Advertisement

மரகத மழையாய் நீ!..

16

ம்.. காதல் என்பது உணர்வது. ஒரு பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, அவர்களின் மனதுக்கு  பிரத்யேகமானவர்கள், உணர்த்துவது. இப்போது அதை, அந்த உணர்வை கடைபரப்பி விட்டான் மஹா. அதில் ஜனனிக்கு ஒரு சங்கோஜம், நான் இப்படி இருப்பதால்.. ஒருவேலை என்னிடம் சொல்லவில்லையோ என்ற எண்ணம். வசதியாக, அவன் அனுப்பிய முதல் முதல் செய்தி மறந்து போனது.. டாக்டர்க்கு.

ஜனனிக்கு, எத்தனை கோவமிருந்தாலும், நீ வேண்டாம் என்றாலும்.. மஹா, தன்னை நினைக்கிறான், நேசிக்கிறான் என்பது, அவளுக்கு பிடிக்கும் போல இருந்தது. பொதுவாகவே ஒரு கண்ணியமான ஆண், நல்ல பெண்ணை நினைத்து இத்தனைநாள் தவமிருந்தான் என்பது அந்த பெண்ணின் கௌரவம்தானே.. அதை ஜனனி சற்று சிந்திக்க.. தொடங்கி இருந்தாள்.. இந்த இடைப்பட்ட நாளில். இப்போது, இவன் செய்த வேலையில் எல்லாம் தலைகீழ்… எனவே, ஜனனி, சட்டென வெளியே வந்தாள் அந்த அறையிலிருந்து.

மஹா, இப்படியே தொடர்ந்து ஒருமாதம் அவளை துரத்தி.. பேசி இருந்தால்.. அவள் சற்று செவி சாய்த்திருப்பாள்.. அவனின் கோரிக்கையை கேட்க. ஆனால், எல்லாம் கை மீறி போய்விட்டது இப்போது.  

மஹாவிற்கு, அவளிடம் எதையும் கண் பார்த்து நேரில் சொல்ல நேரம் இல்லை. அவளையே ஃபாளோ செய்து, நெருங்க.. இருவரின் படிப்பு, தொழில், நேரம்.. காலம்.. சூழல்  இப்படி எதுவும் உதவவில்லை. எனவே அவசரத்தில் நடு கூடத்தில் போட்டுடைத்தான்..  மஹா. தன்னிடம், எல்லோரும் கேட்க்கும் கேள்விக்கு ஒரே விடையாய் தன் காதலை போட்டுடைத்தான். 

மஹா, மரமாக நின்றிருந்தான். ஜனனியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. ‘நான் இவ்வளவு பெரிய கோழை’ எனதான் ஒடுங்கி போய் நின்றான். 

மஹாக்கு, ஜனனியின் நிலையை பார்க்க சங்கடமாக இருந்தது. அத்தோடு தன்னுடைய கோழைத்தனமான பேச்சு.. தனக்கே பிடிக்கவில்லை என எண்ணிக் கொண்டான் மஹா. 

ஒரு பெண்ணிற்கு, காதலன் செய்யும் மிக பெரிய கௌரவம்.. அவளிடம் நேராக ‘நான் உன்னை விரும்புகிறேன்.. நேசிக்கிறேன்’ என சொல்லுவதுதான். அதில் அவளின் முகம் கொள்ளும் மாறுதல்களை உள்வாங்க வேண்டியது, காதலில் வரம்தானே. 

ஆனால், இப்போது ஜனனிக்கு நான் செய்திருப்பது.. ஒரு வகையில் கட்டி வைத்து அடிப்பதற்கு சமமானது தானே… அவளின்  எந்த உணர்வையும் அவள் காட்டமுடியாமல் நிற்கிறாள்.. என எண்ணம் ஓட, மஹாக்கு தவிப்பாக இருந்தது. 

அதைவிட, இப்போது நான் செய்ததை எப்படி அவளிடம் விளங்க வைப்பது என்பது பெரிய சவால் எனதான் தோன்றியது மஹாவிற்கு.

தனக்கு இப்படி அப்படி என  பெண் பார்க்கும் நிகழ்வுகள் நிறுத்தப்படலாம்.. ஆனால், அவளை காதலானாக நான் நெருங்குவது இன்னும் கடினம் என மஹா அந்த நேரத்தில் உணர்ந்தான். இப்படி இவன் தன் மனம் நெருடிய விஷயங்களை எண்ணிக் கொண்டிருக்க.. ஜனனி வெளியே சென்றதை இப்போதுதான் கவனித்தான்.

மஹா, அவள் வாசல் கதவை திறக்கவும்தான், கத்தினான் “ஜானு நில்லு… ஜானு” என்றான்.

ஜனனி இன்னும் வேகமாக சென்றாள்.

மஹா, பின்னாலேயே சென்றான் “ஜானு” என்றான்.. அந்த வராண்ட முழுவதும் அது கேட்டது.

ஜனனிக்கு, கோவம் சலிப்பு எரிச்சல் என எதிர்மறை எண்ணகளோடு அவனிடமிருந்து தப்பிக்க, வேகமாக லிப்ட் நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள்..

மஹா, அந்த வராண்டாவிலேயே சத்தமாக கத்தினான்  “இப்படி ஓடி ஓடியே உனக்கு, என்னை புரியவைக்க முடியாம போயிடுது.. கொஞ்சம் நின்னு என்னான்னுதான் கேளேன்.. ஜானு” என்றான்.

ஜனனிக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. மஹா மேல் எரிச்சல்.. ஆனால், அவன் குரல் இயலாமையாக வந்தது.. அது, அவளை கொஞ்சம் நிறுத்தியது. 

ஜனனி “மஹா… நீ… எப்போதும் அப்படிதான் இல்ல, திமிர் பிடிச்சவன்தான்.. நான் நினைக்கிறது சரிதான். எப்போதும் நீ அப்படிதான்” என்றவள் மீண்டும் படியில் இறங்கி அடுத்த ப்ளோரில்.. லிப்ட்க்காக காத்திருந்து அதில் சென்றாள்.

“மழையைதானே யாசித்தோம்..

கண்ணீர் துளிகளை தந்தது யார்…

பூக்கள் தானே யாசித்தோம்…

கூலங்கற்களை எறிந்தது யார்..”

மஹா, உள்ளே வந்தான். பொத்தென சோபாவில் அமர்ந்தான். ஏதும் பேசுவதற்கு இல்லை. இவன் தன் முகத்தை கையில் தாங்கி அமர்ந்திருந்தான்.

மதிக்கு ஏதும் புரியவில்லை.. இது சரியா தப்பா சரிவருமா.. இப்படி தன் மகன் நடப்பானா என பல யோசனையில் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தார். 

தாராவின் போன் அப்போதே கட்டாகி இருந்தது. தாராக்கு, மஹா பேசியது எதுவும் கேட்கவில்லை என்றாலும்,  அவன் ஜனனி குறித்து பேசி இருக்கிறான் என்பது புரிந்துவிட்டது. எனவே, யோசிக்க தொடங்கிவிட்டாள் அவள்.

சற்று நேரம் சென்று அழைத்தாள் தாரா. அதுவரை ஏதும் பேசிக் கொள்ளவில்லை அன்னையும் மகனும். மதிக்கு, இதை எப்படி எடுப்பது என புரியவில்லை. இப்போது மகனின் போன் ஒலியில் தன்னிலைக்கு வந்தார் மதி.

மஹாவின் அலைபேசி அவள் வைத்து சென்ற இடத்தில், அப்படியே இருந்தது.. மஹா இப்போது அந்த போனை எடுத்தான். ‘தாரா’ என ஒளிர்ந்தது. மஹாக்கு அதை எடுப்பதா வேண்டாமா தெரியவில்லை எனவே சற்று நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தான்.

மதி, ஹாலுக்கு வந்தவர் அவனின் நிலை பார்த்து.. போனை வாங்கி தான் அழைப்பை ஏற்று பேசினார். மதி “ம்.. சொல்லு டி” என தொடங்கினார்.

தாரா “என்ன ம்மா ஆச்சு” என்றாள்.

மதி, போனை எடுத்துக் கொண்டே கிட்சென் சென்றவர் பேச தொடங்கினார் மெல்லியக் குரலில்.

மஹா, தன்னறைக்கு சென்றுவிட்டான்.

ஒருமணி நேரம் சென்று, மஹாவின் அறையை அன்னை, தட்டி போனை அவனிடம் நீட்டினார் “தரு டா “ என சொல்லி போனை கொடுத்தார்.

மஹா வாங்கி பேசினான்.

தாரா “என்ன டா” என்றாள். 

மஹா “க்கா.. ப்ளீஸ் எதுவும் கேட்காத…” என்றான்.

தாரா “பார்த்துக்கலாம்.. விடு..” என்றாள்.

மஹா, அமைதியாக இருந்தான். 

தாரா “பை டா.. ரெஸ்ட் எடு” என சொல்லி போனை வைத்தாள்.

அன்றைய இரவு.. எப்படி கடக்கும் என அன்னை மகன் இருவரும் பார்த்தே.. விழித்து இருந்தனர்.

ஜனனி வீடு வரவும்.. முகம் சரியில்லாமல் இருந்தது.  காயத்ரி, அதை பார்த்துவிட்டாள். ஜனனி, நேராக சத்தமில்லாமல் தன் அறைக்கு செல்ல இருந்தவளை, காயத்ரியின் குரல் இடை மறித்தது.. “ஜானு, என்ன, என்ன ஜானு” என்றாள் உள்ளே செல்லும் அவளை பார்த்து.

ஜனனி தன்னறைக்கு சென்றுவிட்டாள். பின்னாலேயே வந்தாள் காயத்ரி.. “என்ன ஜானு” என்றாள் அதட்டலாக.

ஜனனி, எதையும் மறைக்கவில்லை, என்னமோ ஒரு வருத்தம் அவளுக்கு மஹாவின் மேல்.. அவன் பொய்த்து போனது சின்ன வருத்தம் தந்தது. எனவே தன் அண்ணியிடம் எல்லாம் சொன்னாள்.. ஜனனி “காய், அங்க மஹா” என தொடங்கி.. எல்லாம் சொன்னாள் ஜனனி.

காயத்ரிக்கு அதிர்ந்து திறந்த.. விழியும் வாயும் மூடவில்லை. அப்படியே கேட்டிருந்தாள். ஜனனி “இப்படிதான் என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டாங்களா அண்ணி” என்றாள் தளர்ந்த குரலில்.

காயத்ரிக்கு, எல்லாம் புதிய செய்தி. முன்பே மஹாக்கு, இவளை பிடிக்குமா.. ‘ஐயோ, வாழ்க்கையே வீணகிவிட்டதே.. இவளுக்கு’ எனத்தான் யோசனை சென்றது. ‘ச்சு.. கொஞ்சம் எல்லாம் சரியாக நடந்திருக்க கூடாதா..’ என்ற எண்ணத்தை காயத்ரியால் தவிர்க்க முடியவில்லை..

காயத்ரி ஏதும் சொல்லாமல் “அவ்வளவுதானே ஜானு, ப்ரொபோஸ் தானே செய்தார்.. மஹாக்கு உன்னை பிடிக்கும் போல, நீ எப்படி எடுப்பன்னு தெரியாம.. தன்னோட அம்மா மூலமா சொல்லி இருக்கார்.. நல்ல விஷயம் டா.. அம்மா.. முன்னாடி, அக்கா முன்னாடி நீதான் வேணும்ன்னு சொல்லி இருக்கார்.. பேசிக்கலாம்..” என்றாள் அமைதியாக.

ஜனனிக்கு, இப்போது கொஞ்சம் மனது அமைதியானது. காயத்ரி “ரெஸ்ட் எடு.. மாமா வந்துட்டார் போல, பார்த்துட்டு வரேன்” என்றாள்.

ஜனனி “அண்ணி, அப்பாகிட்ட எதுவும் சொல்லாத” என்றாள். சரி என்பதாக தலையாட்டி சென்றாள் காயத்ரி.

இரவு உணவு.. தேஜு என நேரம் சென்றது காயத்ரிக்கு.

ஜனனிக்கு, அறைக்கே சென்று உணவை கொடுத்தாள், காயத்ரி. கார்த்திகேயன் ‘ஏன் என்னாச்சு, அவளுக்கு..’ என்றார்.  காயத்ரி “படிக்க நிறைய இருக்குன்னு.. சொன்னா’ என்றாள். இப்படியே நேரம் சென்றது. ஜனனி உறங்க முற்பட்டாள்.

காலையில் ஜனனி, மருத்துவமனை கிளம்பியதும் காயத்ரி, ஜனனியின் விஷயத்தை தன் மாமனாரிடமும்.. கணவனிடம் சொன்னாள். ஜனனி, பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், காலையில் மருத்துவமனை கிளம்பி இருந்தாள். தன்னை எதுவும் பாதிக்கவில்லை என்பதாக அவளின் முகம் இருந்தது. 

எனவே, இப்படி ஒரு செய்தியை கேட்டதும், இருவருக்கும் அதிர்ச்சி, கூடவே கொஞ்சம் சந்தோஷம்தான். ஆனால், மதி அத்தை என்ன நினைப்பார் என யோசனை. ஆக, எதுவும் தெளிவில்லா நிலையில் இருவரும் அமர்ந்தனர்.

கார்த்திகேயன் “அப்படியா ம்மா, ஜானு அதான் ஒண்ணுமே பேசலையா, இல்லையே தேஜு கூட நல்லாதானே பேசினா.. ஒண்ணுமே இந்த புள்ள சொல்ல” என்றார் யோசனையாக. அவருக்கு தந்தையாக ஆச்சர்யம்.. எப்படி தன் மகள், அமைதியாக இருந்தாள்.. ‘ஒரு அழுகை.. கோவம் கூட இல்லை என் பெண்ணிடம்’ என எண்ணம். அந்த அளவுக்காக அவளின் மனம் மறுத்து போய் விட்டது எனவும் யோசனை.

காயத்ரிதான் ஆற்றாமல் வாய்விட்டு புலம்பினாள் “அப்போவே, மஹா இத சொல்லி இருக்கலாம் ஜனனிகிட்ட.. ஜனனிக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கும்..” என்றாள். இது இரு ஆண்கள் மனதிலும் இருந்தது, என்றாலும் வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை.

ராகவ் “ப்பா, நாம ஏதாவது பேசனும்மா ப்பா..” என்றான்.

கார்த்திகேயன் “டேய்.. ஜானு என்ன சொல்றான்னு தெரியலை.. எல்லாம் குழப்பமா இருக்கு. முதலில், இதில் நாம் செய்ய ஏதுமில்லை.. வரட்டும், மஹா வீட்டில் என்ன நினைக்கிறாங்க பார்க்கலாம். நாம் அமைதியா இருப்போம்” என்றார்.

வீடு அதன்படி நின்றது.

 

Advertisement