Advertisement

மரகத மழையாய் நீ!..

23

மஹா, சென்னையில் இறங்கியதும் ஜனனிக்கு ஒரு மெசேஜ் செய்துவிட்டான் ‘தான் வந்து அழைத்து செல்வதாக’. எனவே ஆபீசில் விடுப்பு சொல்லிவிட்டு.. தன் வீடு வந்து தன்னுடைய காரெடுத்து சென்றான் அவளை அழைக்க. 

நேற்று இரவுதான் அவன் மேலிடத்திற்கு அனுப்ப வேண்டிய ரிபோர்ட் வொர்க் முடிந்தது.. அதற்கே மணி இரவு ஒன்று, அதன்பின் உறங்கியதாக பேர் செய்து கிளம்பி வந்திருந்தான் சென்னைக்கு. இப்போதும் வாகனம் ஓட்டுவது கொஞ்சம் அதிக சுமைதான் அவனுக்கு, ஆனால், தன்னவளை பார்க்க போகிறோம் என்பது அவனின் எல்லா வலியையும் சுமையையும் இல்லாமலேயே செய்திருந்தது… மதி கூட “என்ன டா, லேட் ஆகிடுச்சா.. டாக்ஸி புக் பண்ணிடேன்..” என்றார்.

மஹா “இல்ல ம்மா, கரெக்ட் டைம்.. இன்னிக்குதான் அவளும் லீவ் போட்டிருக்கா… அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியறதில்லை.. போயிட்டு வரேன்.. பை” என்றவன் கிளம்பியிருந்தான். இன்றைய இளைஞ்சர்களுக்கு.. உறவுகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது ஒரு சாவல்தான்.

ஜனனியும்,  கொஞ்ச நேரம் காத்திருந்தாள் மஹாவிற்காக. அமைதியான சுற்றுபுறம் இதமாக இருந்தது அவளுக்கு. அவளை, நீண்டநாள் சென்று  தன் கல்லூரி நினைவுளுக்குள் அழைத்து சென்றது. இதமான புன்னகையோடு நேரம் கடக்க.. ஒரு கட்டத்தில் மஹாவோடான தன் திருமணம்.. என சிந்தனை சென்றது ஜனனிக்கு.

ஜனனிக்கு, அனிச்சையாய் தன்னுடைய பழைய கல்யாண வாழ்க்கை நினைவு வந்தது.. ‘மஹா, அவன்’ என எண்ணம் வந்தது அவளுள்.  மஹா, தேடி தேடி என்னிடம் அன்பை கொட்டுகிறான் என புன்னகையை பூசிக் கொண்டது முகம்.

ஆனால், ‘அவன்’  என்றதும் ஒரு அசூசையை கொண்டது அவளின் முகம்.  எப்படியும் தன் வாழ்வில் வந்துவிட்டு சென்றவனை பற்றி தவிர்க்க முடியாமல் எண்ணியது மனது. கொஞ்சம் தன் மனதை, அவனிடமிருந்து மாற்ற எண்ணுகிறாள்.. ஆனால், அந்த இடத்தில், சட்டென தவிர்க்க முடியவில்லை அவனை.

அவன், தன்னிடம் நடந்துக் கொண்டது.. தன் முன்னாள் மாமியார் நடந்துக் கொண்டது என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவடுக்கிலிருந்து எழுந்தது.. கண்கள் கலங்கியது. பெரிதாக அவளிடம் யாரும் குரலுயர்த்தி பேசியது கூட கிடையாது எனலாம். ஆனால், அங்கே நடந்த சத்தமில்லா நிகழ்வுகள் மீண்டும் தோன்ற.. இன்னும் இன்னும் மனதில் அழுத்தம் அதிகமானது. 

‘அதிலிருந்து நீ தப்பிட்ட.. இப்போ உன்னை தாங்க ஒருவன் இருக்கிறான்’ என ஆயிரம் சமதாதனம் சொல்லிக் கொண்டது அவளின் மனது. ம், மனம்.. மனசாட்சி.. அதை சட்டென மாற்றிட முடியாதே.. அதே நேரம் அதை கழற்றி வைக்கவும் முடியாதே. இப்படிதான், வேண்டாம் வேண்டாம் என சொல்ல சொல்ல.. எங்கேனும் ஏதேனும் ஒரு நிகழ்வு நினைவு வந்தே தீரும்.. அதை தடுக்க முடியாது. 

ஜனனிக்கு, இன்னமும் எதோ உறுத்தல்.. இப்போதெல்லாம் நிறைய மாற்றம் வந்திருந்தாலும், பெண் மனம் தனக்கு தானே முதல் திருமணத்தை மறக்க சமாதானம் தேடுகிறாள்.. ஒரு நிகழ்வு நடந்து விட்டதுதான்.. மாற்ற முடியாது. ஆனால், அதை கடக்க வேண்டும்..   அதை மறக்க வேண்டும் என அறிவு சொல்லும் போது.. இப்போதிய நடைமுறையில் அதுதான் சரி என அறிவு மனம் இரண்டிற்கும் தெரிந்தாலும்.. இந்த மனம் ஒரு காரணத்தை எதிர்பார்க்கிறது.. காலம் காலமாக ஆணின் சாதகத்தை மட்டுமே பார்த்து பழகிய பெண் மனம் ஒரு  காரணத்தைதான் எதிர்பார்க்கிறது.  அவன் அத்தனை கொடுமைகள் செய்தும்.. ‘நான் தவறு செய்துவிட்டேனோ’ என எண்ணுகிறாள் ஜனனி.

ஜனனிக்கு உறுத்தல்  ‘இதே நிகழ்வு ஒரு பெண்ணிற்கு நடந்திருந்தால்..’ என அவளால் நினைக்காமல் இருக்கவே முடியவில்லை இந்த நாட்களில். ‘அந்த பெண்ணை விட்டு ஒரு ஆண் விலகினால் தவறுதானே என மனம் அலட்டிக் கொள்கிறது’ அவளுக்கு.

ஆனால், மருத்தவரான அவளுக்கு ஒரு பெண்ணின் உடல்நிலையும் ஆணின் உடலமைப்பும் புரியும்தானே. பொதுவாக மருத்துவம் வளர்ந்தநிலையில்.. ஒருசில காரணம் தவிர்த்து மற்ற எல்லா பிரச்சனைகளையும் சரி செய்திட முடியுமே.  ஆனால், பொய், இந்த ஏமாற்று வேலை.. இதையெல்லாம் மனம் சார்ந்தது.. அதற்கு வைத்தியம் என்பது இல்லையே. 

திருமணம் என்பது பரஸ்பரம் நம்பிக்கை சார்ந்தது. அதுவே இல்லை எனும் போது என்ன செய்வது. திருமணம் செய்ய இருந்த ஆணுக்கு தெரியும் தன் நிலை.. என்ன என்பது, தெரிந்தும்.. எப்படி அடுத்தவரின் வாழ்வை கெடுக்க.. எண்ணலாம், ‘தன் திருமணத்திற்கு முன்னரே ஒரு பெண்ணின் வாழ்வை வீணாக்கியவனுடன் தன் வாழ்வு அமைந்தது.. என்பதில் தொடங்கி, குடும்பமாக சேர்ந்து கொண்டு ‘பரஸ்பர நம்பிக்கையில்..’ விளையாடியது.. என  எல்லாம் நினைவு வந்தது ஜனனிக்கு.

முகம் வாடி போனது பழைய நிகழ்வில்.. மனம் அப்படிதான் வேண்டாம் வேண்டாம் என்க.. எல்லாம் நினைவும் வரும். அதை தவிர்க்க முடியாது.. வாழ்க்கையின் பெரிய சவாலே.. கடந்த காலத்தில் நடந்த தவறுகளிலிருந்து நிகழ்காலத்தை நல்லவிதமாக அமைத்துக் கொள்வதுதானே. அந்த சாவல் இப்போது ஜனனியின் கண்முன் வந்து நின்றது.

வந்துவிட்டான் மஹா.

முன் பின் என நேரம் எடுத்தாலும் வந்துவிட்டான் ஜனனியை பார்க்க மஹா.

ஜனனிக்கு எல்லாம் எல்லாம் மறந்தே போனது அவனை பார்த்ததும்.. அன்று போல இன்றும் ப்ரகாசமாக நின்ற மஹா முன். எல்லா தூசி துரும்புகளும்.. காணமல் போனது. ம்.. சிலது இப்படிதான் கண்ணை உறுத்தும்.. அதற்காக கண்ணை மூடிக் கொண்டே இருக்க முடியாதே.. கண்களை திறந்து இமைக்காமல் பார்க்க.. எல்லா தூசியும் துரும்பும் நீர் வழியே வெளியேறும்.. அப்படிதான் ஜனனியின் நிலை.. கண்கள் கசிய தன்னவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

மஹா “ஹாய் MD..” என்றான்.

ஜனனிக்கு கொஞ்சமாக உயிர் வந்தது.. லேசான சிலிர்த்து அடங்கியது அவளின் தேகம்.. அதை பார்த்து மஹாக்கும்  ஒரு பரவசம் வந்தது  தன்போல. இருவருக்கும் ஒரு ஆசுவாசம் வந்தது தம் துணையை பார்த்ததும். எந்த தொடுகையும் இல்லாமல்.. எந்த பேச்சும் இல்லாமல்.. ஒரு ஆனந்தம் பார்த்தமாத்திரத்தில் வந்தது இருவருக்கும்.

மஹா “என்ன எக்ஸாம் ஒகே வா… இல்ல, என்னையே நினைச்சிக்கிட்டு.. இருந்தியா” என்றான் சிரிக்காமல்.

ஜனனி “ம்.. ஸ்கோர் பண்ணிடுவேன்..“ என அவனின் இறுதியை கவனிக்காமல் சொன்னவள் இப்போது அவனின் இறுதி வாக்கியத்தை கவனித்து “ஹேய்.. மஹா” என்றாள்.. லேசாக சிரித்துக் கொண்டு.

மஹாக்கு, அவளின் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் கண்கள் உயிர் கொண்டது. ஒன்றுமே இல்லாத புன்னகைதான் அவளிடம்.. ஆனால், கன்னம் என்னமோ பிங்க் வண்ணத்தில் ஜொலித்தது சட்டென. 

முகத்தில் ஒரு க்ரீம், காஜல் என எந்த ஓப்பணையும் இல்லைதான். படித்து படித்து கண்களில் கருவளையம் போல லேசாக அடர் சிவப்பு வண்ணத்தில்தான் இருந்தது. அவளின் சிவந்த நிறத்தில் அந்த அடர் சிவப்பு கருவளையம் நன்றாக தெரிந்தது.. ஆனாலும் மஹாவின் கண்களுக்கு பேரழகியாக தெரிந்தாள் ஜனனி.

எப்போதுமே ஜனனி இந்த ஒப்பணையில் கவனம் செலுத்தியதில்லை. தோதான உடை.. கழுத்தை ஒட்டி உரசியபடியே.. ஆலிலை கிர்ஷ்ணர் டாலர் வைத்த ஒரு கெட்டி செயின்.. சின்ன சிவப்பு பவிள மூக்குத்தி.. இரண்டு கைகளிலும் தினப்படி வளையல் அவ்வளவுதான் அவளின் வெளிதோற்றம்.. என்ன அவளின் முடியை அடக்கத்தான் தின்னு தினுசாக கிளப் தேடுவாள். ஆனாலும், சரியானதை எடுக்க தெரியாது.. முன்பு சுகுமாரி தாராதான் வாங்கி  தந்து, பழக்கி இருந்தனர்.. இப்போது காயத்ரி வாங்கி தருவது மட்டும்தான் அவளுக்கு சரியாக இருக்கும், மற்றபடி தானே வாங்கினாள் அடங்காது.. இல்லை.. ஒரே முறையில் ‘படக்’ என உடைந்துவிடும். ஆக, ஜனனி எளிமைதான் எப்போதும்.. ஆனால், அந்த எளிமை கூட ஒருவிதத்தில் அழகென இப்போது மஹாவின் கண்ணில் விரிந்துக் கொண்டிருந்தாள் ஜானு.

சத்தமே இல்லை இருவரிடமும்.. மஹா அங்கிருந்த வராண்டாவில் கீழே அமர்ந்தான். அமர்ந்து வந்தது என்னமோ கால் நீட்டி அமர வேண்டும் போல இருந்தது, அமர்ந்தான். ஜனனியும் “மேல உட்காருங்க.. இதென்ன இப்படி” என்றபடி அவனோடவே கீழே அமர்ந்தாள்.

வானம் எந்த ஒப்பணையும் இல்லாமல் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது.. அப்படி ஒரு வெயில். ஜனனி அவனின் நிலை பார்த்து “கான்டீன்ல ஏதாவது குடிக்க வாங்கி வரவா” என்றாள்.

மஹாக்கு அப்படியே சில்லுன்னு ஏதாவது குடித்தால் தேவலாம் எனதான் இருந்தது.. மஹா “எங்க இருக்கு கான்டீன்” என்றான்.

அவள் எதோ ஒரு திசையில் கை காட்ட.. ‘ப்பா.. எப்படியும் அரை கிலோ மீட்டர் இருக்கும்..’ என மனக்கணக்கு போட்டவன் “வா, வழியில் பார்த்துக் கொள்ளலாம்” என எழுந்தான்.

இருவரும் பார்க்கிங் நோக்கி நடந்தனர். அமைதியான பாதை.. வழி நெடுகிலும் மரங்கள்.. எல்லாம் தெரியாத முகங்கள்.. மஹா, அவளை ஒட்டி ஒட்டி… உரசி உரசி.. நடந்தான் வேண்டுமென்றே அவளை இடித்துக் கொண்டே நடந்தான்.

ஜனனிக்கு அவனின் ஒவ்வொரு உரசலுக்கும் ஓட்டலும்.. செல்லெல்லாம் மலர்ந்தது.. ஆனாலும், அவனை விட்டு தள்ளி தள்ளி நடந்தாள்.

மஹா ஒருகட்டத்தில் “என்ன பிரச்சனை இப்போ உனக்கு” என்றபடி அவளின் கையை பிடிக்க.

ஜனனி தன் கையை விளக்கிக் கொண்டு “என்ன.. என்ன இது பப்ளிக்குல.. மஹா தள்ளி போங்க” என்றாள்.

மஹா “இதென்ன, கல்யாணம் செய்துக்க போறவள கை பிடிச்சு நடக்கிறது தப்பா” என்றபடி மீண்டும் அவளின் கை பிடிக்க..

ஜனனி முன்னால் வேகமாக நடந்தபடி “ச்சு, இப்போதான் டீனேஜ் பாருங்க.. கை பிடிச்சு தோளில் கை போட்டு நடக்க.. நான் டாக்டர். எனக்குன்னு சோஷியல் ரெஸ்போன்சிபிளிட்டி இருக்கு, இப்படிதான்.. த.. தள்ளி போங்க” என்றாள்.

மஹா, தன் கைகளை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு.. “ச்ச, நான் டீன் ஏஜிலேயே லவ் பண்ணாம போயிட்டேன்.. இப்போ பாரு என்னால் லவ் கூட சரியா பண்ண முடியலை.. கொடுமை டா ஆண்டவா..” என்றபடி கார் நோக்கி வேகமாக சென்றான்.

ஜனனி அதே நிதான வேகத்தில் காரின் அருகில் வந்தாள். 

இருவரின் கார் பயணமும் தொடங்கியது. மஹா வாயே திறக்கவில்லை.. ‘போடி.. கையை பிடிக்காத தோளை தொடாதேன்னு..’ என முனகிக் கொண்டே கார் ஓட்டினான்.

ஜனனிக்கு எப்படி அவனை நெருங்குவது என அமர்ந்திருந்தாள்.

 

Advertisement