Advertisement

மரகத மழையாய் நீ!..

2௦

மஹா, மறுநாள் காலையில் அவளுக்கு அழைத்தான்.. ஜனனி, நல்லவிதமாகவே எடுத்தாள் “ஹலோ” என்றாள்.

மஹா “மெசேஜ் பார்த்தியா”  என்றான்.

ஜனனி “டைம் ஆச்சு.. இன்னும் போன் எடுக்கலை, பார்த்துட்டு கூப்பிடுறேன்” என்றாள்.

மஹா “ம்..” என்றான், சுரத்தே இல்லாமல்.. அத்தோடு “ஜானு, ஈவ்னிங் ஹாஸ்பிட்டல் வரேன்..” என்றான்.

ஜானு வண்டியை ஸ்டார்ட் செய்துக் கொண்டிருந்தாள் அந்த சத்தம் கேட்டு மஹா “என்ன அதுக்குள்ள கிளம்பிட்டியா” என்றான்.

ஜனனி “ம்… இன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. ப்ளீஸ், அது.. அப்படி எல்லாம் வேண்டாம்… நாம ஈவ்னிங் பார்க்கலாம்” என்றாள்.

மஹா “ஓகே” என்றவன் “பை..” என்றான்.

காலையிலேயே இருவருக்கும் நல்ல மனநிலை. அதை அப்படியே கொண்டு சென்றனர்.

மாலையில் மஹாவினால் வரமுடியவில்லை, அதை மெசேஜ்ஜில் அனுப்பி இருந்தான். ஜனனி, இரண்டு சிரிக்கும் ஸ்மெய்லிகளை அனுப்பி இருந்தாள். 

மஹா, அதை பார்த்து மெசேஜிலேயே.. டெக்ஸ்ட் செய்ய தொடங்கினான்.. “என்ன ஒரு ஆனந்தம்.. உனக்கு” என்றான். 

ஜனனி, அதற்கும் அவள், ஸ்மெய்லி அனுப்பினாள்.

மஹா “உன்னை பார்க்கலாம்.. கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம் நினைச்சேன்” என்றான், அவளின் பதிலை எதிர்பாராமல்.

ஜனனி “பரவாயில்லை, நைட் கூப்பிடுங்க” என்றாள்..

மஹா, இப்போது இதய வடிவத்தில் கண்கள் கொண்ட மொம்மையை அனுப்பினான்.

ஜனனி, அதை கவனிக்காதவள் போல வெளியே சென்றுவிட்டாள்.

மஹா, அதற்கு ஒரு பாடலின் லிங்க் அனுப்பினான். அதை அப்போது அவள் பார்க்கவில்லை. வேலை சென்றது, மாலையில் வீடு வந்துதான் போன் எடுத்தாள்.

முதலில் வந்தது அவனின் செய்திதான்.. ஒரு பாடல் லிங்க்… அதை ஓபன் செய்ய…  

ஒருத்தி மேலே மீண்டும்… 

மையல் ஆனனேன்… 

தோழியே நீ தூது போடி..” என சத்தம் கம்மியாக இசைத்துக் கொண்டிருந்தது. 

ஜனனிக்கு, அவளையறியாமல் இதழ்கள் விரிந்தது.. அந்த பாட்டு என்னமோ செய்தது.. முகமெல்லாம் விகாசிக்க.. கண்களின் இமைகள் சேராமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஆனந்தமாக அந்த திரையை. 

அவன் அன்று சொன்ன.. ‘உன் கல்யாணத்துக்கு முன்னாடியே..’ ‘ஏன் உனக்கு தெரியாது‘ என்ற வார்த்தைகள் எல்லாம் நினைவு வந்தது. மீண்டும் ஒருமுறை அந்த பாடலை ஓடவிட்டு கேட்டாள்.. இப்போதுதான் கண்கள் சிரித்து ‘என்னவாம் இவனுக்கு.. எப்போ என் கிட்ட சொன்னானாம்.. எப்போது பார்த்தாலும் என்னை மாட்டி விட்டுக்கிட்டு, திட்டிகிட்டே இருந்துட்டு.. காதலாம்’ என உதடுகள் முணுமுணுத்தது இன்பமாக.

இருந்தும் பதிலாக மஹாவிற்கு “இதென்ன பாட்டு.. ரொம்ப பழசா இருக்கு.. போர்” என அனுப்பினாள்.

மஹா, அதை இப்போது பார்க்கவில்லை.

நேரம் சென்றது.. மஹா அலுவலகத்திலிருந்து வரவே லேட்.. ம், அவர்களின் பெங்களூர் அலுவலகத்தில் எதோ இஷ்யூஸ்.. அதனால், அதை பேசி, கேட்டு.. என வரவே தாமதமாகியது, வந்த பின்னும்.. இன்னும் பேசிக் கொண்டே இருந்தான் மேலிடத்திற்கு. எனவே மஹா, ஜனனியை மறந்து போனான்.

ஜனனி, படிப்பில் கவனம் வைத்தாள். இருந்தும் போனிலும் கண் இருந்தது. இரவு முழுவதும் அழைக்கவில்லை மஹா. 

ஜனனியும் இரண்டுமணி வரை படித்தவள்.. போனை பார்த்தவள், அவனுக்கு அழைக்கலாமா? வேண்டாமா? என யோசனை. இத்தனை நேரத்திற்கு மேல் எப்படி அழைப்பது என.. இரண்டு ‘?? மார்க்’ போட்டு  அனுப்பி வைத்தாள். முயன்று உறங்கினாள்.

மஹா, காலை விமானத்தில் பெங்களூர் கிளம்பினான். ஏர்போர்ட் செல்லும் வரை.. அவனின் us அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட டார்ச்சர் பேச்சு வார்த்தைதான். அதனால் உறக்கம் இல்லை, சாப்பாடு இல்லை.. பெங்களூர் எப்போது போவோம் என ஆனது மஹாவிற்கு. 

கால்டாக்சியில் இருந்து இறங்கி செக்கிங் முடித்து.. அமர்ந்த போதுதான் பர்சனல் போனை எடுத்து பார்க்கவே நேரம்.. அவனுக்கு. ஜனனியிடமிருந்து இரண்டு கேள்விகுறி.. மஹாக்கு முதலில் எல்லாம் மறந்து போனது, இருந்தும் ஒரு இதம் வந்தது.. எல்லாம் மறந்து யோசித்தான் ‘எதுக்கு இது’ என. பாவம் அவன் இருந்த டென்ஷனில்.. அவன் சொன்னது எல்லாம் மறந்து போனது அவனுக்கு. மீண்டும்  அவனுக்கு போன் அலுவலகத்திலிருந்து. அதனால் யோசனை தடைபட்டது..

ஜனனி, லேட்டாக எழுந்து முதலில் போனைதான் பார்த்தாள்.. அவனிடமிருந்து எந்த பதிலும் வந்திருக்கவில்லை.. ‘புஸ்..’ என ஆனது அவளுக்கு.

மஹா, போனில் இவள் அனுப்பிய செய்தியை பார்த்ததற்கான அறிகுறி கூட இன்னும் காட்டவில்லை அவளிற்கு. எனவே முகம் வாட, குளித்து கிளம்பினாள். ஒவ்வொரு செய்கையின் போதும் போனை கையில் எடுத்து எடுத்து பார்த்தாள்.. அவன் பார்த்துவிட்டானா என. 

ஒருகட்டத்தில்தான், அவன் பார்த்ததற்கான அறிகுறி தெரிய.. மனது கொஞ்சம் அமைதியடைந்தது பெண்ணுக்கு. என்னமோ தன் எண்ணம் தனக்கே வித்யாசமாக இருப்பதாகத்தான் தோன்றியது. ஆனால், அதை தவிர்க்க முடியவில்லை அவளாள். இப்போதுதான் அவன் பார்த்தது தெரிந்தது பெண்ணுக்கு, கோவம் வந்தது ‘நைட் கால், பண்ணல.. இப்பவும் ரிப்ளே இல்ல’ என மனதில் முணு முணுத்துக் கொண்டே பூஜை அறை சென்றாள். உண்டு முடித்து கிளம்பினாள்.

மஹா, அங்கே போனை ஆப் செய்துவிட்டு பயணம் செய்தான். நேற்று இரவிலிருந்து பேசி பேசி என வெறுத்துவிட்டான். எனவே, இதுதான் சாக்கு என.. ஆப் செய்துவிட்டு நிம்மதியாக ஒருமணி நேரம்.. கண்மூடி சாய்ந்துக் கொண்டான்.

ஜனனி, உண்டு வண்டி எடுக்கும் போது மஹாவிற்கு அழைத்தாள். லைன் போகவில்லை.. மருத்துவமனையில் இறங்கி, “என்னாச்சு.. இன்னும் தூங்குறீங்களா.. நீங்க நல்லா இருக்கீங்களா” என ஒரு செய்தியை அனுப்பிவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

மஹாவிற்கு, அவனின் தொழிலில் ஒரு எர்ரோர். வாடிக்கையாளர் செலுத்தும் பணம் எல்லாம் எப்படியோ வேறு ஒரு தனிநபரின் அக்கௌன்ட்க்கு மாற்றலாகிக் கொண்டே இருக்கிறது. அதனால் நேற்றிலிருந்து எல்லாம் செக் செய்து… நெட்வொர்க் மாற்றி.. செர்வெரை ஹக் செய்த நபரை தேடி என போராடிக் கொண்டிருக்கிறது கம்பெனி. எனவே மஹாதான் தலைமைக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறான்.. எனவே, பெங்களூர்க்கு தேவையான எல்லா அனுமதியும் கொடுத்து.. அங்கிருந்த வேலைகளை கவனித்து.. பேசி.. என மஹா அதில் பிஸி. ஜனனி குறித்து எல்லாம் மறந்து போனான். எனவே இப்போது வரையும் போனை எடுக்கவில்லை அவன்.

ஆகிற்று ரெண்டுநாள்.. ஜனனிக்கு எந்தவித செய்தியும் வரவில்லை அவனிடமிருந்து, தன் செய்தியை பார்த்ததற்கான அறிகுறியும் தெரியவில்லை. ஜனனிக்கு வீட்டிற்கு சென்று பார்க்கலாமா வேண்டாமா என எண்ணம் உள்ளே ஓடினாலும்.. என்னமோ வீடு செல்ல தோன்றவில்லை.  அவளுக்கு குழப்பம்.. கூடவே தந்தை கேட்டது.. என சும்மாவே குழம்பி நிற்பவளுக்கு.. இவனின் அமைதி ‘பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு’ என்ற பாவத்தைத்தான் தந்தது. 

நான்காவது நாள் இரவு ஒன்பது மணி இருக்கும்… ஜனனிக்கு, மஹாவிடமிருந்து அழைப்பு வந்தது. அவளும் போனை எதிரே  வைத்து, அதை பார்த்துக் கொண்டே இருந்தாள்.. ‘என்ன திடீர் ஞாபகம்’ என திட்டு வேறு, அழைத்தவனை  திட்டிக் கொண்டேதான் பார்த்திருந்தாள்.

இரண்டாம் முறை ஒலிக்க.. போனை எடுத்தாள் அசால்ட்டாக  “என்ன ஞாபகம் வந்துடிச்சா” என்றாள்.

மஹா, அதை எல்லாம் கவனிக்காமல் பதறியவனாக “ஜானு, அம்மாக்கு முடியலை போல.. கொஞ்சம் என்னான்னு பாரு.. போனை எடுக்கலை, நானும் கூப்பிடவே இல்லை, பேசவே முடியலை, மூச்சு வாங்குது போ ஜானு” என்றான்.

ஜானு “சரி, சரி” என சொல்லி அவசரத்திற்கு தேவையான முதலுதவியை எடுத்துக் கொண்டு.. கீழ் சென்றாள்.

Advertisement