Advertisement

அங்கே பால்கனியில் அமர்ந்து புக் எடுக்க.. மனம் முழுவதும் தன் வீட்டிலேயே இருந்தது. மஹாக்கு அழைக்கலாமா வேண்டாமா.. என எண்ணம். அவன் ஏதும் ஏன்? என்னிடம் சொல்லவில்லை, என்ன பேசுகிறார்கள்.. என்னிடம் கேட்க வேண்டாமா.. என ஆயிரம் யோசனை ஜனனிக்கு. குழம்பியே அமர்ந்திருந்தாள்.

மஹா வந்தான்.. பெல் ஒலி கேட்டு, கதவை திறந்தாள் ஜனனி.

மஹாக்கு, ஜனனியை பார்த்தும் இன்பமான அதிர்ச்சி “அஹா… என்ன அதிசையம் பக்கத்துவீட்டு பொண்ணு என் வீட்டில் நிக்குது..“ என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான்.

ஜனனி, ஏதும் பேசவில்லை.. சென்று பால்கனியில் அமர்ந்தாள். 

மஹா “என்ன ஆச்சு, அம்மா எங்க” என்றான். அவர் வீட்டில் இல்லாதது உணர்ந்து.

ஜனனி “எங்க வீட்டில் இருக்காங்க, ஏன் உங்களுக்கு தெரியாதா” என்றாள், கொஞ்சம் முகம் வாடி, குழப்பமாக இருந்தது.

மஹாவிற்கு அதை பார்க்கவும் தாங்கவில்லை, தன்மையாக “நானே இப்போதானே வரேன், எனக்கு எப்படி தெரியும். என்னாச்சு” என்றான். பிரெட்ஜ்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டே.

ஜனனிக்கு என்ன கேட்பது என தெரியவில்லை “ஒண்ணுமில்லை.. எதோ சும்மா கேட்டேன்” என்றாள்.

மஹா என்னமோ பார்த்துக் கொண்டே இருந்தான் அவளை. ஜனனி “எ.. என்ன” என்றாள்.

மஹா “என்ன, பக்கத்தில் இருந்தப்ப எல்லாம் பார்க்கலை.. அதான், இப்போ பக்கத்தில் இருக்கவும் பார்க்கிறேன்” என கடியாக ஒரு பதில் சொன்னான்.

ஜனனி “மஹா” என்றாள் சலிப்பாக.

மஹா “ம்.. மஹாதான்..“ என சொல்லிக் கொண்டே அவளின் அருகில் வந்தான். என்னமோ தடுத்து அவனை.. “நா.. நா போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்..” என்றவன் தன் அறையில் புகுந்துக் கொண்டான்.

ஜனனி, அமைதியாக தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

மஹா, தானே சரியாகி குளித்து.. டிராக் கிரீன் ஷார்ட்ஸ், எல்லோ கலர் டி-ஷர்ட் அணிந்து வந்தான்.. மாலை மங்கும் நேரம்.. செவ்வானம் என வானம் வண்ண பூசிக் கொள்ள.. அதனோடு கலக்க.. இரவு காதலனும்   சாம்பல் நிறம் கொண்டு ஆங்காங்கே சூழ.. அந்த பால்கனியே அந்த வண்ண கலவையில் அழகாகிக் கொண்டிருந்தது.. இதெல்லாம் நிமிர்ந்து கூட பார்க்காமல் ஜனனி, பென்சிலால் தன் நெற்றி சொறிந்துக் கொண்டு.. படித்துக் கொண்டிருந்தாள்.

மஹா, சற்று நேரம் நின்று அவளையே பார்த்தான்.. ம்கூம்.. அவள் கவனம் படிப்பிலிருந்தது போல, இவனை கண்டு கொள்ளவில்லை. மஹா, கிட்சென் சென்றான். பிரெட்ஜ் திறந்து ஏதாவது இருக்கிறதா என பார்த்து ஒரு கூல் சாக்லேட் டிரிங் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான்.

ஜனனி, அந்த சத்தத்தில் நிமிர்ந்தாள்.. அவனின் கையில் உள்ள.. பானம் பார்த்து விட்டு, குனிந்துக் கொண்டாள்.

மஹா “உனக்கு வேணுமா” என்றான்.

ஜனனி “இல்ல, வேண்டாம்..” என்றாள்.

மஹா “என்ன இப்போவே படிக்கனுமா” என்றான்.

ஜனனி, அவனை பார்த்தாள், பின் புக் மூடி வைத்துவிட்டு.. “ம்.. சொல்லுங்க” என்றாள்.

மஹா “அம்மா, எங்க உங்க வீட்டிலேயா” என்றான்.

ஜனனி “ம், அங்கதான் இருக்காங்க.. என்னை இங்க இருக்க சொன்னாங்க..“ என்றாள்.

மஹா “என்ன, நம்மள பத்தி ஏதாவது கேட்டாங்களா.. நீ… நீ என சொன்ன” என்றான்.

ஜனனி “ஒன்னும் கேட்கலையே.. “ என்றாள்.

மஹா “சரி, கேட்டா என்ன சொல்லுவ” என்றான், எழுந்துக் கொண்டு

ஜனனி “எ.. என்ன கேட்டா.. என்ன சொல்லணும்” என்றாள் சின்ன குரலில்.

மஹா, அவளின் அருகில் கீழே வந்து சம்மணம் இட்டு அமர்ந்துக் கொண்டான்.. ஜனனிக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது.. ‘இத்தனை காந்தமா இவன்’ எனதான் உள்ளே ஓடியது. அமைதியாக இருக்க முயற்சித்தாள்.

மஹா “என்ன கேட்ப்பாங்க… ம்… என்னை கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு கேட்பாங்க” என்றவன் டெஸ்க் மேலிருந்த அவளின் கைகளைப் பற்றினான்.

ஜனனிக்கு, கைகள் நடுங்கியது.. மஹா தன்னிரு கைகளால் அழுத்தமாக பற்றினான், அவளின் நடுங்கும் கைகளை. அவனுக்கு புரிகிறது.. அவளின் சூழல், ஆனால், இதை அவள் எதிர்கொண்டாக வேண்டும்.. எனவே கொஞ்சம் அழுத்தமாக அவளின் கைகளை பற்றினான்.

மஹா “சொல்லு கேட்பாங்க..” என்றான்.

ஜனனிக்கு, கண்கள் இரண்டும் கலங்கியது இப்போது. இது நேரம் வரை அத்தனை திடமாக இருந்தாள்.. ‘அங்கு என்னதான் பேசுவாங்க பெருசா’ என திடமாக இருந்தாள். ஆனால், இவ்வளவு சீக்கிரமாக இவன் வந்து சம்மதம் கேட்பான் என அவள் எண்ணவில்லை.. நாட்கள் இன்னும் நீளும்.. தனக்கும் ஒரு மாற்றம் வரும் எனதான் எண்ணி இருந்தாள் ஜனனி.  இப்போது மஹா வந்து கேட்கவும் எப்படி உணர்கிறாள் என தெரியவில்லை அவளுக்கு. அமைதியாகவே இருந்தாள்.

மஹா “ஏன் ஜானு.. உனக்கு என்ன தோணுதோ சொல்லு” என்றான்.

ஜனனி “ம், என்ன தோணுது.. என் மேல பரிதாப படுறிங்களா” என்றாள் சின்ன குரலில்.

மஹா “ம், பரிதாபம்… அப்படி ஒன்னு இருக்குல்ல.. அப்படிதான் உன்மேல பரிதாபம்ன்னா.. இந்நேரம் உன்கிட்ட இப்படி உட்கார்ந்திருக்க மாட்டேன்.. ஆனா, அது கொஞ்சமா இருக்கு ஜானு.. ஆனா, அதைவிட நிறைய நேசம் இருக்கு டா.. ஏன் பரிதாபட்டுதான் உன்னை தேடி.. உன்னை மாதிரி பொண்ணு வேணும்ன்னு காத்திருப்பேனா.. மனசுல நீ கொஞ்சம் அழுத்தமா பதிஞ்சிட்ட.. அதான் இப்படி.

உண்மை என்னன்னா, இங்க வரும்போது உனக்கு கல்யாணம் ஆகியிருந்த செய்தி மட்டும்தான் தெரியும் எனக்கு. அப்போவே மனசு அடிச்சிகிச்சு, ச்சே.. அந்த திமிர் பிடிச்சவளை விட்டுட்டியே.. லைப் கலர்புல்லா இருந்திருக்குமே.. என தோணிகிட்டே இருந்தது.. 

அப்புறம்தான் தெரியுது உனக்கு டிவோர்ஸ் ஆக போகுதுன்னு.. என்ன எதுன்னு முதலில் விசாரிக்கலையே.. அப்போவே முடிவு பண்ணிட்டேன், எத்தனை வருஷம் ஆனாலும், உன்னை விடறதில்லை, உன்கூடதான் என் கல்யாணம் என அப்போவே முடிவு பண்ணிட்டேன்.

இத நீ எப்படி வேணா வைச்சிக்க, ஆனா எனக்கு இது முன்ஜென்ம காதல் மாதிரி. ஏன் உன்னை தேடுறேன்னு சரியா சொல்ல முடியலை.. நான் உன்னை தேடினேன் நிறைய தடவ…

பனிரெண்டாம் வகுப்பில் ஸ்டேட் ப்ஸ்ட் நான்.. ஸ்கூல், தெரு, வீடு எல்லாம் கொண்டாடுது.. ஆனா, நீ என்னை திரும்பி கூட பார்கலையே.. என்னாடா இவன்னு ஒரு எரிச்சல் வந்தது. அங்கிருந்து நான்.. அப்போதிலிருந்து நான்.. எப்போது, எது ஜெயிச்சாலும் உன்னைத்தான் பார்ப்பேன். ஆனா, நீ எப்போதும் போல.. ‘அவ்வளோதானேன்னு’ பார்த்துட்டு போயிடுவ.. அது அப்படியே வளர்ந்து வளர்ந்து உன்னை திரும்பி பார்க்க வைக்கனும்ன்றதே என்னோட ஆசையா ஆகிடுச்சி. ஆனா அது எப்படின்னு புரியாமா.. ஒரு மாதிரி உன் மனசில் என்னை தஹ்ல்லி வைக்க வைச்சிடுச்சி..

ஆனா எப்போ உன்னை மாதிரி பெண்ணு வேணும்ன்னு மனசு சொல்ல ஆரம்பிச்சதுன்னு தெரியலை.. அப்படியே தேடி தள்ளி போட்டு .. உன்னை பார்க்கிற சான்ஸ் கிடைச்சது.

அப்போதான் உன்நிலை தெரிய, எப்படி நான் உன்னை விட்டுட்டு வேற பெண்ணை தேடுவேன்.. சொல்லு, அது முடியுமா என்னால.. இததான் நீ பரிதாபன்னு நினைக்கிறியா” என்றான் நீண்ட விளக்கம் சொல்லி, தன் கேள்விக்கு விடை தேடினான், எந்த இடத்திலும் தன வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை படிப்பாளன்.. எதோ கதை போல சொன்னான், அவ்வளவுதான் எனபதாக..

ஜனனியின், முகம் ஆனந்தம் கொண்டது கண்கள் கண்ணீர்தான் கொண்டது.. வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு.. கீழே குனிந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மஹா, நீண்ட நேரம் அவளின் கைகளை தன் கைகளோடு பிணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.. அவளின் கண்ணீர் கீழே விழவும், அவளின் முகவாய் தொட்டு அவளை நிமிர்த்தினான்.. “எதுக்கு இவ்வளோ அழற..” என்றான்.

ஜனனி இளகியிருந்தாள் “தாங்க முடியலை மஹா.. இப்படி எல்லாம் கூட நடக்குமா.. எ.. என்னால தாங்க முடியலை மஹா, எப்படி இவ்வளோ பொறுமையா இருந்த.. எனக்கு பயமா இருக்கு மஹா, நா… நான் இந்த அன்புக்கு தகுதியானவளா” என்றாள்.

மஹா “பின்ன, இல்லையா.. நீ இன்னும் பழசையே நினைக்காத.. அது ஒரு ஆக்சிடன்ட்.. அவ்வளோதான். எப்படி சொல்றதுன்னு தெரியலை.. உன் மனசுல, இன்னமும் அந்த நினைப்பு இருக்கா…” என்றான்.

ஜனனி “தெரியலையே மஹா… நீ பேசும் போது, எனக்கு ஏதும் நினைவு வரல, ஆனா.. உனக்கு நான் ஈடான்னு சந்தேகமா இருக்கு.. எ எனக்கு. இந்த அன்பு.. நீ இவ்வளோ பொறுமையா என்கிட்டே பேசறது எல்லாம் பார்த்து பயம் வருது.. என்னால் நிம்மதியா உன்கூட வாழ முடியுமா, உனக்கு என்னால் நிம்மதியை தர முடியுமா.. பயமா இருக்கு மஹா..” என்றாள்.

மஹா “ப்பா என்ன சந்தேகம். என்னால் முடியும்.. நான் ஆசைப்பட்ட பொண்ணு.. என் யெங்ஏஜ்ஜில் அவளால் மட்டுமே என்னுள் நேசம் நுழைந்தது.. அஹ, என் மனதில் ஆசையை காட்டிய பெண்.. அவளோடு என் வாழ்க்கை.. அஹ.. நினைக்கும் போதே.. ” என சொல்லி, அவளின் கைகளை தன் நெஞ்சோடு  சேர்த்து பிடித்துக் கொண்டவன் “எப்படி கசக்கும் அதுக்கு நான் விடுவேனா.. மேலும் உன் மனசுப்படி எல்லாம் நடக்கும் டா ஜானு.. என்னை கொஞ்சம் அக்சபெட் பண்ணு.. போதும்.. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

ஜனனி இன்னும் அவனையே பார்த்திருந்தாள்.. இந்த நேசம்.. காதல்.. அன்பு.. காதல்.. எல்லாம் வார்த்தையாக கூட அவள் உணர்ததில்லை. இன்று கொஞ்சமாக அவளுக்கு சொல்லி காட்டினான் மஹா.

மஹா, ஜனனியின் உறைந்த நிலை பார்த்து.. “ஜானு, லேசாக.. சின்னதா.. பட்டும் படாமல்.. கொஞ்சமா.. உன்னை கட்டிக்கவா.. “ என்றான்.

ஜனனி திடுக்கிட்டு எழுந்தாள்.

மஹா “பாவம் டி நானு.. ரொம்ப பேசியிருக்கேன்” என்றவன் அவளை தோளோடு அணைத்தான்.. ஜனனி பதறி விலகினாள்.

மஹா “சரி சொல்லு.. என்னை கல்யாண செய்துக்கிறியா கேட்டா என்ன சொல்லுவா” என்றான்.

ஜனனி “எல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னீங்க.. அப்புறம் என்ன கேள்வி இது. இதை யாராவது என்கிட்டே கேட்டாங்க அப்புறம் இருக்கு மஹாக்கு” என, அதிராமல் மிரட்டினால் பெண்.

மஹா “ம்.. ம்… இப்படியே இப்படியே இரு.. பழைய ஜானுவ நான் எடுத்துக்கிறேன்..” என்றான்.

ஜனனி “இல்ல, புது ஜானுதான் உங்களுக்கு..” என்றாள்.

மஹா “ம், சூப்பர் ரெண்டும் எனக்குதான்” என்றான்.. அவளின் கைகளை அழுத்தி. இப்போது ஜனனியின் கைகளும் அவனின் கையோடு பிணைந்து இருந்தது. ஜனனி இமைக்காமல் தன்னவனையே பார்த்திருந்தாள்

“நிழலாடும் நினைவில் ரெண்டு..

களவாடி தருவேன் இன்று..

கடிகாரம் கால நேரம் சுழற்றிடுவேன்..

உன்னை காணா உலகம் சென்று..

அங்கேயும் இதயம் தந்து..

புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்..” 

 

Advertisement