நீ பழகிட்டு இருக்கப் பெண்ணைப் பத்தி ஆளுங்களை விட்டு விசாரிக்கச் சொன்னேன். ஒழுக்கமா இல்லைன்னுதான் ஆவ புருஷன் விவாகரத்து பண்ணி இருக்கான். திருந்தாதுன்னு சொல்லித்தான் பெத்தவங்களும் கூடப் பிறந்தவங்களும் வெளிய தொரத்தி விட்டுடாங்க. என்றதும், இளமாறனுக்கு அதிர்ச்சிதான். இதற்கு முன் அவளுக்குத் திருமணம் ஆனதை சுந்தரி அவனிடம் சொல்லி இருக்கவில்லை. அதோடு அவனிடம் தம்பியின் பெயரை சொல்லித்தானே பணம் வாங்கினாள்


அவன் முகத்தைப் பார்த்த மாணிக்கம், “பணம் எதுவும் கொடுத்திருக்கியோ. எனக் கேட்க


ஆமாம் ஒரு லட்சம் கொடுத்திருக்கேன். தம்பிக்குன்னு தான் கேட்டு வாங்கினா. 


ம்ம்பார்த்தியாஅவங்க வீட்ல யாரும் இவகூடப் பேசுறது கூட இல்லையாம். 


இதோட போகட்டும் விட்டுடு. உன் பொண்டாட்டி பிள்ளைங்களை மட்டும் பாரு. உன் போடட்டியை காணோம்னு வேற ஒருநாள் எல்லாம் தேடிட்டு இருந்தியாமே…. எதாவது நடக்கக் கூடாதது நடந்திட போகுதுன்னு தான் உன்னை வரவழைச்சு பேசிட்டு இருக்கேன். 


நமக்குத் தெரிஞ்ச பையன், நம்ம கண்ணு முன்னாடி அழிஞ்சு போகக் கூடாது. நமக்குத் தெரிஞ்சும் விட்டுட்டோமேன்னு நாளைக்கு எனக்கும் வருத்தமா இருக்கும். 


நீங்க சொல்றது சரிதான் அண்ணா. எனக்குப் புரியுது. இனி எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டேன். என்றான்


நான் அந்தப் பெண்ணை இங்க இருந்து கிளப்புற வழியைப் பார்க்கிறேன். நீ உன் பணத்தைத் திரும்ப வாங்கப்பாரு. கிடைச்சா உன் அதிர்ஷட்டம். கிடைக்கலைனா அது உனக்குப் பாடம். என மாணிக்கம் சொல்லஇளமாறன் நன்றி சொல்லி புறப்பட்டான்


ஏற்கனவே முடிவு செய்தபடி சுந்தரியின் சவகாசம் இனி எப்போதும் வேண்டாம். சீக்கிரம் இருவருக்கும் இருக்கும் பண விவகாரத்தையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என நினைத்துக்கொண்டான்


சுந்தரியின் கணவன் வெளிநாட்டில் இருந்ததால்…. அப்போதே வேறு ஆணுடன் பழக்கத்தில் இருக்கஇதை அவள் புகுந்த வீட்டினர்அவளது கணவனிடம் சொல்லிவிட….ஒருமுறை திடிரென்று வந்தவன், நேரடியாகவே மனைவியைப் பற்றி அறிந்து கொண்டான்


இனிமேல் இந்தத் தவறு நடக்காது என மனைவி சொன்னதைக் காதில் வாங்காமல்விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினான். சில மாதங்களில் விவாகரத்தும் கிடைத்து விடஅவன் இவளை கைகழுவிவிட்டு சென்றுவிட்டான்


இவள் நடவடிக்கை பிடிக்காத சுந்தரியின் பிறந்த வீட்டினரும் அவளைத் தலைமுழுகி விடதனியாக வீடு பார்த்துக் கொண்டு வந்துவிட்டாள்


கணவனிடம் விவாகரத்துச் சமயம் வாங்கிய மொத்த பணம். ஏற்கனவே அவன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில் அவனுக்குத் தெரியாமல் ஆட்டையைப் போட்டது. அவள் பிறந்த வீட்டில் திருமணதிற்குச் செய்த நகைகள் எனக் கையிருப்பு நிறையவே இருக்க…. அன்றாடச் செலவுகளுக்கு இங்கே சென்னை வந்து ஒரு வேலைக்கும் சேர்ந்து விட்டாள்


வேலைக்குச் செல்லும் இடத்தில்தான் யார் சிக்குவார்கள் என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் எதிர்பாராதவிதமாக அவள் வண்டி பழுது பார்க்க மெக்கானிக் கடை சென்றவள், அங்கே இளமாறனைப் பார்க்கயார் இது புதிதாக? இதுவரை பார்த்ததில்லையே என அவனும் ஆர்வமாகப் பார்த்து வைக்க, அப்போதே இவன்தான் என முடிவு செய்து கொண்டாள்

இந்த ஏரியாவுக்குப் புதிதாகக் குடி வந்திருப்பதாகச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டவள், இளமாறனின் கைப்பேசி எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டாள். எதாவது ஒரு சாக்கு வைத்து அவனைத் தினமும் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தாள்


ஆரம்பத்தில் சில நிமிடங்கள் பேசியவர்கள். பிறகு நேரம் காலம் தெரியாமல் பேசினர். பிறகு இருவரும் வெளியே சேர்ந்து சுற்றும் அளவுக்கு வந்தது


இளமாறனும் அவள் இழுத்த இழுப்புக்கு வரமிகவும் நம்பிக்கையாக இருந்தாள். ஆனால் அதற்குள் வெண்மதி வந்து விட…. எல்லாமே மாறி விட்டது. சண்டை போட்டு கணவனை விட்டு பிரிந்து சென்று விடுவாள், நாம் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தாள்


இன்னும் கொஞ்சம் பழக்கம் அதிகரித்திருந்தால் ஒருவேளை இளமாறன் இவள் பக்கம் சாய்ந்திருக்கக் கூடும். ஆனால் சரியான நேரத்திற்கு வெண்மதி வந்து விட…. எல்லாம் மாறி விட்டது. இளமாறனின் வீட்டினர் அவளை நடத்திய விதத்தில் மிகவும் நம்பிக்கையாக இருந்தாள். ஆனால் அதுவும் பொய்த்துப் போனது. இளமாறன் மனைவிக்காகப் பெற்றோரை பிரியும் முடிவில் அல்லவா இருக்கிறான்


பணத்தைத் திருப்பி வாங்கத்தான் தன்னோடும் பேசிக்கொண்டிருக்கிறான் எனப் புரியாமல் இல்லை. அப்படி எல்லாம் அவனை விட்டு விடக் கூடாது என்ன செய்வது எனச் சுந்தரி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்


நான் வேற இடத்துக்கு வீட்டை மாத்திட்டு போயிடுறேன். உங்க பொண்டாட்டிக்கு தெரியாம பார்த்துக்கலாம். ஆனா என்னோட பேசாம மட்டும் இருக்காதீங்க. நீங்க என்னோட பேசலைனா எனக்கு என்னவோ போல இருக்கு. என மெல்ல ஒரு நாள் தூண்டில் போட்டுப் பார்க்க… 


எதுவா இருந்தாலும் என் பணத்தை முதல்ல கொடு. அப்புறம் பார்க்கலாம். நான் வேற ஒருத்தர்கிட்ட வட்டிக்கு வாங்கிக் கொடுத்தது. இப்ப நான் வட்டி கட்டிட்டு இருக்கேன். என்றான் இளமாறன் பணத்தில் குறியாக


அவனுக்குத் தெரியும் இப்போதே தான் எதாவது பேசினால், பணத்தைக் கொடுக்காமல் கம்பியை நீட்டி விடுவாள் என்று. பணம் வாங்கும் வரை வேறு எந்த பேச்சு வார்த்தையும் வேண்டாம் என நினைத்திருந்தான்


சுந்தரி எதற்கும் துணிந்த பெண், அவளுக்கா இதெல்லாம் புரியாது. “என் தம்பிகிட்ட இருந்து சீக்கிரம் பணத்தை வாங்கித் தரேன். என வைத்து விட்டாள்


தம்பிகிட்ட இருந்தாஎப்படிப் பொய் சொல்றா பாரு. தன் பணம் திரும்ப வரும் என்ற நம்பிக்கையே அவனுக்குப் போய் விட்டிருந்தது


மருமகள் வந்ததில் இருந்து உட்கார்ந்தே உண்டு பழகிவிட்டார் வசந்தாஇப்போது வேலை செய்ய உடல் வணங்கவே இல்லை. அதென்னவோ சில மாமியார்கள் மருமகள் வந்ததும், எதோ ஆபீஸ் வேலையில் இருந்து ஓய்வு பெறுவது போலவீட்டு வேலைகளில் இருந்தும் ஓய்வு பெற்றுகொள்கின்றனர்


ஒரு வேளைநாம் செய்தால் மருமகள் தன்னையே செய்யப் போட்டு விடுவாள் என்ற எண்ணமா? எதோ ஒன்று இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்


வகை வகையாக வெண்மதி சமைத்து போட உண்டு கொண்டிருந்தார். இப்போது கடையில் இருந்து மாவு வாங்கி இட்லியும் தோசையும் ஊற்றினார். முன்பு வெண்மதி ஒருநாள் உடல் நலமில்லாமல் வெளியே மாவு வாங்கினால் கூடகடை மாவு நல்லாவே இருக்காது.வேற எதாவது செய், கடையில எல்லாம் மாவு வாங்காத என்பார். இப்போது அவருக்கு மாவு அரைக்க அவ்வளவு வலித்தது


வீட்டில் சோறு மட்டும் பொங்கி விட்டு, வெளியே இருந்து குழம்பு வாங்கி வர செய்து கணவனும் மனைவியும் உண்டனர்


திங்கக்கிழமையில இருந்து ஸ்கூலுக்குப் போயிடனும். என வெண்மதி மகள்களுக்குச் சொல்லடீச்சர் திட்டுவாங்க என்றதும், டீச்சருக்கு பயந்து கஜலக்ஷ்மி சரியென்று சொல்ல…. ஆனால் வரலக்ஷ்மி அப்போதும் அழுகை. சரி முதல்ல பெரியவ போகட்டும் என அமைதியாக இருந்தாள்


சனிக்கிழமை காலை இளமாறன் கடையில் இருக்கும் போது, இன்ஸ்பெக்டர் இளமாறனை அழைத்து வர சொன்னார் என்று ஒரு காவலர் வந்து நிற்கஅவனுக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் கேட்க, இன்ஸ்பெக்டருக்கு தான் தெரியும் என்றார்


நீங்க போங்க சார் பின்னாடியே வரேன். என்றதற்கு


இல்லை இப்பவே வரணும். என அவர் பிடிவாதமாக நின்றார்


என்ன காரணம் என்றே தெரியாமல், யாருக்கு அழைத்து என்னவென்று சொல்லுவான். அந்நேரம் பார்த்து நண்பர்களும் யாரும் இல்லை. சரி நேரில் போய்ப் பார்த்துக் கொள்வோம் என நினைத்தவன், கடைப் பையனை பார்த்துக்கோ எனச் சொல்லிவிட்டு இளமாறன் வண்டியை எடுக்கஅவன் பின்னே காவலரும் உட்கார்ந்து சென்றார்


வெண்மதி எப்போதுமே மதியமும் இரவும் இளமாறன் உடன்தான் உன்பாள். இன்று வெகு நேரம் ஆகியும் அவன் வரவில்லை என்றதும், கணவனுக்குக் கைபேசியில் அழைத்துப் பார்க்கஅனைத்து வைக்கப் பட்டிருந்தது


அவனோடு இப்போதும் முகம் கொடுத்து பேச மாட்டாள் தான். ஆனால் கணவனுக்குப் பரிமாறி விட்டு இவளும் உண்பாள். இன்று கணவன் வெகு நேரமாகியும் வரவில்லை என்றதும், கண்டதையும் நினைத்துக் குழம்பிக்கொண்டிருந்தாள்


மகன் இன்னும் மதிய உணவுக்கு வரவில்லை என்று வசந்தாவுக்குத் தெரியும். வெண்மதி வேறு கணவன் வந்துவிட்டானா என இறங்கி வந்து பார்த்து விட்டு செல்லஅன்று மணிமேகலையும் தன் அம்மாவை பார்க்க வந்திருந்தாள்


என்னவோ இவ சொன்னதும் அப்படியே அவன் கேட்டுட்டு இருந்திடற மாதிரிஅவன் எங்க போனானோயாரோட போனானோ என வசந்தா மணிமேகலையிடம் ஜாடை பேசஅவள் நக்கலாகச் சிரித்தாள்

இதே உங்க பொண்ணு பண்ணி இருந்தாஇப்படி தான் இருந்திருப்பீங்களா? இதே நான் பண்ணி இருந்தாலும் இப்படி பெருமை தான் பேசி இருப்பீங்களா?” என வெண்மதி திருப்பிக் கேட்க…  வசந்தா முகம் பேயறைந்தது போல ஆனது

இப்போது வெண்மதி அவர்கள் இருவரையும் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு சென்றாள்


எங்களை எல்லாம் பகைச்சிட்டு நீ நல்லா இருந்துவிடுவாயா என்பது தான் இருவரின் எண்ணமும்.
இன்னும் நன்றாகக் கேட்க வேண்டும் என வெண்மதிக்கு வாய் துருதுருக்கவே செய்தது. ஆனால் இளமாறன்தான், தனியா போறோம்ன்னு ஆகிடுச்சு. எங்க அம்மா வம்பு இழுக்காதான் செய்வாங்க. எந்தச் சண்டையும் வேண்டாம் எனச் சொல்லி இருந்தான்


பாவம் வயதானவர்கள் குழம்பு பொரியல் மட்டுமாவது இருக்கும் வரை கொடுப்போம் என வெண்மதி நினைத்திருந்தாள். இவங்களுக்குப் போய்ப் பாவம் பார்த்தோமே எனத் தன்னையே நொந்து கொண்டு சென்றாள்.