Advertisement

 ஓம் நமச்சிவாய..

 அத்தியாயம் 7.

 மதி பாட்டியும் நிலாவும் ஒன்று சேர்ந்தது போன்று வரதனை அழைத்தார்கள்..

மண்டவ வாயில் வரை சென்றவர் தாயின் குரல் கேட்டு மீண்டும் குடும்பத்தை அழைத்து வந்து என்ன வென்று கேட்டார்..

 வரதன் வந்து நின்றதும் பாட்டி நிலாவிடம் திரும்பி ” இனி நீயே என்ன பேசணுமோ அதை மனசு விட்டு பேசிடு குட்டி. இதுவரை எனக்காக நீ பொறுத்து போனதெல்லாம் போதும். நான் இனி மனசு கஷ்டப்பட மாட்டேன் எனக்கு நீ தான் முக்கியம் என்ன கேட்கணுமோ எல்லாத்தையும் கேளு குட்டி. ” என்றார் பாட்டி..

” சரி பாட்டி. முதலில் பக்கத்துல இருக்கிற நம்மளோட அறைக்கு போயிடலாம்.. ” என்று கூறிவிட்டு பாட்டியின் கையை பிடித்து நிலா அழைத்துச் சென்றாள்..

 அவளைத் தொடர்ந்து வரதன் குடும்பமும் அந்த அறைக்குள் சென்றது..

” என்னமா இதெல்லாம் என்ன பிரச்சனை ஏன் போன எங்களை திரும்ப கூப்பிட்டீங்க.. ” என்றார் அறையின் கதவை அடைத்து விட்டு வந்த வரதன்..

” இதுக்கு மேலயும் என்ன வரதா நடக்கணும்.. அந்த மாப்பிள்ளை பற்றி அவ்வளவு விசாரிச்சேனே நான்.. அப்புடி இருந்தும் என்கிட்ட கூட நீ இவனை பற்றி யாரு என்ன என்கிற தகவல் எதுவுமே எனக்கு ஏன் சொல்லலை.. என் பேத்தி யாருமில்லாத அனாதையா?.. எப்படியாவது அவளோட கடமை முடிந்தால் போதும் என்று நீ நினைச்சிட்டியா?. நீ வேணும்னா அப்பன் கடமையை மறந்திருக்கலாம் ஆனா நான் எப்பவுமே என் பேத்திக்கு துணையாக இருப்பேன்.. மாப்பிள்ளை மாறின விஷயத்தை என்கிட்ட கூட சொல்லணும்கிற நினைவு உனக்கு இல்லாம போயிடுச்சே. நீ இப்புடி இருப்பன்னு நினைக்கவே இல்லை வரதா.. ” என்றார் பாட்டி..                              

[ சொன்னாதான் அந்த முசுட்டு வாத்தியோட குணம் தெரிஞ்சா நீ இந்த கல்யாணத்தை நிறுத்திடுவியே பாட்டி. அப்புறம் வரதன் எங்க போவான் இன்னொரு இளிச்சவாய் மாப்பிள்ளை பிடிக்க ஹா ஹா எல்லாம் பாக்க பிளான் ]

 தாயின் பேச்சை மறுத்து பேச வந்த வரதனை கைநீட்டி தடுத்து நிறுத்தி பேசினாள் நிலா..

” நீங்க எல்லாம் அப்பாவா இருக்கிறதுக்கு தகுதியே இல்லாத ஆள்.. உங்களுக்கு வெக்கமா இல்ல?.. பெத்த பொண்ணுக்கு யாரு என்னனு பார்க்காமல் ஒருத்தனை கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா போதும்.. கடமை ஒன்று முடிந்தது என்று நினைத்து இப்படி ஒரு காரியம் பண்ணிட்டிங்க.. உங்களைப் பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு..

 நினைவு தெரிந்த வயதில் இருந்து உங்களை பார்க்காம இருந்த மாதிரி இந்த கொஞ்ச காலமும் உங்களை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம்.. 

 நான் பாட்டியோட வளர்ப்பு தப்பா போக விடமாட்டேன்.. நீங்க அமைத்து தந்த இந்த வாழ்க்கையை நானும் உங்களுக்கு முன்ன இதே சென்னையிலிருந்து கொண்டு எனக்கு ஏற்ற மாதிரி நல்லபடியா அமைச்சு வாழ்ந்து காட்டுவேன்.. நான் நல்லா வாழணும் இல்ல சீரழிஞ்சு போகணும் என்றோ நீங்க எப்படி நினைச்சு இந்த கல்யாணம் எனக்கு செய்து வச்சீங்கன்னு எனக்கு தெரியாது.. ஆனா உங்களுக்கு இன்னும் ஒரு பொண்ணு இருக்குன்றதை மறந்திடாமல் அவளுக்காவது ஒழுங்கான தகப்பனா இருந்து நீங்க நல்லபடியா கல்யாணத்தை பண்ணி அவளோட வாழ்க்கையை செட்டில் பண்ணுங்க.. என்ன பொறுத்த வரையில ஓடிப்போன அம்மாவும் நீங்களும் எனக்கு வேற வேற இல்ல.. இதுவே நாம சந்திக்கிற கடைசி சந்திப்பா இருந்தால் உங்களுக்கு ரொம்ப நல்லது. குட் பாய்.” என்றாள் நிலா..

நிலா பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுப்புலட்சுமி பேச ஆரம்பித்தார். ” ஏய் என்ன நீ ரொம்ப ஓவரா பேசுற.. ஆமா உன்ன உங்க அப்பா திரும்பியும் பாக்கல அதுக்கு நான் தான் காரணம்.. கல்யாணம் பண்ணும் வரைக்கும் எனக்கு இரண்டாம் கல்யாணம் என்ற நினைப்பு இருந்ததே இல்லை.. கல்யாணம் பண்ணி எனக்குன்னு குழந்தைகள் வர ஆரம்பிச்சதுக்கு பிறகு அவர் எங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும் என்று நான் நினைச்சது எனக்கு தவறாக படல.. நான் தான் அவரை உன்னை பார்க்க வர அனுமதிக்கலை.. அதுக்கு இப்போ என்னங்கற?.. என்னோட பிள்ளைகளுக்கு இன்னும் அவருக்கு முதல் கல்யாணம் நடந்ததோ அவருக்கு முதல் தாரத்துக்கு ஒரு பொண்ணு இருக்கிறதோ இது சம்பந்தமான எந்த ஒரு விஷயம் தெரியாது.. நான் சொல்லிக்கிட்டதும் இல்லை.. அவங்களுக்கு.. அப்பாவோட பாசம் அவங்களுக்கு மட்டும் தான் கிடைக்குது என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு நான் கொடுத்தேன்.. பாசத்தையும் அன்பையும் அரவணைப்பையும் எனக்கும் என் பிள்ளைகளுக்கு மட்டும் தான் கிடைக்கணும் என்று நான் நினைச்சது எனக்கு குற்றமா தெரியல.. நீ வேணும் உன்ன பாக்கணும் என்ற நினைப்பு உங்க அப்பாக்கு முன்னமே இருந்திருந்தால் என்னை கல்யாணம் பண்ணி இருக்க கூடாது.. அவர் எப்ப உன்னை அவங்க அம்மாகிட்ட விட்டுடு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ அப்ப அவரோட வாழ்க்கை அவரோட நலன் மட்டும் தான் அவருக்கு முக்கியம் என்பதை நான் தெரிஞ்சுகிட்டேன்.. அதுக்கு ஏற்ற மாதிரி அவரை மாற்றி எங்களோட குடும்பத்தை சந்தோஷமா அமைச்சுக்கிட்டேன்.. இப்போ நான் என்னோட கணவர் என்னோட ரெண்டு குழந்தைங்க ஒரு முழுமையான குடும்ப அமைப்புடன் சந்தோஷமா எங்களோட குடும்பத்தோடு நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம்.. தாய் தகப்பன் பாசம் கிடைக்க உனக்கு கொடுத்து வைக்காத பிறவியா இந்த பிறவியை நீ எடுத்துட்ட.. அதுக்கு யாரு பொறுப்பு அது உன் தலைவிதி.. அந்த பாசத்துக்கு ஈடா உனக்கு ரெண்டு தாத்தாக்களோட சொத்து இருக்கே.. என்னோட பிள்ளைகளுக்கு அவரோட சொத்து மட்டும்தான் இரண்டு பாகமா பிரியும்.. ஆனா உனக்கு பாகப்பிரிவினையே இல்லாத பெரிய சொத்து உனக்கு கிடைச்சிருக்கு.. அதோட அம்மா அப்பாவுக்கு இணையா உன்னை அன்பா பார்த்துக் கொண்ட பாட்டி உனக்கு இருக்காங்க.. இதை விட வேற உனக்கு என்ன வேணும்.. இப்ப கூட நீ உன்னோட சொத்துல ஒரு பங்கு உன்னோட தங்கச்சிக்கு கொடுக்க போறியா இல்லையே.. அப்போ உனக்கு என்ன அதிகமான பேச்சு? வாயை மூடிட்டு கல்யாணம் பண்ணி வச்சிட்டோம். ஒழுங்கா பொண்ணா லட்சணமா குடும்பத்தை நடத்தி உன்னோட வாழ்க்கையை பார்த்துக்கோ.. இனி உன்னோட சம்பந்தப்பட்ட எந்த விஷயத்துக்குமே இவரை நான் வர அனுமதிக்க மாட்டேன்.. சென்னையை பொறுத்தவரையில் நாங்க வாழும் இடத்தில் அவருடைய முதலாவது திருமணம் பற்றி எதுவும் தெரியாது.. நான் அவரோட ரெண்டாவது மனைவி என்பதும் தெரியாது.. இப்போதுதான் இந்த விஷயம் என் பிள்ளைகளுக்கே தெரியும்.. இனி அவங்களை இந்த அதிர்ச்சியில் இருந்து மனதை திசை திருப்பி. முதல் மாதிரி சந்தோஷமா எங்க வாழ்க்கையை அமைத்துக் கொள்ளணும்.. வெளிப்படையாகவே சொல்லுறேன் இனி நீ யாரோ?. எங்க குடும்பம் யாரோ?.. ” என்று இவ்வளவு காலமும் அடக்கி வைத்த மொத்த வஞ்சத்தையும் சேர்த்து கொட்டி தீர்த்தார் ..

” ஹலோ கொஞ்சம் நிப்பாட்டுங்க இல்லன்னா மட்டும் உங்களோட உறவாடி சொந்தம் கொண்டாத்தான் தவம் இருக்கிறோமாக்கும்.. யாருக்கு வேணும் உங்க உறவும் சொத்தும்.. பாட்டியைத் தவிர சொந்தம் என்று யாரும் இல்லாம வளர்ந்த எனக்கு தகப்பனோட அன்பையும் பாசத்தையும் கொஞ்சம் கொடுக்கிறதுக்கு நீங்க அனுமதிச்சு இருந்தீங்க என்றால்.. மொத்த சொத்தையுமே இவங்க என்னோட தம்பி தங்கச்சி என்ற உரிமையோட அன்போடு நான் அவங்களுக்கே கொடுத்திருப்பேன்.. இந்த சொத்து எனக்கு ஒரு ஆதாரம் மட்டும் தான்.. இது என்னோட பேசவும் போறதில்லை.. இது என்னை அரவணைக்கவும் போறதில்லை.. இந்த சொத்து எனக்கு ஒரு ஆறுதலா இருக்கவும் போறதில்லை.. இந்த சொத்து பணம் எல்லாம் என்னை பொறுத்தவரை வெறும் பேப்பர் தான்.. அது எனக்கு உறவும் இல்ல நட்பும் இல்லை.. இப்போ நானே சொல்றேன் எனக்கு மனசு மாறி இந்த சொத்தை யாருக்காவது கொடுக்கணும் என்று தோன்றினால் அனாதை ஆசிரமங்களுக்கு எழுதிவைப்பேனே தவிர உங்களுக்கோ உங்களை சார்ந்த யாருக்குமோ இந்த சொத்துல ஒரு துளி கூட பங்கு கிடைக்க விட மாட்டேன்.. எனக்கு நீங்களும் தேவையில்ல உங்க சொந்தமும் தேவையில்லை.. பொண்ணுக்கு தகப்பனோட கடமையை செய்யாத நீங்க ஒரு அம்மாவுக்கு மகனோட கடமையை செய்வதும் செய்யாமல் போவதும் உங்களோட விருப்பம்.. இப்ப வாங்க பாட்டி நாம போகலாம்.. ” என்று கூறி பாட்டி கையை பிடித்தாள் நிலா..

 நிலாவின் கையில் இருந்து தனது கையை உருவி எடுத்த பாட்டி ” இங்க பாருடியம்மா நீயும் உன் குடும்பமும் நல்லா சந்தோஷமா இருங்க.. அப்பவும் என் மகன் நல்லா இருக்கணும்னு நினைச்சேன். இப்பவும் என் மகன் நல்லா இருக்கணும்னு மட்டும் தான் வாழ்த்துறேன்.. என் மனசு நோக வச்சுட்டீங்க. என் பேத்தியை ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க அதுக்கு காலமும் கடவுளும் கொடுக்கும் தண்டனையில் இருந்து நீங்க தப்ப முடியாது.. இப்பதான் தோணுது என் மகனை இவ்வளவு தூரத்தில் கல்யாணம் கட்டி இங்க அனுப்பாமல் எங்க ஊரிலேயே வச்சிருந்தா என் பேத்தியை சந்தோஷமா பார்த்திருப்பானோ என்று.. அதுவும் காலம் கடந்த முடிவு இனி பயனற்றது.. உங்க சொத்து மட்டும் பிள்ளைகளுக்கு போய் சேர்வதில்லை நீங்க செய்ற பாவங்களும் பிள்ளைகளுக்கு போய் சேரும்.. இனியாவது பாவங்களை உங்க பிள்ளைகளுக்கு தேடி வைக்காமல் நீங்க சில நன்மைகளை செய்து பிள்ளைகளுக்கு நல்லபடியா வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள்.. எப்பயாவது இந்த அம்மாவை நினைவு வந்தால் அதுவும் உனக்கு வர நேரம் இருந்தால் மட்டும் ஒரு எட்டு வந்து பாத்துட்டு போ வரதா.. சரி போனதெல்லாம் போகட்டும் இப்ப என்னோட பேத்திய கல்யாணம் பண்ணி இருக்க மகராசனோட முகவரியை எனக்கு தா?. என் பேத்தியை நானே கொண்டு போய் அவளோட புகுந்த வீட்டுல விடுறேன்.. அவங்க ஆள் யாரு எப்படிப்பட்டவங்க எதுவுமே தெரியாது.. நானே எல்லாரை பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு. என் பேத்தி வாழ போற வீட்டை பாத்துட்டு அங்க நிலா குட்டியை விட்டுட்டு நான் ஊருக்கு போறேன்..” என்றார் மதிப்பாட்டி..

 முகவரியை வரதன் கொடுக்கவும் நிலாவை தன் கையில் பிடித்துக் கொண்டு நித்தியாவுடன் அங்கிருந்து வெளியேறினார் பாட்டி..

 ஒரு வார்த்தைக்கு கூட நிலாவை அழைத்துக் கொண்டு வருவதாக வரதனோ சுப்புலட்சுமியோ கூறவில்லை என்ற மனத்தாங்கள் இன்னமும் பாட்டிக்கு அதிகரித்தது..

 அவை அனைத்தையும் கடந்து மண்டபத்தை விட்டு வெளியே வந்து அவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு சென்று அங்கே இருந்த நிலாவின் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேவந்து ஆட்டோ ஒன்றை பிடித்து பாட்டி நிலா மற்றும் நித்யா மூவரும் வாத்தியின் வீட்டை நோக்கி வந்தார்கள்..

 பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பெண்ணை பிரிந்த கவலையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும் வாழப் போகும் இடத்தில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி பெற்றோர்கள் சொந்தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெண்ணுக்குத் தேவையான அனைத்து சீர்வரிசைகளுடனும் மணப்பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் இது நடைமுறை.. ஆனால் அந்த நடைமுறையும் நிலாவின் வாழ்க்கையில் தலைகீழாகவே நடந்தது..

மதி பாட்டி கிராமத்தில் இருந்தாலும் இங்கு வாத்தியின் இந்த ஊரையும் வீட்டையும் பார்த்து முகம் சுளித்தார்..

 சிறிய வீடாக இருந்தாலும் எவ்வளவு அழகாக ஒரு வீட்டை பராமரித்து வைத்துக்கொள்ளலாம்.. ஆனால் இது வீடு என்று சொல்லிற்கே அர்த்தமற்றது..

 நிலாவுக்கும் நித்யாவுக்குமே இது அதிர்ச்சி தான்..

 நித்யாவோ நிலாவின் கையை சுரண்டி ” என்னடி இந்த சார் வாய் கிழிய காலேஜ்ல பேசுவர் ஆனால் அவருடைய வீடு இப்படி இருக்கு.. ” என்றாள் தோழி வாழ போகும் வீட்டை பார்த்து அவளும் மனதளவில் கஷ்டப்பட்டாள்..

” எனக்கு என்னடி நித்தி தெரியும் நானும் இப்ப தானே அவருடைய வீட்டை பார்க்கிறேன்.. ” என்றாள் நிலா.

 தோழிகளின் பேச்சை தடை செய்வது போல ” என்னடா நிலா குட்டி இந்த வீட்டை பார்த்தாலே எனக்கு என்னவோ போல இருக்கு. நீ எப்படிடா இங்க வாழுவ?. வேணாம் இனி இந்த வாழ்க்கை உனக்கு நாம இங்கிருந்து ஊருக்கு போய்டலாம். நமக்கு எதுவுமே வேணாம்..” என்றார் பாட்டி.

 பிடித்தோ பிடிக்காமலோ இன்று தான் திருமணம் நடந்திருக்கிறது.. இனி இதுதான் நம் வாழ்க்கை என்று தீர்மானத்தை நிலா எடுத்து விட்டாள்..

” இல்ல பாட்டி அங்க சொன்னது தான் எப்பவுமே நீங்க என்னை வளர்த்த வளர்ப்பு தப்பா போகாது.. இந்த வாழ்க்கையை நான் எனக்கேற்ற மாதிரி மாத்தி சந்தோசமா நானும் எல்லாரும் மாதிரியும் குடும்பத்தோட வாழ்வேன்.. பல சோதனையோ எந்த கஷ்டமோ வந்தாலும் நான் அவரோட சேர்ந்து சந்தோசமா வாழ்ந்து அங்க வருவேனே தவிர இனி தனிய வரமாட்டேன்.. நாம வந்து பத்து நிமிஷம் ஆகுது ஆனா வீட்ல யாரும் இருக்கிற மாதிரி தெரியல பாட்டி.. அவரும் மண்டபத்தில் இருந்து இன்னும் வீட்டுக்கு வரல போல. இங்க வெளிய நிக்க வேண்டாம் பாட்டி… நீங்க போங்க நானே இங்க எல்லாம் பார்த்துக்கிறேன்..” என்று நிலா கூறியதும்.. செல்ல மனசே இல்லை என்றாலும் இனி பேத்தியின் சாமர்த்தியத்தால் பேத்தி அவளது வாழ்க்கையை வளமாக மாற்றிக் கொள்வாள். என்ற நம்பிக்கையில் நித்யாவை அழைத்துக் கொண்டு அதே ஆட்டோவில் அங்கிருந்து சென்று விட்டார் பாட்டி..

 அவளும் ஆரத்தி சுற்றவில்லை வரவேற்கவில்லை என்று அதைப் பற்றி எதுவும் நினைக்காமல் அவளது பெட்டியை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா 

அப்பொழுது உள்ளிருந்து ஒரு குரல் வந்தது..

” ஏய் யார் நீ?. வீடு திறந்து இருந்தால் நீ பாட்டுக்கு ஏதோ நுழையுற மாதிரி வந்துடுவியா?. வெளிய போ.. ” என்றாள் வாத்தியின் அருமை தங்கை..

புது பொண்ணுக்கு அருமையான வரவேற்பு..

Advertisement