Advertisement

ஓம் நமச்சிவாய..

 மலரே மன்னிப்பாயா ஒன்பது..

 ரமேஷ் அவனது திருமணத்திலும் அதை தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் முழு மனதாக ஈடுபடவில்லை..

 அவனின் நினைவு முழுவதும் நண்பனிடம் மட்டுமே இருந்தது..

 ரமேஷ் திருமண மண்டபத்திலிருந்து திருமணம் சடங்குகள் அனைத்தும் முடித்து புதுமண தம்பதிகளாக வீட்டுக்கு வந்து அங்கேயும் பால் பழம் உண்டு ஏனைய சடங்குகளையும் முடித்து அவர்களுக்குகென சற்று தனிமை கிடைத்ததும் புது மனைவியிடம் சற்று வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு நண்பன் இருக்கும் இடத்திற்கு வந்தான்..

 அப்பொழுதுதான் ராகவும் சவுந்தலாவிடம் கத்தி பேசிவிட்டு கைபேசியை வைத்ததும் ராமேஷின் தவறிய அழைப்பை பார்த்து அவனுக்கு அழைப்பு விடுத்தான்…

இம்முறை நண்பன் அழைத்த அழைப்பை ரமேஷ் ஏற்காமல் நேரடியாக ராகவை தேடி அவன் இருந்த இடத்திற்கு வந்து அவனது அருகில் இருந்தான்..

 ரமேஷ் வந்தது தெரிந்தும் அவனை திரும்பி பார்க்காமல் புது மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லாமல் அவனது யோசனையிலேயே இருந்தான்..

 இவ்வளவு தூரம் அவனை தேடி வந்தும் அவன் திரும்பி பார்க்காமல் இருந்த கோபத்தில் ரமேஷ் ராகவின் முதுகில் இரண்டு அடி போட்டு அவனை தன் பக்கம் திருப்பினான்..

 அடி சற்று வலித்ததும் ராகவோ முகத்தை சுழித்து ரமேஷின் பக்கம் திரும்பி ” ம்ச் என்னடா?.. அதுதான் நீ வந்தது தெரியுது இல்ல அப்ப என்ன – க்கு அடிக்கிற நாயே?..” என்று புது மாப்பிள்ளைக்கு தூய தமிழில் அர்ச்சனை பண்ணினான் ராகவ்..

” தெரிஞ்சுதான் நான் வந்த உடனே துரை எழுந்து ஓடிவந்து கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொன்னீங்களோ? வாத்தியாரே..” என்று ரமேஷ் நண்பன் திருமணத்திற்கு வரவில்லை என்ற சோகத்தை வெளிகாட்டாமல் நண்பனை வெறுப்பேற்றினான்..

” அட போடா நாயே நான் இருக்கிற நிலைக்கு இப்ப எதையுமே என்னால யோசிக்க முடியல.. எப்ப இரவு வரும் புண்பட்ட நெஞ்சை சரக்கு போட்டு சரிப்பண்ணலாம்னு காத்துட்டு இருக்கேன்..

                  டேய் மச்சான் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?.. அந்த வரதன் என்னை பழிவாங்கிட்டான் மச்சான்.. வெறும் பிஸ்கோத்து காசு ஐந்து லட்சத்திற்காக அவனோட அந்த வாயாடி பொண்ணை என் தலையில கட்டிட்டான் மச்சான்..

                   உனக்கு தெரியாது இல்ல. சொல்லுறேன் கேளு. அவளை பத்தி. ஆள் பார்க்கத்தான் ஒல்லிக்குச்சி ஆனா அவளோட வாய் இருக்கே மச்சான் வாய்.. அப்பப்பா காலேஜ்லயே நான் ஒரு வாத்தியார் என்று நினைவே இல்லாமல் எப்படி வாய் பேசுவானு தெரியுமா உனக்கு?. ஏன் அன்னிக்கு நீயே கோயில்ல பார்த்திருப்பதானே நான் லேசா ஒரு சின்ன அடி அடிச்சதுக்கு அவ வாயால என்ன வார்த்தை எல்லாம் வந்துச்சு.. என்ன கதை எல்லாம் பேசுனா?..நீயே பார்த்த தானே மச்சான்..

                   நான் எப்புடி காலத்துக்கும் அவளோட வாழந்து அவளை சமாளிக்க போறேன்.. ஏற்கனவே வீட்ல அம்மாவும் என்கூட பிறந்த பிறப்பும் எங்க மூணு ஆம்பளையும் வச்சு படுத்துற பாடு போதாதுனு அதுக இரண்டையும் மிஞ்சிகிற அளவுக்கு இந்த ராட்சசியோட வாய் அமைஞ்சிருக்கு.. ஆனா ஒன்னும் மச்சான்.

           வீட்ல இனி என்டர்டைன்மெண்ட் ஜாலியா இருக்கும்.. இனி சனி ஞாயிறு நல்லா பொழுதுபோகும் மச்சான் . அவ என்னோட வாய் பேசி வம்பு இழுத்தா?. நான் அவளை சகுந்தலாவோட கோர்த்துவிடுவேன்.. அவங்க ரெண்டு பேரும் நல்லா மல்லு கட்டி சண்டை போடட்டும் நான் அதை பார்த்து ஜாலியா என்ஜாய் பண்ணுவேன்.. ” என்று இன்னும் என்னென்னவெல்லாம் ராகவ் பேச இருந்தானோ..

பேச்சை நிறுத்துமாறு கைநீட்டி தடுத்த ரமேஷ்.. தலையை சொரிந்து கொண்டு நண்பன் என்ன பேசுகிறான் என்பதே புரியாமல் விழித்திருந்தான்..

” டேய் மச்சான் உன் புராண கதையை நிறுத்து.. நீ இப்போ வரைக்கும் என்ன சொன்னேன்னு ஒரு மண்ணும் எனக்கு புரியல மச்சான்.. டேய் மச்சான் அடிக்காத கொஞ்சம் பொறுமையா விளக்கமா சொன்னா தானடா எனக்கும் புரியும்.. நீ இவ்வளவு நேரம் மூச்சுவிடாமல் யாரைப் பற்றி சொல்லிட்டு இருந்த?. சம்பந்தமே இல்லாம.. என் மச்சான கல்யாணத்துக்கு வரலையே என்ன ஆச்சோ ஏதாச்சோனு நான் பரிதவிச்சு ஓடி வந்தா நீ ஏதோ உளறிட்டு இருக்க..” என்றான் ராமேஷ் சற்று கடுப்பாக..

” அப்போ உனக்கு நடந்தது எதுவுமே தெரியாதா மச்சான்?.. “

” நீ இப்படி சம்பந்தமே இல்லாம உளறிட்டு இருப்பதை பார்த்தால் ஏதோ பெரிய சம்பவம் தான் நடந்திருக்குன்னு தெரியுது.. ஆனா என்னனு தெரியல மச்சான்.. தயவுசெய்து வாயை திறந்து என்னன்னு சொல்லிட்டு அப்புறம் ஒப்பாரி வைடா.. கொஞ்சம் சீக்கிரமா சொல்லுடா மச்சான். நான் இன்னைக்கு புது மாப்பிள்ளை டா.. தெரியும் தானே அடுத்த சமாச்சாரம் என்னன்னு இன்னும் ஒரு முத்தம் குடுத்து கூட பர்ஸ்ட் நைட்டுக்கு ஒத்திகை பார்க்கலை மச்சான்.. உன்னை காணோமேனு தேடி ஓடி வந்துட்டேன். உன் மேல அவ்வளவு பாசம் மச்சான்… ” என்று விட்டால் அழுது விடுவேன் என்னும் நிலையில் நண்பனின் சோகத்தின் காரணத்தை விசாரித்தான்..

” டேய் மச்சான் உனக்கு விஷயமே தெரியாது இல்ல இன்னைக்கு நீ மட்டும் புது மாப்பிள்ளை இல்ல மச்சான்.. நானும் புது மாப்பிள்ளை தான் மச்சான்..” என்று சொல்லி முடிக்கும் முன்பு அவன் சொல்லிய தானும் புது மாப்பிள்ளை என்ற பேச்சைக் கேட்டு ரமேஷ் சத்தமாக சிரித்து விட்டான்.. சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டு முடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு கடல் மண்ணில் உருண்டு புரண்டு சிரித்தான்..

 அதில் கோபம் கொண்ட ராகவ் அவனை இழுத்து போட்டு முதுகில் ரெண்டு அடி மொத்தி எடுத்தான்..

 அடியை வாங்கியதும் சற்று விலகி எழுந்து கொண்டவன் ” டேய் மச்சான் இன்றைய நாளுக்கான மிகப்பெரிய ஜோக் இப்ப நீ சொன்னது தான் மச்சான்.. என்னால சிரிப்ப அடக்க முடியல.. உனக்கே தெரியும் எங்க அம்மா ரெண்டு வருஷத்துக்கு முன்ன பொண்ணு பாக்க ஆரம்பிச்சது இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. உனக்கு உங்க அம்மா இன்னும் பொண்ணு பார்க்கவே ஆரம்பிக்கல அப்புறம் எப்படி மச்சான் கல்யாணம் நடக்கும்.. நம்ம எல்லாம் 90 கிட்ஸ் டா. அந்த கடவுள் நமக்கு அவ்வளவு சீக்கிரத்தில் எல்லாம் கல்யாணத்த பண்ணி வச்சிர மாட்டான்.” என்று நண்பனை இன்னும் கேலி பேசினான் ரமேஷ்..

” டேய் எழவு எடுத்தவனே கொஞ்சம் நான் சொல்றது வாயை மூடிட்டு கேளுடா ம—-. அந்த குட்டி பிசாசு. ராட்சசி ஐந்து நாள் காலேஜ்க்கு வரல நானும் ஒரு தொல்லை தொலைஞ்சது என்று நினைத்து நிம்மதியா தினமும் காலேஜுக்கு போனோமா பாடம் எடுத்தமானு வந்தேன்.. இந்த கடவுளுக்கு என் மேல கொஞ்சமும் கருணை இல்லடா மாச்சான்.. இந்த ஐந்து நாள் எனக்கு நிம்மதியை கொடுத்த கடவுள் ஆய்சுக்கும் அந்த குட்டி பிசாசு கிட்ட என்ன மாட்டிவிட்டுட்டானே.. ஏண்டா எருமை மண்டபத்துக்கு அட்ரஸ் கொடுத்தியே அந்த மண்டபத்தில் இரண்டு தளம் இருக்கு. இன்னைக்கு இரண்டு கல்யாணம் நடக்குது. அதுல கீழ தான் உன்னோட கல்யாணம்னு தெளிவா சொன்னியா?.. இப்ப நான் ஒரு குட்டி பிசாசுக்கு 5 லட்சத்துக்கு விலை போய் காலத்துக்கும் அடிமையா கிடைக்க வேண்டியது ஆகிடுச்சி.. நான் எப்ப அவளுக்கு இந்த கடனை ஐந்து லட்சத்தையும் கொடுத்து நிம்மதியா? மூச்சு விடுறது..” என்று சொல்லி கொண்டே அன்று நடந்தது அனைத்தையும் கூறி அவன் புது மாப்பிள்ளை ஆகிய கதையையும் கூறினான்..

 நண்பன் கூறிய அனைத்தையும் கேட்ட ரமேஷ் வாயில் கைவைத்தபடி நண்பனின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

” டேய் கழுத என்னை சைட் அடிச்சது போதும் இப்ப சொல்லு என்ன பண்றது எப்படி இதுல இருந்து நான் தப்பிக்கிறது.? ” என்றான் ராகவ்.

” ஏன்டா கிறுக்கு பயலே தப்பிக்க போற.? அதான் அற்புதமான ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு அதை சந்தோசமா உனக்கு ஏற்ற மாதிரி அந்த புள்ளையோட வாழ வேண்டியதுதானே.. நமக்கெல்லாம் கல்யாணம் நடக்கிறதே பெரிய விஷயம். அதுவும் இன்னைக்கு நமக்கு இரண்டு பேருக்குமே ஒரே நாள்ல கல்யாணம் நடந்து இருக்கு. அது எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம். அதை என்ஜாய் பண்ணனுமே தவிர இப்படி லூசு மாதிரி கடற்கரையோரம் இருந்து புலம்பிகிட்டு இருக்க கூடாது..

              எழுடா மச்சான். உன்னை நான் உன் வீட்டில் விட்டுடு நான் எங்க வீட்டுக்கு போறேன்..என் பொண்டாட்டி என்னை ரொம்ப தேடப்போறா மச்சான்.. முதல் நாளே அவகிட்ட என்னை ரொம்ப சிக்க வச்சிராத டா .. அப்புறம் என் சாபம் உன்னை சும்மா விடாது.. எனக்கு இன்னைக்கு பஸ்ட் நைட் நடந்தே ஆகணும்.. ” என்று நண்பனுக்கு கை கொடுத்து அவனையும் தூக்கி விட்டு அவனும் எழுந்து பைக் அருகே சென்றான் ரமேஷ்..

” டேய் ரமேஷ் அவ சும்மாவே அந்த பேச்சு பேசுவாடா காலேஜ்ல. இப்ப அவளுக்கு நான் அடிமை மாதிரி ஆகிட்டேனே. அவங்க அப்ப காசு கொடுத்து என்ன விலைக்கு வாங்கிட்டான்.. இனி அவ என்ன பேச்சு பேச போறாளோ தெரியல.. ” என்றான் ராகவ்..

” அடச்சீ நிப்பாட்டு மச்சான். உன் நடிப்பு தாங்க முடியல.. அந்த புள்ள வாய் பேசினாலும் நல்ல குணமான பிள்ளை மாதிரி தெரியுது.. நீ அந்த புள்ளைய போட்டு பாடா படுத்தி உன் வாழ்க்கை கெடுக்காமல் இருந்தால் அதுவே போதும்.. அப்புறம் உங்க அம்மா இன்னைக்கு என்ன குண்டு வெடிக்கப் போகுதோ தெரியல. உங்க வீட்ல என்ன நடந்தாலும் என்ன இழுத்துவிட்டு மாட்டி விடாத மச்சான்.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இப்ப நீ சொல்லித்தான் எனக்கு உன்னோட கல்யாண சமாச்சாரமே தெரியும்.. ” என்று சவுந்தலாவின் வாய் பற்றி தெரிந்த படியால் சற்று நடுங்கிதான் போனான் ரமேஷ்..

 சகுந்தலா யார் மீதாவது கோபம் கொண்டு திட்ட வேண்டும் என்று வாய் திறந்தால் அவரது வாயில் என்ன வருகிறது என்பது அவருக்கே தெரியாது.. கேட்க அருகில் பொறுமையாக யாரும் நிற்கவே மாட்டார்கள்.. [ கூவம் கொப்பளிக்கும் ]

 அதனாலே அவரை சுற்றி உள்ளவர்கள் யாரும் அவரிடம் அதிகமான பேச்சுவார்த்தையோ வம்போ வைத்து கொள்ள மாட்டார்கள்..

” ஆமாண்டா மச்சான் அம்மாவுக்கு எனக்கு கல்யாணம் நடந்தது எப்படி தெரிஞ்சதுனு தெரியல. இப்ப எனக்கு கால் பண்ணி நீ அம்மாக்கு சொல்லாம கல்யாணம் பண்ணிட்டியா?. என்று கேட்டாங்கடா. நானும் இப்ப ஏதாவது பேச போய் அங்கே ரொம்ப சத்தம் போடுவாங்கன்னு நினைச்சு வீட்டுக்கு போய் ஆறுதலா பேசிக் கொள்ளலாம்னு நினைத்து இல்லனு சொல்லிட்டேன் மச்சான்..” என்றான் ராகவ்..

 திருமண மண்டபத்தில் இருந்து அவன் வெளியேறியதும்.. அங்கு நடந்த எதுவும் அவனுக்கு தெரியவில்லை.. அவளும் இன்றே உடனடியாக அவனது வீட்டுக்கு வருவாள் என்று அவன் நினைக்கவும் இல்லை..

 ஒரு வழியாக ரமேஷ் அங்கிருந்து ராகவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல போகும் வழியில்.. அவனுக்கு தற்போது வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை என்றும் அருகில் இருக்கும் பாருக்கு செல்லுமாறும் கூறினான்..

” டேய் மச்சான் உனக்கும் இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு வேணாம் டா சொல்றதை கேளு வா வீட்டுக்கு போவோம்.. ” என்றான் ரமேஷ்..

அவனின் பேச்சை எங்கே கேட்டான் ராகவ்.. ” போடா வென்று. நீ ஆசைப்பட்டு உன் அம்மா பார்த்த பொண்ணு கல்யாணம் கட்டி இன்னைக்கு சந்தோசமா ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட போற. நீ சந்தோசமா வாழ்க்கையை அனுபவிக்கனும் மச்சான்

Advertisement