Advertisement

அதனால நீ குடிக்கவேணாம்.. என்ன அங்க இறக்கி விடு. இல்லன்னா குதிச்சிடுவேன் மச்சான்.. உனக்கு எது வசதி எனக்கு கை கால் உடைய வேண்டுமா?.. இல்ல நான் ஒரு சின்ன பெக் போட்டு நல்லபடியா வீட்டுக்கு போய் சேரணுமா?.. உனக்கே தெரியும் நான் சொன்னா செஞ்சிருவேன்னு அதனால யோசிச்சு முடிவெடு மச்சான்.. என் அம்மாக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியல. அந்த பேயை சமாளிக்க வேணாமா?..

           எனக்கு நாலு வார்த்த எடுத்து பேசுறதுக்கு கொஞ்சம் தைரியம் வேணும் மச்சான்.. நான் ரொம்ப நொறுங்கி போயிட்டேன் டா .. நான் குடிச்சு முடிச்சதும் என்னை பத்திரமா அழைச்சிட்டு போய் என் வீட்டு பக்கத்துல என்னை விட்டுடு நீ உடனே போயிடு. அவ்வளவுதான் இந்த நண்பனுக்காக இதை கூட பண்ண மாட்டியா?. மச்சான்..” என்று அவன் தினமும் குடிக்கும் ஓர் பெக் அடிக்க ஆயிரம் காரணம் சொன்னான்..

 ரமேஷும் அவன் தினமும் குடிக்கும் ஒரு பெக் தானே என்று நினைத்து சாதாரணமாக பார் முன்பு நிறுத்தினான்..

 ஆனால் பார் உள்ளே போனதும் அவனது கட்டுப்பாடெல்லாம் தளர்ந்து ஒன்று மூன்றாகி மூன்று நான்காகியது.. சும்மாவே அவ்வளவு உளறி கொட்டியவன்.. ரமேஷ் காதை முடும் அளவிற்கு மோசமாக நிலாவையும் வரதனையும் திட்டி பேசினான்..

 இதற்கு இடையில் ரமேசின் அம்மா மற்றும் மனைவியிடம் இருந்தும் மாறி மாறி ரமேசுக்கு அழைப்பு வந்த படி இருந்தது..

 இதைப் பார்த்து அவனுக்கு இன்று வீட்டில் நடக்க போகும் திட்டையும் நினைத்து சற்று கவலை கொண்டபடியே அதட்டி உருட்டி கைத்தாங்களாக ராகவை அழைத்து வந்து பைக்கில் ஒழுங்காக அமரவைத்து வீட்டுக்கு அருகே அழைத்து வந்துவிட்டான்.. இருந்தாலும் நண்பனை அப்படியே விட்டு செல்ல விரும்பாமல் பைகில் இருந்து இறக்கி கை தாங்கலாக ஏதேதோ தள்ளாடியபடி உளறிகொண்டு நடந்தவனை பிடித்துக் கொண்டு அவனது வீட்டு முற்றத்திற்கு வந்தான்..

 ராகவை அழைத்து வந்ததும் யாரேனும் இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்த ராமேசின் கண்ணில் அதுவரையும் சகுந்தலா பிடித்து தள்ளி விட்டதும் எழுந்து நின்ற அதே இடத்தில் இன்னமும் நின்றாள் நிலா..

அவளை பார்த்ததும் அன்று கோவிலில் அவளை பார்த்ததை வைத்து நண்பன் சொன்ன அவனது புது மனைவி என தெரிந்து கொண்ட ரமேஷ். அவளின் அருகே அவனை அழைத்துச் சென்று.

 ” எம்மா தங்கச்சி என்ன நடந்தாலும் நீ தான் சமாளிச்சு இவனை பொறுப்பா பார்த்துக் கொள்ளனும்.. இந்த குடியை நீயே நிறுத்திடு. உன் புருஷனை உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன் மா.. இனி நீயே பார்த்துக்கோ நான் போறேன் வீட்டுக்கு.. ” என்று கூறி அங்கிருந்து வெளியேறி விட்டான்..

 நிலா நினைத்தால் ஒரு நிமிடம் அவர்கள் அனைவரையும் உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து சென்று இருக்கலாம்.. ஆனால் அதன் பின் அவளுக்கு இன்னொரு திருமணமோ வாழ்க்கையோ இல்லை என்பது ஓர் விஷயம் என்றால்.. அவள் தேடி வந்த சொந்தம் அனைத்தும் இங்கே இருக்கவும் அதை விட்டு செல்ல விரும்பாமல் கணவன் வந்து அழைக்கும் வரை அங்கே நின்றாள்..

 ஆனால் அவனும் நிதானம் இல்லாமல் குடிபோதையில் வந்திருப்பதால் அவன் எங்கே அவளை விட்டினுள் அழைத்துச் செல்லப் போகிறான். என்று நினைத்து ராகவ் கீழே விழுந்து விடாமல் அவனை ஒரு கையில் அணைத்து பிடித்தவாறு அங்கே நின்றாள்..

 அப்பொழுதுதான் அவளை நிமிர்ந்து பார்த்த ராகவ் ” ஏய் குட்டி பிசாசு நீ இங்கயே வந்துட்டியா?. என்னை தொல்லை பண்ணுறதுக்கு.. ஏண்டி என் உசுர எடுக்கிற நான் நிம்மதியா இருக்கிறது உனக்கு பிடிக்கவே இல்லையா?. ” என்று அவளைக் திட்டிக் கொண்டிருந்தான் ராகவ்..

 மகனின் சத்தத்தை கேட்டு சகுந்தலா மற்றும் அவர்கள் குடும்பம் அனைத்தும் அங்கே வந்துவிட்டது.. அதனை தொடர்ந்து சாரதாவும் வந்துவிட்டார்..

 வெளியே வந்த சகுந்தலா நேராக நிலாவின் அருகே சென்று அவளின் அணைப்பிலிருந்த மகனை விடுவித்து தன்னருகே அழைத்து கீழே இருக்க வைத்து குமரனை தண்ணீர் எடுத்து வருமாறு கூறிவிட்டு தண்ணீர் வந்ததும் அவனது தலையில் ஊற்றி சற்று அவனது போதையை தெரிய வைத்தாள்..

 போதை தெளிந்த கோபத்தில் தண்ணீர் பக்கெட்டை தட்டி விட்டு எழுந்து நின்றான் ராகவ்..

” ஏம்மா உனக்கு இப்ப என்ன பிரச்சனை..?.. ” என்றான் அக்ரோசமாக..

” எவளோ ஒருத்தி வந்து இங்க நின்னு நீ தாலி கட்டி கல்யாணம் பண்ணிட்டியாம்னு சொல்லி கூத்தடிக்கிறா?. நீ என்னடா காலைல போனவன் இப்பதான் ஆடி அசஞ்சி தள்ளாடிட்டு வர..” என்று அவனுக்கு அம்மா என்று நிரூபிக்கும் படி ஹய் பிச்சில் கத்தினார் சகுந்தலா..

” எம்மா நீயும் சரி இங்க உள்ளவங்களும் சரி நல்லா கேட்டுக்கோ, இவ எவளோ ஒருத்தி இல்ல நான் தொட்டு தாலி கட்டுன என் பொண்டாட்டி.. உன்ன சமாளிக்கிறதுக்காக ஆறுதலா சொல்லிக்குவோம்னு நினைத்து நான் கல்யாணம் பண்ணலை என்று சும்மாதான் சொன்னேன்.. இப்புடி நடக்கும்னு எதிர்பார்க்கல இல்லன்னா நான் அப்பவே வந்து உண்மையைச் சொல்லி இருப்பேன்.. இனி நானும் என் பொண்டாட்டியும் இங்கதான் இருப்போம்.. ” என்று விட்டு போதை ஓரளவிற்கு தெளிந்ததும் ” வாடி உள்ள.” என்று அவளது கையை பிடித்து அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்..

 அவளும் மறு பேச்சு பேசாமல் அவன் மீண்டும் வளது கால் எடுத்து வைத்து வீட்டுக்குள்ளே சென்றாள்..

 திருமண அலைச்சலால் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த ராகவிற்கும் நிலாவிற்கும் வயிறு பசி வந்தது..

 அவனே அறையை விட்டு வெளியேறி வந்து சமையலறையில் இருந்த பாத்திரங்களை உருட்டி குறைவான அளவு இருந்த சோற்றை வைத்து மீன் குழம்பை விட்டு அந்த உணவு தட்டை எடுத்துக் கொண்டு அறைக்குள்ளே வந்தான்..

 சேர்த்து எடுத்து வந்த மறு தட்டில் பாதி உணவை எடுத்துவைத்து.. மற்ற உணவு தட்டை மேசையில் வைத்து விட்டு அவளை சாப்பிடும் படி அழைத்தான்..

 அவளும் மறு பேச்சு பேசாமல் வயிறு பசி தாங்காமல் அந்த உணவை கால் வயிறு உண்டு விட்டு பக்கத்தில் அவன் கை கழுவி வைத்த தட்டையும் எடுத்துக் கொண்டு சமையலறையில் இரு தட்டையும் கழுவி வைத்து விட்டு மீண்டும் யாரையும் பார்க்காமல் உள்ளே வந்து விட்டாள் நிலா.

அவள் அறைக்குள் வரவும் ராகவ் வேட்டியில் இருந்து லுங்கிக்கு மாறினான்.. சார்ட் கழட்டி விட்டு மேலே பெனியனுடன் அவனுக்கென்று இருந்த ஒரு பாயையும் தலைவனையும் எடுத்து ஒரு ஓரமாக விரித்து அவன் படுத்து விட்டான்..

 இனி என்ன செய்வது என்று தெரியாமல் அவளின் நகைகளை கழட்டி பத்திரமாக பெட்டியில் வைத்துவிட்டு புடவை மாற்ற வேறு வழி இல்லாமல் அதே புடவையில் அறையின் ஓர் மூலையில் சுவற்றில் சாய்ந்து அமர்த்திருந்தாள் நிலா…

பல கஷ்டங்களை கடந்து வந்த போதும் அவள் இதுவரையும் அழுததில்லை. இன்று அவளுக்கு ஏற்பட்ட துக்கம் அவளை அறியாமலே கண்ணீராக வெளிபட்டுவிட்டது..

 அறையில் புதிதாக ஒரு பெண் இருப்பதும் அவள் அழுவது சிறு வெளிச்சத்தில் அவள் உடல் குலுங்குவதை வைத்து தெரிந்துகொண்டு படுக்கையில் இருந்து எழுந்த ராகவ்

” ஏய் இது என்ன எழவு வீடா ஒப்பாரி வச்சிட்டு இருக்க. வாய மூடுடி.. மனுசனை கொஞ்சம் கூட நிம்மதியா தூங்க விடுறது இல்ல.. ” என்றான் எரிச்சல் மிகுதியில்..

முதலிரவு அறை பேருக்குத்தான் இன்று திருமணம் ஆகிய அவர்களுக்கு முதல் இரவு.. ஆனால் அறை என்னவோ சாதாரணமாகத்தான் இருந்தது..

 அழுத சத்தம் வெளியே கேட்கவில்லை என்றாலும் அவள் அழுகையை நிருத்தவே அவன் திட்டினான்..

” நீ ஏண்டி அழுற நான் தான் இனி உன்னை கட்டிக்கிட்டு தினமும் அழ வேண்டி இருக்கும் போல இருக்கு.. அதுதான் உங்க அப்பன் காரியத்தை பிளான் பண்ணி முடிச்சிட்டானே.. ” என்றான் ராகவ்..

” யோவ் வாய மூடிட்டு நீ பேசாம தூங்க வேண்டியது தானே.. யாரும் உன்னை பிடித்து வைத்திருக்கிறாங்களா என்ன?.. அந்த ஆள் பத்தியும் அந்த ஆளோட துரோகத்தை பத்தியும் என்கிட்ட இனி பேசாத வாத்தி அப்புறம் அம்புட்டு தான் உனக்கு மரியாதை.. ” என்று இவ்வளவு நேரமும் அமைதியாக சோகமாக அழுது கொண்டிருந்தவள் இவள் தானா என்று நினைக்கும் படி சீறி விழுந்தாள் நிலா..

” க்கூம் யாரும் கட்டிக்கிட்டாலும்.. ஏய் என்னடி எருமை நீயும் உங்க அப்பனும் பிளான் பண்ணி என்னை சிக்க வச்சு உங்க பணக்கார திமிரை என்கிட்டயே காட்டுறிங்களா?..என்றான் ராகவ்..

அதனை தொடர்ந்து படுக்கையில் இருந்து எழுந்து அவளுக்கு சற்றே இடைவெளி விட்டு அமர்ந்து மெதுவாகவும் அழுத்தமாகவும் பேசினான்..

” உங்ககிட்ட கை நீட்டி காசு வாங்கினா நான் உங்களுக்கு அடிமையா?.. பெரிய அதிகாரம் பண்ணி உன்னை என் தலையில் கட்டி விட்டு போறான் அந்த ஆளு.. உனக்கு நான் வேணுமா?. ஏன்டா இந்த கல்யாணம் பண்ணினோம்னு நீ வருத்த படுவடி அப்போ நீயே என்னை வேணாம்னு சொல்லி ஓடணும்.. இல்லன்னா ஓட வைக்கிறேன்.. ” என்றான்.. இனி வரும் எதிர் கால வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரியாமல் பேசிவிட்டான்..

 அவளும் பொறுத்து அமைதியாக தான் இருந்தால் ஆனால் காலையிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களும் அத்தோடு சேர்ந்து சகுந்தலா மற்றும் ராகவின் பேச்சும் தற்பொழுது அவளது பொறுமையை பறக்க வைத்திருந்தது..

 பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டாள் பாவை..

 இதற்கு முதல் எப்படியோ ஆனால் இனி அவள் ஒழுங்காக அவனிடம் மரியாதையாக தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாள்..

 மரியாதை என்பது ஒருவர் மட்டும் கொடுக்கும் விஷயம் இல்லை.. எதிரில் இருப்பவரும் மரியாதை கொடுத்தால் தான் அதற்கு சரிசமமாக மற்றவரும் மரியாதை கொடுக்க முடியும்..

 ஆனால் அது எங்கே நடந்தது.. [ நாம நடக்கத்தான் விட்டுவிடுவோமா என்ன?.]

” டேய் நீ வாத்தின்னா பெரிய இவனா? நீ எருமை என்று சொன்னா நான் எருமை கிடானு சொல்லுவேன் டா..

நீ திட்டினா நானும் திட்டுவேன்..

நீ அடிச்சா நானும் அடிப்பேன்..

நீ அன்பா இருந்தா அந்த அன்பை 100% நானும் தருவேன்..

பார்க்கலாம் யாரு ஓடுறா யார் பின்னாடி ஓடி வாரங்கனு..

நான் நீ முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி நீ செய்வதை அச்சு பிசகாமல் அது காட்டுவது போன்று. நானும் நீ செய்வதை பேசுவதை அப்படியே செய்வேன் பேசுவேன்.. ” என்றாள் நிமிர்வுடன் அவள் அனைத்திலும் புதியவள்..

” சரியான வாயாடி.. குட்டிபிசாசு கிட்ட வந்து மாட்டிகிட்டேன் போலயே..! இனி நானா?.. அவளான்னு பார்க்கிறேன். வாடி நாளைக்கு காலேஜ் வரணும் தானே அங்க ஆப்பு வைக்கிறேன்.. ” என்று மனதில் திட்டியப்படி அறையை விட்டு வெளியேறினான். அவன் ஆண் என்கிற திமிர் மொத்தமும் அவனுக்கே சொந்தம் என்று நினைப்புடன் வாழ்பவன்..

 பாட்டி மற்றும் தந்தையின் பேச்சை தட்டாமல் அவர் காட்டிய மணவாளனை திருமணம் செய்து மனிதர்கள் வாழும் வீடு என்று நினைத்து மருமகளாக அவ் வீட்டினுள் காலடி எடுத்து வைத்தாள் பிறைநிலா ..

 குள்ளநரிகளும் சந்தர்ப்பத்திற்காக மாறும் பச்சோந்திகளும் வாழும் அடர்ந்த காடு என்று தெரிந்தால் அவளின் நிலை என்ன ஆகுமோ?..

Advertisement