Advertisement

இந்த திருமண மண்டபம் இரண்டு அடுக்கு மண்டபம்.. அன்று விசேஷமான முகூர்த்த நாள் என்பதால் மண்டவங்கள் அனைத்தும் ஏற்கனவே புக்கீங் செய்யப்பட்டதால் இந்த மண்டபமே வரதனுக்கு கிடைத்தது..

 கீழே ஒரு திருமணமும் மேலே நிலாவின் திருமணமும் அன்று நடக்க இருந்தது..

 உதயராகவன் அன்று காலேஜுக்கு விடுமுறை எடுத்து அவனின் உற்ற நண்பனின் திருமணத்திற்கு அந்த மண்டபத்திற்கு வந்தான்..

 ஆனால் அவனின் நேரம் அருகருகே இரண்டு திருமணத்திற்கான பேனர்களும் இருந்ததால் அவனும் மேலே நண்பனின் திருமணம் நடக்கும் என்று அங்கே சென்று விட்டான்..

 கீழேயும் அவனின் மற்ற நண்பர்களும் நிற்கவில்லை நிலாவின் புகைப்படமும் அவன் கண்ணிற்கு தெரியவில்லை..

அனைத்தும் விதியின் படியே நடந்தது..

 குறுகிய நேரத்தில் யாரை மகளுக்கு மணமகன் ஆக்கி அவளுக்கு திருமணம் செய்து வைத்து இன்றோடு அவளது பொறுப்பில் இருந்து விலகி விடலாம் என்று காத்திருந்த வரதனின் கண்ணுக்கு கையில் பரிசு பொருளோடு ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து வாயில் சுவீங்கம் போட்டு மென்றபடி நடந்து வந்த ராகவன் தென்பட்டு விட்டான்..

 வேகமாக அவனது அருகில் சென்று அவன் கையை பற்றி சற்று தனியான இடத்திற்கு அழைத்துச் சென்றார் வரதன்..

 கையை பற்றி இழுத்ததும் கோபத்தோடு யார் என்று திரும்பிப் பார்த்த ராகவ் வரதனை பார்த்து ஏரிச்சலுடன் கையை அவரின் படியிலிருந்து விடுவித்து அவரின் பின் சென்றான்..

” என்ன சார் உங்ககிட்ட கைநீட்டி பணம் வாங்கிட்டேன்.. அதுக்கு நீங்க இப்படித்தான் கையை பிடிச்சு இழுத்துட்டு வருவீங்களா?.. என்ன சார் நான் தான் எனக்கு டைம் தாங்கனு கேட்டேனே.. ” என்று நண்பனின் திருமணத்திற்கு போக விடாமல் தடுத்து ரகளை பண்ணுபவரை எரிச்சலுடன் பார்த்தான்..

” ஹலோ மிஸ்டர் ராகவன் நீங்க ஒரு ப்ரோபசர் சொன்ன வார்த்தையை மீற மாட்டீங்க என்ற நம்பிக்கையில் தான் நீங்க தொழில் பண்ண கேட்ட பணத்தை நான் உங்களுக்கு எந்த ஒரு பின்புலமும் இல்லை என்று தெரிந்தும் நம்பிக்கையில் கொடுத்தேன்.. ஆனா நீங்க பணம் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டது ஆரம்பத்துல மாதம் தவறாமல் வட்டி பணம் கட்டுனீங்க. இப்ப அதுவும் ஒழுங்கா வருவதில்லை உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு.. நீங்க எனக்கு அடமானமாக கொடுத்தது உங்க சர்டிபிகேட் மட்டும் தான்.. இப்ப நீங்க பணம் தரலன்னு சொன்னா உங்க சர்டிபிகேட் நான் நெருப்புல பத்த வச்சுடுவேன்.. அப்புறம் உங்க கேரியரும் போயிடும்.. நீங்க பிஎச்டி பண்ற கனவும் போயிடும் தம்பி பார்த்துக்கோங்க இப்ப எனக்கு பணம் வேணும்.. ” என்று அவரது காரியம் ஆவதற்காக அவனை மிரட்டினார்..

” சார் என்னோட பிசினஸ் கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு அதனால சொன்ன டைமுக்கு என்னால பணம் தர முடியல. கொஞ்சம் அவகாசம் தாங்க நான் பணம் தந்துடுவேன் என்று ஏற்கனவே உங்களிடம் நான் கேட்டு இருக்கேன்.. அதுக்கு சரியான பதிலை அப்ப சொல்லாமல் இப்படி ஒரு சூழ்நிலையில் வந்து இப்படி கேட்டா என்ன அர்த்தம்.. ” என்றான் ராகவ்..

” எனக்கு உங்களால் ஒரு காரியம் ஆகணும்.. ராகவ் எனக்கு இப்ப உங்களை விட்டா வேற எந்த ஒரு ஆப்ஷனும் இல்ல.. நான் வெளிப்படையாகவே எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிடுறேன் ராகவ்.. ” என்று கூறி நிலாவைப் பற்றி அனைத்தையும் கூறி நிலாவின் இன்றைய திருமணம் பற்றியும் கூறினார்..

” எனக்கு இப்ப வேற வழி இல்ல உடனடியா நீங்க என்னோட மகளை திருமணம் செய்து கொள்ளணும். அப்படி இல்லைன்னு சொன்னா எனக்கு பணத்தை தந்து உங்களோட சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளுங்க.. என் மகளை நீங்க திருமணம் செய்து கொண்டால் நீங்க என்னிடம் வாங்கினா ஐந்து லட்சம் ரூபாய் பணத்தையும் என்னோட மகளுக்கு கொடுத்ததா நினைச்சு நான் உங்களோட கடனை அழித்துவிடுவேன்.. இல்லன்னா உங்களோட சர்டிபிகேட் எரிச்சி உங்களோட கேரியரை ஸ்பாயில் பண்ணிடுவேன்.. உங்களுக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு ராகவ் நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்.. நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொன்னா வேற யாரையாவது மாப்பிள்ளையா பார்த்து அவளுக்கு கட்டி வைத்து விடுவேன்.. ஆனாலும் அப்பவும் உங்களோட சர்டிபிகேட் எரிச்சிடுவேன்.. நீங்கதான் உங்களுக்கு வசதியான பதிலை சொல்லணும்.. என்னோட பி ஏ க்கு கால் பண்ணி பேசிட்டேன் உங்களோட பைஃல் எடுத்து வந்துட்டு இருக்கிறான்.. கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா மாப்பிள்ளையோட அறையில பட்டு வேட்டி சட்டை மாலை எல்லாம் இருக்கு அதெல்லாம் போட்டுட்டு தயாராகி மேடைக்கு வாங்க என்னோட பொண்ணு கழுத்துல தாலி கட்டுங்க உங்க சார்பிக்கேட் பைஃல் உங்க கையில இருக்கும்.. இல்லையா நீங்க ஃபைல் எரிகிறதை உங்க கண்ணால பார்த்துட்டு இந்த மண்டபத்தை விட்டு போய்க்கொண்டே இருக்கலாம்..” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் வரதன்..

 ராகவ் அவனது சர்டிபிகேட் இல்லாமல் போனால் தொலைந்து விட்டது என்று பதிவு செய்து மீண்டும் அதை எடுத்துக் கொள்வான்.. அது அவனுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.. அவன் பணம் வாங்குவதற்கு சாட்சி கையெழுத்து அவனின் நண்பன் தான் போட்டு இருக்கிறான்.. அவன் மாட்டேன் என்று சொன்னால் அவனது நண்பனிடம் தகராறு செய்து அவனுக்கு இன்று நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தி விடுவார் என்றும் தெரியும் மகளின் திருமணம் நடக்க வரதன் எந்த எல்லைக்கும் போவார் என்று புரிந்து கொண்டான் ராகவ்..

 அவர் நினைத்தது போன்று இன்று திருமணம் நடப்பதற்கு உடனடி மாப்பிள்ளை பணத்திற்காக கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்.. ஆனால் அவன் கைநீட்டி அவரிடம் பணம் வாங்கியதற்குரிய உறுதி பத்திரம் அவன் கையெழுத்து போட்ட பத்திரம்.. சிசிடிவி புட்டேஜ்.. மற்றும் நண்பனின் திருமணம்.. தொடர்ந்து வட்டி கட்டி பின்பு கட்டாமல் விட்டதற்கான ஆதாரம் பணம் கொடுக்க காலம் தாமதமான நிலை என அனைத்தையும் எடுத்து போலீஸிடம் கொடுத்தால் போர்ஜரி கேஸில் அவனை கைது பண்ணி விடுவார்கள் என்று அவனுக்கு தெரியும்.. அவ்வாறு நடந்தால் அவனது கேரியர் மற்றும் வாழ்க்கை என அனைத்தும் வீணாகி விடும்.. கூடவே அவனுக்கு உதவி செய்ய முன் வந்த நண்பனின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும் என்று அனைத்தையும் யோசித்து என்றாவது திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறோம் இந்த காதல் கத்திரிக்காய் இந்த ஜென்மத்தில் நமக்கு வர வாய்ப்பே இல்லை.. இந்த திருமணத்தின் மூலம் ஐந்து லட்சம் பணமும் இலவசமாக கிடைத்துவிட்டது.. திருமணம் முடிய இதே போன்று மகளை வைத்து வரதனை நாம் ஆட்டிவைக்கலாம் தற்போது தானாக வரும் ஸ்ரீதேவியை ஏன் வேண்டாம் என்று கூற வேண்டும் என்று குறுக்கு புத்தியில் குதற்கமாக முடிவெடுத்தான் ராகவ் வாத்தி..

 விதி இவர்களை வைத்து விளையாடியதா? இல்லை இவர்கள் நிலாவின் வாழ்க்கையில் விளையாடினார்களா என்பது காலத்திற்கே தெரியும்..

 ராகவன் முடிவின் பலனாக அவன் அறையில் இருந்து தயாராகி மணமேடைக்கு வந்தான்..

 இவ்வளவு நேரமும் ஏன் தான் தனியாக இருந்து இந்த ஐயர் கூறிய மந்திரங்களை கூறுகின்றோம். இங்கு என்ன நடக்கிறது என்பது எதுவும் அவளது சிந்தையில் இல்லை.. ஐயர் சொல்லும் மந்திரத்தை ஏனோ இயந்திர கதியில் அவள் உச்சரித்துக் கொண்டிருந்தாள் நிலா..

 சந்துருவின் பெற்றோர் எவ்வளவு தேடியும் அவன் கிடைக்காததால் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டனர்.. அதன் பின் மணமேடை ஏறிய பெண்ணை மீண்டும் திருமணம் ஆகாமல் அழைத்துச் செல்லக்கூடாது என்று கூறி மீண்டும் வேறொரு மாப்பிள்ளையை நிலாவிற்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக கூறினார் வரதன்..

 சொத்து கை விட்டு போக கூடாது என்ற முடிவில் சந்துரு போனால் என்ன அவன் தம்பிக்கு நிலாவை கட்டித்தருமாறு சந்துருவின் தாய் கேட்டார்..

 ஒரேடியாக வேறு மாப்பிள்ளை கிடைத்துவிட்டார் இனி இந்த சம்பந்தம் வேண்டாம் என்று வரதன் தட்டிவிட்டார்..

 ராகவும் தயாராகி மணமேடைக்கு வந்து நிலாவின் அருகில் அமர்ந்தான்..

 மாப்பிள்ளையாக மணமேடைக்கு வந்து யார் அமர்ந்திருப்பது என்று கூட திரும்பி பார்க்கவில்லை நிலா .. அங்கு நடந்தது எதுவும் அவளது சிந்தையில் பதியவில்லை என்பதே உண்மை..

 நேரம் குறைவாக இருப்பதால் ஐயர் சுருக்கமாக மந்திரங்களை கூறி தாலியை எடுத்து ராகவனின் கையில் கொடுத்தார்.. அவனும் திரும்பி மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு அவளின் முகத்தை பார்த்தான் அங்கே நிலாவை அவனும் எதிர்பார்க்கவில்லை ராகவனை அவளும் எதிர்பார்க்கவில்லை..

 ஏற்கனவே சிறு விஷயங்களுக்கும் முட்டிக் கொள்ளும் சண்டைக்கோழிகள் இருவரும் விருப்பம் இல்லாமல் திருமண வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே அடி எடுத்து வைத்தார்கள்..

இவன் ஏன் தனது கழுத்தில் தாலி கட்டுகிறான் என்பது கூட அவளுக்கு தெரியவில்லை..

ராகவ் நிலா கழுத்தில் தாலி கட்டி முடித்ததும் வரதன் கூறியது போன்று அவனது அனைத்து சர்டிபிகேட் மற்றும் கையெழுத்திட்ட பத்திரங்கள் அவன் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அவனது கையில் ஒப்படைத்தார்..

 அவனும் அதை அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவரையும் நிலாவையும் முறைத்து ஒரு பார்வையும் பார்த்துவிட்டு வேகமாக மணமேடையை விட்டு இறங்கி அங்கிருந்து சென்று விட்டான்..

 வரதன் நினைத்தது போன்று மகளின் கழுத்தில் தாலி ஏறியதும் போலீசுக்கு அழைத்து சந்துருவின் மரணத்தை அவனது பெற்றோருக்கு தெரியப்படுத்த சொன்னார்..

 அவர்களும் வரதனிடம் வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக சந்துருவின் தந்தை அழைத்து சந்துருவை தேட சொன்ன போலீசுக்கு வரதன் பணம் கொடுத்த போலீஸ் அதிகாரி அழைத்து அரசு பொது மருத்துவமனையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அங்கே சேர்த்திருப்பதாகவும் தற்பொழுதுதான் மருத்துவரிடம் இருந்து தனக்கு தெரிய வந்ததாகவும் யார் என்று பார்த்து அடையாளம் படுத்தி குடும்பத்திற்கு தெரியப்படுத்துமாறு கூறினார்..

 ஒருவரின் மரணத்தை கூட தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது மனித இனமே இல்லை..

 மகனை காணவில்லை என்று இங்கே சந்துருவின் பெற்றோர்கள் தவித்துகொண்டு இருப்பது தெரிந்தும் தெரியாதது போன்று அவரின் வேலையை வரதன் செய்து முடித்த சந்தோஷத்துடன் தாயிடம் சென்று நிலாவை இனி பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு மண்டபத்தை விட்டு அவரது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியேறபோனார்…

 அந்த போலீஸ் அதிகாரியும் விபத்து நடந்த இடத்திற்கு உடனே சென்று அங்கே பார்த்துவிட்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்று சந்துருவை அடையாளம் தெரிந்து கொண்டு உடனடியாக அவன் தந்தைக்கு கைபேசியில் அழைத்து விவரத்தை கூறி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வருமாறு கூறினார்.. 

 அவரும் மனைவியிடம் கூறி மகன் எங்கும் செல்லவில்லை கடத்தப்படவும் இல்லை விபத்தில் சிக்கியுள்ளான் என்று எதுவும் தெரியாததுபோன்று நின்ற வரதனிடம் போய் கூறிவிட்டு அரசு பொது மருத்துவமனைக்கு செல்வதாகவும் திருமண வேலையை நல்லபடியாக முடித்துவிட்டு வருமாறும் கூறிவிட்டு சென்றார்கள்..

இன்னும் சந்துரு இறந்ததை பற்றி அவருக்கு போலீசார் தெரிவிக்கவில்லை நேரில் வந்ததும் கூறிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள்..

 மதிப்பாட்டிக்கும் திடீரென மாப்பிள்ளை மாறியது பற்றி வரதன் எதுவும் ஏன் எதற்காக என்று கூறி இருக்கவில்லை..

 பேத்தியின் வாழ்க்கையை பற்றி அவ்வளவு காலைபட்ட மதிப்பாட்டி சந்துருவைப் பற்றி வரதனிடம் அவ்வளவு தீவிரமாக விசாரித்தார்..

 ஆனால் இந்த புது மாப்பிள்ளை யார்? என்ன நல்லவனா கெட்டவனா அவனை நம்பி பேத்தியை அனுப்பலாமா? என்ற பல கவலைகளில் அவர் குழம்பி போய் இருந்தார்..

 நித்யா நிலாவை எவ்வாறு சமாதானப் படுத்துவது என்று யோசித்தாள்.. ராகவை பற்றியும் அவனது திமிரை பற்றியும் இருவருக்கும் இடையே இருக்கும் பிணக்கு பற்றியும் நன்றாக தெரியும். எவ்வாறு இந்த திருமணம் முடிந்தது? தோழி இனி ராகவ் வாத்தியுடன் வாழ்வாளா? அவளின் வாழ்க்கை இனி எவ்வாறு செழிக்கும் என்ற கவலையில் இருந்தாள்..

 வரதன் அவரின் கடமை முடிந்தது என்ற நிம்மதியுடன் பெருமூச்சு விட்டு இனி மகளின் வாழ்க்கையில் அவர் எதிலும் பங்கு கொள்ள தேவையில்லை.. திருமணம் முடித்து கொடுத்தாகி விட்டது.. வாழ்கை பற்றியும் கணவன் பற்றியும் புரிந்து கொண்டு நல்லதோ கெட்டதோ அனுசரித்து அவளின் வாழ்க்கையை அவள் வாழட்டும் .. என்று சுபலட்சுமியிடம் கூறி இனி அவரது குடும்பம் மகன் இளைய மகள் என அவர்களை மட்டும் பார்க்க போவதாகவும் கூறிவிட்டு அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றார்..

 அவர்கள் மண்டபத்தின் வாயிலை நெருங்கும் போது ஒன்று சேர்ந்தால் போல் நிலாவும் மதிப்பாட்டியும் வரதனை அழைத்தார்கள்..

” வரதா கொஞ்சம் நில்லு நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ.. ” என்றார் பாட்டி..

” மிஸ்டர் வரதராஜன் கொஞ்சம் நில்லுங்க சார் இப்புடி உங்க கடமை முடிஞ்சிதுன்னு போனா என்ன அர்த்தம்.. என்னோட கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போங்க சார்.. ” என்றாள் நிலா..

 வரதனின் தாய் மற்றும் அவரின் மகள் இருவராலும் கேள்விக்கள் வரதனை நோக்கி கேட்கப்பட்டது.. 

Advertisement