மறந்து போ என் மனமே 



அத்தியாயம் 11 



வெண்மதிக்கு வர வர கடுப்பாக இருந்தது. இளமாறன் சீக்கிரம் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா வண்டி வேலைகளையும் ஒத்துக் கொண்டிருந்தான். அதோடு பழைய காரை வாங்கி அதைப் புதுபித்து விற்கும் வேலையும் பார்க்கஅவன் வீட்டில் இருக்கும் நேரம் என்பதே மிகவும் குறைவு


பிள்ளைகள் பள்ளிக்கு சென்று விட்டால் வெண்மதிக்கு பொழுதே போகாது. ஜோதி சில நேரம் இங்கே வருவாள். இருவரும் சேர்ந்து கோவிலுக்கும், கடை வீதிக்கும் சென்று விட்டு வருவார்கள். மதியமும் இளமாறன் நேரத்திற்கு வந்து உண்ண மாட்டான்


ஒரு பழைய தையல் மெஷின்னாவது வாங்கிக் கொடுங்க, சும்மா இருக்கிற நேரத்தில் தச்சிட்டு இருக்கேன்.” என்றதற்கு, வாங்குவோம் என நாளை கடத்திக் கொண்டு இருந்தான். வெண்மதி ரவிக்கையில் டிஸைன் போட பழகிக் கொண்டு இருந்தாள்


ஜெயா அவள் வீட்டிற்கு வந்த அவர்களின் உறவினன் மதனிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தாள். மதன் ஒரு உரக் கம்பனியில் சேல்ஸ் மேனேஜராக இருக்கிறான். மதுரையின் சுற்று வட்டாரத்தில் தான் வேலை. அதனால் நேரம் கிடைக்கும் போது ஜெயாவின் வீட்டிற்கு வருவான். சாவும் அவனுக்கு நன்றாகச் சமைத்து போட்டு அனுப்புவாள்


மதனுக்கு வெண்மதியைப் சின்ன வயதில் இருந்தே பிடிக்கும். அவன் அவளை விரும்பிக் கொண்டும் இருந்தான். ஆனால் யாருக்கும் தெரியாது. வெண்மதி கல்லூரிக்கு சென்று படிப்பாள் என்று நினைத்திருந்தான். ஆனால் வெண்மதி பத்தொன்பது வயதிலேயே திருமணம் செய்து கொள்வாள், அதுவும் காதல் திருமணம் செய்து கொள்வாள் என எதிர்ப்பார்த்திருக்க வில்லை


மதனுக்கு மிகுந்த அதிர்ச்சி தான். ஜெயாவிடம் மட்டும் தான் வெண்மதியை திருமணம் செய்ய நினைத்திருந்ததாகச் சொல்லி இருந்தான். வெண்மதிக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்திருந்தாலும், அவ்வபோது சந்திக்கும்போது வெண்மதியைப் பற்றி அக்கறையாக விசாரிக்கவும் செய்வான். அந்தக் காரணத்தால் ஜெயா தன் மனதில் இருப்பதை அவனிடம் பகிர்ந்து கொண்டாள்


ஒழுங்கா உன்னைக் கட்டியிருந்தாலும் நிம்மதியா இருந்திருப்பாகாதலிக்கிறேன்னு சொல்லி அவளே அவ வாழ்க்கையைக் கெடுத்துக்கிட்டா.” 


என்ன அண்ணி சொல்றீங்க? வெண்மதி நல்லாத்தானே இருக்கா?” 


இப்ப பரவாயில்லைகொஞ்ச நாள் முன்னாடி படாத பாடு பட்டுட்டா.” என்றவள், இளமாறனைப் பற்றிச் சொன்னாள்


எங்க அப்பாகிட்ட கூட எங்களால சொல்ல முடியலை. எதோ வெண்மதி சரியான நேரத்தில சுதாரிச்சதால இப்ப எல்லாம் ஒழுங்குக்கு வந்திருக்கு.” 


மதன் எப்போதுமே வெண்மதி மீது அக்கறை காட்டுவான். அதனால் தான் ஜெயா அவனிடம் மனம்விட்டு பேசினாள். ஆனால் அதுவே தன் தங்கையின் வாழ்க்கைக்குப் பிரச்சனை ஆகும் என அவள் அப்போது நினைக்கவில்லை.
எல்லோரிடமும் எல்லாமும் சொல்லி விடக் கூடாது. அவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது நிச்சயமில்லை


மதன் வெண்மதியை அழைத்துப் பேசவெகு வருடங்கள் கழித்து மதன் அழைத்ததால் வெண்மதியும் அவனிடம் நன்றாகப் பேசினாள். அவளுக்கு ஜெயா எல்லாவற்றையும் சொல்லி இருப்பாள் என்று தெரியாது


தன்னிடம் அவளுடைய உண்மை நிலவரத்தை பகிர்ந்து கொள்வாளா என்ற எதிர்ப்பார்ப்பில், “எப்படி இருக்க?” என மதன் கேட்டுப் பார்க்க… 


ம்ம்நான் நல்லா இருக்கேன்.” என்றால் வெண்மதி. இப்போது அது உண்மையும் கூடத்தான். இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லைநன்றாகத்தான் இருக்கிறாள்


நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப்போற மதன்?” என வெண்மதி கேட்க


இப்போதைக்கு அதைப் பத்தி யோசிக்கவே இல்லை.” என்றவன்


கல்யாணம் பண்ணிகிட்டவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்களா என்ன? மெதுவா பண்ணிக்கலாம்.” என்றான்


வெண்மதிக்கு அப்போது கூட அவன் தன்னைத்தான் சொல்லிக் காட்டுகிறான் எனப் புரியவில்லை


அதெல்லாம் நல்ல பெண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.” என்றாள்


மதன் வெண்மதியின் மகள்களைப் பற்றி விசாரிக்க.. மகள்களைப் பற்றிய பேச்சு என்றதும், வெண்மதி மகள்களைப் பற்றிச் சந்தோஷமாகவே பகிர்ந்து கொண்டாள்


அன்றிலிருந்து மதன் அடிக்கடி அழைப்பது வாடிக்கை ஆனது. வெண்மதியும் போர் அடித்துப் போய்த் தானே இருக்கிறாள். அதனால் அவன் அழைத்தால் எடுத்து பேசிக் கொண்டிருப்பாள். வெண்மதி கணவனிடம் இருந்து எதையும் மறைக்க நினைக்கவில்லை


அவளது அத்தை மகன் போன் செய்து பேசியதாகச் சொல்ல.. இளமாறன் காதில் கேட்டது போலக் கூட எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சில நாட்களில் மதன் அடிக்கடி அழைத்துப் பேச ஆரம்பித்தான். அப்போது இளமாறனுக்குச் சற்று எரிச்சல் வர ஆரம்பித்தது


டெய்லி என்ன பேச்சு? பசங்களை ஒழுங்கா கவனிக்கிறியா இல்லையா?” என இளமாறன் ஒருநாள் கேட்க


நான் என் வேலையைப் பண்ணிட்டு தான் பேசுறேன்.” என்றால் வெண்மதி ரோஷமாக.
பாம்பின் கால் பாம்பறியும். மதன் அடிக்கடி அழைப்பது இளமாறனுக்குச் சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருந்தது


என்னைக்கோ ஒருநாள்னா பரவாயில்லைஅடிக்கடி பேசுறது நல்லது இல்லை. அப்படி என்ன தான் பேசுவீங்க?” 


உங்களைப் போல எல்லோரையும் நினைக்காதீங்க. அவனுக்கு இப்போ ஆபீஸ்ல ரொம்ப வேலை இல்லைஅதனால அடிக்கடி கூப்பிடுறான். வேற ஒன்னும் இல்லை.” என்றால் வெண்மதி


உன் நல்லதுக்குதான் சொல்றேன், சொன்னா புரிஞ்சிக்கோ…” எனச் சொல்லிவிட்டு இளமாறன் விட்டுவிட்டான். ரொம்பவும் அழுத்தி சொன்னால்அதற்காகவே வீம்புக்கு அவனோடு பேசுவாள் என நினைத்து, சில நாட்கள் அமைதி காத்தான்


கணவன் அதன்பிறகு அதைப் பற்றிப் பேசவில்லை என்றதும் வெண்மதியும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தாள். மதன் போன் செய்தாலும் எதாவது வேலையைக் காரணம் சொல்லிஉடனே வைத்து விடுவாள். சில நேரங்கள் எடுக்கவே மாட்டாள்


இளமாறன் ஒருநாள் பழைய கார் ஒன்றைப் பழுது பார்த்து விட்டு ஓட்டிப் பார்க்கசற்றுத் தூரம் சென்றதும் கார் பிரேக் பிடிக்கவில்லை


ஊருக்கு வெளியே சாலையில் சென்று கொண்டிருந்தான். உடன் யாரும் இல்லை. முதலில் மிகந்த பதட்டமாகி விட்டது. தனக்கு எதாவது நேர்ந்தால் மனைவி பிள்ளைகளின் கதி என்ன என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மனைவி பிள்ளைகளின் முகங்கள் கண் முன் நிற்கமனதை சற்று நிதானத்திற்கு கொண்டு வந்து, வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தியவன், கை ப்ரேக் பிடித்து வண்டியை எதிலும் மோதாமல் நிறுத்தினான்


காரை விட்டு கீழே இறங்கி நின்றதும் தான் மூச்சே வந்தது. அவனுக்கு ஆயுசு கெட்டியோ அல்லது இன்றைக்கு எதோ நல்ல நேரமோ… என்னவோ எதுவும் ஆகவில்லை. ஆனால் இப்படியே எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியுமா… 


தான் இல்லாமல் போனாலும், தன் பொண்டாட்டி பிள்ளைகள் நலமுடன் வாழ, அவன் சொத்து எதுவும் பெரிதாக வைத்திருக்கவில்லை. அப்படியே இருக்கும் ஒன்றிரண்டையும் அவன் அம்மாவும் தங்கைகளும், மனைவி பிள்ளைகளுக்குக் கிடைக்க விட மாட்டார்கள் என அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்


தான் நன்றாகச் சம்பாதிக்கிறோம், மனைவியின் சம்பாத்தியம் அவசியம் இல்லை என இத்தனை நாள் நினைத்திருந்தான். தான் இல்லாமல் போனாலும், அவளுக்கு அது கைகொடுக்கும் என இப்போதுதான்  புரிந்தது


போன் செய்து நண்பனுக்குச் சொல்லி, அவன் வந்த காரில் கயிறு கட்டி இந்த வண்டியை இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்


இளமாறன் ரொம்பவும் பயந்து போயிருந்தான். அதனால் மனைவி மகள்கள் பேரில் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் போட ஆரம்பித்தான்


வெண்மதியிடம் இளமாறன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் வசந்தாவுக்கு யார் மூலமோ தெரிந்து, அவர் வீட்டுக்கு வந்து ரகளைச் செய்யும் போது தான் வெண்மதிக்கு தெரியும்


என் பையன் ராசாவாட்டம் இருந்தான். இவ தனிக்குடித்தனம் வந்துதான், செலவுக்குப் பத்தாம அதையும் இதையும் செஞ்சு இழுத்து விட்டுக்கிறான்.” என வெண்மதியை வேறு திட்டி விட்டு சென்றார்


ஏற்கனவே விபத்தை நினைத்து வெண்மதி மிகவும் பயந்து போயிருந்தாள்


நீங்க ஏன் என்கிட்டே சொல்லலை.” என வெண்மதி கேட்க


அதெல்லாம் எதுவும் இல்லை. அது ரொம்பச் சின்ன விஷயம்.” என இளமாறன் சாதாரணம் போலக் காட்டிக்கொள்ள.. வெண்மதியும் அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்


நாட்கள் இப்படியே செல்லமதன் அழைக்கும்போது எப்போதும் எடுக்கவில்லை என்றால்அவன் எதாவது நினைத்துக்கொள்வான் என எப்போதாவது வெண்மதி அழைப்பை ஏற்பாள். அப்போது மதன் அவளிடம், ”நீ நிஜமாவே சந்தோஷமா இருக்கியா?” எனக் கேட்க


வெண்மதி, “ஆமாம் உனக்கு என்ன சந்தேகம்?” என்றாள்.

எனக்கு எல்லாம் தெரியும் வெண்மதி.” என்றதும், அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை


என்ன தெரியும்?” என்றால் அப்பாவியாக… 


இளமாறன் பண்ணதுதான். வேற ஒரு பெண்ணோட பழக்கம் இருந்துச்சாமே…” என்றதும், வெண்மதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை


உனக்கு யாரு சொன்னா?” எனக் கேட்டுப் பார்த்தாள்


அது முக்கியம் இல்லை. ஆனா நீ எப்படி அவனோட இன்னும் இருக்க?” 


அது ரொம்ப நாள் முன்னாடி, இப்ப அவர் நல்லாத்தான் இருக்காரு.” 


உனக்கு ரொம்பத் தெரியுமா? இது மாதிரி ஆளுங்க எல்லாம் அவ்வளவு சீக்கிரம் திருந்த மாட்டாங்க.” 


அப்படியெல்லாம் இல்லை என வெண்மதியால் சொல்ல முடியவில்லை. எதோ ஒரு நம்பிக்கையில் கணவன் திருந்திவிட்டான் என்ற எண்ணத்தில் இருக்கிறாள். அவளிடம் இப்படிப் பேசினால் என்ன சொல்வாள்


நான் இப்பதான் எதோ கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன். அது உனக்குப் பிடிக்கலையா?” என வெண்மதி சிடுசிடுக்க… 


நீ இப்படி அவனோட சேர்ந்து இருந்து கஷ்ட்டபடணும்னு அவசியமே இல்லை.” 


அப்போ என்னை என்ன செய்யச் சொல்ற?” என வெண்மதி அவனையே திருப்பிக் கேட்க


நீ எல்லாம் எப்படி இருக்க வேண்டிய பொண்ணு தெரியுமா? நீ அங்க இருக்க வேண்டியவளே இல்லை…” 


மதன் பேசிக்கொண்டே செல்லவெண்மதிக்கு அப்போதுதான் சந்தேகம் வந்தது


அப்போ நான் எங்க இருக்க வேண்டியவள்?” என்று அவள் புரியாதது போலக் கேட்க, 


மதன் சில நொடிகள் தயங்கியவன், “வெண்மதி உன்னை எனக்கு அப்பவே பிடிக்கும். நீ மட்டும் இளமாறனைக் கல்யாணம் பண்ணியிருக்கலைனாநான் உன்னைக் கண்டிப்பா கல்யாணம் பண்ணி இருப்பேன். இப்பவும் ஒன்னும் இல்லை….எல்லாத்தையும் விட்டுட்டு என்னோட வந்திடு. உன் பொண்ணுங்களை நினைச்சு கவலைப்படாதஅவங்களை நாம நல்லா வளர்க்கலாம்.” என்றதும், வெண்மதிக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி


நீ முதல் ஒன்னு தெரிஞ்சிக்கோநீ ஒரு பொண்ணுகிட்ட மட்டும் இதைச் சொல்லலை…. ரெண்டு குழந்தைகளோட அம்மாகிட்ட சொல்ற. உனக்கு எப்படி இப்படிக் கேட்க தைரியம் வந்துச்சுன்னு எனக்குச் சத்தியமா தெரியலை.” 


அவருதான் அப்படி இருந்தாருன்னா…. நானும் அதையே திருப்பிச் செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை.” 


அவர் அப்படித் திரும்ப எதாவது தப்பான வழிக்கு போனாஅது என் பிரச்சனை, நான் பார்த்துக்கிறேன்.” 


இனி எனக்கு நீ போன் பண்ணக் கூடாது. உன்கிட்ட எனக்குப் பேசவே பிடிக்கலை. ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு இருக்க வழியைப் பாரு.” என வெண்மதி மதி திட்டி வைத்து விட்டாள்


வெண்மதிக்கு மனம் விட்டுப் போனது. சாதாரணமாகச் சொந்தம் என்று நினைத்து ஒரு ஆண்னிடம் பேச முடியவில்லை.  எப்ப எவள் கிடைப்பான்னு பார்த்திட்டே இருப்பாங்க போலகொஞ்சம் அதிகமா பேசினதும், வரியான்னு கேட்கிறான், இவனை என்ன செய்வது என நினைத்து மனம் வெறுத்துப் போனாள்


புருஷனோட இருக்கும் போதே இப்படிக் கேட்கிறாங்க, இன்னும் இல்லைனாஎவன் எல்லாம் கேட்பானோ என நினைத்தவள், சில நேரம் தன் நிலையை நினைத்து அழவும் செய்வாள்


மதன் அழைத்துக் கொண்டே இருந்தான். வெண்மதி எடுக்கவில்லை என்றதும், வேறு வேறு எண்களில் இருந்து அழைத்துத் தொந்தரவு கொடுத்தான். விதவிதமாகப் பேசி வெண்மதியின் மனதை மாற்ற முயற்சித்தான்


ஏற்கனவே இளமாறன் செய்த தவறால்தானும் பிள்ளைகளும் எவ்வளவு துன்பப்பட்டோம் என்பது வெண்மதிக்கு என்றாவது மறக்குமாமீண்டும் அதே போல ஒரு துன்பத்தை மகள்களுக்கு அவளால் கொடுக்க முடியுமா


வெண்மதி ஜெயாவை அழைத்து அவளிடம் சொல்லஅவள் தானே மதனிடம் சொன்னது


நான்தான் டி தெரியாம வாயை விட்டுட்டேன். இவன் இப்படிச் செய்வான்னு தெரியாது. இரு அவன் அப்பா அம்மாகிட்ட சொல்லி கண்டிக்கிறேன்.” என்று சொல்லி வைத்தாள். அதன் பிறகே மதனின் தொல்லை வெண்மதிக்கு இல்லாமல் இருந்தது


இளமாறன் மனைவி நிம்மதி இழந்து காணப்படுவதைக் கவனித்தவன், அவளுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தான்


இளமாறன் அவனுக்குத் தெரிந்த தையல் கடைகாரரிடம் கேட்டு, எந்தத் தையல் இயந்திரம் நன்றாக இருக்கும் என விசாரித்து, மனைவிக்குப் புதிதாக ஒரு தையல் இயந்திரம் வாங்கி வரவெண்மதிக்கு நம்பவே முடியவில்லை


எனக்கா?” என அவள் ஆச்சர்யப்பட… 


இதிலேயே பொழுதுக்கும் உட்கார்ந்திடக் கூடாது. ஸ்கூல்ல இருந்து பசங்க வரதுக்குள்ள வேலையை முடிச்சிக்கணும்.” என அவன் சொல்லவெண்மதி சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள்


அதிலேயே எம்ப்ராய்டரியும் போட முடியும். வெண்மதி இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வகுப்பிற்குச் சென்று வந்தாள்


முதலில் அவளுக்குத் தெரிந்தவர்களுக்கு என ரவிக்கை தைத்து கொடுக்க ஆரம்பித்தாள். அவள் நன்றாகவே தைத்துக் கொடுக்க….. அவர்கள் மூலம் வேறு வாடிக்கையாளர்கள் கிடைக்கஇளமாறன் அவன் கடையின் முன்பும் விளம்பரப் பலகை வைக்க.. வெண்மதிக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.

 
காலை மகள்கள் பள்ளிக்கு கிளம்பும் போதே வீட்டு வேலைகளையும் முடித்து விடுவாள். அவர்கள் சென்றதும் மிச்சம் மீதி இருக்கும் வேலைகளை முடித்து விட்டு, தையல் இயந்திரத்தில் உட்கார்ந்து விடுவாள். மதியம் கணவன் வரும் நேரம் சூடாகச் சாதம் வடித்து விட்டு, அவன் வரும் வரையில் தைத்துக் கொண்டுதான் இருப்பாள்


இளமாறனுக்கு அவன் வீட்டில் இருக்கும் நேரம், அவள் துணி தைக்க உட்கார்ந்தால் பிடிக்காது. மனைவி அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அதை இப்போ நிறுத்துறியா இல்லையா? எனக் கோபப்படுவான்


ஒரு காலத்தில் கணவனுடன் நேரம் செலவு செய்ய வெண்மதி அவ்வளவு விரும்பினாள்அப்போது அவளுக்கு நேரமும் இருந்தது. ஆனால் இப்போது கணவனை விட அவள் பிசியாக இருந்தாள்


நாங்களும் ஒரு காலம் இவரு பேசுவாரான்னு தவம் இருந்தோம். அப்போ எல்லாம் கண்டுக்கலை.” என வெண்மதி முனங்கியபடி எடுத்து வைப்பாள்.

மகள்கள் படித்து முடித்ததும், இரவு அவர்களைக் கடைக்கு அனுப்பிவிட்டு வெண்மதி துணி தைக்க உட்கார்ந்தால்சில நிமிடங்களிலேயே மகள்கள் அவளை அழைக்க வந்து விடுவார்கள்


அம்மா, அப்பா உங்களையும் வர சொன்னார்.” 


இவன் வேலை பார்க்கிறதை நான் பார்க்கனுமா என நினைத்தாலும், கணவன் விரும்புவதால் கீழே கடைக்குச் சென்று உட்கார்ந்திருப்பாள்


நீங்க வேலை தானே பார்க்கிறீங்க. என்னையும் வேலைப் பார்க்க விட்டா என்ன?” என அவள் கேட்டால்… 


இப்பத்தானே நாம எல்லாம் சேர்ந்து இருக்கோம். எங்களோட பேசிட்டு இரு.” என்பான்


ஏன் கடையை மூடிட்டு வந்து நைட் பேசினா ஆகாதா?” என வெண்மதி கேட்க… 


மகள்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, “நைட் நேரம் பேசி டைம் வேஸ்ட் பண்ணக் கூடாது.” என இளமாறன் அவளைப் பார்த்து கண்சிமிட்ட…. 


அவன் காரணத்தைக் கேட்டு வெண்மதி மனதிற்குள் கணவனை மெச்சினாலும், வெளியே முறைத்து வைத்தாள். மனைவி பொய்யாக முறைக்கிறாள் என இளமாறனுக்கு மட்டும் புரியாதா என்ன? அவன் சிரிக்க… 

வெண்மதி அவனைப் பார்த்து “போடா…” என்றாள்.

“போடவா… இருடி உன்னை வச்சுக்கிறேன்.” என்றான்.

“நீங்க இந்த வச்சிக்கிருதை மட்டும் விடவே மாட்டீங்களா?” என வெண்மதி துடுக்காக கேட்க,

“ரொம்ப பேசுற.” என்றான். கணவன் எப்படி சொன்னான் என வெண்மதிக்கு புரியவில்லை. 

கொஞ்சம் ஓவரா தான் போறோமோ என நினைத்தவள், போவோம் போய் தான் பார்ப்போம். என்ன செஞ்சிட போறான் என அலட்சியமாகவே இருந்தாள். 

வீட்டிற்கு வந்து கைகால் கழுவியதும், மனைவியை அவள் எதிர்பார்க்காத நேரம், இளமாறன் அப்படியே இரண்டு கைகளால் தூக்கியவன், அவளை பால்கனிக்கு கொண்டு சென்று…. 

“அப்போ என்னவோ சொன்னியே இப்ப சொல்லு.” என அவளை வெளியே தூக்கிப் போடுவது போல நிற்க… அவன் போட மாட்டான் என்று தெரியும், இருந்தாலும் வெண்மதி பயந்து போனாள். மகள்கள் இருவரும் கைதட்டி ரசிக்க…. 

“அடக் கொலைகாரக் குடும்பமே….” என்றவள், கணவனின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள்.

 

அதன் பிறகும் நான்கு பேரும் அரட்டை அடித்தபடி உண்ண…. வாழ்க்கையே இப்போதுதான் ரசிக்க ஆரம்பித்திருந்தது.