Advertisement

 ஓம் நமச்சிவாய.

 அத்தியாயம் 5..

 அடுத்த நாள் காலை பிறை நிலா எழுந்ததும் அவளது காலை கடன்களை முடித்துவிட்டு சமையலறை சென்று இருவருக்கும் பதமாக காஃபி தயாரித்துக் கொண்டு பாட்டியை பார்க்க அவரது அறைக்கு வந்தாள்..

 பாட்டியும் எழுந்து அவரது சின்ன சின்ன வேலைகளை முடித்துவிட்டு கந்த சஷ்டி கவசம் பாடி முடித்து பேத்தியின் கமகம மணத்தில் தயாரான காஃபியை அருந்த காத்திருந்தார்..

 பிறை நிலா வந்து பாட்டியின் அருகில் அமர்ந்ததும் இருவரும் ஆளுக்கு ஒரு காஃபியை எடுத்து அருந்தியபடி பாட்டி பிறைநிலாவுடன் பேச ஆரம்பித்தார்..

” வாடா குட்டி பக்கத்துல வந்து இரு.. இன்னைக்கு என் தங்க குட்டியை பொண்ணு பாக்க வராங்க. மாப்பிள்ளை பற்றி வரதன் கிட்ட நான் எல்லாமே விசாரிச்சிட்டேன்.. கவலைப்படும்படி எதுவும் இல்ல மாப்பிள்ளை பற்றி சொல்லனும்னா கொஞ்சம் வேலை டென்ஷன் வந்தா கோவப்படுவார்.. பார்ட்டி நேரங்களில் கொஞ்சம் குடிப்பார்.. பொண்ணுங்களை மதிக்க தெரிஞ்சவர்.. அப்புறம் உன்னை பற்றியும் மாப்பிள்ளை கிட்ட சொல்ல சொல்லிவிட்டேன்.. நீ எதுக்கும் பயப்படாத தங்க குட்டி பாட்டி எப்பவுமே நல்லது மட்டும் தான் பண்ணுவேன்..” என்ற அவளது தலையை ஆறுதலாக தடவினார்..

” எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை பாட்டி. நீங்க இவ்வளவு விளக்கம் எனக்கு சொல்ல தேவையில்லை.. நீங்க பார்த்து யாரை சொன்னாலும் நான் கட்டிக்கிறேன்.. எனக்கு நல்லது பண்ண உங்களை தவிர வேற யாரும் இல்லையே அது எனக்கு நல்லாவே தெரியுமே பாட்டி.. நீங்க எதை பற்றியும் கவலைப்படாம இருங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க நான் சப்பாத்தி சுட்டு எடுத்துட்டு வரேன்.. ” என்று விட்டு அங்கிருந்து சென்றாள்..

 காலை உணவு மதிய உணவு இரண்டு முடித்து நேரம் சென்றதும் அவளை சற்று நேரம் படுத்து ஓய்வெடுக்கும் படி பாட்டி அறைக்கு அனுப்பி வைத்தார்..

 மாலை நேரம் நெருங்கியதும் அழகிய பட்டு புடவை அதற்கு தகுந்த நகைகளையும் கொடுத்து அவளை தயாராகும் படி கூறிவிட்டு வந்தார் பாட்டி…

 ஒரு விசேஷ வீட்டில் பெண்ணின் தகப்பன் தான் அனைத்தையும் எடுத்து கட்டி செய்வார்.. ஆனால் இங்கோ பெண்ணின் அப்பா அதற்கு எந்தவித வாய்ப்பு இல்லாமல் மாப்பிள்ளை உடன் மாப்பிள்ளை வீட்டு சார்பாகவே வரதராஜன் வருவதாக இருந்தார்..

 சொந்த பந்தங்கள் கூடி தடல்புடலாக பெரிய அளவில் விசேஷம் செய்து பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்கவில்லை..

 வரதராஜன் மற்றும் மதிப்பாட்டி இருவர் தலைமையில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது..

 சென்னையிலிருந்து மாப்பிள்ளை குடும்பமும் மாப்பிள்ளையும் வரதராஜனும் வந்தார்கள்..

  வரதராஜன் மகளின் புகைப்படத்தை தாயின் மூலம் பெற்று அதை மாப்பிள்ளையிடம் காட்டி இருந்தார்.. சந்துருவின் போட்டோவும் பாட்டியிடம் கொடுக்கப்பட்டது ஆனால் அதை அவள் பார்க்க மறுத்து விட்டாள் நிலா..

 சந்துரு அந்த அளவிற்கு மோசம் இல்லை அனைத்து அம்சங்களும் பெற்று அழகாகவே இருந்தான்.. ஒரு பெண்ணுக்கு அழகு மட்டுமே ஒரு ஆணிடம் திருமணத்திற்கு பிடித்தமான தகுதி இல்லையே.. நல்ல நேரம் நெருங்கியதும் பாட்டி சென்று நிலாவை அழைத்து வந்தார்..

 போட்டோவில் பார்த்திருந்தபடியால் அதைவிட நேரில் இன்னும் அழகாகவே இருந்தாள் நிலா.. வரதராஜரின் பெண்ணும் அனைத்து சொத்துக்களுக்கும் தனி ஒருத்தி என்றும் சந்துருவின் குடும்பத்திற்கு தெரிந்த பின் அவர்கள் நிலாவில் நிராகரிக்க எதுவிதமான காரணமும் இல்லாததால் மட்டுமே பெண் பார்க்க வந்தார்கள்..

பெண்ணின் விருப்பம் குணம் எதற்கும் அங்கு வேலை இல்லாமல் போனது..

 எந்த வித மேல் பூச்சும் இல்லாமல் பார்த்ததுமே சந்துருவின் அம்மாவிற்கு நிலாவை பிடித்திருப்பதாகவும் திருமணத்திற்கு நாள் குறிப்பதாகவும் கூறி அவர்கள் கொடுத்த காஃபி மற்றும் பலகாரங்களை உண்டு விட்டு நிலாவுக்கு பூ வைத்து உறுதிப்படுத்திவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்னைக்கு சென்றார்கள்..

 சந்துரு நிலாவிடம் வந்து கையில் ஒரு தாளை வைத்து விட்டு அதில் அவனது கைபேசி எண் இருப்பதாகவும் அவளை பேசுவதற்கு அழைப்பு விடுக்குமாறும் கூறிவிட்டு சென்றான்..

வரதராஜன் வந்ததோ பெண் பார்க்கும் படலத்தில் கலந்து கொண்டதைப் பற்றியோ நிலா எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. பாட்டியின் மன அமைதிக்காக அவள் சம்மதித்து நடைபெறும் இந்நிகழ்வில் எந்தவித குழப்பமும் வர நிலா விரும்பவில்லை..

 அவள் பிறந்து 19 வயது நடக்கிறது தந்தை என்ற ஒருவன் அவளுக்கு இன்சியல் தருவதற்கும் பெயருக்கும் இருக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அவள் பார்த்ததில்லை… அவளுக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்து இன்று தான் முதல் முறை அவளது தந்தையை நேரில் பார்த்திருக்கிறாள்..

 ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போன்ற ஒரு தன்மை தான் அவளது பார்வையில் தெரிந்தது..

 அவரும் மகளை பார்த்து அன்பாலும் பிரிவின் தவிப்பாலும் உருகி கரைந்து அன்பு மழையை பொழியவில்லை..

 இருவரது நடவடிக்கையை பார்த்த பின் பாட்டிக்கு இன்னும் பயம் அதிகரித்தது..

 சிறு பருவத்தில் நிலாவின் மனநிலை பாதிக்காமல் இருக்க அவளின் தகப்பன் ஏக்கம் அதிகரிக்காமல் இருக்க பாட்டி வரதனையும் மகளையும் பார்க்க விடவில்லை.. இதுதான் சந்தர்ப்பம் என்று தாய்க்கும் மனைவிக்கும் தெரியாமல் மகளை பார்க்கவும் வரதன் முயற்சிக்கவில்லை.. [ என்பது வேறு கதை அப்பாடா ஒரு தொல்லை கழண்டுச்சு என்று நினைத்து வரதன் நிலாவின் பக்கம் திரும்பி பார்க்காமல் இருந்திருக்கலாம்..]

அவரால் பல காயங்கள் அவளுக்கு இருந்தது ஆனாலும் அதை காட்டும் நேரமும் சந்தர்ப்பமும் இது இல்லை என்று நினைத்து வரதன் எந்த வித சேதாரமும் இல்லாமல் சென்னைக்கு போக இருந்தவரை தடுக்காமல் விட்டுவிட்டாள்..

 மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து நிலா சென்னைக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருந்தாள்..

 பாட்டியை பார்க்க வந்தவளுக்கு புதிதாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருப்பது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கவில்லை..

 அவளுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று அவள் அதை விட்டு அடுத்து என்ன என்று கடந்துவிட்டாள்..

 போகும்பொழுது சும்மா போகாமல் திருச்சியில் இருக்கும் ஜவுளி கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணை பாட்டிக்கு துணையாகவும் வீட்டு வேலைக்கும் கடையில் இருந்ததை விட அதிக சம்பளம் தருவதாகவும் அங்கே தங்கி இருக்குமாறு கூறி பாட்டியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு சென்னைக்கு சென்றாள் நிலா..

 மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து மீண்டும் காலேஜ் ஆரம்பித்ததும் நித்தியிடம் அவளுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை பற்றி கூறினாள்.

 முதல் கிளாஸ் முடிந்து இரண்டாவது சிடுமூஞ்சி வாத்தியின் பாடம் என்பதை மறந்து விட்டு தோழிகள் இருவரும் விடுமுறை நாட்களின் சுவாரசியத்தை பற்றி தீவிரமாக பேசிக் கொண்டிருந்ததில் சுடுமூஞ்சி வாத்தி வந்ததை கவனிக்கவில்லை..

 அனைவரும் எழுந்து அவனுக்கு பிறந்தநாள் விஷ் பண்ணி கைத்தட்டி ஆரவரம் பண்ணிய சத்தத்தில் தான் தோழிகள் இருவரும் அவர்களது பேச்சிலிருந்து கலைந்து சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்தார்கள்..

 ஏன் இந்த கை தட்டும் ஆரவாரம் என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்கள்..

 அருகே இருந்த மற்றொரு மாணவன்

 நித்தியை மாட்டி விடுவதற்காக ” சார்க்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம். அதுதான் இன்னைக்கு ஹாப்பியா எல்லாரும் சார் கிட்ட பார்ட்டி கேட்குறோம்.. நீயும் விஷ் பண்ணு நித்தி.. ” என்று அவர்களிடம் கூறிவிட்டு அடுத்து நடக்க இருக்கும் வேடிக்கையை பார்ப்பதற்கு ரகசியமாக சிரித்தான்..

 இவர்களும் பேச்சு சுவாரசியத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி சற்றும் தெரிந்து கொள்ளாமல் நிலாவோ மனதுக்குள் பேசுவதாக நினைத்து சற்று சத்தமாக ” இந்த மங்கூஸ் மண்டையனை கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு தான் ஏதோ போன ஜென்மத்துல பாவம் பண்ணி இருக்கு போல. இவன்கிட்ட மாட்டிகிட்டு என்ன பாட்ட பட போகுதோ? கடவுளே அந்த பெண்ணையும் அந்த குழந்தையும் நீதான் எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றனும்.. இவனுக்கு வாழ்த்து சொல்லலை என்பது தான் ஒரு கேடு.. ” என்றும் அன்று கோவிலில் நடந்த பிரச்சனையில் உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம். என்று அவன் கூறியதையும் மறந்துவிட்டு அவனை திட்டி திரும்பும் பொழுது கைகளை கட்டிக்கொண்டு அவர்களுக்கு சற்று இடைவெளி விட்டு நின்றான் உதயராகவன்..

 அவள் திட்டியதை அவன் கேட்டு விட்டான் என்கிற பயமும் பதட்டமும் சற்றும் இன்றி அவளும் தெனாவட்டாக அவனை ஒருப்பார்வை பார்த்துவிட்டு மாணவர்கள் என்ன என்று உணரும் முன் அவளது பார்வையை சாதாரணமாக மாற்றிவிட்டு தலையை குனிந்து நின்றாள்..

 இந்த மக்கு நித்யாவும் அவன் கூறியதை நம்பி ” ஒரு ஆண் குழந்தைக்கு அப்பா ஆகிட்டிங்க கங்கிராஜுலேஷன் சார்.. ” என்றாள்..

 நிலா அவனைத் திட்டியதை கேட்டதும் அவளை என்ன செய்தால் தகும் என்று கோவத்தின் உச்சத்தில் இருந்தவன் நித்யாவின் வாழ்த்தை கேட்டு கொதித்து விட்டான்..

” இது என்ன முட்டாள்தனமான பேச்சு மிஸ் நித்யா.. வாட் நான்சென்ஸ்.. இங்க நீங்க ஒரு மாணவி நான் ஒரு ப்ரொபசர் அந்த லிமிட் எப்பவும் எந்த இடத்திலேயேயும் இருக்கணும்.. உங்ககிட்ட நான் திருமணம் ஆனவன் எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னேனா?.. இடியட் இனி இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கணும். லிமிட் கிராஸ் பண்றது இது எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்லுறேன். அண்டர்ஸ்டாண்ட்.. ஹலோ ஸ்டுடென்ட்ஸ் அமைதியா அவங்க அவங்க இடத்துல இருங்க. ” என்று கூறிவிட்டு அவன் திரும்பும் போது யாருக்கும் கேட்காதவாறு ஹலோ என்ன என்னோட நித்தியை நீங்க திட்டுறீங்க இது எல்லாம் ரொம்ப ஓவர் சார்.. ஏதோ தெரியாமல் விஷ் பண்ணிட்டா அதுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விஷ் என்றால் நீங்க எதுவும் பேசாமல் போய் இருக்கலாம். இப்ப பாருங்க இவ்வளவு ஸ்டுடென்ட்ஸ்க்கு மத்தியில என்னோட நித்தி அவமானப்பட்டு அழுதுட்டு இருக்கா. ஒரு பொது இடத்தில் வைத்து ஒரு பெண்ணோட மனச காயப்படுத்துவது உங்களுக்கெல்லாம் ரொம்ப ஈஸியான விஷயமா போயிடுச்சு இல்ல.. இதுக்கு நீங்க தான் காரணம். இதற்கான சரியான பனிஷ்மென்ட் உங்களுக்கு நான் கட்டாயம் தருவேன்.. ” என்று பல்லை கடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்..

 அவனும் அவனது ஏரியாவுல ரவுடிதான்.. காலேஜ் என்பதால் குணத்திலிருந்து கெட்டப் வரை அனைத்தையும் மாற்றி நித்தியிடம் சற்று தன்மையாக பேசி விட்டு வந்தான்.. என்று தான் கூறவேண்டும்.. இல்லை என்றால் அவனின் பதிலே வேறு மாதிரி இருந்திருக்கும்.. [ அடேய் இதுதான் உங்க ஊர்ல தன்மையா பேசுறதாஆஆ ஹா ஹா நல்லா பேசுறீங்க டா தன்மையா]

 வழமை போன்று காலேஜ் ஆரம்பித்து முடியும் வரை இருவருக்கும் சிறு சிறு பிணக்குகள் இருந்து கொண்டே இருந்தது..

 சந்துருவின் அம்மாவும் இரண்டு மாதத்தின் பின் ஒரு நல்ல முகூர்த்தம் வருவதாகவும் அதில் சென்னையில் மண்டபத்தில் விமர்சையாக திருமணம் செய்யலாம். என்றும் திருமண நாள் எது என்று இறுதி முடிவு எடுத்திருப்பதாகவும். பொண்ணுக்கு தரக்கூடிய சீர்வரிசைகள் பற்றியும் வரதராஜன் மற்றும் மதி பாடியை வைத்து பேசிமுடித்தார்.. அதன் பின் திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் மாலை வரவேற்பும்.. அடுத்த நாள் நல்ல நேரத்தில் கோவிலில் வைத்து தாலி கட்டியதும் மண்டபத்தில் விருந்து வைத்து அதன் பின் ஏனைய சடங்கள் வழமை போன்று நடக்கும் என்று கூறிவிட்டு வந்தார்..

 திருமணநாள் முடிவாகிய பின். பேத்திக்கு எந்த குறையும் இல்லாமல் நல்லா இருக்கணும். என்று நினைத்து இரண்டு தாத்தாக்களும் அவளுக்கு கொடுத்த சொத்துக்களை அவளது பெயரில் பாட்டி மாற்றி எழுதினார்..

 திருமணத்துக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டு இருக்கவும் தேவையான அனைத்தையும் வாங்கிக் கொள்ளுமாறு பணம் அனுப்பி வைத்தார் பாட்டி..

 சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் திருமணத்திற்கு பர்ச்சேஸ் பண்ண நித்தி கட்டாயப்படுத்தி நிலாவை அழைத்துக் கொண்டு மால்களில் சுற்றினார்கள்..

 மாப்பிள்ளை சந்துரு அன்று அவளுக்கு கொடுத்த கைப்பேசி எண்ணை அவள் அப்பொழுதே தூக்கி எறிந்து விட்டாள்..

 அவனும் வரதராஜனிடம் கூறிப் பார்த்தான். அவளிடம் பேச வேண்டும் என்று.நிலாவின் எண்ணை அவனுக்கு தருமாறு கேட்டான்.. ஆனால் அவரோ நிலாவின் கோபம் தெரிந்து கொடுக்காமல் நிராகரித்து வந்தார்..

 பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல். அவளை சந்திப்பதற்கு காலேஜ் வாசலில் வந்து நின்றான்.. அவன் வந்து நிற்பது அவளுக்கு தெரிந்தும் அவள் அதை கண்டு கொள்ளாமல் நாட்களைக் கடந்து வந்தாள்..

 சண்டைக்கோழிகள் இருவரும் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொண்டே நாட்களை முடித்து வந்தனர்..

 அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்து ஆரம்ப புள்ளி வைத்து விட்டார்கள்..

 திருமண நாளும் வந்தது..

Advertisement