Advertisement

ஹரே கிர்ஷ்ணா

மரகத மழையாய் நீ!..

பத்து வருடத்திற்கு முன்….

பள்ளி விடுமுறை தினம்தான்.. ஆனாலும் பனிரெண்டாம் வகுப்பிற்கு அந்த மே மாதமும் பள்ளி உண்டு.. அத்தோடு ஸ்பெஷல் கிளாஸ் கூட. அதனை முடித்துக் கொண்டு.. பள்ளி வேனிலிருந்து இறங்கி, ஐந்து நிமிட நடையாக கொஞ்சம் பரபரப்பாக வந்தாள் ஜனனி. 

என்னமோ இன்று கொஞ்சம் வயிற்று வலி.. அதனால், ஒன்றும் அவளுக்கு ரசிக்கவில்லை. அவளின் தோழிகள் எல்லாம் எப்போதும் போல.. ரோட்டை அளந்துக் கொண்டே, கதை பேசி வர.. இவள் எப்போதடா.. வீடு போவோம் என.. ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

கதவு பூட்டியிருந்தது. எப்போதும் அப்படிதான் இருக்கும்.. இன்று என்னமோ எரிச்சலாக வந்தது. தன் பாகில் முன்பக்க ஜிப் திறந்து.. சாவி எடுத்து கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள். அதை பட்டென அறைந்து சாற்றி.. மீண்டும் உள் பக்கமாக பூட்டிக் கொண்டாள்.

அங்கிருந்த சின்ன வராண்டாவில் உள்ள சேரில்.. தன் புத்தக மூட்டையை.. ஆம்… மூட்டையேதான்.. இறக்கி வைத்தாள். மற்றொரு சேரில்.. பொத்தென அப்படியே சாய்ந்து அமர்ந்தாள் ஜானு.. 

வீட்டின் உள் நுழைந்ததுமே, சின்ன வராண்டா.. அதை தொடர்ந்து ஹால், அதிலேயே பக்கவாட்டில்.. இரண்டு பெரிய அறைகள். ஹாலின் மத்தியில்.. கிட்சென் பக்கத்தில், மர வேலைப்பாடுடன் கூடிய பூஜை ஷெல்ப். அதை ஒட்டியபடியே மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள்.. அதை ஒட்டி பக்கவாட்டில்.. பெரிய கண்ணாடி விண்டோ. மாடியில் ஒரு சின்ன ஹால்.. அத்தோடு கூடிய ராகவின் அறை.

ஐந்து சென்ட் இடத்தில் தாரளாமாக பார்த்து பார்த்து கட்டி இருந்தனர் கார்த்திகேயன் தம்பதி. வீட்டை சுற்றிலும்.. மரங்கள். பின்வாசலில் எலுமிச்சை, தென்னை.. மா. பக்கவாட்டில், ஒரு சப்போர்ட்ட.. கருவேர்ப்பிள்ளை, முன்புறம் கேட்டில்.. சந்தனமல்லி, அரளி பூச்செடிகள்.. அப்படியே கேட்டில் பரவி படர்ந்து.. இருக்கும். இன்றும் அப்படியே.. இன்னும் மாலையில் பூக்கும் சந்தனமல்லி மொட்டுகளை  பறிக்கவில்லை எனவே.. அது மலர்வதற்கு தயாராக இருந்தது.

ஜெனனிக்கு, முதுகு வலித்தது.. பெண்களுக்கே உண்டான நாட்கள். எனவே காலையிலிருந்து அமர்ந்து இருந்தது சற்று வலி. எனவே அப்படியே பத்து நிமிடம் அமர்ந்து இருந்தாள்.

சற்று பரவாயில்லையாக இருந்தது. எழுந்துக் கொண்டு உள்ளே சென்றாள். தன்னுடைய தோள் வரை இருந்த இரட்டை சடையை.. தூக்கி கிளிப் செய்துக் கொண்டாள்.. குளித்து, ஒரு நைட் பேண்ட்.. மேலே தன் அண்ணனின் டி-ஷர்ட் அணிந்து வந்தாள்.

சிறு பெண்.. பசி வயிற்றி கிள்ளியது.. ஸ்னாக்ஸ் டப்பாவை திறந்து என்ன இருக்கிறது என பார்த்தாள். முகம் வாடி போயிற்று. தனக்கு தோதாக ஒன்றும் இல்லை.. ஒரே ஒரு 5௦-5௦  மட்டும் இருந்தது. மிச்ச சொச்ச நேந்திரங்காய் சிப்ஸ். 

எடுத்து கரகரவென மென்று தின்றாள், பாவம் பசி. ஒன்றும் புதிதாக செய்ய தெம்பு இல்லை, பால் எடுத்து, அது காய்ந்து, காபி போட, எப்படியும்.. பதினைந்து நிமிடமாவது ஆகும். எனவே, இந்த ஒரு பாக்கெட் பிஸ்கட் முழுவதையும் முடித்தாள், ஐந்து நிமிடத்தில். இப்போதுதான் கொஞ்சம் எனர்ஜி வந்தது. 

காபி கலந்துக் குடித்தாள். இன்னும் கண் நன்றாக தெரிந்தது. களைப்பெல்லாம் போயிற்று. அப்பா டா.. கால்களை நீட்டி சோபாவில் வைத்துக் கொண்டு.. டிவியை ஆன் செய்தாள். மியூசிக் சேனலில்… “பூக்கள் பூக்கும் தருணம்… பார்த்ததில்லை யாரும்..” என பாட.. கூடவே சேர்ந்து பாடிக் கொண்டே.. அதில் ஆழ்ந்தாள் பெண். குரல் ஒன்றும் மோசம் இல்லைதான்.. ‘பரவாயில்லை விட்டுவிடலாம்’ அந்த ரகம்.

என்னதான் பாட்டு கேட்டாலும், பார்த்தாலும் ‘நாளை மறுநாள் டெஸ்ட் நினைவு வந்தது’. கூடவே ‘நாளை விடுமுறை இருக்கிறதே’ எனவும் நினைவு வர.. அப்படியே.. சாய்ந்த வாக்கில் படலை இன்னும் சத்தமாக பாடினாள் குழந்தை.

ஜெனனி, நல்ல நிறம்… அதை விட நல்ல குணம், கொஞ்சம் பொறுப்பும் கூட. வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகள் இயல்பாகவே சற்று பொறுப்பானவர்கள்.. அப்படிதான் இவளும். என்ன, இந்த வயதிற்கே உண்டான குறும்பு, குசும்பு எல்லாம் உண்டு என்றாலும்.. யாரையும் நோகடிக்க தெயரியாதவள். இந்த குழந்தைகள் பாடலில் வருமே.. “சப்பி சீக்… டிம்ப்ள் சின்… ரோசி லிப்ஸ்…கேர்லி ஹேர்.. வெரி ஃப்பர்..’ என அதே போலதான். என்ன, நம் ஊர்  நிறத்தில்.. நம்ம ஊர் தேவதையாகதான் இருந்தாள். 

கார்த்திகேயன் சுகுமாரி தம்பதியின் பெண் இவள். கார்த்திகேயன்க்கு, தபால் அலுவலகத்தில் வேலை. சுகுமாரி, அரசு பள்ளி ஆசிரியை. அண்ணன் ராகவ், இப்போதுதான் MBA முடித்து.. வேலை தேடி பெங்களூர் சென்றிருக்கிறான். அடுத்து இவள், ஜெனனி 12 வகுப்பு. அளவான அழகான குடும்பம். 

சோபாவின் கை வைக்கும் இடத்தில், இவள் கால்கள் காற்றில் ஆட… இதமாக ரசிக்க தொடங்கினாள்.. பாடல்களை.

டியூஷன் என்று எதுவும் செல்வதில்லை, அவளின் அன்னையே பார்த்துக் கொள்வார், அவளின் படிப்பை. ஆனால், அவளை படிக்க வைப்பதற்குள்.. அவருக்கு BP ஏறி இறங்கும். 

இந்த கதைகளில் வருவது போல் எல்லாம்… இதமானக் குரலில் சொன்னாலோ, அதட்டலாக சொன்னாலோ கேட்கமாட்டாள் இவள். தன் அன்னையை… கொஞ்சமேனும் கோவப்படுத்தி.. அவர் கையில் கரண்டியோடு வந்து நின்று.. ஒரு காளி அவதாரம் எடுத்து, கண்ணை உருட்டி.. “பேசாமல் படிச்சி.. இதை இப்போ.. சொல்லணும்” என சொல்லும் வரை  ஜெனனி பேசிக் கொண்டே இருப்பாள். 

ம்.. தேனீயின் ரீங்காரமாக.. பேசுவாள், பேசுவாள்.. பேசிக் கொண்டே இருப்பாள். காலையில் பள்ளி வேன் ஏறிய நொடி தொட்டு, என்ன நடந்தது என பேசி.. பேசி.. பாவம் சுகுமாரியை ஒருவழி ஆக்கிவிடுவாள்.

பாவம் சுகுமாரி, எட்டாம் வகுப்புக்கு கணக்கு எடுப்பவர். எப்போதும் அவருக்கு வகுப்புகள் இருந்துக் கொண்டே இருக்கும்.. தான் பேசி பேசியே.. அலுத்து வருபவர்.. இவளிடம் சிக்கிக் கொள்வார், மாலையில். 

மேலும் வீட்டின் வேலைகள் அடுத்தடுத்து என அணிவகுத்து நிற்கும்.. அதை பற்றி இவர் யோசிக்க.. அதில் ஜென்னி “ம்மா.. அம்மா” என அழைத்து பேசி தீர்ப்பாள். எனவே சில நேரம் பொறுமை, சில நேரம் கடுமை என சுகுமாரி அவளை அடக்கி வைப்பார்.

இன்று, ‘என்னமோ இன்னமும் தன் அன்னையை காணோம்.’ அதுதான் இப்போது ஜெனனியிடம் ஓட.. இவளுக்கென செல் போன் தனியாக இல்லை.. லேன்ட் லைன், இப்போதெல்லாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. எனவே அது கடந்த நாட்களாக டெட்டில் இருக்கிறது. அதனால் ‘ஏன் தகவல் வரலை..’ என யோசனையோடு பாட்டை ரசித்துக் கொண்டிருந்தாள்.

நேரம் ஆக.. ஆக.. பெண்ணுக்கு பயம் வந்தது. பக்கத்து வீட்டிற்கு செல்லாம் என எண்ணி, டிவியை ஆப் செய்து.. தனது இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு.. கிளம்ப எத்தனித்தாள்.

லேசாக இருட்ட தொடங்கி இருந்தது.. இவள் எல்லாம் எடுத்து ஹாலுக்கு வர.. கரண்ட் கட் ஆகியது. 

அய்யோ! ஜெனனிக்கு பயம் வந்தது. இன்வெட்டார் இருந்தது. அது கிட்சென் பாத்ரூம் என இருந்தது முக்கிய இடங்களுக்கு மட்டும். ஹாலில் இல்லை.. எனவே லைட் எரியவில்லை. இவளும் வெளியே சென்றுவிடலாம் என எண்ணி, கதவை திறந்தாள்.

அங்கே சத்தியமாக ஜெனனி எதிர்பாக்கவில்லை.. கத்தியோடு ஒரு கை தெரியுமென… ஏற்கனவே பயம், இப்போது கரண்ட் இல்லா  இருட்டு.. அத்தோடு கூடிய ஒலியில்லா நிசப்தம்.. மனது ஏற்கனவே அன்னையை தேடிய நிலையில்.. வாயிற்கதவை திறக்கவும்.. கத்தி மட்டும்தான் தெரிந்தது பெண்ணுக்கு.

அதை பார்த்ததும் கத்த கூட வரவில்லை அவளுக்கு.. இரண்டடி பின்னால் போனாள்.. பின்தான் சத்தமே போட்டாள் “ஆஆ..ஆ…” என அவ்வளவுதான் தெரியும், கைகால்கள் நடுங்க தொடங்கியது.. பிடிமானத்திற்கு எதையோ தேடுகிறாள்.. ஏதும் இல்லை. மீண்டும் தன்போல இரண்டடி பின்னால் போக.. இப்போது ஒரு உருவம் உள்ளே வருகிறது.. வெளியிலும் இருட்டு.. உள்ளும் இருட்டு.. ஒன்றும் புரியவில்லை ஜெனனிக்கு.. 

உள்ளே வந்த உருவம் அவளின் பயந்த நிலையை உணரவில்லை.. அதாவது இவ்வளவு பயந்திருக்கிறாள் என உணராமல், அவள் கத்தியதில் ‘பயந்துட்டா’ என எண்ணி உள்ளே வந்தான், வேண்டுமென்றே கொடூரமானக் குரலில் “உங்க அம்மா.. வர எட்டு மணி ஆகுமாம்.. உன்னை, பக்கத்து தாரா வீட்டுக்கு போக சொன்னாங்க” என்றான்.

அவன் சொன்னதை முழுதாக கேட்க கூட இல்லை, அதற்குள் ஜெனனிக்கு கண்ணெல்லாம் சுழன்று.. கீழே பொத்தென விழும் நிலையில் இருந்தவளை.. சட்டென தாங்கினான் அவன்.

சட்டென அவனாலும் பேலன்ஸ் செய்ய முடியவில்லை.. அவளை அப்படியே நெஞ்சோடு சேர்த்து சாய்ந்துக் கொண்டே, அந்த வராண்டாவில் இருந்த சேரில் சாய்ந்து நின்றான். கூடவே “ஏய்…  ப்பிடில்… சொரிணி… ஏய்… அறிணி… அய்யோ அறிசந்திரி…” என்றான் பதட்டமாக, ம்.. பதட்டமாக அவளின் எல்லா பட்டப் பெயர்களையும் சொல்லி அழைத்தான்.

அதிர்ச்சிதான்.. ஜெனனிக்கு. எனவே வந்தது யார் என அறிவுக்கு தெரிகிறது, மனது இன்னமும் தான் கண்ட அந்த காட்சியை பிடித்து வைத்துக் கொண்டிருப்பதால்.. கண்ணை திறக்க முடியவில்லை. அப்படி ஒரு பயம்.. மீண்டும் மீண்டும் அவன் திட்ட.. அனிச்சையாக அவனின் கையை பிடித்துக் கொண்டாள், இறுக்கமாக.

அவன் “ஹப்பா டா…” என்றவன். இப்போது தன் 11௦௦ போனை எடுத்து, தன் முகத்தில் ப்ளாஷ் லைட் அடித்து, தான் யார் என்பதை காட்டினான். 

இப்போதுதான் ஜெனனிக்கு இன்னும் பயம் வந்தது  “ஐயோ…” என்றபடி. அவனின் டி-ஷர்ட் பிடித்துக் கொண்டு அவனின் நெஞ்சிலிருந்து எழுந்தாள், பதறி. சட்டென இருவரும் தள்ளி நின்றனர். இயல்பான கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது இருவருக்கும்.

ஆனாலும் அவன், சட்டென அவள் திமிரியத்தில்.. அவளின் பிடி சட்டென விலக.. அதில் அவள் தள்ளாட.. அவளை தன் மற்றொரு கையால் விடாமல் பிடித்துக் கொண்டான்.

இன்னும் கொஞ்சம் படபடவென இருப்பதாக உணர்ந்தவள்.. அந்த சேரில் அப்படியே அமர்ந்தாள். கூடவே கண்ணில் நீர்.. பயம் இன்னும் போகவில்லை. ஆனாலும் ‘இவனிடம் போய் இப்படி அசிங்கப்பட்டு விட்டோமே’ என ஒரு தாங்கள் வந்தது அவளிடத்தில். தன் கையால் தன் தலையை தாங்கி அமர்ந்தாள்.

இப்போது வந்தவனுக்கு, அப்படி ஒரு சிரிப்பு… லேசாக அவளுக்கு தெரியாமல் வந்த சிரிப்பை அடக்கி கொண்டான். ஆனாலும் அவனின் உடல் மொழி, அவன் சிரிக்கிறான் என  ஜெனனிக்கு உணர்த்தியது.

இப்போது அவன் “ஹேய் அழறியா… என்ன பயந்துட்டியா… “ என்றான் வேண்டுமென்றே அவளை சீண்டும் குரலில். அப்படியே, அந்த வராண்டா லைட் ஆன் செய்தான்.

அவள் தலை நிமிராமல் இருக்கவும்.. இன்னும் அவனுக்கு சிரிப்பு வந்தது ஆனாலும், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு.. “சொரிணி… என்னை பாரேன்” என்றான், நக்கலாக.

ஜெனனி வாயே திறக்கவில்லை. இன்னும் அப்படியே அமர்ந்திருந்தாள்.

இப்போதுதான் வந்திருந்தவனுக்கு ஒருமாதிரி ஆகியது.. அவளுக்கு இருட்டு பயமேன தெரியும் அவனிற்கு. எப்போதும் அவளின் அருகில் கூட வரவே மாட்டான், நின்று பேசமாட்டான்.. இன்று என்னமோ ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம்.. ‘அவளை கொஞ்சம் தட்டி வைக்கலாம்’ என தோன்றியது போல.. இப்படி செய்தான். 

ஆகிற்று பத்து நிமிடம். அவள் இன்னும் நிமிரவோ, தன்னை திட்டவோ இல்லை.. எனவே பயம் வந்தது இப்போது இவனுக்கு.

இவன் மஹாதேவ், பி.டெக் (IT) இறுதி வருடம் படிக்கிறான். யுனிவேர்சிட்டி டாப்பர். பார்க்க.. நன்றாக இருப்பான். ஸ்டைலான உடல்மொழி.. கர்வமான பார்வை.. எளிதில் எதையும் க்ரகிக்கும் திறன்.. சட்டென யாரிடமும் சென்று பேசமாட்டான். கல்லூரியில் பெண்கள் இவன் பார்வைக்காக கொஞ்சம் மெனக்கெடுவர். ஆக திமிரான யுவன்தான் இவன். 

இப்போதும் நிமிராமல் இருப்பவளை பார்த்து, மீண்டும் அவனே “சரி வா, நான் வீட்டில் விட்டு போறேன்.. வா” என்றான் கொஞ்சம் இறங்கி வந்து.

ஜெனனி எப்போதும் அவனை கண்டுக் கொள்ளவே மாட்டாள்.. இப்போதும் அப்படியே. 

அந்த தெருவில், பாதிபேர்.. அரசு அலுவலர்கள். எனவே எப்படியேனும் ஒருவரை ஒருவருக்கு தெரிந்திருக்கும். அதிலும் மஹாதேவ் என்றால் எல்லோருக்கும் தெரியும். 1௦th ஸ்டேட் பஸ்ட். 12th அதே போல.. அந்த நேரத்தில் பேப்பரில் வந்தது.. அவன் புகைப்படம், அந்த காலனியே, அவனை கொண்டாடியது. இந்த வருடமும் அவனை கொண்டாடும். ஆக, பிள்ளை என்றால், இவனை போல இருக்கணும் எனத்தான் எல்லோரும் சொல்லுவர், அப்படி ஒரு சமர்ந்த்தன்.

எனவே, அது மஹாதேவ்க்கு கொஞ்சம் கர்வத்தை எப்போதும் கொடுக்கும். இவன் தெருவில் இறங்கினாள்.. கண்டிப்பாக நாலு பெண் பிள்ளைகள் திரும்பி பார்த்து ஒரு ஹாய் சொல்லுவர்.

ஆனால், ஜெனனி இவனை மதிக்கவே மாட்டாள். நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள். இவன் தெற்கில் நின்றாள்.. இவள் வடக்கில் கூட இல்லை, வடகிழக்கில் நிற்பாள். அப்படி சம்பந்தம் இல்லா தூரத்தில் நிற்பாள். அது என்னமோ, மஹாவின் ஈகோவை சீண்டும் இவளின் பார்வை.. அவளின்  ஒதுக்கம் எல்லாம்.. ‘ஊரே, என்னை பார்க்குது.. இவ மட்டும்.. என்ன’ என ஒரு எண்ணம் சட்டென வந்துவிடும் அவனுள். எனவே, சிலசமயம் இப்படி அவளிடம் ஏதாவது செய்து.. விளையாடி.. அவளை கிண்டல் செய்து..   தீர்த்துக் கொள்வான்.  

இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு.. இன்று விளையாட தோன்றவும்.. விளையாடினான். ஆனால், பெண் இன்னும் அதிலிருந்து வெளிவரவில்லை. எனவே, கொஞ்சம் பயம் பற்றிக் கொண்டது அவனை.

தன் அக்காவிற்கு அழைத்தான், தாரா அவள். அவள் போனை எடுக்கவில்லை.

இப்போது மஹா “சொரிணி… சாரி, ஜெனனி.. வா… கரண்ட் எப்போ வரும் தெரியலை.. வா வீட்டுக்கு போகலாம்” என்றான் நிதானமானக் குரலில்.

ஜெனனி “தாராக்கா எங்க..” என்றாள், இப்போது லேசாக குரல் கரகரத்தது.

அவன் “டைலர் ஷாப் போயிருக்கா.. வந்திடுவா.. உங்க அம்மா அவளுக்கு போன் செய்து சொல்லி இருக்காங்க.. வந்திடுவா, நீ வீட்டில் வந்து உட்கார், வா” என்றான்.

ஜெனனி ஒன்றும் சொல்லாமல்.. வெளியே சென்றாள். அவனும் வெளியே வர.. கதவை சாற்றி பூட்ட நினைத்தாள். மஹாவே அதை செய்தான். 

ஜெனனி முன்னால் சென்றாள்.. அவன் வீடு நோக்கி. அங்கே கேட் திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள். கதவு பூட்டி இருக்கும் என எண்ணி, படியில் அமர்ந்தாள்.

மஹா, வந்தான். கதவை திறந்தான்.. இவன் வீட்டில் ups இருக்கும். எனவே வரிசையாக வராண்டா.. ஹால், கிட்சென் என எல்லா லைட்டையும் ஆன் செய்துக் கொண்டே எதோ ஒரு அறைக்குள் சென்றுவிட்டான்.

உள்ளே சென்றவன், தன் அறையின் விளக்கை அணைத்துவிட்டு, வெளியே அமர்ந்திருந்த ஜெனனியை பார்த்தான்.

இன்னும் உள்ளே வரவில்லை அவள். முகம் இன்னும் தெளியவில்லை. மூக்கை உறிஞ்சிக் கொண்டே அமர்ந்திருந்தாள். பார்த்தவனுக்கு, என்னமோ செய்து.. ‘இப்படி இவளை அழவிட்டதில்லை நான், எப்போதும் அழவும்மாட்டாள்.. என்ன செய்தாலும்.. கண்டுக்கவே மாட்டா, இன்னிக்கு என்ன ஆச்சு.’ என மனம் யோசிக்க  இலகினான் அவளுக்காக. 

“ஒவ்வொன்றாய் திருடுகிறாய்…

திருடுகிறாய்…

யாருக்கும் தெரியாமல் 

திருடுகிறாய்…”

Advertisement