Advertisement

மரகத மழையாய் நீ!..

5

நல்ல பெரிய பெரிய அழகுக்காக, வளர்க்கப்படும் ஃபாம் மரங்கள் வரிசையாக அணிவகுக்க.. அதற்கு ஜோடியாக மின்கம்பங்களும் நிற்க, நடுவில் மேடான புல் தரை.. மதிலில் பெரிதாக மருத்துவமனையின் பெயர்.. உள்ளே வருவதற்கான வழியில்.. இன்று, சூரியின் வாகனத்தை முந்திக் கொண்டு, ஒரு சத்தமில்லா ஆம்புலன்ஸ் உள்ளே சென்றது. சூரி, தனது காரை ஓரமாக்கி சற்று சுதாரித்து.. வழிவிட்டு நின்றான்.

இப்போது சூரியின் வாகனத்தை பார்த்த.. சீருடை அணிந்த வாட்ச்மேன்.. சூரியை பார்த்து சின்னதாக சிரித்து, அவரின் கார் நிறுத்த ஏற்பாடு செய்தார். மருத்துவர்களின் வாகனத்திற்கு தனி பார்க்கிங் வசதி. எனவே அதை ஏற்பாடு செய்து தந்தார்.

ஜனனியும், சூரியும் இறங்கி.. நடந்தனர் மருத்துவமனை நோக்கி.. பன்சிங் கார்ட்.. காட்டவும், தனிவழி கதவு திறந்தது, இவர்களுக்கு என தனியாக வழி. நேரே தங்களின் ஓய்வறைக்கு சென்று.. தனி தனியாக ரெடியாகினர் இருவரும். ஊரின் மிக பெரிய பல்நோக்கு மருத்துவமனை.

ரெப்ரெஷிங் அரை நோக்கி சென்றனர் இருவரும்.. ஆண் பெண் இருவருக்கும் தனியான ஓய்வறைகள். இது இந்த மருத்துவமனியின் வழக்கம்.. உள்ளே வரும் போது, தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளையும், வழியில் ஏற்படும் சங்கடங்களையும்  களையும் இடம்.. இந்த தனிவழி ஓய்வறை.

பணி முடிந்து திரும்பும் மருத்துவர்களும்.. பணிக்கு வரும் மருத்துவர்க்ள்.. செவிலியர்கள் என அந்த இடத்தில் சத்தமில்லா கூட்டம் இருந்தது. ம்.. சின்ன சின்ன புன்னகை.. சில நல விசாரிப்புகள்.. சில கருத்துகள் என எல்லாம் அங்கு எழுந்தாலும் ஒரு அமைதி அந்த இடத்தில்.

ஜனனி தயாராகி வெள்ளை கோர்ட்.. ஸ்டேதொஸ்கோபே.. சின்ன நோட்பேடு.. பென்.. முகத்தில் மென்னகையுடன்.. என மருத்துவமனையின் உள்ளே வந்தாள்.

நேரே தங்களின், ம்.. அவளின் சீனியர், அதாவது முதிர்ந்த ஒரு மருத்துவரிடம் ஜூனியர் இவள். எனவே,  அந்த அறைக்கு சென்று டேபிளை நேர் செய்தாள்.. நேற்றைய குறிப்புகளை பார்த்து.. நர்ஸிடம் பணித்து.. தேவையானவர்களின் ரிப்போர்ட் வாங்கி வைத்தாள்.. அவளின் சீனியர் வர, அவருடன் அமர்ந்து இவளும் வரும் நோயாளிகளின் குறிப்புகளை எடுக்க தொடங்கினாள். அவளின் தினசரி வேலை தொடங்கியது.

சில சமயம், அவர் ரௌண்ட்ஸ் செல்ல.. இவள் தனியாக சிலரை பார்க்க தொடங்கினாள்.. இவள் எழுதும் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீனியரின் பார்வைக்கு சென்றே.. வெளியே செல்லும். எனவே பயிற்சிக்காக அவளை அமர வைப்பார் சீனியர். இப்படியே நேரம் சென்றது.

மதியம், அங்கேயே உணவு.. அது முடித்து.. அங்கேயே இருக்கும் நோயாளிகளை பார்வையிடுவாள்.. அவர்களின் ட்டே ஷீட் ஆய்வு செய்து.. உணவுகள், தேவையான மருந்துகள் என இன்னும் நாலு ஜூனியர்ஸ் அமர்ந்து பேசி எழுதி வைப்பார்கள். இப்படி நேரம் செல்லும் ஐந்து மணிக்கு இவளின் நேரம் முடிவடையும்.

எப்போதும் டூ வீலர் எடுத்து வருவாள்.. இன்று நண்பனுடன் வந்ததால்.. டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.  

‘ப்பா..’ என பெருமூச்சு வந்தது. தேஜு தன் அத்தையை பார்த்ததும்.. “அத்த… சீக்ரம் வா… விளையாடலாம்..” என்றாள்.

ஜனனி, தன்னறைக்கு சென்றாள். குளித்து உடை மாற்றிக் கொண்டு அமர்ந்தாள் கட்டிலில். கட்டில் நிறைய சாமான்கள்.. புக்ஸ், டிரஸ், பேங்கல்ஸ் என நிறைய பொருட்கள் அப்படியே பிரிக்காமல் இருந்தது.

அதையெல்லாம் பார்க்க பார்க்க அழுகை பொங்கியது. ஏனோ இப்போதெல்லாம் சென்டிமெண்டில் தன்னை தொலைப்பதாக உணர்ந்தாள். என்னமோ அன்னையை தவிர வேறு ஞாபகங்கள் வருவதே இல்லை அவளுக்கு. இதோ இறைந்து கிடக்கும் பொருட்களை பார்த்தால்.. அன்னை நினைவுதான் வந்தது ‘ஏன் டி, இப்படி போட்டிருக்க.. எல்லாம் எடுத்து வை.. வந்து எவ்வளோ நேரமாகுது, பெண் பிள்ளைக்கு எப்படி அப்படியே உட்கார மனசு வருது..’ என திட்டும் சத்தம் காதில் விழுவது போன்ற பிரமை வந்தது அவளுக்கு. அதில் சற்று நேரம் சென்றது..

தன்னை மீட்டுக் கொண்டு.. கபோர்ட் திறந்து பார்த்து சிலதை எடுத்து வைக்க தொடங்கினாள். மனம் கொஞ்சம் வேறு திசை திரும்பும் போல் இருந்தது.

அந்த புக்ஸ் இருந்த பெட்டியை பிரித்து எல்லாம் வெளியே எடுத்து வைத்தாள்.. அப்போது அவளின் தோழி சம்ருதா, கொடுத்த ஒரு சைனீஸ் பாஸ்டிவ் வோர்ட்ஸ் கொண்டு ஒரு சிறு புக் கண்ணில் பட்டது.

கல்லூரி நாட்களில்.. அது அவர்களின் விளையாட்டு. யாரேனும் சோர்ந்திருந்தால்.. ஹோம் சிக்காக உணர்ந்தால்.. அதை எடுத்து படிப்பர்.. அது தொட்டு பேச்சு விளையாட்டாக செல்ல.. அந்த நேரம் இனிமையானதாக மாறும். என்னமோ அப்போதெல்லாம் எந்த வார்த்தையும், எந்த பேச்சும் விளையாட்டுதான். எதற்கும் சிரிப்புதான்.

இப்போது அது, நினைவு வரவும்.. கையில் அந்த புக் இருக்கவும்,  அவளை அரியாமலே ஒரு புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது அவளின் இதழ்களில்.. என்ன இருந்தாலும் கல்லூரி நாட்கள்.. வரமாக வந்த நாட்கள். அது அப்போது தெரியாது. எல்லாம் முடித்து.. இப்படி எங்கேனும் அடிவாங்கி.. ஓய்ந்து அமரும் போது.. அந்த நட்பு தருக்கின்ற ஆறுதல் சொல்லில் அடங்காதவை.

அப்படிதான் இன்றும் போல.. ஜனனிக்கு அந்த சின்ன புக்கை ஆசையாக பார்த்தாள், கல்லூரி நினைவு வர, அன்று போலவே.. கண்களை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தால், அதில் “To ‘ask’ is not a crime. To be ‘rejected’ is not a calamity”  என இருந்தது. 

அதை பார்த்ததும் ‘அஹ…’ என அப்படி ஒரு பெருமூச்சு, அவளுக்கு. மனதில் ஏதேதோ எண்ணம், அந்த வாசகங்கள் எதை கிளறியது என புரியவில்லை. ஆனால், கண்ணிலிருந்து நீர் வழிய அந்த சின்ன புத்தகத்தை முத்தமிட்டாள் ஜனனி.

‘ஆக, நான் கேட்பது தவறு இல்லை, என்னுடைய நிராகரிப்பு அழிவு இல்லை’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். ‘ஆகிற்று இன்னும் ஒருமாதம்.. இல்லை, இரண்டு மாதத்தில் கண்டிப்பாக நான் சுதந்திரமானவள் என சட்டம் சொல்லிவிடும்.., ஆனால், அதற்கு முன் அவனை பார்க்க வேண்டுமே, அந்த முகத்தில் விழிக்க வேண்டுமே..’ என எண்ணம் மனதில் ஓட.. அவளறியாமல் ஒரு நடுக்கம் ஓடியது அவளின் உடலில்.

இப்போது கதவை தட்டினாள் குழந்தை “அத்த… ஆன்ட்டி..” என்றாள், ஜனனியை சீண்டும் விதமாக. ஜனனிக்கு ஆன்ட்டி என்றால் பிடிக்காது. எனவே அப்படி அழைத்தாள் குட்டி பெண்.

ஜனனிக்கு, மீண்டும் உடல் சிலிர்த்தது.. கண்ணில் நீர் நின்று போனது.. ‘வேண்டாம் ஜனனி, அவனுக்காவெல்லாம் நீ அழாத.. விடு..’ என்றாள் தனக்குள்.

மீண்டும் குழந்தையின் அழைப்பு.

ஜனனி “நீ ஸ்டாரங், மற்றவர்கள் தவறு இது.. மற்றவர்கள் தவறு.. நீ நல்லா இருக்க.. உனக்கு எதுவும் இல்லை..’ என மந்திரமாக மீண்டும் தன்னை தேற்றிக் கொண்டாள்.  

மீண்டும் தேஜு அழைக்க..

ஜனனி மெல்லியக் குரலில் “தேஜு ம்மா, அத்த குளிச்சிட்டு வரேன்..” என பொய் சொன்னாள்.

குழந்தை “ச்சு… எவ்வடோ.. டைம் ஆச்சு.. சீக்கரம் வா அத்தை” என்றாள்.

ஜனனி அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். மீண்டும், எதோ யோசனை அதை கலைக்கவே போன் அழைத்தது, அவளை.

அவளின் அண்ணன்தான் ‘வந்துவிட்டாளா’ என கேட்பதற்கு அழைத்தான்.

ஜனனி, வெளியே வந்தாள் தன் அறையிலிருந்து, பின் தேஜு அவளின் நேரத்தை எடுத்துக் கொண்டாள்.

எல்லாம் இயல்பாக சென்றது.. ம், அப்படி ஒரு ப்ரமை ராகவ்விற்கும், கார்த்திகேயனுக்கும். அப்படி ஒரு ப்ரமையில் நடமாடிக் கொண்டிருந்தனர். 

ராகவ்க்கு, இன்னும் தன் இயலாமையை நினைத்து வருத்தம்.. ‘அண்ணனாக நானிருந்தும் இப்படி.. இவள் வாடி நிற்கிறாளே.. நான் சரியாக அப்போது விசாரிக்கவில்லையோ.. தீர கேட்டிருக்க வேண்டுமோ..’ என லட்சம் முறை நினைக்கிறான். என்ன விசாரித்தாலும் என்ன ஆராய்ந்தாலும்.. சிலர் வேண்டுமென்றே மறைத்த ஒரு செய்தியை எப்படி கண்டுபிடிக்க முடியும்.. முடியாதுதானே அப்படிதான் இது என யார் சொல்லுவது ராகவ்விடம். 

காயத்ரி, ஆயிரம் முறை சொல்லிவிட்டாள் ‘ஜானு விஷயத்தில்.. நடந்தது எல்லாம் உங்கள் தவறு இல்லை, இது திட்டமிட்டு நடந்தது’ என, ஆனால், அண்ணனனாக ராகவ் இன்னமும் சமாதானம் ஆகாமல் இருக்கிறான்.

காலையில் எழுந்து ஜானு முகத்தையே பார்ப்பான்.. அவள் ஏதேனும் கவலையில் இருக்கிறாளா என தினமும் பார்ப்பான்.. அவள் சிரித்தபடி தேஜுவுடன் விளையாடினால்தான், அன்றைய நாளே அவனுக்கு நன்றாக இருக்கும். இது இந்த நாட்களில் அவனை தொற்றிய வியாதி.

 

Advertisement