Advertisement

சற்று நேரம் எடுத்தும் ஜனனி கையை பிசைந்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.. வாய் பேசவேயில்லை.

மஹா திரும்பி பார்க்க.. ஜனனியின் நெற்றியில் வேர்வை துளிகள் காதோரமாக வழிந்துக் கொண்டிருக்க.. முன்பக்கம் வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மஹா, தன் காரின் ac அளவை பார்க்க.. அது சரியாக இருக்க.. திடுக்கிட்டு “ஜானு.. என்னாச்சு” என்றான்.

ஜனனி, திருதிருவென விழித்தபடி திரும்பினாள்..

மஹா “என்ன” என புருவம் உயர்த்த.

ஜனனி “கோவமா…” என்றாள்.

மஹா “ஹய்யோ.. ஆமாம் கோவம்தான். ஆனா, இப்படி நீ ஏன் டென்ஷன் ஆகுற… நீ மஹான்னு கூப்பிட்டிருந்தாலே போதும். அதுக்கு எதுக்கு இவ்வளோ டென்ஷன்.. பாரு வேர்க்குது..” என்றான் பாவனையாக.

ஜனனி “இல்ல, பயந்துட்டேன்.. நீ எதோ பீல் பண்ணிட்டியோன்னு..” என்றாள், தன் எண்ணத்தை மறையாது..

மஹா “பயமா.. எதுக்கு.” என்றான் ஒருமாதிரி குரலில்.

ஜனனி “ஒண்ணுமில்ல” என்றாள் சட்டென அவனின் குரல் உணர்ந்து.

மஹா “என்ன ஒண்ணுமில்ல.. முகமே சொல்லுது எதோ இருக்குன்னு” என சொல்லிக் கொண்டே அவளை பார்வையால் ஆராய்ந்தான்.

ஜனனி “அங்க பாருங்க..” என்றாள்.

மஹா “இரு.. “ என சொல்லி, காரின் வேகமெடுத்தான். இருவரிடமும் அமைதி. இருபது நிமிடம் சென்று வண்டி ஒரு இடத்தில் நின்றது.

மஹா “என்ன ப்பா, அடிக்கடி டிஸ்ட்ரப் ஆகுற… இன்னும் என்ன உன் மனதில் ஓடுது” என்றான்.

ஜனனி அமைதியாகவே இருந்தாள்.

மஹா “என்ன மாஜி வந்து நிக்குறானா..” என்றான் அவளின் இதயம் தொட்டு.

ஜனனி நிமிர்ந்தாள் அதில்.

மஹா “ஏன் டி.. ஒருமாசம் உன் கூட இருந்தவனை இன்னமும் நினைக்கிற, சின்னதிலிருந்து உன் கூடவே இருந்து.. இப்பவும் நீதான் வேணும்ன்னு நிக்கற என்னை நினைக்க முடியலை..” என சொல்லி வேகமாக இறங்கி வெளியே சென்றான். மஹாக்கு என்னமோ கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது.

ஜனனி, இமைக்கும் சக்தி கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ‘நானென்ன, அவனை ஆசையாகவே நினைத்தேன்.. எல்லாம் இவனுக்கு புரியும் என்றால்.. என்னை தெரியாதா’ எனதான் இப்போது இவளின் கோவம்.

மஹா ‘நல்லதோ கெட்டதோ இனி எப்படி அவன் வரலாம் அவளுள்’ என சட்டென ஒரு கோவம்.. அவளின் அமைதியில். ‘நான் அப்படி கத்திட்டு வரேன்.. திமிராவே இருக்கா பாரு.. அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்றாளா பாரு..’ என உள்ளே தகிக்கிறது அவனிற்கு.

தன் வண்டியின் பின்பக்க சென்று நடந்துக் கொண்டிருக்கிறான் ஒன்றும் புரியாமல்.. இவளும் அப்படியே அமர்ந்திருக்கிறாள்.

நேரம்தான் கடந்துக் கொண்டிருக்கிறது.

மஹாவின் கோவம்தான் முதலில் மட்டுப்படுகிறது.. நடுரோட்டில் என்ன ரோஷம் என தனக்கு தானே எண்ணிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான் தலை கோதிக் கொண்டு. நடந்தால் சுகர் மட்டுமல்ல.. கோவமும் குறையும் போல..

இரண்டு மரம் தள்ளி ஒரு இளநீர் விற்பவர் இருந்தார். அங்கே சென்றான்.. இளநீர் குடித்தான்.. அவளுக்கும் ஒன்று வாங்கிக் கொண்டே கார் நோக்கி வர.. ஜனனி இப்போது கீழே இறங்கினாள், அவனின் போன் எடுத்துக் கொண்டு.

இருவரும் ஏதும் பேசவில்லை.. மஹா இளநீர் நீட்ட, அவள் போனை அவனிடம் நீட்டினாள்.

ஜனனி இளநீர் குடித்து முடிக்கும் வரையும் போன் பேசிக் கொண்டிருந்தான் மஹா. ஜனனி முடித்து அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றாள்.

மஹா, பேசி முடித்து வந்து.. “வா..” என்றான்.

அப்படியே நின்றாள் ஜனனி. 

மஹா “வா, சும்மா எதையாவது நினைச்சிகிட்டு” என்றான்.

ஜனனி “உ.. உங்களுக்கு என்.. என் வாழ்க்கை பத்தி எல்லாம் தெரியுமா” என்றாள்.

மஹா “ம்..” என்றான்,

ஜனனி “எப்படி..” என்றாள்.

மஹா “சூரி சொன்னான்” என்றாள்.

ஜனனி “அப்புறம் என்ன, நான் என்னமோ ஆசையா அவனை நினைச்சா மாதிரி பேசுறீங்க..” என்றாள்.

மஹா “ச்சு, கடுப்பாக்காத… கல்லு மாதிரி நான் இருக்கேன், இன்னமும் “ என்றான் வார்த்தையை முடிக்காமல்.

ஜனனிக்கு லேசாக முகம் மலர்ந்தது “யார் இல்லைன்னு சொன்னா.. ஒரு பயம் நான் செய்தது தப்போன்னு, அத பத்திதான் நீங்க வர வரைக்கும் யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க வந்ததும் எல்லாம் மாயமா போச்சு.. நீங்க கோவிச்சிகிட்டதும் திரும்பவும் பயம், இந்த வாழ்க்கையாவது சந்தோஷமா இருக்குமான்னு” என சொல்ல.

மஹா சத்தமே இல்லாமல் “அறிவே இல்லையா.. ஜானு உனக்கு. உனக்கு நடந்தது கொடுமை.. அவனோட ஹிஸ்டரி கேட்டு நடுங்கிட்டேன் நான். பொதுவாகவே உடல் ரீதியா பிரச்சனை இருக்கு எனும் போது அதை தீர்க்காமல், ‘மறைத்து’ திருமணம் செய்வது தவறு. இவன்… ச்சு.. நிறைய கெட்ட வார்த்தையா வருது.. விடு, அதை நினைச்சு நீ பயப்படாத. நீ செய்ததுதான் சரி.. நீ ரைட் ஜானு” என்றான் தன்மையாக.

ஜனனி “உண்மையா, அவனின் குறையை நான் எங்கேயும்  குத்தி காட்டலேயே.. அந்த கோர்ட்டில்.. அப்புறம் மற்ற இடத்தில்” என்றாள் கேள்வியாக.

மஹா “குத்தியும் இல்லை, கத்தியும் இல்லை.. நீ சரி டா…” என்றவன் அவளின் அருகில் வந்தான்.

ஜனனி, அவனின் கையை பற்றிக் கொண்டாள் “உண்மையாவா மஹா, நான் தப்பு செய்யலையே.. ஒருவரின் குறையை நான் சத்தமா சொல்லலையே.” என்றாள்.

மஹாக்கு அவளின் மனம் புரிய அதட்டினான் “லூசு… யாரோட குறையையும் நீ use பண்ணிக்கல.. இங்க பாரு… என்னை பார்” என்றான்.

ஜனனி நிமிர்ந்தாள் “நீ சரி ஜானு.. உன் வருங்கால கணவன் என்பதால் சொல்லல.. ஒரு சாராசரி மனுஷனா சொல்றேன்.. நீ சரி டா” என்றான்.

ஜனனி, அப்படியே கண்மூடிக் கொண்டாள்.. நமக்கு சொந்தமானவர்கள் நம்முடன் இருக்கும் போது.. அவர்கள் சொல்லும் சரி தவறு என்பதற்கான விளக்கங்கள் நமக்கு முக்கியம்.. இப்போது ஜனனிக்கும் அப்படிதான் மஹாவின் வார்த்தைகள் முக்கியம். தன் மீதே அழுத்தமான நம்பிக்கை வந்தது ஜனனிக்கு.. இடம் எதுவென பாராமல்.. அவனின் மார்பில் சாய்ந்தாள் பெண்.

மஹா அமைதியாக நின்றான் இரண்டு நிமிடம். பின்  “யாரோ சொன்னாங்க, நான் டாக்குட்டர்ன்னு… நடு ரோட்டில் ரொமான்ஸ் பண்றாங்க ப்பா.. எனக்கே வெட்கமா வருதே” என்றான் மஹா சிரிக்காமல்.

ஜனனி வெடுக்கென நிமிர்ந்து நின்றுக் கொண்டாள்.

மஹா அவளை ரசனையாக பார்த்துக் கொண்டே “ஜானு, எல்லா தப்புக்கும் நாம் பொறுப்பாக முடியாது டா..  அதனால்.. ஸ்டாரங்கா இரு.. வா..“ என சொல்லி காரெடுக்க சென்றான்.

ஜனனியும் காரில் ஏறி அமர்ந்தாள்.

மஹா “கிளியர். இனி ஜானுவா வரணும்.. இங்கையோட இத விட்டுடு.. இனி மஹா மட்டும்தான் உன்கூட” என்றான்.

ஜனனி, உதடு மடித்து தன் அழுகையை நிறுத்தினாள்.. மஹா “சீட்..” என சொல்லி அவளின் நிலை பார்த்து பேச்சு நிறுத்தினான்.

தன்னை தானே மீட்டுக் கொள்ள போராடியவளை பார்த்தான் மஹா.. காதலனின் பார்வையாக.. மஹா அவள்புறம் திரும்பி அமர்ந்து.. அந்த உதடுகளை மென்மையாக.. மிக மென்மையாக விடுவித்தான். ஜனனிக்கு, சட்டென தீண்டிய விரல்களில் ஐஸ் மழை பெழிந்தது அவளுள்.. திணறிக் கொண்டே  அவன் கண்களை பார்க்க.. மஹா அவளின் இதழ்களைதான் பார்வையால் வருடிக் கொண்டிருந்தான்.. ஜனனிக்கு, மஹாவின் விருப்பம் புரிய.. ஜனனி “ம..ஹா…” என்றாள்.

மஹா “வ்வை நாட் ஜானு…” என்றான் அவளின் கண் பார்த்து.

அந்த பார்வை சம்மதம் கேட்கவில்லையே.. கபளீகரம் செய்தது அவளை.. பெண்மை திணறித்தான் போனது.. அவளின் பெரிதான இமைகள் தாழ்ந்து.. நிலம் நோக்க.. காத்திருந்தவனின் விரதமிருந்த இதழ்கள்.. இனிதாக.. அதிர்வாக.. கொச்சையாக.. லாவகமாக.. அவளின் இதழ்களில் தன் ப்ரியத்தின் அர்த்தத்தை சொல்லத் தொடங்கியது. மென்மையான இதழின் மொழியில், வன்மையான காதலும்.. தன்மையான அவனின் ஆளுமையும் பெண்ணவளை திண்டாட செய்து.. அழுத்தமாக ஆழமாக தன்னை அவளுக்கு சொல்லி நிமிர்ந்தான் ப்ரகாசமானவன்.

ஜனனியால் இன்னும் நிமிர முடியவில்லை.. கண்மூடி இன்னும் அமர்ந்திருந்தாள். மஹா மீண்டும் அவளின் இதழில் பட்டும் படாமல் ஒரு சின்ன முத்தம் வைத்து “என்ன.. “ என்றான்.

ஜனனி ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்தாள்.

மஹா தன் கை நீட்டி அவளின் கையை எடுத்துக் கொண்டான்.. “ஈசி டா… எல்லாம் சரியாகிடும்” என்றான்.

ஜனனி கண் விரித்து அவனை தன்னுள்.. விழுங்கிக் கொண்டிருந்தாள்.

“ஆகாயம் இடம்மாறி 

போனால் போகட்டும்…

ஆனால் நீ மனம் மாறி 

போக கூடாது…

ஹே.. மஞ்சள் தாமரையே..

என் உச்ச தாரகையே..

கடல் மண்ணாய் போனாலும்..

நம் காதல் மாறாதே..” 

Advertisement