Advertisement

மஹா, இருந்த வேலையில் இவளை மறந்தான், இல்லை, சற்று தள்ளி வைத்தான். ‘இப்போ கூப்பிட்டால் பேச முடியாது.. அப்புறம், இதோ கொஞ்ச நேரம்தான் வேலை.. அது முடிச்சிட்டு பேசிடலாம், அவளை எப்படியாவது தனியா கூட்டி போயிடனும்’ என அவனுள்ளும் ஓடிக் கொண்டிருக்க.. நேரம் சென்றதே தெரியவில்லை அவனுக்கு.

இங்கே இவளோ, நிமிடத்திற்கு நிமிடம் போன் பார்த்தே.. கடத்தினாள் நேரத்தை. சற்று ஆசுவாசமும் வந்தது ‘அவ்வளோதான் கூப்பிடல.. ப்பா’ என மாலையில்தான் கொஞ்சம் நிம்மதி வந்தது பெண்ணுக்கு. தன் வேலை முடித்து வீடு வந்தாள்.

ஜும்பா.. முடித்தாள். இன்று மதி அத்தை வீட்டிற்கு செல்லவில்லை. என்னமோ செல்லத் தோன்றவில்லை. தன் வீட்டிலேயே இருந்துக் கொண்டாள்.

தேஜு, வந்து நின்றாள்.. அவளுடன் படிக்க. குழந்தைக்கும் சொல்லிக் கொடுத்து.. தானும் எதோ படித்துக் கொண்டாள். நேரம் சென்றது, காயத்ரி கூட கேட்டாள் “என்ன ஆச்சு.. இன்னிக்கு அத்தை வீட்டுக்கு போகலையா” என்றாள்.

ஜனனி “மஹா வந்துட்டான்..” என்றாள் சாதுவானக் குரலில்.

காயத்ரி ஏதும் சொல்லவில்லை. ஜனனி உண்டு முடித்து மீண்டும் புக் எடுத்து அமர்ந்தாள். இங்கு அங்கு எண்ணம் சென்று பதினோரு மணிக்குதான் படிப்பில் கவனம் வந்தது.. படிக்க தொடங்கவும், மஹா அழைத்தான் அவளை.

ஜனனிக்கு, எடுப்பதா.. வேண்டாமா.. என யோசனை. போனை வைத்துவிட்டு அமைதியாக அதையே பார்த்துக் கொண்டே இருந்தாள்.. என்னமோ புது தயக்கம்.. ‘இவனிடம் நான் ஏன் பேசணும் என்ற எண்ணம் தாண்டி..’ ‘இவனிடம் என்ன பதில் சொல்லுவது’ என்ற யோசனை. 

நான்காவது முறை.. அவன் அழைக்கவும், போனை சைலெண்டில் வைத்து படிக்க தொடங்கினாள்.. தன் கவனத்தை முயன்று அதில் செலுத்தினாள். காது கேட்காத இடத்தில், போன் இருந்ததால்.. சற்று கவனம் படிப்பில் வந்தது.

மஹா, அங்கு அழைத்து ஓய்ந்து போய்.. தானும் வேலை செய்ய தொடங்கினான். உறங்கம் வரவில்லை. அவனிற்கு, ‘மீண்டும் அவளை விட்டு விட்டேனோ’ என எண்ணம்.. ‘கொஞ்சம் டைம் எடுத்தாலும் அவ.. தள்ளி போயிட்றா ச்சு… வேலையை விட்டுட்டு.. இவளையே பார்த்தால்தான் சரி வரும் போலவே..’ என எண்ணிக் கொண்டான் படிப்பாளன்.

மறுநாள் காலையிலேயே.. மீண்டும் ஜனனியை லிப்டில் பார்த்தான்.. நேற்றை போலவே ஒரு வாழ்த்தோடு ஆரம்பித்தான் மஹா.. “சாரி,  நேத்து, மதியம் கூப்பிட முடியலை.. கொஞ்சம் ப்ரீ ஆகிட்டு பேசலாம்ன்னு..” என்றான் தயக்கமாக.

ஜனனி “ஓ.. மதியானம் கூப்பிடுறேன் சொன்னீங்கல்ல.. நேத்து கொஞ்சம் வேலை, சாரி மறந்துட்டேன்.. என்ன, அத்தைகிட்ட பேசிட்டீங்களா” என்றாள்.

மஹா, லேசாக உதடு மடித்து, கொஞ்சமாக சிரித்துக் கொண்டான்.. ‘எல்லாம் ஞாபம் இருக்கு.. ஆனாலும் மறந்துட்டீங்க.. அத நான் நம்பனும்.. ஓ..கே… நம்பிட்டேன்’ என நினைத்துக் கொண்டவன் “இல்ல, நீ இல்லாமல் எப்படி பேச… ஹெல்ப் பன்னுவல்ல, ஈவ்னிங்.. ஒகே வா…”  என்றான்.

ஜனனி “நான் என்ன ஓகே சொல்ல.. நீங்க உங்க அம்மாகிட்ட பேசுங்க..” என்றாள்.

லிப்ட் கீழ் தளம் இறங்கவும்.. இருவரும் வெளியே நடந்தனர். மஹா ‘அவ்வளவுதானா.. எனக்கும் அவளுக்குமான நேரம் முடிந்ததா..’ எனதான் தோன்றியது மஹாக்கு. என்ன செய்தும் இருவரும் ஒரு பாண்டிங்கில் வர முடியவில்லை. மஹாக்கு கோவமாக வந்தது.. ‘சேர்ந்தார் போல நாலு வார்த்தை பேச முடியவில்லை.. ச்சு..’ என நொந்து போனான் மஹா.

இவன் வெளியூர் செல்ல.. அவள் நிற்காமல் ஓட.. என இப்படியே நாட்கள் கபடியாடியது அவர்களிடம், எந்த விடையும் சொல்லாமல். 

மீண்டும் மஹா, வெளியூர் சென்றுவிட்டு.. இன்றுதான் திரும்ப வந்திருந்தான். காலையில் அலுவலகம் சென்றுவிட்டு.. மாலையில் நேரமே வந்துவிட்டான், ரெஸ்ட் எடுக்கலாம் என.  

ஆனால், நன்றாக மாட்டிக் கொண்டான் தன் அன்னையிடம் மஹா. ஹாலில் அமர்ந்திருக்க.. மதி, ஒரே சத்தம் மீண்டும். இன்று ஹைபர் ஆகிவிட்டார். மஹாக்கு என்ன செய்துவது என தெரியவில்லை, தாராவும் “சித்திக்கு பதில் சொல்ல முடியவில்லை டா.. சும்மா ஒருதரம் பார்த்துட்டு வந்திடு.. ஜஸ்ட் பத்து நிமிஷம்.. நீ பேசிட்டு சொல்லிட்டினா போதும்.. மத்தது எல்லாம் நாங்க.. நான்..  பார்த்துக்கிறேன்.. நீ எப்போ சொல்றியோ அப்போதான் கல்யாணம், ப்ளீஸ்..” என இப்போது  பிடித்துக் கொண்டாள் போனில். எனவே தலையில் கை வைத்து அமர்ந்துக் கொண்டான் மஹா.

சரியாக அந்த நேரம்… ஜனனி வந்தாள் பிரகாசமாக.. என்ன நேரமோ.. உறவோ.. தெரியவில்லை, சரியாக அந்த நேரம் வந்தாள். மஹா வரும் அவளையே பார்த்தான் இமைக்காமல்.

மதி எப்போதும் போல.. “ வா, ஜானு… “ என்றவர் எப்போதும் போல “எல்லாம் இவனோட, கல்யாண கலாட்டாதான்.. இன்னிக்கு அவனை விடறதில்லை” என்றார் வந்தவளிடம்.

ஜனனி “நான் போயிட்டு, அப்புறம் வரேன் அத்தை” என நழுவ முயன்றாள்.

மதி “இரு டா… கத்தரிக்காய் கொஜ்த்து.. எடுத்துட்டு போ.” என உள்ளே செல்ல..

தாரா, வீடியோ காலில் இருப்பதால்.. மஹா, இயல்பாய் ஜனனியிடம் போனை கொடுத்தான். ஜனனி, என்னவென அனிச்சையாய் கண்ணால் வினவினால் மஹாவிடம்.. இயல்பாக கேட்டுவிட்டாள் புருவம் உயர்த்தி.. கண்கள் விரித்து கேட்டுவிட்டாள் பெண். 

ஆனால், மஹாக்கு, கிடைத்த ஒரே வழியாய் அந்த நேர அவளின் சைகை தெரிய.. மஹா ஷண நேரத்தில் எதோ திட்டம் போட்டான்.. மஹா, பேசு என்பதாக செய்கை செய்து.. போனை அவளிடம் கொடுத்தவன்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜனனி பேசிக் கொண்டிருந்தாள்.

மதி இப்போது.. கொஸ்த்து எடுத்து வந்தார்.. மஹா தீவிரமானக் குரலில் “ம்மா.. இங்க வாயேன்” என்றான் எதோ சேதி சொல்லும் குரலில்.

மதி “என்ன டா” என்றார் சத்தமாக ஜனனியிடம் ஒரு டப்பாவை கொடுத்துக் கொண்டே.

மஹா “எனக்கு ஒரு ஆசை.. இது ஆசையா, காதலா.. பரிதாபமா.. என்னோட வீக்னெஸ்சா தெரியலை.. என்னமோ ஒன்னு..” என எதோ உளற தொடங்கினான், ஜனனியை பார்த்துக் கொண்டே.

மதி, கொஞ்சம் சீரியஸ் ஆனார்.. “என்ன டா, என்ன மஹாம்மா, என்ன ப்பா” என்றார் பதறி போய், கண்ணில் நீர் துளிர்க்க.

ஜனனி அமைதியாகினாள்.. போனில் பேசிக் கொண்டிருந்த தாராவும் “என்ன ஜானு” என்றாள்.

ஜனனி “அத்த அழறாங்க” என்றாள்.

தாரா “ம்மா” என்றாள்.

மதி “இரு டி, உன் தம்பி என்னமோ சொல்றான்” என்றார்.

மஹா, தலை நிமிரவில்லை.

மதி “என்ன டா” என்றார், மனமெல்லாம் படபடப்பு.. அய்யோ என் பையன் யாரையோ விரும்புறான் போல.. அதான் பயப்படுறான்..’ என எண்ணிக் கொண்டே அவனை நோக்கினார்.

மஹா, எழுந்து நின்றான் “ம்மா, நான் US போனேன்னில்ல.. அ.. அப்போவே எனக்கு, அவளை பிடிக்கும் ம்மா.. ச்சு, அப்போ சொல்ல தெரியலை.. படிப்புதான் முக்கியம்ன்னு போயிட்டேன். வந்து பார்த்தா.. எல்லாம் மாறி போச்சு.. என்ன என்னமோ நடந்து போச்சு.. ஆனா, இப்பவும் அவளை எனக்கு பிடிக்குது.. ஆனா, எப்படி சொல்றதுன்னே தெரியலை..” என்றவன் தன் அன்னையின் கைகளை சேர்த்து பிடித்துக் கொண்டான். 

மீண்டும் அவனே “இப்போ, எனக்காக நீ சொல்றியா ம்மா.. அவகிட்ட.. உன் பையன் நல்லவன், அவளை நல்லா பார்த்துப்பான்னு நீ சொல்றியா ம்மா” என்றான்  கரகரப்பாக, குரலே வராமல்.. பேஸ் வாய்ஸ்சில்.. இவன் இங்கே யாசித்துக் கொண்டிருந்தான்.

மதி “யா.. யாருடா..” என்றார், பாதி யாரென புரிகிறது, ஆனாலும் அவசரத்தில் ஏதேனும் தப்பாகிவிட கூடாதே எனதான் மகனிடம் கேட்டார் மதி.

ஜனனிக்கு, எதோ புரிகிறது.. அதாவது ‘அவன் அன்னையிடம் பேசுகிறான் திருமணம் வேண்டாம்’ என எண்ணிக் கொண்டாள். அதனால், அன்னை.. மகனின்.. பேச்சு என கொஞ்சம் அசால்ட்டாக தாராக்கு, கேமரா காட்டிக் கொண்டிருந்தாள் ஜனனி.

அன்னையின் கேள்விக்கு.. மஹா, ஜன்னியையே பார்க்க.. அன்னையின் கைகள் லேசாக அழுத்தி.. அவனின் பார்வையை தன் பக்கம் திருப்பி “என்ன டா” என்றார்.

மஹா “ஜானு.. அம்மா, அவ கிட்ட சொல்லேன்.. நான் அவளை நல்லா பார்த்துப்பேன்னு சொல்லேன்… என்னை கொஞ்சம் நாம்ப சொல்லேன்..” என்றான் தளர்ந்து, சத்தமாக சொன்னான்.

ஜனனி, இந்த வார்த்தைகள் காதில் விழ.. எழுந்து நின்றாள், தன்னை அறியாமல்..

மஹா “சொல்லு ம்மா.. அவ கிட்ட சொல்லேன்” என்றான் தளர்ந்த குரலில்.

மீண்டும் அவனே ”என்னை புரியவே மாட்டேங்கிது அவளுக்கு.. ச்சு.. நெருங்கவே முடியலை அவளை.. நீ சொல்லேன்..” என்றான். அதே தளர்ந்த குரலில் தலை கோதிக் கொண்டே சொன்னான்.

மதி, ஜனனி, தாரா எல்லோரும் அப்படியே நின்றனர்.

அவளிடம் அவன் போகவே இல்லை.. என்னமோ, அவனால்.. நெருங்கவே முடியவில்லை ஜனனியை. இப்போதும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“நின்று பார்க்க நேரம் இன்றி..

சென்றுக் கொண்டே இருந்தேனே..

நிறக் வைத்தாள்…

பேச வைத்தாள்..

நெஞ்சோரம் பனி துளி…”

ஜனனிக்கு எதோ தோன்ற.. தன் போனை கீழே வைத்தவள், வாசல் நோக்கி சென்றாள். 

Advertisement