Advertisement

மஹா, தன் அன்னைக்கு என்ன சமாதானம் சொல்லுவது என தெரியாமல் அவரை கட்டிக் கொண்டான்.

மதி “நான் நாளைக்கு சித்தப்பா வீட்டில் பேசிடறேன்…” என்றார்.

மஹா “நானும் வரேன் ம்மா… ஈவ்னிங் கிளம்பு.. நானும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.. பேசலாம்” என்றான்.

இப்போது சீக்கிரமாக கிளம்பினான் மஹா,  நேரமாக “அம்மா, லேட் ஆச்சு எனக்கு டிபன் வேண்டாம்“ என்றான். ஆனால், முகமே ஆனந்தமாக இருந்தது.. அன்னை இதை கவனித்தார். அவசர அவசரமாக பாக்ஸ்சில் போட்டு அவனின் கையில் கொடுத்தார். 

மஹா “தேங்க்ஸ் ம்மா” என சொல்லி.. அன்னையின் தோளை மற்றொரு கையால் சேர்த்து அணைத்தவாறே விடைபெற்றான், மஹா.

மஹாவிற்கு, ஜனனியை பார்க்கும் ஆவல் வந்தது. இது நாள் வரை, அன்னை ஏதும் சொல்லவில்லை என அமைதியாக இருந்தவன் இப்போது பறந்தான் அவளை பார்க்க.. லிப்ட் பட்டனை.. பத்து முறைக்கு மேல்.. அழுத்தி அழுத்தி பார்க்கிறான்.. இன்னும் லிப்ட் மேலேறவில்லை. காத்திருந்தான் ‘பார்த்திடனும் பார்த்திடனும் அவளை’ என ஜெபித்தபடியே காத்திருந்தான்.

ஐந்து நிமிடம் சென்று வந்தது லிப்ட். கண்களால் துளாவினான் அவளை, காணவில்லை. எப்போதும் இவ்வளவு கூட்டம் இருக்காது, இன்று லிப்டில் கூட்டம்.. அவளையும் காணோம். எனவே, அமைதியாக அடுத்த தளத்தில் இறங்கிக் கொண்டான். அடுத்த முறைதான் கீழிறங்கினான். அதுவரை வரவில்லை அவள்.

பார்க்கிங்கில் சற்று நேரம் நின்றான் ‘டைம் தாண்டவில்லை.. போயிருக்கமாட்டாளே..’ என யோசனையோடு காரில் அமர்ந்திருந்த படியே  பார்த்திருந்தான்.

அவனின் ஜானு அங்கேதான், தன் வண்டியோடு போராடிக் கொண்டிருந்தாள். இவன் வரும் போகும் வண்டியை பார்த்திருந்ததால் தெரியவில்லை. சற்று நேரம் சென்று.. தன் காரிலிருந்து இறங்கி நின்று, உள்ளே கண்களால் தேடவும்தான்.. அவர்களின் பார்க்கிங்கில்.. வண்டியோடு போராடிக் கொண்டிருந்தாள் ஜனனி.

தன் காரை அப்படியே விட்டு, உள்ளே சென்றான் மஹா.. ‘எப்போதும் இவளுக்கும் வண்டிகளுக்கும் ஆகறதே இல்லை’ என எண்ணிக் கொண்டு அவளை நோக்கி சென்றான்.

ஜனனி கிக்கர் அடித்துக் கொண்டிருந்தாள். இவன், அவள் எதிரில் போய் நின்றான், அமைதியாக. ஜனனி சற்று நேரம் சென்றுதான் பார்த்தாள்.. அதே ப்ரகாசமாக நின்றிருந்தான் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு, மஹா.

ஜனனியின் எரிச்சல் முகம்.. கொஞ்சம் தளர்ந்தது இவனை பார்த்ததும், அனிச்சையாய், தன் கால்களை கிக்கரிலிருந்து கீழே வைத்தாள்.

மஹா, தன்போல ஜனனி நின்றிருந்த இடத்திற்கு அருகில் வந்தான்.. அவள், தன்போல நகர்ந்துக் கொண்டாள். இவனும் தன் பங்குக்கு, ஏதேதோ செய்தான், வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. 

மஹா, வண்டியில் பெட்ரோல் இருக்கிறதா என  பார்த்தான் புல் என்றது. 

இப்போது மீண்டும் வண்டியை உதைத்தான்.. இன்னும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. இப்போது பெட்ரோல் டேங்க் திறந்து பார்த்தான்.. சொட்டு பெட்ரோல் இல்லை.. அவளை முறைத்தான்.

ஜனனி “என்ன” என்றாள் தயக்கமாக.

மஹா, வாய் திருந்தான் “சொட்டு பெட்ரோல் இல்லை, எப்படி வண்டி எடுக்கும்…” என்றான் அமர்த்தலாக.

ஜனனிக்கு, வெட்கமாகி போனது, முன்னே பார்த்தாள்.. ‘புல்’ன்னு காட்டுது என, மஹாவை பார்த்தாள்.

மஹா “இங்க பாரு” என்றான்.

ஜனனி எட்டி பார்த்தாள் நம்பாமல்.. லேசாக அவள் உரசியதில், சற்று சுவாசம் தப்பியது மஹாக்கு. தானே தள்ளி நின்றுக் கொண்டான், படிப்பாளன்.

ஜனனி நகரவும்.. வண்டியை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு “வா, ஹாஸ்பிட்டல் தானே போகணும் நான் ட்ராப் பண்றேன்” என சொல்லி முன்னால் நடந்தேவிட்டான்.

ஜனனி என்ன செய்வது என தெரியாமல்.. நின்றாள் அங்கேயே.

மஹா, இரண்டடி எடுத்து வைத்து திரும்பி பார்த்தான் உள்மனம் சொல்லியது ‘அவள் வரமாட்டாள்’ என.

மஹா “என்ன.. வரமாட்டியா?” என்றான் அதட்டலாக.

ஜனனிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. எப்போதும் சிடுசிடுக்கும் ஜானு, இன்று அமைதியாக நின்றாள். அதுவே மஹாக்கு பெரிய விஷயமாக தெரிய.. “என்ன” என்றான் மீண்டும்.

ஜனனி “இல்ல, இன்னிக்கு நான் லீவ்.. தேஜுக்கு பர்த்டே… கேக் ஆர்டர் பண்ண போறேன்.. அதான், நீ… நீங்க  கிளம்புங்க, நான் அண்ணா கூட போய்கிறேன்” என்றாள். 

‘ப்பா.. மஹாவிடம் அமைதியாக பேசிய ஜானு.. எழுதி வைச்சிக்கணும் டா..’ நினைத்துக் கொண்டே மஹா.. அவளையே பார்த்தான், கொஞ்சம் உரிமையாய் பார்த்தான்.

மஹா “சரி வா, நான் கூட்டி போறேன்.. எனக்கு இப்போ வேலை எதுவுமே இல்லை, உன்னை பார்க்கத்தான் வந்தேன்.. வா” என்றான்  உண்மை காதலன் .

ஜனனி “எ.. எதுக்கு” என்றாள்.

மஹாக்கு கொஞ்சம் கோவம் வரும் போல இருந்தது.. “வா.. ஜானு” என்றான்.. அவனின் கண்ணும், குரலும் கெஞ்சியது.. முதல்முறை, நிமிர்ந்து..  அவனின்  கண்ணை நேரில் பார்த்தாள் ஜானு.. கண்ணில் யாசிப்பு.. தட்ட முடியவில்லை அவளால்.. தலை தானாக அசைந்தது, அவனுக்கு சாதகமாக.

மஹாக்கு, எல்லாம் முதல்முறை போல.. உதடுமடித்து.. தன்னை தானே போற்றிக் கொண்டு.. தன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு மெல்ல முன்னாள் நடந்தான்.. அவளும் சேர்ந்துக் கொண்டாள்

உள்ளே சத்தியமாக இந்த பாட்டுதான் ஓடியது அவனுக்கு.. 

“என்னோடு வா 

வீடு  வரைக்கும்…

என் வீட்டை பார் 

என்னை பிடிக்கும்…” என.

ஜானு, காரில் ஏறி அமர்ந்தாள்.. கொஞ்சம், சங்கோஜமாகதான் இருந்தது, ஆனாலும்.. அவனின் இலகுவான பார்வை.. அவளை கொஞ்சம் இலக வைத்திருந்தது.

கார் நகர்ந்தது.. மஹா “ஷாப் எங்க..” என்றான்.

அவள், எதோ வழி சொன்னாள்.. கேட்டுக் கொண்டான்.

இருவருக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை.. அதிலும் மஹா, வரம் வாங்கிய நிலையிலேயே இருந்தான்.. மெதுவாக வண்டியை செலுத்தினான்.. ‘போதும் டா.. இப்படியே வாழ்க்கை ஒரு புரிதலிலேயே போனா போதும்  டா.. அப்படியே பக்கத்தில் இருக்கணும் இவ.. நான் அதை உணரனும்.. இது நிலைக்கனும்..’ என மஹா எண்ணிக் கொண்டிருக்க.

ஜனனி “இதோ இந்த கட்” என அவனின் நினைவை களைத்தாள்.

மஹா, சுதாரித்து வண்டியை செலுத்தி.. கடையின் எதிரில் நிறுத்தினான். உள்ளே இறங்கி சென்றனர் இருவரும். ஜனனி முன்னால் நடக்க, மஹா அவளை தொடர்ந்து பின்னால் சென்றான்.. பெரிய கடையாக இருந்தது. எல்லா விதமான தின்பண்டங்களும் அங்கே இருந்தது. மஹாவின் கண்கள்  அந்த அல்வாவில் தான் நின்றது.

அதை உதறி.. ஜனனியோடு அருகில் போய் நின்றுக் கொண்டான். அவள் எதோ அந்த கடை சிப்பந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.. அவன் தன் வேலை இதுதான் என்பது போல.. பார்வையால் அவளை தன்னுள் நிரப்பிக் கொண்டிருந்தான்.

ஜனனி சட்டென திரும்பவும், கள்ள பார்வை பார்த்தவன் விழித்தான்.. சமாளிக்க “வேற, என்ன வேணும்” என்றான்.

ஜன்னி “அவ்வளோதான்.. நா.. நான் இப்படியே டாக்ஸி புக் பண்ணிக்கிறேன், நீ.. உங்களுக்கு வேலையிருக்கும், நீங்க கிளம்பறதா.. இருந்தா… கிளம்புங்க” என்றாள்.

மஹா “இல்ல இல்ல, எனக்கு எதுவும் வேலை இல்லை.. ஏதாவது சாப்பிடு வா” என்றான்.

ஜனனிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மஹா, பாதாம் பால் வாங்கி வந்தான். இருவரும் பருகினர். மஹா, இன்னும் ஸ்வீட், காரம் எல்லாம் வாங்கிக் கொண்டான். இருவரும் கார் ஏறினர்.

மஹா, இப்போதுதான் வாய் பேசினான் “இந்தா” என பாதி ஸ்வீட் எடுத்து கொடுத்தான் ஜானுவிடம்.

ஜனனி “இல்ல, நானும் வாங்கியிருக்கேன்” என்றாள். 

மஹா “இது என்னோட கிஃப்ட்ன்னு சொல்லி, தேஜுக்கு கொடுத்திடு.. நீதான் என்னை பார்ட்டிக்கு இன்வைட் பண்ண மாட்ட போலயே..” என்றான் சிரித்துக் கொண்டே.

ஜனனி “சாரி மஹா” என்றாள் சட்டென. தொடர்ந்து “வாங்க மஹா, ஈவ்னிங்தான் கேக் கட் பண்றோம்.. வா.. வாங்க” என்றாள்.

மஹா “உண்மையா சொல்றியா” என்றான் சீட் பெல்ட் போட்டுக் கொண்டே.

ஜனனி, உணர்ந்த அவனின் குரல் இதுவல்ல, இத்தனை வருடங்களில். இவ்வளவு பொறுமையாக மஹா அவளிடம் பேசியது இல்லை, இவளும், அவனிடம் பேசியது இல்லை. இப்போது இவன் கெஞ்சலாக அழுத்தி பேசி, துரத்தி வரும் போது.. ஏனோ.. இந்த நொடி சிடுசிடுக்க முடியவில்லை அவளால் “கண்டிப்பா வரணும்” என்றாள் மென்மையாக.

மஹா, மிதந்தான் அந்த வார்த்தையில்.. “முதல் முதலில் கூப்பிடுற..  வருவேன்“ என்றான் அழுத்தமாக, அவளை பார்த்துக் கொண்டே சொன்னான்.

ஜனனியை, அந்த அழுத்தமான வார்த்தை.. எதோ செய்தது, புதிதாக எதோ ஒன்று தொண்டை வழியே இதயத்தை அடைந்தது.. யாரோ அவள் மேல்.. எதற்கோ ஐஸ்க்யூப் வாரி கொட்டினர். பின்னிலிருந்து எதோ மெல்லிசை.. கேட்ட பாட்டு போலதான் இருந்தது.. ஆனால், நினைவு வராமல்.. அவனின்  பேச்சும்.. பாட்டும் போட்டிக் போட்டுக் கொண்டு, அவளின் செவியை அடைந்தது. பிரமித்து அமர்ந்திருந்தாள் ஜனனி.

மஹா “ஜானு.. ஜானு.. இறங்கு” என இரண்டுமுறை சொல்லிய பின்தான் பூலோகம் வந்தாள் பெண்.

அவளை இறக்கி விட்டு, லேசாக தலையசைத்து.. பிரியாவிடை தந்து நகர்ந்தான் மஹா.

ஜனனிக்கு அந்த பாடல் இப்போது காதில் விழுந்தது   

“இது நடந்திட கூடுமா..

இரு துருவங்கள் சேருமா..

உச்சரித்து நீயும் விலக..

தத்தளித்தே நானும் மருக.. 

என்ன செய்வேனோ..”

Advertisement