கொண்டு வந்து கடனை அடைகிறேன். வீட்டை திருத்துறேன்னு முன் வந்தால் அதை பணத்திமிரா மட்டுமே பார்ப்பாங்களே தவிர நீ நல்லது செய்ற என்பது அவங்க மனசுல பாதியாது குட்டி..

நீ பணக்காரி அவங்க இல்லாதப்பட்டவங்க என்ற தாழ்வு மனப்பான்மை அவங்க மனசுல பதிஞ்சிட்டுன்னா.. அப்புறம் நீ அந்த வீட்டில் வாழ்ற வாழ்க்கை மன நிம்மதி மகிழ்ச்சி சந்தோசம் போன்ற நல்ல உணர்வுகள் உனக்கும் தனிப்பட்ட முறையிலும் அவர்களுக்கு இடையில் உனக்கும் ஏற்படுறது கஷ்டமாகிவிடும்…” என்றார் பாட்டி..

 அதன் பின் சில விஷயங்களை பற்றி பேசிவிட்டு நிலா கைபேசி அழைப்பை துண்டித்து விட்டாள்..

 பாட்டி சொன்னவற்றையும் யோசித்தாள்.. இறுதியில் அனைவரும் மாலை நேரத்தில் வந்ததும் இதைப் பற்றி கேட்பது என்று முடிவெடுத்து விட்டாள்..

 அவர்களை வைத்து முகத்துக்கு நேரா கேட்டு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால் நல்லது என்று நினைத்தாள்..

 கேட்காமல் மனதிலேயே வைத்துக் கொண்டு அவளும் இந்த வீட்டில் பொருந்தி போவதற்கு கஷ்டப்பட்டு என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் மனதிலேயே போட்டு வருத்திக்கொண்டு அதுவும் வேறு ஒரு பெரிய பிரச்சினையை கொண்டு வந்து விடும் என்று யோசித்து இறுதி முடிவை எடுத்தாள்..

 கைபேசியில் பேசிவிட்டு அறை விட்டு வெளியே வரவும்.. சகுந்தலா வேலை செய்யும் இடத்திலிருந்து அன்றைய நாளுக்கான கறிக்கு மீன் கொடுத்து அனுப்பியதை சுவாதி வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது..

” சுவாதி நில்லு மீன் என்கிட்ட கொடு நான் துப்புரவு செய்து சமைக்கிறேன்.. நீ மற்ற வேலை எல்லாம் பண்ணிட்ட தானே நீ போய் ரெஸ்ட் எடு.. ” என்றாள் நிலா..

” உங்களை மாதிரி இங்க சமையலுக்கு வேலைக்காரி வச்சி செய்றதெல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை.. அந்த அளவுக்கு வசதியும் எங்க கிட்ட இல்லை.. எங்க வேலையை நாங்களே பண்ணிக் கொள்வோம்.. நான் திரும்பத் திரும்ப சொல்றேன் இந்த வீட்டிலயோ என்னோட விஷயத்திலயோ நீ தலையிட தேவையில்லை.. நீ வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு போக வேண்டியதுதான்.. ” என்று கூறிவிட்டு சென்றாள் சுவாதி..

 முதல் நாளிலேயே அனைவரின் குணங்களையும் தெரிந்து கொண்டவளுக்கு மிகவும் மலைப்பாக இருந்தது..

Advertisement