Advertisement

மரகத மழையாய் நீ!..

21

ஜனனி, எதையோ எண்ணி சிரித்துக் கொண்டே படித்தாள். ‘என்ன நடக்கிறது’ என அவளுக்கு புரியவில்லைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் அவன், அவளுடைய நினைப்பில் இருந்த பழைய எண்ணங்களை ஒன்றுமில்லை என்பதாக செய்துக் கொண்டிருக்கிறான். 

மஹா, உறங்கிய பின், தன் அழைப்பை துண்டித்து.. உறங்க சென்றாள் பெண். 

]மறுநாள் வண்ணமயமாக விடிந்தது ஜனனிக்கு. அதேதான் மஹாக்கும். எதோ ஒரு பரபரப்பு அவனை தொற்றியது. அதே பரவசத்தோடு கிளம்பினான் சென்னைக்கு.

ஜனனி, ஒரு நிதானத்தில் அவனை பற்றிய எண்ணத்தை அசை போட்டபடி மருத்துவமனை கிளம்பினாள். முன்போல ஒரு நடுக்கம்.. பயம்.. தயக்கம் எல்லாம் இல்லை. முகம் கொஞ்சமாக மலர்ந்து இருக்க.. இரவில் கண் விழித்த தடமும் அந்த கண்ணில் தெரியவில்லை.. லேசாக கனவில் மிதக்கும் கருவிழிகள்தான் தெரிந்தது. அதில் துளிர்விட்ட புதிதான ஒரு நம்பிக்கை.. அந்த கருவிழியின் ஓரத்தில் தெரிகிறது. ‘எல்லாம் சரியாக மாறிடுமோ.. போகும் பாதையில் இனி ஒரு வெளிச்சம் என்னுடனேயே வருமோ’ என்ற எதிர்பார்ப்பான நம்பிக்கை அவளின் கண்ணில் வந்தேவிட்டது.

‘இரண்டாம்முறை ஒரு நம்பிக்கை..’ சொல்லும் போதே கொஞ்சம் சங்கடமாக தெரிகிறேதே.. என அவளும் யோசிக்கிறாள். ஆனால், மஹா நேற்று சொன்ன வார்த்தைகளும் அவன் கண்களும் பொய் என தோன்றவில்லை. மேலும் கூடவே அவனின் ஒழுக்கம் பார்த்தவள்தானே. முன்பெல்லாம் வள்ளு வள்ளென எரிந்து விழுபவன்.. இப்போது எப்படி என்னை நேசிக்கிறான்.. ஒருவேலை பரிதாபமோ என புது சந்தேகம் வரத்தான் செய்தது அவளுள்.

ஆனால், அது அவ்வளவு வலுவாக இல்லை.. ஆனால், கொஞ்சம் ஓரமாக இருக்கிறது அவளுள். எல்லாம் சேர்ந்தாலும் முகம் புன்னகையைதான் கொண்டது.. கிளம்பினாள் மருத்துவமனைக்கு.

மதியையும் ஒரு டாக்ஸி புக் செய்துக் கொடுத்து.. வரசொல்லி, தான் டூ வீலரில் கிளம்பினாள் ஜனனி. 

மஹா, காலையிலேயே தன் அன்னைக்கு அழைத்துப் பேசித்தான் கிளம்பினான்.

மஹா, மதியம் சென்னை வந்துவிட்டான். முதல் வேலையாக, ஜனனியை அழைத்தான்.. அவளோ போனை எடுக்கவில்லை. 

ஜனனிக்கு, மாலை வரை வேலை சரியாக இருந்தது.. மதிக்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய.. ஒருவரை அனுப்பிவிட்டு, தன் வேலையை பார்த்தாள் பெண்.

மஹாவின், அழைப்பின் மாலையில்தான் பார்த்தாள் ஜனனி. “என்ன“ என கேட்டு மெசேஜ் செய்தாள்.

மஹா, அலுவலகம் சென்றுவிட்டான்.  அவள் அனுப்பிய மெசேஜ் பார்க்க அரைமணி நேரம்.. இப்படிதான் இவர்களின் நேரம் சென்றது. சற்று நேரம் சென்றுதான் மஹா பதில் சொன்னான் “சும்மா, ஜஸ்ட்.. நான் சென்னை ரீச் ஆகிட்டேன் சொல்லத்தான்.. கூப்பிட்டேன்” என்றான்.

ஜனனி “ஹம்… ஓகே, விழா எடுத்திடுவோம்..” என்றாள் கிண்டலாக.

மஹா “நக்கலு. சரி, விழாவெல்லாம் வேண்டாம்.. ஜஸ்ட் நீ, என்னோட வீதிஉலா மட்டும் வந்தால் போதும்.. இந்த சண்டே..” என்றான்.

ஜனனி “இந்த சண்டே.. எனக்கு டியூட்டி இருக்கு..” என்றாள்.

மஹா “சரி, பை… அப்புறம் பார்க்கலாம்” என சொல்லி வெளியே சென்றுவிட்டான், படிப்பாளன்.

ஜனனிக்கு சிரிப்பும் வந்தது, அவனை கஷ்ட்டபடுத்தறோம் எனவும் எண்ணம் வந்தது. ஒரு ஸ்மைய்லி அனுப்பி வைத்து விட்டு, வீடு கிளம்பினாள்.

ஜனனி வீடு வர, மதி அத்தை அங்கே இருந்தார்.

காயத்ரி, ஜனனி உள்ளே வரவும்.. அவளை அணைத்துக் கொண்டாள், என்ன ஏது என காரணம் சொல்லாமல்.. ஜனனி “என்ன காய்.. என்ன ஆச்சு.. இ.. இரு ரெப்ரெஷ் ஆகி வரேன்..” என்றாள்.

மதி அத்தையை பார்த்து “என்ன அத்த ரெஸ்ட் எடுக்கலையா..” என்றபடி உள்ளே சென்றாள். 

காயத்ரிக்கு ஆனந்தமோ ஆனந்தம், மதி அத்தை வந்ததிலிருந்து.. அதுவும்  அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் நிறைந்த ஆனந்தத்தை தந்தது காயத்ரியிடம்.

இப்போதும் உள்ளே செல்லும் ஜனனியையே பார்த்திருந்தாள் காயத்ரி. மதிதான் அவளின் நினைவை கலைத்தார் “அவ வரட்டும்..  வா” என்றார்.

காயத்ரி “இருங்க ஆன்ட்டி, பால் அடுப்பில் வைச்ச்சிட்டு வரேன்” என்றவள் உள்ளே சென்றாள்.

மதி, காயத்ரியிடம் வந்தவுடம் சொல்லிதுதான் “ஜனனியை, மஹா பிடிச்சிருக்குகுன்னு சொல்றான்.. ஜனனியை பெண் கேட்க்லாம்ன்னு இருக்கோம், தாரா வருவா, வந்து எல்லாம் முறையா பேசுவா.. இது, நான்.. உனக்கு தெரியணும்ன்னு சொல்றேன்..” என்றார்.

காயத்ரி அப்போதே சத்தமாக “ஆன்ட்டி.. ஆன்ட்டி.. உங்க மனசு யாருக்கு வரும்..” என்றாள் சத்தமாக. பிறகு என்ன பேசுவது என தெரியவில்லை, உள்ளே எதோ ஓடிக் கொண்டே இருக்கிறது.. அவளுக்கு, அதை கேட்கலாமா என தாயக்கம் வேறு வந்தது அண்ணியாக காயத்ரிக்கு.

தயக்கத்தை தள்ளி வைத்தாள்.. சிலதை வாய்மொழியாக கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது என தோன்ற, காயத்ரி “உ.. உங்களுக்கு ஜ..ஜனனி மேல ப்ரியம் இருக்கில்ல ஆன்ட்டி. இல்ல, மஹா சொல்றாருன்னு… கேட்க்கிறீங்களா” என்றாள், சந்தேகமாக.. கேள்வியாக.. ஆராய்ச்சியாக. என்னமோ ஒரு பயம் அவளுள்.. தன் மகன் பிடித்திருக்கு என சொல்வதால்.. இவர் திருமணம் செய்ய என்னுகிறாரோ.. என எண்ணம் எனவே கேட்டாள் பெண்.

மதி “எங்க பொண்ணு அவ.. சுகுமாரி இருந்த போதே.. இதெல்லாம் நடந்திருக்க கூடாதா என தோணுது. ஆனாலும் இப்பவும் ஒன்னும் கடந்து போயிடல.. எது எப்படி இருந்தாலும்.. எங்க ஜானு அவ.. அது இன்னும் உரிமையா சொல்ல போறோம் அவ்வளவுதான். இனி எந்த காயமும், ஏன் அதோடு வடு கூட.. அவ மனசில் இல்லாமல் பார்க்க போறேன் என் தங்கத்தை.. நீ பயப்படாதே, எங்க எல்லோருக்கும் ஜனனியை பிடிக்கும். சரியா.. சந்தோஷமா..” என்றார் புன்னகையான பாவனையில்.

காயத்ரி உண்மையாகவே மகிழ்ந்தாள்.. ‘மகனுக்கு பிடித்து திருமணம் என்பது சரி என்றாலும், பெரியவர்களுக்கு இதில் எந்த அளவு விருப்பம் என தெரிந்து கொள்ள ஆசை காயத்ரிக்கு. அதுவும் நல்லபடியாகவே இருந்தது “தேங்க்ஸ் ஆன்ட்டி.. எனக்கு தெரியும், இருந்தாலும்.. என் மனசு திருப்திக்காக கேட்டான்.. நீங்க ஏதும் தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள் தன்மையாக.

மதி “நாங்கதான் அதை சொல்லணும், சுகுமாரி மனசுக்கு நல்ல மருமகதான் கிடைச்சிருக்கு.. நீ கேளு, எவ்வளவு வேணா கேளு.. பதில் சொல்றேன்..” என்றார் சிரித்துக் கொண்டே.

அப்போதே தன் மாமனாருக்கு அழைத்து பேசினாள் காயத்ரி. மதியிடமும் கொடுத்து பேச செய்தாள். அதன்பின் கணவனுக்கு அழைத்து பேசினாள்.. எனவே ஆண்கள் இருவரும் கிளம்பி வருவதாக சொல்லி இருந்தனர்.

ஜனனி, இப்போதுதான் குளித்து உடைமாற்றி வந்தாள்.. காயத்ரி, காபி கொடுத்தாள். ஜனனி “என்ன அண்ணி, வந்தவுடன பாசத்தை காட்டின.. என்ன விஷயம்” என்றாள் அசால்ட்டாக.

காயத்ரி, மதியை பார்க்க.. மதி ‘இப்போ சொல்லாதே’ எனும் விதமாக சைகை செய்தார். காயத்ரி “சும்மாதான், உன் அண்ணன் வருவார் சொல்ல..” என்றாள்.

ஜனனி, காயத்ரியின் மணிக்கட்டை பிடித்தாள் காரணமாக. காயத்ரி “ஹலோ, அதெல்லாம் இல்லை, அப்பிடின்னா, நாங்களே சொல்லுவோம்.. இது ஸ்பெஷல்.. கொஞ்சம் பொறுமையா இரும்மா” என்றாள் கிண்டலாக.

ஜனனி “ம்…” என்றவள், “பார்க்கிறேன் பார்க்கிறேன், அப்படி என்னதான் சொல்றான்னு” என்றாள். பின் மதி அத்தைக்கு தேவையான ஆலோசனை வழங்க தொடங்கினாள். 

சற்று நேரத்தில் காயத்ரி வந்து அமர்ந்தாள் சோபாவில்.

உடனே மதி “நீ நம்ம வீட்டில் போய் படிடா, நாங்க கொஞ்சம் பேசிட்டு வரோம்” என்றார்.

ஜனனி கண்ணால், தன் அண்ணியிடம் ‘என்ன’ என்றாள்.. காயத்ரி தன் நெஞ்சில் கை வைத்து.. “சொல்றேன்.. இப்போ போ..” என்றாள்.

ஜனனிக்கு, எதோ புரிந்தும் புரியாத நிலை.. ஒன்றும் கேட்க முடியாமல் மதி அத்தை வீட்டுக்கு சென்றாள், புக் எடுத்துக் கொண்டு.

Advertisement