Advertisement

 ஓம் நமச்சிவாய..

 மலரே மன்னிப்பாயா 10.

 அவளுடன் சரி சமமாக வாய் பேசிவிட்டு அறையை விட்டு வெளியேறிய ராகவ் தெளிந்த போதையை மீண்டும் ஏற்ற அருகில் இருந்த பாருக்கு சென்று மீண்டும் இரண்டு பெக் பீர் குடித்துவிட்டு வந்து அறைக்குள் சென்று கதவை சத்தம் கேட்குமாறு சாத்தினான்..

இந்த முறை எந்த சலனமும் இல்லாமல் அவனைப் பார்த்துவிட்டு அவளுக்கென விரித்திருந்த பாயில் சென்று படுத்து கால்களைக் மடித்து தலைவரை போர்வையால் போர்த்திக் கொண்டு கண்ணை மூடினாள் நிலா..

 போதை சற்று ஏறியதும் தள்ளாடியபடியே அறைக்குள் வந்தவன் வாய் திறந்து கதைக்கவே சிரமப்பட்டு ஏதோ வாய்க்குள் வந்த பாட்டை பாடிக்கொண்டு அவனது பாயில் சரிந்து படுத்துக் கொண்டான்..

 பாட்டியிடம் தைரியம் கூறி அவரை அனுப்பி வைத்து விட்டாள் நிலா.. ஆனால் இந்த குடும்பத்தில் தன்னைப் பொருத்தி அவர்களுக்கு ஏற்ற மாதிரி தான் வாழ்வதா.? இல்லை போறபோக்கில் தன்னுடைய இயல்பை மீறாமல் வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்று பல குழப்பத்தில் யோசித்தவாரே எப்பொழுது கண்ணுறங்கினாள் என்று தெரியாமல் அவள் உறங்கிப் போனாள்..

 நிலா விற்கு சிறு வயதில் இருந்தே தனிமை என்பது அவளை துரத்திக் கொண்டே வந்தது..

அவளும் பாட்டியும் மே அவர்களது வாழ்க்கை என்று ஆனது..

 பல விதங்களில் தனிமையை சந்தித்தவள் இரவில் படுக்கையில் தனிமையை சந்திக்கப் பயந்து 15 வயது வரை பாட்டியும் அவளும் ஒரே அறையில் கட்டிலில் தான் உறங்கினார்கள்..

 அறையில் கட்டிலை நன்றாக சுவர் ஓரம் போட்டுவிட்டு சுவர் பக்கம் அவள் படுத்தால் மறுபக்கம் மதிப்பாட்டி படுத்துக்கொள்வார்..

 வயதான காலத்தில் பாட்டியை தொல்லை செய்யாமல் அவளை சுற்றி ஐந்தாறு தலையணைகளை அடுக்கி வைத்துக் கொண்டு எந்த பக்கம் திரும்பினாலும் தலையணைகளை அணைத்துக் கொண்டு உறங்குவாள் நிலா..

 15 வயதிற்கு பின் பள்ளியில் மாணவர்கள் அவளை தனி அறையில் இல்லாமல் பாட்டியுடன் உறங்குவதை தெரிந்து கொண்டு கேலி பேசிய பின் அவளாலும் தனியாக உறங்க முடியும் என்று அவர்களுக்கு உணர்த்துவதற்காக தனி அறையை வாங்கிக் கொண்டு யாருடைய துணையும் இல்லாமல் தலையணைகளை மட்டும் துணையாக வைத்துக் கொண்டு உறங்க முற்பட்டாள்..

 பல இரவுகள் போராட்டத்துடன் கடந்து ஒருவழியாக தலையணைகளை அவளுக்கு துணையாக்கிக் கொண்டு உறங்கி போனாள்..

தினமும் அவளது இரவு தலையணைகளோடு பின்னி பிணைக்கப்பட்டது..

 பள்ளி காலம் முடிந்து காலேஜுக்கு சென்னை வந்த முதல் வருடம் மொழி அறியாத வேற்று மாநில பெண்ணுடன் அவளுக்கு அறை கொடுக்கப்பட்டது..

 முதலாம் வருடத்தை மிகவும் கஷ்டத்தின் மத்தியில் கடந்தாள்..

 வீடு போன்று இங்கு இல்லாமல் சிறிய கட்டிலில் அவளை சுற்றி தலையணைகள் பொருத்த முடியாமல் திணறி போனாள்..

 மிகவும் சிரமத்தின் மத்தியில் முதலாம் வருடம் கடந்து இரண்டாம் வருடத்திற்கு வந்து நித்தியாவை தோழியாக பெற்றதும். நித்தியாவின் அறையைக் கேட்டு வாங்கி அங்கே சென்று தினமும் இரவுகளை அவளது துணையோடு அவளைச் சுற்றி நித்தியாவின் தலையணைகளையும் சேர்த்து வாங்கி அடுக்கிக் கொண்டு உறங்கினாள்..

 ஆனால் இங்கு புது இடம் வேறு அதையும் விட பழக்கம் இல்லாத தரையிலும் பாயிலும் உறங்கும் இந்த நிலை அவளது உறக்கத்தை சற்று தொல்லை செய்தது..

 அமைதியான ஓர் இரவு ஆழ்ந்த உறக்கமானது ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. படுத்து சற்று நேரத்தில் உறங்கி விடிந்து அதன் பின் எழுவது ஒரு வரம்..

 அவ்வாறு உறங்கும் ஒரு மனிதன் புத்துணர்ச்சியோடு மகிழ்ச்சிகரமாக எந்த இடையூறும் சோம்பலும் இல்லாமல் அன்றைய நாளை ஆரம்பிப்பான்.. அப்படி ஆரம்பிக்கும் அன்றைய நாள் அவனுக்கு பல வெற்றிகளையும் பழகும் சக மனிதரிடம் ஒரு நல் உறவையும் ஏற்படுத்தி அன்றைய நாள் நிம்மதியாகாவும் புத்துணர்வோடும் முடியும்..

 நாள் முழுவதும் உழைத்து களைத்து இரவில் உறங்கும் உறக்கம் நிம்மதியற்று இடையில் இடையூறு ஏற்படுத்தும் பொழுது விடியும் அந்த பொழுது ஒரு எரிச்சலுடன் ஓர் அசௌகரியமான நிலையை உண்டாக்கி நினைக்கும் காரியங்களும் தடைபட்டு மனிதர்களிடையே கோபங்களும் முரண்பாடுகளும் ஏற்படும்..

 இந்த அறையின் காற்றோட்டம் இல்லாத தன்மையும் சற்று சுத்தமில்லாத தலையணை மற்றும் போர்வையின் வீசும் துர்நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு அவளால் உறங்க முடியவில்லை..

 அசைந்து அசைந்து எப்பொழுது ராகவ் அருகில் சென்றாளோ தெரியவில்லை..

 அவனது மார்பில் தலை சாய்த்து அவனை சுற்றி காலை போட்டு இறுக்கி அணைத்து சற்று நிம்மதியாக உறங்கிப் போனாள் பெண்..

 அவளது உள் மனதில் அவளுக்கான இடத்தை அடைந்து கொண்டதை உணர்ந்தாளோ என்னவோ?..

 திருமண அலைச்சலின் காரணமாக கடந்த சில நாட்களாக அவள் நிம்மதியான உறக்கத்தை தொலைத்து விட்டாள்..

 அதற்கெல்லாம் சேர்த்து வைத்து தற்பொழுது நிம்மதியாகவும் அமைதியாகவும் உறங்கினாள்.. அப்படி உறங்கியதால் காலையில் நேரத்தோடு எழும் பழக்கத்தையும் இன்று மறந்து போனாள்..

 போதையின் பிடியில் நன்றாக உறங்கியவன் மீது பாரத்தை உணர்ந்து சற்று தலையை தூக்கி பார்த்ததும் நிலா இருக்கும் நிலையைக் கண்டு அவளை தள்ளி விட்டான்..

 உறக்கத்திற்கு இடையூறு நேர்ந்ததை பொறுத்துக் கொள்ளாமல் கோவத்தோடு எழுந்து அமர்ந்து கண்ணை திறந்து அந்த —– யார் என்று பார்த்தாள்..

” என்னடி பணம் கொடுத்து என்னை வாங்கினதும் என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நினைத்து இப்படி வந்து ஒட்டி உரசி கிட்டு இருக்கிறாயோ?..” என்று வார்த்தை என்னும் நஞ்சை விதைத்தான்..

” யோவ் நீ பெரிய சிலுக்கு சிங்காரம் அவரை பார்த்து மயங்கி மடியில போட்டுக்கபோறேன் போவியா?.. எனக்கு தூக்கத்துல உருண்டு புரளும் பழக்கம் இருக்கு ஏதோ தெரியாம உருண்டு உன்கிட்ட வந்துட்டேன்.. அதுக்காக நீ என்ன வேணும் என்றாலும் பேசுவியா?.. பேசுற வார்த்தையை பார்த்து பேசு உனக்கு மேல எனக்கும் பேச தெரியும் நான் பேசினால் தாங்க மாட்ட சொல்லிட்டேன்.. ” என்று காலையில் 5 மணிக்கு எழும் அவளது பழகத்தில் முதல் மாற்றம் இந்த வீட்டில் ஏற்பட்டதால் சிறு எரிச்சலுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள்..

 காலை பொழுதிலேயே அவளிடம் வாய் கொடுத்து அன்றைய நாளின் பொழுதை மன கஷ்டத்தோடு கடக்க விரும்பாமல் ராகவ் படுக்கையில் இருந்து எழுந்து எச்சில் வாயோடு தலை கலைந்து இரவு உடுத்திய அதே லுங்கியுடன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்..

ஒரு நாளும் நிலா இவ்வாறு அறையை விட்டு வெளியேறியதே இல்லை.

 ராகவின் இந்த பழக்கம் நிலாவிற்கு முகம் சுழிக்க வைத்தது..

[ ஏழு கழுதை வயசாயிடுச்சு ஒரு வாத்தியா இருந்துட்டு சுத்தம் இல்லாமல் ஊத்தவாயோட அறையை விட்டு வெளியே போகுது ஒரு நீட்நஸ் இல்லாத டேர்ட்டி ஃபெல்லோ ??]

 வீட்டிலும் சரி காஸ்டலிலும் சரி அறையை ஒட்டிய பாத்ரூம் இருந்ததால் அவளால் காலைக்கடன்களை எளிதாக முடித்து குளித்து தயாராகி அறையில் இருந்து வெளியே வரமுடிந்தது.

 ஒரு பெண் காலையில் எழுந்து புத்துணர்வோடு குளித்து தயாராகி மங்களகரமாக வெளியே வந்தால் வீட்டில் உள்ளவர்கள் அவளை பார்த்து முகத்தில் புன்னகையோடு வீட்டை விட்டு வேலைக்கு வெளியே செல்வார்கள்..

 அந்த குடும்ப பெண்ணிற்கும் சரி வீட்டில் எல்லோருக்கும் சரி அன்றைய நாள் மகிழ்ச்சியாக கழியும்..

 அப்படித்தான் நிலாவிற்கும் எழுந்து பல்துலக்கி குளித்து விட்டு தான் அவள் நித்யாவுடனோ பாட்டியிடமோ கூட பேசுவாள்..ஆனால் இந்த வீட்டைப் பொறுத்தவரை படுக்கையறையை விட்டு முகம் கழுவுவதற்கு கூட வெளியே வர வேண்டிய சூழ்நிலை.. எச்சில் வாயோடு ஆட்களின் முகத்தை பார்த்து அங்கே இருக்கும் குளியல் இடத்தில் குளித்து எவ்வாறு அறைக்கு வந்து துணி மாற்றுவது என்று சற்று நேரம் யோசித்தாள்..

 நிலா வின் யோசனைக்கு காரணம். வீட்டின் குளியலறை என்று கூறும் இடம் ஓலைகிடுகால் மூன்று பக்கமும் சுத்திவர ஒரு ஒழுங்கற்ற முறையில் ஏனோ கட்டி வைக்க வேண்டும் என்று கட்டி வைத்திருந்தார்கள்..

 மேலே வெட்ட வெளியாக இருந்தது.

 வீடே அப்படி ஒரு நிலையில் இருக்கும் போது அங்கு வேறு எது நல்லதை பார்க்க முடியும்..

யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் கண்ணில் ராகவின் கைபேசி தென்பட்டது..

 எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே கைபேசியை எடுத்து காலிங் லிஸ்டில் சாரதாவின் வீட்டு தொலைபேசி எண் அழுத்தினாள்..

 அந்த பக்கம் வீட்டு தொலைபேசி அழைப்பு ஏற்கப்பட்டது. சாரதாவின் மூத்த மகள் தேவி தான் ஏற்றாள் ” ஹலோ யார் நீங்க?.. ” என்றாள் தேவி..

” ஹலோ நான் நிலா பேசுறேன். சாரதா ஆன்ட்டி வீட்டில் இருந்து யார் பேசுறீங்க உங்க பேர் என்ன.. ” என்றாள்.

 தேவி தன்னை அறிமுகப்படுத்தி விட்டு ” சொல்லுங்க நிலா “

” கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா?. தேவி. ” என்றாள் நிலா.

” இதோ ஒரு பத்து நிமிஷத்துல வரேன் நிலா அக்கா.. “

 10 நிமிடம் வரை அவளது கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தவள் தேவியின் சத்தம் வெளியே கேட்டதும் அறையின் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்து அறைக்கு வருமாறு தேவியை அழைத்தாள்.

 அவளும் வந்ததும் ” தேவி ப்ளீஸ் நான் இப்போ உடனடியா குளிக்கணும். எனக்கு இங்க இருந்து இதே டிரஸ் ஓட இப்படியே வெளில போறதுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. நீங்க ஏதாவது ஹெல்ப் பண்ணுவீங்களா?.. ” என்றாள் நிலா.

 நிலா மேலிருந்து கீழ் வரை தேவியை ஆராய்ந்து பார்த்தாள்.. அவள் எப்படி இருப்பாளோ அதே மாதிரி தேவியும் அழகாக நேர்த்தியாக இருந்தாள்..

 உடனே சமையலறைக்கு சென்று ஒரு ஜக்கில் தண்ணீர் கொண்டு வந்து நிலா கையில் கொடுத்தாள் தேவி..

 முகத்தை அங்கு யன்னல் ஓரம் கழுவி விட்டு சாதாரண ஒரு சுடிதாரை மாற்றிக் கொண்டு குளிப்பதற்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு தேவியுடன் வெளியே வந்தாள் நிலா..

 சாரதாவிற்கும் சவுந்தலாவிற்கு கொடுத்தது போன்று அரசினால் வீடு கொடுக்கப்பட்டது..

 சாரதா மேலும் சிறு தொகை பணம் போட்டு வீட்டை கொஞ்சம் சற்று பெரிதாகவும் தற்காலிக வசதிகளுக்கு ஏற்றவாறு கட்டி முடித்தார்..

வீடு முழுவதும் பெயிண்ட் அடித்து அழகாக சுத்தமாக வைத்திருந்தார்..

 சமையலறையும் சகல வசதிகளுடனும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கலுடனும் அழகாக இருந்தது..

குளியல் அறையும் சுத்தமாக இருந்தது..

 ஆண்கள் இல்லாவிடினும் நான்கு பெண்களும் இருக்கும் வீட்டிலேயே அவ்வளவு சுத்தமாகவும் அனைத்து வசதிகளும் இருந்தது…

ராகவின் வீட்டில் இரு பெண்களும் எவ்வாறு அந்த வீட்டிலும் அந்த குளியல் அறையிலும் இவ்வளவு காலம் சமாளித்தார்கள் என்று நிலாவிற்கே ஆச்சர்யமாக இருந்தது..

 அந்த வீட்டில் சகுந்தலா காலையில் எழுந்து வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் குளித்துவிட்டு அவரது வேலைக்கு சென்று விடுவார்..

 காலையில் விதவிதமான உணவுகளோ டீ, காபி பழக்கங்களோ அந்த வீட்டில் இல்லை அதற்கான செலவும் இல்லை..

 சுவாதியும் காலையில் எழுந்து முகம் கழுவி குளித்து வீட்டு ஆண்கள் அனைவரும் வெளியேறியதும் வீட்டை பூட்டிவிட்டு சாரதாவின் வீட்டிற்கு சென்று விடுவாள்..

 தாய்க்கு மகள் தப்பாமல் கையில் பணம் இருந்தாலும் காலை உணவு கடையிலும் வாங்கி உண்ணாமல் சாரதாவின் வீட்டிலேயே பெரும்பாலும் முடித்துக் கொள்வாள் சுவாதி.

 இது எதுவும் அங்கு நடைமுறையில் இல்லை என்பதை குளித்து முடித்து உடையை மாற்றி அவளை தயார்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்த நிலாவிற்கு சாரதாவின் மூலம் அந்த வீட்டு நடைமுறைகள் ஓரளவுக்கு தெரியப்படுத்தப்பட்டது..

 சாரதா கூறியதை கேட்டதும் நிலாவிற்கு பயமாகவும் வியப்பாகவும் இருந்தது இவர்கள் அனைத்திலும் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று அவள் மனதில் தோன்றாமல் இல்லை..

 குளித்து வந்ததும் காபி குடிக்கும் பழக்கம் நிலாவிற்கு இருப்பதால் அங்கு அதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி கேட்டவள் இனி அனைத்தும் தானே வாங்கி காபி போட்டு குடிக்க வேண்டும் என்று நினைத்ததும் முதல் நாளே அவளுக்கு மலைப்பாக இருந்தது..

 சாரதா தான் அவளுக்கு ஒரு காபி போட்டு கொடுத்து அங்கே அமர வைத்து பேசிக்கொண்டு இருந்தார்..

 காஃபியை கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து ராகவ் வீட்டிற்கு வந்தாள்..

 அவளும் அறைக்குள் வர ராகவும் தயாராகிக் கொண்டிருந்தான்..

 இரவு குடித்துவிட்டு கலாட்டா செய்தவனுக்கும் காலேஜ் ப்ரொபஷராக தயாராகி நிற்பவனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை காணலாம்..

 சும்மா வாய் கொடுத்து வம்பிலுக்க விரும்பாமல் அவனுடன் பணிந்தே பேசினாள்..

எவ்வாறு அவனை அழைப்பது என்று சற்று தயங்கி பின் ” வாத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. ” என்றாள் நிலா..

 யாரோ எவரையோ அழைக்கிறார்கள் என்று பேசாமல் ராகவ் அவனது வேலையை பார்த்தான்..

 [ நானே ரொம்ப பொறுமை இழுத்து பிடிச்சிக்கிட்டு இந்த வாத்தி யோட பேசலாம் என்று நினைத்தாலும் இந்த ஆள் திமிரு அடங்க மாட்டேங்குது..]

 அவள் பேசுவது காது கொடுத்து கேட்காமல் அவனது வேலையை அவன் பார்த்துக் கொண்டிருப்பதால் நீ கேட்டால் கேளு இல்லன்னா போ என்பது போல் அவள் பேச ஆரம்பித்தாள்..

” என்ன காரணத்துக்காக நீங்க என்னோட இப்படி சுடு சுடுன்னு பேசுறீங்கனு எனக்கு புரியல.. ஐந்து லட்சம் பணம் தான் காரணம் என்று நீங்க நினைத்தால் அந்த பணத்தை எங்க அப்பாவுக்கு நானே கொடுத்துடுறேன்.. நீங்க எனக்கு அந்த பணத்தை தரணும் என்ற அவசியம் இல்லை..” என்றாள் நிலா..

” ஏய் என்னடி அந்த ஆள் தான் பணம் கொடுத்து என்னை விலைக்கு வாங்கிட்டான்னு நினைப்புல அந்த ஆள் சுத்தினா?. நீ அதைவிட ஒரு படி மேல போய் உன்கிட்ட இருக்கிற பணத்தை வைத்து திமிர் காட்டுறியா?. தொலைச்சிடுவேன்.. என்கிட்ட சரி வராது எதுவுமே. உனக்கோ உங்கப்பனுக்கோ அந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தையும் நான் தரும் வரைக்கும் தயவு செய்து நீ என் முகத்தையும் பார்க்காமல் தள்ளி இருக்கிறது தான் உனக்கு நல்லது.. ” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான் ராகவ்..

 நிலா புருஷனுக்கு அடங்காமல் வாயடித்தோ எதிர்த்து பேசியோ இருக்க வேண்டும் என்பது அவளுக்கு ஆசை இல்லை..

 ராகவ் பற்றி ஓரளவுக்கு நிலா முன்பே கணித்து வைத்திருந்தாள்..

 ஆண் உயர்ந்தவன் பெண் அவனுக்கு பணிந்தவள் என்பது ராகவின் எண்ணம் என்று நிலா கணித்தாள்..

 அவளின் கணிப்பு பொய்யும் அல்ல நூற்றுக்கு 80% அது உண்மையானது..

 பழைய ஆண்கள் போன்று இன்னும் சில ஆண்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் பெண்களை அடிமையாக நடத்துவதற்கு..

 அவனின் இந்த எண்ணத்தை உண்மையாக்குவது போன்று அவளும் அவனுக்கு ஆரம்பத்திலேயே பணிந்து நடந்தால் படிக்காத பாமரப் பெண் போல் அனைத்திலும் அடிமையாகவே வாழ வேண்டும் என்பதை அவள் புரிந்து கொண்டு தான் நிலா ராகவை எதிர்த்து பேசுவது..

 அவன் அவ்வாறு கூறிவிட்டு சென்றதும் என்ன செய்வதென்று தெரியாமல் பாட்டிக்கு கைபேசியில் அழைப்பு விடுத்து பேசிக் கொண்டிருந்தாள்..

 குமரனும் நடேசணும் தொழிலுக்கு காலையில் சென்றதும் சுவாதி சாரதாவின் வீட்டிற்கு சற்று நேரம் பேசிக் கொண்டிருப்பதற்கு சென்று விட்டாள் 

அங்கு போனவள் சும்மா இருக்காமல் நிலா வைப் பற்றி குறை பேச ஆரம்பித்தாள்.. 

 நிலா பாட்டியிடம் பேசிவிட்டு அந்த வீட்டை சற்று சகல வசதிகளுடனும் கூடிய வீடாக அனைத்தையும் திருத்தி மாற்றுவதற்கு நினைத்தாள்..

 வாழ வந்திருக்கும் வீடு கஷ்டத்தில் இருக்க அவள் விரும்பாமல் வசதியாக மாற்ற விரும்பினாள்..

 சகுந்தலா பணம் இருந்தும் அதை செய்யாமல் இருப்பதால் நிலா செய்ய முனைந்தாள்..

 அது அவளது வாழ்க்கையை திசை திருப்ப போகிறது என்பது தெரியாமல் சாரதாவின் வீட்டுக்கு வந்து அதைப்பற்றி பேசினாள்..

 சாரதா அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரின் குணத்தையும் பற்றி அவருக்கு தெரிந்தவற்றை கூறினார்..

நிலா வந்ததும் சுவாதியை வைத்துக்கொண்டு அவர்களின் குடும்பத்தை பற்றி பேச விரும்பாமல் சுவாதியை தேவியுடன் கடைக்கு அனுப்பி வைத்துவிட்டார்..

” உங்க மாமியார் குணத்தையும் பற்றி தெளிவா உனக்கு நான் சொல்லிட்டேன்.. நீ உன் புருஷன் கிட்ட கேட்டு கலந்த பேசிட்டு அவனுடைய முடிவு என்னனு தெரிஞ்சதும் அந்த வீட்டு வேலையை ஆரம்பி.. அவங்ககிட்ட கேளு அவங்க சம்மதம் சொன்னால் செய்.. அவங்க சம்மதம் சொல்லவில்லை என்றாலும் உனக்கு இங்க இருக்க வசதி சரி வராது என்று நீ நினைச்சா அப்புறம் உன் விருப்பத்துக்கு நீ செய்துக்கோ.. ” என்று சாரதா கூறியதைக் கேட்டு அவர்களிடம் கேட்பதற்கு முன் பாட்டிக்கு அழைத்து அவரிடம் இருக்கும் பணத்தை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிந்து கொண்டாள்..

 சாரதா மற்றும் நிலாவின் பேச்சு வார்த்தைகளை சகுந்தலாவின் மாமியார் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை..

அவர் ஒன்று பேசி அது 10 ஆக திரிந்து சகுந்தலாவின் காதுக்கு போய் அவர் வீடு வந்து சண்டை பிடித்து சாமியாடி செல்வது அவருக்கு பிடித்தமில்லை..

 அதனால் நடப்பது அனைத்திற்கும் பார்வையாளராக ஒதுங்கிக்கொண்டார்..

 கல்யாண அலைச்சலில் அவள் இரண்டு நாளாக சரியாக உண்ணவில்லை.. அதனால் பசி வயிற்றை கிள்ளியது மாலதியிடம் பணம் கொடுத்து சுவாதிக்கும் அவளுக்கும் காலை உணவு இட்லி வாங்கி வருமாறு அனுப்பி வைத்தாள் நிலா..

மாலதி அருகே இருக்கும் வீட்டிற்கு சென்று இரண்டு பார்சல் இட்லி வாங்கிக் கொண்டு வந்து நிலாவிடம் கொடுக்க அப்போது கடைக்கு சென்ற தேவியும் சுவாதியும் வந்தார்கள்.. சுவாதியின் கையில் ஒரு இட்லி பார்சலை நிலா கொடுக்க அதை வாங்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டாள்..

 அவள் வாங்காததால் உடனே மாலதியிடம் அதை கொடுத்துவிட்டு நிலா அவளுக்கு என்று இருந்த பார்சலை எடுத்து வீட்டுக்கு வந்து உணவை பிரித்து உண்ண ஆரம்பித்தாள்..

 அப்பொழுது சுவாதி சும்மா இருக்காமல் ” மகாராணி அம்மா பிச்சை போட்டு தான் அதை சாப்பிட்டு நாங்க உயிர் வாழனும் என்று எந்த அவசியமும் இல்லை.. எங்ககிட்டயும் காசு இருக்கு எங்களுக்கு பசிச்சா வாங்கி சாப்பிட தெரியும்.. வந்தவங்க வந்த வேலை என்னவோ அதை பார்க்க வேண்டியதுதான்.. எங்களுக்கு கரிசனம் காட்டத் தேவையில்லை..” என்று முகத்தை வெட்டி விட்டு அங்கிருந்த டிவியை உயிர்ப்பித்து காலையில் சன் டிவியில் போடும் சீரியலை பார்க்க ஆரம்பித்தாள்..

[ ஏதோ வீட்ல ஒன்னும் சமைக்கலையே பிள்ளை பசியோட இருக்குமே அதை பார்க்க வைத்து சாப்பிடக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் ஒரு சாப்பாடு வாங்கி கொடுத்தா அதை சாப்பிடாமல் கொழுப்பு தனத்தை காட்டிட்டு போகுது எருமை மாடு ]

 சகுந்தலா எழுந்து காலையில் நிலாவை பார்க்காததால் அவர் எதுவும் பேசாமல் சென்று விட்டார்..

 நடேசன் மற்றும் குமரனின் குணத்தையும் நிலா போகப் போக தெரிந்து கொள்வாள்..

Advertisement