மறந்து போ என் மனமே 



அத்தியாயம்



கோபித்துக் கொண்டு போன வெண்மதி போன வேகத்தில் திரும்பிவிடஅவள் புகுந்த வீட்டினருக்கு இளக்காரமாகத் தெரிந்தது.

பெரிசா கோவிச்சிக்கிட்டு போனாஅவ அக்கா ரெண்டு நாள்ல விரட்டி விட்டுட்டா. என வசந்தா மகள்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

வெண்மதி ஊரில் இருந்து வந்து சில நாட்கள் பிரச்சனையை ஆறப் போட்டாள். எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. ஆனால் மனைவி எந்தப் பஞ்சாயத்தும் வைக்காமல் திரும்ப வீடு வந்ததும், இளமாறன் இனி மனைவியிடம் கவனமாக இருக்க வேண்டும், மீண்டும் அவளிடம் சிக்கக் கூடாது என எச்சரிக்கையாக இருந்தான்.

வெண்மதி அவனோடு பேசுவதே இல்லை. அவனோடு மட்டும் அல்லமாமனார், மாமியாரோடும் பேசுவது இல்லை. அவள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கணவனுக்கு அந்த இன்னொரு பெண்ணிடம் எவ்வளவு தூரம் பழக்கம் என்று தெரிவது வரை சேர்ந்து வாழ்வதாகவும் இல்லை. அதனால் இரவிலும் கணவனைப் படுக்கை அறையில் அனுமதிப்பது இல்லை. இரவு உணவு எடுத்து வைத்துவிட்டு, அவன் வருவதற்குள் பிள்ளைகளுடன் வந்து கதவை அடைத்து விடுவாள்


இளமாறனும் மாடியில் சென்று உறங்க ஆரம்பித்தான். வீட்டிற்கு மற்றும் பிள்ளைகளுக்கு வாங்கிப் போடுவதில் அவன் குறை வைக்கவில்லை.

மனைவி இப்படியே தன்னைத் தொல்லை செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைத்தானோ என்னவோஆனால் மனைவி மனதளவில் மரித்துப் போனாள். அவளைத் தானே உயிரோடு கொன்று விட்டோம் என அவனுக்குத் தெரியவில்லை.

வசந்தா மருமகள் மீது கடுப்பில் இருந்தார். ஆம்பிளைங்க கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறதுதான். இவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போனா என்ன? என் மகன் முகம் பார்த்து கூடப் பேச மாட்டேங்கிறாஅவனுக்குச் சாப்பாடு போடுவது இல்லை. அவன் தனியா மாடியில படுக்கிறான் என மகனின் கஷ்டம் மட்டும் தான் தெரிந்தது.

இவ இப்படியே பண்ணிட்டு இருந்தாஅவன் இன்னும் அவ பக்கம் தானே போவான். புத்தி இருந்தா புருஷனை கைக்குள்ள வைக்கத் தெரியணும். என யாரையோ சொல்வது போலவீட்டிற்கு வந்த மணிமேகலையிடம் ஜாடைப் பேசினார்.

இவங்க பையன் பண்ணது தப்பு இல்லை. இப்ப நான் பண்றதுதான் தப்பு. ஒருநாள் கூட மகனை கண்டிச்சு பார்க்கலை. ஏன் டா இப்படிப் பண்றன்னு கேட்க துப்பில்லை, என்னைச் சொல்ல வந்திட்டாங்க. என வெண்மதிவுக்கு ஆத்திரம் தான் அதிகமாகியது


இதெல்லாம் நினைத்து வெண்மதி வெகுநேரம் உறங்காமல் கிடந்தவள், எப்போது உறங்கினாள் எனத் தெரியாமலே உறங்கிப் போனாள்.

காலையில் எழுந்து வழக்கமான வேலைகளைப் பார்த்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினாள். முதலில் அந்தப் பெண் யார் எனத் தெரிந்துகொள்வோம் என நினைத்த வெண்மதி, கணவன் மற்றொரு கடையில் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு வெளியே கடைக்குச் செல்வது போலஅவர்கள் கடைக்குச் சென்றாள்.

இளமாறன் திருமணத்தின் போது ஒரு கடைதான் வைத்திருந்தான். இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை. நல்ல வியாபாரம் அதனால் பக்கத்து ஏரியாவில் இன்னொரு கடை வைத்திருக்கிறான். இங்கேயும் அங்கேயும் மாறி மாறி இருப்பான். வட்டிக்கும் பணம் கொடுத்து வாங்குகிறான். நல்ல சம்பாத்தியம் தான்.

இவள் சென்றபோது நல்லவேளை கடையில் வேலை செய்யும் ரவி மட்டும்தான் இருந்தான். அவனுக்குக் கண்டிப்பாக விஷயம் தெரிந்திருக்கும் என வெண்மதிக்கு நன்றாகவே தெரியும்.

அண்ணன் அந்தக் கடையில இருக்கார் அண்ணி.” என்றவனிடம், “உங்க அண்ணனுக்கு எதோ புதுக் கேர்ள் ப்ரண்ட் இருக்காமேஅப்படியா?” வெண்மதி கேட்க,

முதலில் ரவி தெரியாதது போல நடிக்க… “டேய், எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கேன். உண்மையைச் சொல்லு. என்றாள்.

அவளே எல்லாம் தெரிந்து தான் வந்திருக்கிறாள் என்றதும், ரவியும் தனக்குத் தெரிந்ததைச் சொல்லி விட முடிவு செய்தான்.

அண்ணி வெளிய நிற்காதீங்க. உள்ள வாங்க.

அந்தப் பொண்ணு யாரு? எங்க இருக்கா தெரியுமா?”

அதோ அங்க ஒரு அபார்ட்மெண்ட் பால்கனி தெரியுது பாருங்க. அந்த வீடுதான். இப்ப வீட்ல இருக்காது. வேலைக்குப் போகுது சாயங்காலம் தான் வரும் பேரு சுந்தரி.

வீட்ல வேற யாரும் இல்லையா?”

இல்லைஅது மட்டும் தனியாதான் இருக்கு. பார்க்க காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கும். 

கல்யாணம் ஆனவளா இல்லையா?”

அது தெரியலை அண்ணி. ஆனா பார்த்தா கல்யாணம் ஆகாத மாதிரிதான் இருக்கு.”


இங்க ஒரு தடவை வண்டி ரிப்பேர்னு வந்துச்சு…. அப்புறம் அண்ணன்கிட்ட எதாவது ஹெல்ப் கேட்டு வரும். இவரும் போய்ச் செஞ்சு கொடுத்திட்டு வருவார்.

போனா ரொம்ப நேரம் இருப்பாரா?”

இல்லை போன் பேசுறது தான் அதிகம். இன்னும் பழக்கம் அந்த அளவுக்கு முத்தலைன்னு தான் நினைக்கிறேன். 


ஆனா உங்க அண்ணன் போன் இப்ப எல்லாம் பிஸியா கூட இல்லையே டா 


அண்ணி, உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அவர் ரெண்டு செல் வச்சிருக்கார் அண்ணி அந்தப் பொண்ணு கூடப் பேசவே ஒன்னு தனியா வச்சிருக்கார்.”


அடப்பாவி, இவள் ஏன் உங்க போன் எப்பவும் பிஸியா இருக்கு எனக் கேட்டதும், இன்னொரு கைப்பேசி வாங்கி விட்டான் போலஅது கூடத் தெரியாமல் இவள் இருந்திருக்கிறாள்.


அண்ணி, நீங்க இங்க ரொம்ப நேரம் இருக்காதீங்க. அப்புறம் நான்தான் சொன்னேன்னு அண்ணனுக்குத் தெரிஞ்சிடும்.

சரி அவர் வந்தா, நீயே அண்ணி இந்தப் பக்கம் கடைக்கு வந்தாங்க. நீங்க இல்லையான்னு கேட்டாங்கன்னு சொல்லிடு. எனச் சொல்லிவிட்டு வெண்மதி வந்துவிட்டாள். அவனின் நண்பர்களில் யாராவது ஒருவர் கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள் எனத் தெரியும்.

தெரிந்தால் தெரியட்டுமேஇவன் செய்யும் தப்பிற்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் ரவியை வேலையில் இருந்து தூக்காமல் இருந்தால் சரி என வெண்மதி நினைக்கஅவள் வந்து வெகு நேரம் ரவியோடு பேசிவிட்டு சென்றதை நண்பன் மூலம் அறிந்த இளமாறனுக்கு, என்ன பேசியிருப்பார்கள் என யூகிக்க முடிந்தது. ஆனால் அவன் ரவியிடம் எதுவும் கேட்கவில்லை.

அன்று சுந்தரி கைப்பேசியில் அழைக்க…. “என் பொண்டாட்டி இங்க வந்து உன் வீடு வரை பார்த்திட்டு போயிருக்காகொஞ்ச நாளைக்கு நாம பேசுறதோபார்க்கிறதோ வேண்டாம். என்றான்.

இளமாறன் அன்று வீட்டிற்கும் சீக்கிரமே சென்றுவிட்டான். அவன் பெற்றோர் டிவி பார்த்துக் கொண்டிருக்கபிள்ளைகள் உண்டு கொண்டிருந்தனர்.

சப்பாத்தி சுட்டுக் ஹாட்பாக்ஸில் வைத்தவள், தொட்டுக்கொள்ளக் குழம்பும் பாத்திரத்தில் எடுத்து வந்து உணவு மேஜையில் வைக்கஇளமாறன் அவனே பரிமாறிக் கொண்டு உண்டான்.

எதாவது சண்டையிடுவாள் என நினைத்தால்அவள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவன் உண்ட பிறகும் மூன்று சப்பாத்திகள் மிச்சம் இருந்தது. அவள் உண்ணவில்லை போல…. பிறகு உண்பாள் என நினைத்தான்.

டிவி பார்ப்பது போல ஹாலில் தான் உட்கார்ந்திருந்தான். சிறிது நேரம் சென்று வந்தவள், மீதம் இருந்த குழம்பை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு, சமையல் அறை விளக்கணைத்து விட்டுஉண்ணாமலே படுக்கச் சென்று விட்டாள்.

மனம் சரியில்லாத நிலையிலும், யாருக்கும் வயிற்ருக்கு அவள் குறை வைக்கவில்லை. வெண்மதி தன்னைத்தான் வருத்திக் கொண்டாள்.

அப்போது ஜெயா தங்கையைக் கைப்பேசியில் அழைத்தாள். இப்போதெல்லாம் தினமும் இரண்டு முறை அழைத்துப் பேசி விடுவாள். அக்காவை வேறு இப்படி மன நிம்மதி இல்லாமல் செய்துவிட்டோமே என வெண்மதிக்கே வருத்தம்தான். ஆனால் அவளிடம் மட்டும் தானே சொல்ல முடியும்.

மகள்கள் உறங்கி விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு, அன்று ரவி சொன்னதைப் பற்றிச் சொன்னாள்.

அவளுக்கு ப்ரண்ட் பிடிக்க அடுத்தவப் புருஷன் தான் கிடைச்சானா?”

எனக்கும் நேர்ல போய்க் கேட்கணும் போலத்தான் இருக்கு. ஆனா சாக்கடை மேல கல் எரிஞ்சா, நம்ம மேலதானே தெறிக்கும். அவகிட்ட போய்ச் சண்டை போட்டாஅக்கம் பக்கம் இருக்கவங்க என்னையும் தானே கேவலமா நினைப்பாங்க, அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன்.

நீ அவகிட்ட எல்லாம் போய்ப் பேசாத. உன் புருஷன்கிட்டே பேசு.

அவரைப் பார்க்கவே பிடிக்கலைஇதுல என்ன பேசுறது. ஆனா இன்னைக்கு என்னமோ நேரமே வீட்ல வந்து உட்கார்ந்திருக்கார். என்றாள்.

இதோட உன் புருஷனுக்கு நல்ல புத்தி வந்தா சரிதான். என ஜெயா போன்னை வைத்தாள்.

ஜெயா நினைத்தது போல இளமாறன் திருந்தவில்லை. மறுநாள் கடைக்கு வந்தவன், ரவியை இனி அவர்களின் இன்னொரு கடையில் வேலைப் பார்க்க சொன்னான். பதிலுக்கு அங்கிருந்த ஒருவனை இங்கே மாற்றிக் கொண்டான். வேலையில் இருந்து தூக்காமல் விட்டாரே என ரவி நினைக்க,

இந்த முறை விட்டுட்டேன். அடுத்த முறை கண்டிப்பா விட மாட்டேன். வேலைக்கு வந்தா, வந்த வேலையை மட்டும் பார்க்கணும். இல்லைனா வேலையை விட்டு தூக்கிடுவேன். என எல்லோரையும் சேர்த்தே எச்சரித்தான்.

அவன் அம்மாவிடமும் வெண்மதி வெளியில் சென்றால் தன்னை அழைத்துச் சொல்ல வேண்டும் எனச் சொல்லியிருக்கபக்கத்தில் கடைக்குச் சென்றால் கூட வசந்தா மகனை அழைத்துச் சொல்லிவிடுவார்.

ஞாயிறு அன்று பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் வெண்மதி எங்கேயும் வெளியே செல்ல மாட்டாள் என நினைத்தவன், எப்போதும் போல வேண்டியது வாங்கிக் கொடுத்துவிட்டு, மகள்களுக்குப் பிரியாணி ஆசை காட்டிவிட்டு சென்றுவிட்டான். அப்போது தான் வெண்மதிக்கு வேலை சரியாக இருக்கும், இவனை வேவு பார்க்க மாட்டாள்.


கடைப்பையன் ஏற்கனவே வந்து சாவி வாங்கிச் சென்று கடையைத் திறந்து சுத்தபடுத்தி வைத்திருக்கஅங்கிருந்த சாமி படங்களுக்குப் பூ போட்டு ஊதுபத்தி காட்டியவன், கடைப் பையனை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் பைக்கில் கிளம்பி சென்றான்


இரண்டு தெருக்கள் தாண்டி சுந்தரி அவனுக்காகச் சாலை ஓரம் நின்றிருக்கஅவளைப் பைக்கில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அவன் இறங்க, சுந்தரியும் அவன் அருகே நெருங்கி நின்றாள்


உங்க பொண்டாட்டிக்கு என்ன அவ்வளவு பயமா? போன்னும் பண்ண மாட்டேங்கிறீங்க, வீட்டுக்கும் வர்றதில்லை. எனச் சுந்தரி அவனைச் சீண்ட…. 


வீணா பிரச்சனை வேண்டாம்னு தான். என்றான்.


அப்ப உங்க பொண்டாட்டி என்னை விடச் சொன்னா விட்டுடுவீங்க. 


இப்போ எதுக்கு அதெல்லாம் பேசுற?” 


என்னை விட அவ தான் முக்கியம் இல்லை. 


எனக்குக் கல்யாணம் ஆனதை மறைச்சு உன்கிட்ட பழகலை. உனக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சு தான் பழக்கமே ஆரம்பிச்சுது புரியுதா? இப்ப வந்து இப்படிக் கேட்கிற?” என இளமாறன் சுள்லென்று விழநாம் இருப்பதையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்த சுந்தரி, “உங்களைப் பார்க்க முடியலைன்னு கோபத்தில பேசிட்டேன் விடுங்க. என்றாள்


அவள் தோளில் கைபோட்டவன், “என் பொண்டாட்டி மட்டும் இல்லைஉலகத்தில எந்தப் பொண்டாட்டியும் இதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. எனக்கு வீட்ல அமைதி ரொம்ப முக்கியம். எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. அவங்க எனக்கு முக்கியம். இதை நீ நியாபகம் வச்சுக்கோ. என்றான்

மனைவியை விட்டு விட முடியாது என்பதை அவன் மறைமுகமாக சொல்லிவிட்டான்.


சுந்தரிக்கு உள்ளுக்குள் கோபம் கனன்றது. ஆனால் வெளியே சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்தாள்


என் தம்பிக்கு பிஸ்னஸ்க்குப் பணம் தேவைப்படுது. ஒரு லட்சம் வேணும். உங்களுக்குத் தெரிஞ்ச யார்கிட்டையாவது சொல்லி வாங்கிக் கொண்டுங்க. என்றாள்


சுந்தரிக்கு தெரியும், இளமாறன் வட்டிக்குப் பணம் கொடுப்பது. அது தெரியாதது போலக் கேட்டாள். இளமாறனும் வட்டி சரியா கொடுத்திடனும் என்றவன், பணம் ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னான்


சரி கிளம்புவோம். என்றதும், சுந்தரிக்கு முகம் வாட… “அதுக்குள்ளையாநான் சாயந்திரம் வரை நீங்க என் கூட இருப்பீங்க நினைச்சேன். என்றாள்


ஏற்கனவே என் பொண்டாட்டிக்கு எவ்வளவு தெரியும்னு தெரியலைஇன்னொரு நாள் பார்க்கலாம். என்றவன், அவளை ஏற்றி வந்த இடத்திலேயே விட்டு விட்டுச் சென்றான்


சிறிது நேரம் கடையில் இருந்தவன், மதிய உணவுக்கும் வீட்டுக்கு சென்று விடவெண்மதிக்கு எதுவும் தெரியாது போனது. அதுவும் அதிசயமாக உணவு உண்டும் வீட்டில் இருந்தவன், மாலையில் பிள்ளைகள் வெளியே செல்லலாமா எனக் கேட்டதும், “சரி அம்மாவையும் ரெடி ஆகச் சொல்லுங்க.” என்றான்


நான் எத்தனை முறை வெளிய போகலாமா கேட்டிருப்பேன், வந்திருக்கானாஇப்ப அவன்   கூப்பிட்டதும் போகனுமா என நினைத்தவள், நான் வரலை என்றாள்

 
அவன் மனைவியைப் பார்த்து முறைக்கமுதலில் எல்லாம் அந்தப் பார்வைக்கு அஞ்சியவள், இப்போது அலட்சியபடுத்த, இளமாறனுக்குத் தான் அச்சமாக இருந்தது. தான் நினைத்தது போல வெண்மதி ஒன்றும் அப்படி எளிதாகத் தன்னை நம்பிவிட மாட்டாள் எனத் தோன்றியது


முன்பெல்லாம் அவள் தான் வெளியே செல்ல வேண்டும் எனக் கேட்பாள். இப்போது அவனே அழைத்தும் அவள் செல்லவில்லை. அவன் பிள்ளைகளை மட்டும் வெளியே அழைத்துச் சென்று வந்தான்


மறுநாள் சுந்தரி கேட்ட பணத்தை, தன்னுடையது என்று சொல்லாமல், வேறு யாரிடமோ வட்டிக்கு வாங்கிக் கொடுப்பது போல இளமாறன் கொடுத்து விட்டான்


மறுநாள் ரவியைக் கைபேசியில் அழைத்த வெண்மதி, “உங்க அண்ணன் எங்க டா இருக்கார். என்று கேட்க


இங்க வந்திட்டு இப்பதான் அண்ணி அந்தக் கடைக்குப் போனார். என அவன் இழுக்க… 


என்ன டா இழுக்கிற?” 


இல்லை நேத்து அந்தப் பெண்ணோட வெளியே போனாரு போல எனச் சொல்ல, வெண்மதிக்குப் பற்றிக்கொண்டு வந்தது


நேத்து வீட்ல தான டா இருந்தாரு. 


காலையிலேயே அண்ணிஆனா கொஞ்ச நேரத்தில வந்திட்டதாஅந்தக் கடை பையன் சொன்னான். அவனை நான் தான் இங்க வேலைக்கே சேர்த்தேன். அண்ணா அதை மறந்திட்டார். என்றவன், “அண்ணி, என் பேரு வெளிய வராம பார்த்துக்கோங்க. எனச் சொல்லிவிட்டு வைத்து விட்டான்


வெண்மதி இளமாறன் வரட்டும் எனக் கோபமாகக் காத்திருந்தாள்


மதியம் அவன் வந்ததும், “நேத்து எங்க போனீங்க?” என அவள் கேட்க


இவளுக்கு எப்படி தெரியும் என எச்சரிக்கையானவன், “ஆயிரம் வேலை இருக்கும் எனக்கு. அதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை. என்றான் அலட்சியமாகவே.

 
இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு சொல்லுங்க. நான் இந்த வீட்ல இருக்கிறதா வேண்டாமா என அவள் கேட்க


நீ வீட்டை விட்டு போற அளவுக்கு எல்லாம் இங்க ஒன்னும் நடக்கலை. என்றான்


ஒன்னும் நடக்கலைஉங்களுக்குச் சுந்தரி யாருன்னே தெரியாது?” 


தெரியும், அந்தப் பொண்ணு அவங்க வீட்டை விட்டு தனியா இங்க வந்து வேலைப் பார்க்குது. அதனால எதாவது ஹெல்ப் கேட்கும், நான் செஞ்சு கொடுப்பேன். அதை உன்கிட்ட யாரோ தப்பா சொல்லிட்டாங்க. மத்தபடி எதுவும் இல்லை. என்றான் உண்மையைப் போலவேஅவன் சொன்னதில் பாதி உண்மையும் தான்

“மகாபலிபுரம் எதுக்கு போனீங்க?”

“அது நாங்க ரெண்டு பேர் மட்டும் போகலை. அவங்க பிரண்ட்ஸ் எல்லாம் வெளிய போனாங்க. கார் இருக்கு டிரைவர் இல்லை. கூட வர முடியுமா கேட்டாங்க, கார் ஓட்டிட்டு போனேன்.” என்றான்.


அப்ப தப்பா எதுவம் இல்லை.

 
இல்லைபேசியிருக்கேன் அவ்வளவுதான். தப்பா எதுவும் நடக்கலைபோதுமா?” என்றதும், வெண்மதி அவனை நம்புவதா வேண்டாமா என்பது போலப் பார்க்க… 


சாப்பாடு எடுத்து வை. என்றான்


நான் உங்களை நம்பமாட்டேன். எதாவது அப்படி மட்டும் இருந்துச்சுஅன்னைக்கு நீங்க என்ன நடக்குதுன்னு பாருங்க. என மிரட்டுவது போலச் சொல்லிவிட்டு அவள் செல்ல….. சாதாரணம் போலக் காட்டிக் கொண்டாலும், இளமாறனின் முகம் மாறவே செய்தது


வசந்தா இதையெல்லாம் கேட்டும் கேட்காதது போல, டிவி பார்ப்பது போல நடித்துக் கொண்டிருக்கஅதைப் பார்த்து இளமாறனுக்கு எரிச்சலாக வர… “எப்ப பாரு டிவி…. அதைக் கொஞ்ச நேரம் ஆப் பண்ணா என்ன?” என இளமாறன் கத்த…. 


இவன் பொண்டாட்டி மேல இருக்கக் கோபத்தை என் மேல காட்டுறான். எனப் புலம்பியவர், டிவியை அனைத்து விட்டு அறைக்குள் சென்றாலும், காதை மட்டும் இங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் அவர்கள் எதாவது பேசிக்கொண்டால் தானே இவருக்குக் கேட்கும். அவர்கள் தான் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லையே… 

வெண்மதி உணவை கொண்டு வந்து மேஜையில் வைக்கஇருவரும் அவரவரே போட்டுக் கொண்டு பேசாமல் உண்டனர்.