Advertisement

மரகத மழையாய் நீ!..

14

மஹா, உண்டு முடித்து.. ஜனனிக்கு, தனது மற்றொரு எண்ணிலிருந்து “தேங்க்ஸ்” என ஒரு மெசேஜ் அனுப்பினான்.

ஜனனி, பதில் ஏதும் அனுப்பவில்லை அதற்கு. அமைதியாக இருந்துக் கொண்டாள். அவனின் எண்ணையும் பிளாக் செய்யவில்லை.

மஹாக்கு, இது பழக்கம் என்பதால் அதை பெரிதாக எடுக்கவில்லை. ஆனாலும் மனது முரண்டியது ‘கேளு.. திரும்பியும் கேளு.. காபி ஷாப் போலாம் கேளு’ என்றது மனது, எப்படியாவது அவளிடம் நெருங்கிவிட மனம் முரண்டியது. ஆனால், அப்படி கேட்க என்னமோ தடுத்து அவனை. எல்லாம் சொல்லியாகிவிட்டது தேவையில்லாமல் அவளிடம்.. எனவே மனது இன்று என்னமோ செய்தது. அவள் இத்தனை நாட்களில் தன்னை திரும்பியும் பார்க்கவில்லை என்பது, மனதை என்னமோ செய்தது.

தன் அன்னை வேறு.. தொல்லை செய்துக் கொண்டிருந்தார் அவனை, அடுத்த மாதம் வந்தாள் 31 வயது முடியபோகிறது. எனவே மதி.. இந்த மாதத்தில் ஏதேனும் பெண் பார்த்து முடித்துவிடுவேன் என அவனை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போதும் அதே பேச்சுதான் பேசிக் கொண்டே பரிமாறினார் மகனுக்கு. அவனோ காலையில் அலுவலகம் செல்லும் நேரத்தில் இதுவேறு தேவையா என அன்னையை கடிந்துக் கொண்டிருந்தான்.

மதி “இரண்டு இடமும் நல்லா இருக்கு.. ஒன்னு சென்னை, இன்னொன்னு காரைக்குடி.. இன்னிக்கு போட்டோ அனுப்பிடுவாங்க.. நீ பார்த்துட்டு சொல்லு.. இந்த தடவை ஏதும் டைம் எடுக்காத.. ப்ளீஸ் மஹா. அப்பா இருந்திருந்தா.. இப்படி ஒருநிலை எனக்கு வராதுல்ல” என்றார் ஆயிரமாவது முறையாக.

மஹா “ம்ம்மா….. அழாத. அப்படி எல்லாம் இல்லை. எனக்கு இப்போதான் இங்க வேலை பிடிபடுது. இன்னமும் நான் இந்த ஜோனல் புல்லா பார்க்கல… எனக்கு இன்னும் ஆறுமாசம் வெளியூரில்தான் வேலை.. எனக்கு லீவ் எடுக்க முடியாது ம்மா.. இப்போ போய் கல்யாணம் அது இதுன்னு சொல்ற.. இன்னும் ஆறுமாசம் ம்மா.. நீ என்னை ப்ளீஸ் பண்ணு, இப்படி டென்ஷன் பண்ணாத” என்றான் நல்லவன்.

மதி “டேய்.. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.. இந்த இரண்டு வரன்தான் கடைசியா நான் பார்க்கறது. இரண்டுமே பத்து பொருத்தம் இருக்கு, அத்தோட, உங்க சித்தியோட.. ஒண்ணுவிட்ட தம்பி பொண்ணு அந்த சென்னை பொண்ணு. நல்லா படிச்சிருக்கு.. குடும்பம், நல்ல குடும்பம் ஒரே பொண்ணு.. அன்று வளைகாப்பில் பார்த்தேன் அவங்க அம்மா அப்பாவ… நல்லா பேசினாங்க… நமக்கு எல்லாவகையிலும் ஒத்து வரும். இந்த வாரத்தில் பொண்ணு பார்த்து பேசி முடிச்சி வைச்சிடுவோம்.. நீ சொல்றாமாதிரி.. மூணு மாசம் கழிச்சி கல்யாணம் வைச்சிக்கலாம்.. பொண்ணு வீட்டுகாரங்களுக்கும் டைம் வேணுமில்ல.. இதுதான் முடிவு. மனசில் வைச்சிக்க. அப்படி இல்ல, நான் தனியா போறேன். நாலு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து என்னை நான் பார்த்துக்கிறேன்.. நீ உன் இஷ்ட்டம் போல இரு..” என்றவர் மகனிற்கு பரிமாறாமல் சென்று ஹால் சோபாவில் அமர்ந்துக் கொண்டார் கோவமாக.

மஹாவின் இருபத்தி ஒன்பதாவது வயதிலிருந்து, அவனிற்கு வரன் பார்க்கிறார்கள்.. ஜோசியர்கள் சொல்படி ஒரே வருடத்தில் முடிந்திருக்க வேண்டும்.. என்னமோ, தட்டி போய்கொண்டு இருக்கிறது. அதில் கவலை வந்து ஒட்டிக் கொண்டது மதிக்கு. இப்போது மஹா இன்னும் ஆறுமாதம் என நேரம் கேட்கவும்.. பொங்கிவிட்டார் வான்மதி.

மஹா “அம்மா, உனக்கு தெரியாதா என் நிலை. நான், கேட்ட ப்ளேஸ் எனக்கு கொடுத்திருக்கு கம்பெனி, காரணம் அங்க என்னோட ப்ரோக்ராஸ்.  அதேயே இங்க நான் கொடுக்கணும்.. ப்ளீஸ், இன்னும் ஒரு வருஷம், நான் இங்க ஸ்டடி ஆகிட்டு, கல்யாணம் பண்ணலாமே..  நானும் கொஞ்சம் மூச்சு விட முடியும்..  இதெல்லாம் நீதானே புரிஞ்சிக்கணும்” என குழந்தைக்கு சொல்லுவது போல அவன் சொல்லிக் கொண்டிருந்தான், அன்னையின் அருகில் அமர்ந்து.

இதெல்லாம் மதிக்கு, கேட்டு கேட்டு.. சலித்து போகிற்று. அமைதியாக எழுந்து கிட்சென் சென்றவர், மதி “டேய், கல்யாணம் ஒரு ப்ராஜெக்ட் கிடையாது. அது பாரம் கிடையாது.. அத, முடிச்சிட்டு, இதை பார்க்கிறேன்னு சொல்ல.. அது, ஒரு.. எப்படி சொல்றது, அது ஒரு நிகழ்வு.. பிறப்பு இறப்பு மாதிரி ஒரு நிகழ்வு.. வாழ்நாள் முழுவதும் உன்னை சப்போர்ட் பண்ண இன்னொருத்தி உயிரும் உணர்வுமா வருவா.. அவளை புரிஞ்சி அவள் கூட நீ உன்னை ஷேர் செய்து வாழனும்.. அதை மனசில் வை எப்போதும்.. எப்போ பாரு.. கல்யாணத்தை என்னமோ ஒரு வேலையா நினைச்சு.. இந்த ப்ராஜெக்ட் முடியட்டும், அடுத்து இத முடிச்சிட்டு செய்துக்கிறேன்னு.. எதோ சின்ன கார் வாங்கிட்டு பெரிய கார் வாங்கறேன்னு சொல்றா மாதிரி.. ஒரு கமிட்மென்ட் மாதிரியே சொல்லாத.. அதை நிறுத்து முதலில்” என்றார் மதி.

மஹா “சரி ம்மா, சரி.. எனக்கு டைம் வேண்டும் அவ்வளோதான்” என்றான்.. சாக்ஸ் போட்டுக் கொண்டே.

மதி “நான் தனியா போய்கிறேன்” என்றார் கோவமாக.

மஹா “அம்மா..” என்றான். மதி பேசவேயில்லை

மஹா தப்பித்தால் போதுமென “பை ம்மா, ஈவ்னிங் டிட்டையிலா பேசலாம்..” என்றவன், கிளம்பிவிட்டான்.

இரவு வந்தவன், காலையில் மீண்டும், ஹைதராபாத் கிளம்பி சென்றான்.

$@$@$@$@$@$$@@$@$

ஜனனிக்கு, விவாகரத்து ஆன செய்தி சொந்தங்களிடம் பரவ தொடங்கியது. ஓரிரு மாதங்கள் அமைதியாக இருந்த சொந்தம், இப்போது கார்த்திகேயனை துரத்த தொடங்கியது.

மிகவும் அக்கறையாக சொந்தங்கள் கேட்டது  ‘கார்த்திகேயா, என்னப்பா பண்ண போற புள்ளைய’ என்றது. இது அக்கறை எனவே கார்த்திகேயன் முதலில் நினைத்தார்.

அவரும் ‘அவள் படிக்க ஆசைப்படறா.. அதைதான் இப்போ செய்ய போறேன்..’ என்றுவிட்டார். 

ஆனால், சொந்தம் ‘படிக்கட்டும் ப்பா.. ஆனா, காலாகாலத்தில் ஒரு கல்யாணத்த செய்திடுப்பா.. இல்ல, பெண்ணு மனசு மாறிடும்.. வயசு அதிகமாகிடும்.. நாலையும் யோசி. படிப்பு இப்போவெல்லாம், எப்போ வேணா படிக்கலாம்.. ஏற்கனவே நம்ம புள்ளைக்கு வாழ்க்கை சரியில்லை.. இப்போவும் நேரம் கடத்தாத’ என்றது.

கார்த்திகேயன், குழம்பி போனார். அத்தோட.. பல நல்ல வரன்களையும் ஜனனிக்காக சொன்னது சொந்தம். சில வயதான.. குழந்தைகளோடு இருக்கும் கணவன் வரன்.. சில விவாகரத்தான வரன்.. என ஜனனியை பெண் கேட்டனர் தெரிந்தவர்கள். அதிலெல்லாம் தந்தையான கார்த்திகேயனுக்கு விருப்பமில்லை. ஆனால், சில சொந்தங்கள் நடைமுறையை எடுத்து சொல்லியது.

தந்தை தளர்ந்து போனார். தன் மகன் ராகவ்விடம் இதை சொல்ல.. ராகவ் யோசித்தான்.. ‘எல்லாம் சரிதான் அப்பா… ஆனா, நம்ம சூழ்நிலை வேற. அவளும் மனுஷிதானே.. இன்னொரு முறை.. அவளை, என்னால காயப்படுத்த முடியாது. இதை இப்படியே விடுங்க ப்பா… எ.. எப்போவாது..  அவள் மனதில் ஏதேனும் மாற்றம் வரும்.. அப்போ பிடிச்சிக்கலாம். இல்லை, வரலைன்னாலும் பரவாயில்லை.. நாங்க அவ கூடவே இருப்போம்.. இப்போ என்னால் எதுவும் கேட்க முடியாது.. நீங்களும் கேட்காதீங்க..’ என்றான் ஒரே முடிவாக.

கார்த்திகேயனுக்கு இதுவும் சரி என பட்டாலும்.. ஒருபக்கம் சொந்தம் சொல்லும் எல்லாம் உணமையாகி விடுமோ.. என பயம்தான் இறுதியில் மனதில் நின்றது. ஆனாலும் மகனின் பேச்சை கேட்டு அமைதியாக இருந்தார். இந்த விஷையத்தை அண்ணனும், தந்தையும் ஜனனியிடம் கொண்டு செல்லவே இல்லை.

ஜனனி, வேலை.. படிப்பு.. என தன்னை பார்த்துக் கொண்டாள். மேற்படிப்பிற்கான என்டரன்ஸ் எக்ஸாம்மில் கவனம் செலுத்தினாள்.

ஜனனி, மதி அத்தையோடு தன் உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டாள். இப்போவெல்லாம் மதி அத்தை வீட்டிற்கு ஜனனி அடிக்கடி வந்து சென்றாள். மஹா அங்கு இருப்பதில்லையே, அதனால் அவளின் நடமாட்டம் அங்கு அதிகமாகியது. 

மாலையில் தன் வேலை முடித்து வருபவள்.. குளித்து புக்ஸ் எடுத்துக் கொண்டு நேரே பத்தாவது மாடியில் இறங்கிவிடுவாள். மதியும் ஆசையாக வரவேற்பார். எப்போதும் அமைதி.. தேவையானதை செய்து தந்து பேசி, அரட்டையடிக்க மதி அத்தை, கூடவே பாடல்கள்.. என அவள் அமர்ந்து தன் வேலையை பார்ப்பாள். பின் ஜும்பா.. முடித்து தன் வீட்டிற்றுச் செல்லுவாள்.

அன்றும் அப்படிதான் ஜனனி ஒரு பிங்க் வண்ண செம்பருத்தி செடியோடு, தன் மதி அத்தையின் வீட்டை அடைந்தாள். மதி நீண்டநாளாக சொல்லுவது ‘சாமிக்கு வைக்க பூ வேண்டும்.. இந்த சங்கு பூவை மஹா பறிக்கவே கூடாதுன்னு சொல்றான்’ என ஜனனியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அதை இன்று நிறைவேற்றினாள் ஜானு.

மதி அதை பார்த்தும் முகம் விகாசிக்க சிரித்தார்.. “அப்பாடா.. கொண்டு வந்துட்டியா, சூப்பர் டா தங்கம்” என்றார்.

ஜனனி “அத்தை இதை அதிகமா வெயில் படாத இடத்தில் வைங்க கொஞ்சநாள்..” என சொல்லி நேரே பால்கனிக்கு எடுத்து சென்று.. இடம் பார்த்து அதை வைத்தாள்.

மதி முந்திரி பக்கோடா எடுத்து வந்தார்.. ஜனனி அதை பார்த்துவிட்டு “அத்த, முந்திரி பக்கோடாவா.. நான் பிட்நெஸ்க்காக ஜும்பா போறேன், நாலுபேருக்கு இதெல்லாம் ஹை-கொலஸ்ட்ரால் என சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீங்க எனக்கு கொடுக்கிறீங்க. எனக்கு இதெல்லாம் வேண்டாம் ப்பா, ஒரு கப் கிரீன் டீ கொடுங்க.. போதும்” என்றாள், அவரை அதட்டியும் அதட்டாமல்.

மதி “போடி, என்னமோதான் பிகு பண்ற, எத்தனை தடவை அப்போவெல்லாம் இத கேட்ப நீயி, இப்போ என்னமோ டயட், பிட்நெஸ்ன்னு கதை சொல்ற..” என சொல்லிக் கொண்டே தன் வாயில் இரண்டு போட்டுக் கொண்டார்.

ஜனனி “போதும் போதும் அத்த… உங்க வயதுக்கு நீங்க இதெல்லாம் சாப்பிட கூடாது. இவளோ சாப்பிட்டாலே.. நாலு கிலோமீட்டர் நடக்கணும்.. காலையில் தினமும் வாக் போங்க இனிமேல்.. அப்புறம் படபடன்னு வருது.. பாருடின்னு என்கிட்ட கேட்ககூடாது சொல்லிட்டேன்.. முந்திரி பக்கோடா, க்கீ பொங்கல் இதெல்லாம் தொடாதீங்க சொல்லிட்டேன்” என்றாள்.

மதி “போதும் டி.. உன் டாக்டர் தம்பட்டம்.. இததான் நாங்க காலம்காலமா சாப்பிடறோம்.. வந்துட்டா இப்போ. போவியா.. எல்லாம் அனுபவிச்சுட்டு போயிடனும் டி, வாயை கட்டி.. என்ன காண போறோம்” என்றார் கிட்சென் சென்றுக் கொண்டே.

ஜனனி, ஒன்றும் சொல்லாமல் புக் எடுத்து அமர்ந்தாள் அந்த பால்கனியில். குஷன் போட்டு அமர்ந்துக் கொண்டாள். மஹாவின் லாப் வைக்கும் டெஸ்க் இப்போது ஜனனிக்கு கொடுத்திருந்தார் மதி ‘அவன்தான் ஊரில் இல்லையே நீ யூஸ் பண்ணு.. வந்தா, எடுத்துக்கட்டும்’ என்றிருந்தார்.

மதி இவளுக்கு டீயும் பிஸ்கட்டும் கொடுத்து, சீரியல் பார்க்க அமர்ந்துக் கொண்டார். 

இன்று ஜனனி மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் மதி “ஜானும்மா, சப்பாத்தி குருமா, சாதம் பூண்டு ரசமும் வைச்சிருக்கேன்.. இங்கே சாப்பிடேன்.. மஹா வந்திடுவான் இப்போ.. சாப்பிட்டு போடா, இன்னிக்கு கிளாஸ் இல்லையில்ல” என்றார்.

ஜனனி “அத்த.. பூண்டு ரசம்.. என்ன மகன் வரான்னு ஸ்பெஷல்லா” என்றாள்.

மதி “ஆமாம், நானே எல்லாம் செய்யணும், ஒரு கல்யாணம் செய்துக்கடான்னு சொன்னா, எங்கையாவது போயிடறான்.. என்னமோ போ… எப்போ முருகன் வழி விடுவானோ…” என்றபடியே சாதம் வைத்தார் குக்கரில்.

மஹா, சற்று நேரத்தில் வந்தான். வீடு திறந்திருந்தது. மஹா “ம்மா..” என சொல்லியபடியே உள்ளே வந்தான். 

மதி “தண்ணி வேணுமாடா…” என்றார்.

மஹா “வேண்டாம்” என்றான்.

மதி “என்ன டா, வெளுத்து போயிருக்க..” என்றார்.

மஹா “ம்மா…” என சலித்தபடி, தன் கால்களை டீபாய்மேல் வைத்துக் கொண்டான்.. அவனே “ம்மா, காபி” என்றான்.

மதி “ஜானு, இவனுக்கு என்ன அட்வைஸ்… ஒருநாளைக்கு, நாற்பத்தி எட்டு  காபி குடிப்பான்.. ஒருமணி நேரத்துக்கு இரண்டு கணக்கு.. எவ்வளோ நேரம் முழிச்சிருக்கானோ அவ்வளோ காபி குடிக்கிறான்..” என்றார் பால்கனியில் அமர்ந்திருந்த ஜனனியை பார்த்து.

மஹா, மேல் வைத்திருந்த காலை கீழே வைத்து சற்று விழித்தான் ‘எங்க டா அவ’ என.

ஜனனி “அத்த, உங்களை எல்லாம் திருத்தவே முடியாது..” என்றாள் சத்தமாக.

மஹா, இப்போதுதான் அவளை பார்த்தான், பார்த்தவன் “ஹாய்” என்றான் இயல்பாய்.

ஜனனி “ஹாய்.. “ என்றபடி எதோ அவளின் வீடு போல, மீண்டும் தன் வேலையை பார்த்தாள், அதான், பென்சிலால் தன் தலையை குத்திக் கொண்டாள்.

மஹா, அவள் பக்கம் பார்ப்பதும், பார்வையை திருப்புவதுமாக இருந்தான். அழகான இங்கு ஃப்ளூ போலோ டீ ஷர்ட்… சாண்டல் நிற ஜீன்.. என இப்போதுதான் குளித்து வந்தவன் போல இருந்தான் பயண களைப்பு.. அசதி.. எல்லாம் எதுவும் இல்லை.. இவளை பார்த்ததிலிருந்து.. களையாக மின்னினான். 

இப்போது அன்னை காபி தரவும், குடித்தான்.

அவளின் சுருள் முடி.. காற்றில் உலவிக் கொண்டிருந்தது. அதை அவளும் பணானா க்ளிப் கொண்டு அடக்கி இருந்தாலும்.. கேட்பேனா என காற்றில் அசைய.. மஹா எழுந்து வந்தான்.. பால்கனிக்கு. அங்கிருந்த மறைப்பு பாயை இழுத்து விட்டான்.. அவளின் பின்புறம் இருந்த இன்னொரு லைட்டை ஆன் செய்தான். அதில் பிரகாசமாக தெரிந்தாள் ஜனனி.

ஜனனி, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அங்கேயே அந்த திட்டின் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டான். மனதில் என்ன ஓடுகிறது.. அதை அவனால் கற்பனை கூட செய்ய முடியாது. அப்படி, அவனின் எதிர்காலத்தை நிரப்பிக் கொண்டிருந்தாள், ஜானு.

ஜனனிக்கு, முன்போல அவனை அலட்சியப்படுத்தான் நினைகிறாள். ஆனால், அவனின் மனம் தெரிந்தபின், அத்தையின் புலம்பல் தெரிந்தபின்.. அவனிடம் கொஞ்சம் கவனம் வந்திருந்தது. அவனிடம் எப்போவாது பேச வேண்டும், என நினைத்திருந்தாள். 

எனவே, அவனின் குறுகுறு பார்வை என்னமோ செய்ய.. ஜனனி “என்ன, நான் படிக்கவா.. வீட்டுக்கு போகவா…” என்றாள் சட்டமாக.

மஹா “நான் என்ன பண்ணேன்.” என்றான் சுவாரசியமாக. அவள் பேசுகிறாள்.. என் சிட்டிக்கு உயிர் வந்துவிட்டது என்ற நிலை அவனுக்கு. எதேனோ ஒரு எண்ணம்.. அவனுள்.

ஜனனி “ம்.. நீங்க ஒன்னும் பண்ணல…” என்றாள்.

மஹா, அமைதியாக இருந்தான், இன்னமும் அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டே இருந்தான். அவளும் அப்படியே இருந்தாள்.

ஜனனி “நான் ஒன்னு சொல்றேன்.. என்னை தப்பா நினைக்காதீங்க..” என்றாள் தலையை குனிந்துக் கொண்டே.

மஹா ஆர்வ்மானக் குரலில் “ம்.. அதிசையம்தான், நீ என்கூட எல்லாம் பேசுவியா” என்றான்.

ஜனனி “ச்சு, பேச்சு மாத்தாதீங்க.. மதி அத்தை பாவம்” என்றாள்.

மஹா “அப்போ நான்” என்றான். எப்படியாவது அவளிடம் என்னை நேரில் சொல்லி விடமாட்டேனா என மனம் அதிர்ந்தது.

ஜனனி “உங்க அம்மா உங்களுக்கு முக்கியமா? இல்லையா?” என்றாள் அவனை நிமிர்ந்து, அதட்டலாக பார்த்து கொண்டு.

என்ன சொல்லுவான் மஹா.. இவள் எப்படியாவது பேசட்டும் என நின்றான் மரமாக. அவளின் உடல்மொழியோ, கண்ணோ அவனுக்கு சாதகமாக இல்லை, அதை அவனால் உணர முடிகிறது. அதனால், அவளின் பேச்சை இவனால் செவிமடுக்க முடியும் என தோன்றவில்லை.. ஆனாலும், இப்படியாவது அவள் தன்னிடம் பேசுகிறாளே எனதான் தோன்றியது இந்த நொடி.. மஹாக்கு.

ஜனனி “அத்த, திரும்பியும் ஸ்ட்ரெஸ் ஆகறாங்க. தனியா பீல் பண்றாங்க.. அதான், நான் இங்க வரேன் போறேன்.. நீங்க இத.. எப்படியும் எடுத்துக்காதீங்க. இப்படி முகத்தை எப்படியும் வைச்சிகிட்டு நிக்காதீங்க..

திருப்பியும் அவங்களை, புலம்ப விட்டுடாதீங்க. அவங்க உங்க கல்யாணத்தை  நினைச்சி கவலைபடறாங்க.. சீக்கிரமா அதை செய்துக்கோங்க.. சும்மா, இந்த சினிமால்ல, வரமாதிரி.. மெசேஜ் அனுப்பிகிட்டு.. சோகமா, தூரமா நின்னுகிட்டு இருக்காதீங்க. நான் வேற.. எனக்கு எப்போதும் நீங்க.. உங்களை நான் நினைச்சதில்ல.. ப்ளீஸ்.. உங்க ப்ளோல நீங்க போங்க.. யாரையும் நீங்க தூக்கி சுமக்க வேண்டாம்.. அதுக்கு எந்த அவசியமும் இல்லை..” என்றாள். எல்லாம் எதோ முன்பே மனபாடம் செய்து வைத்திருந்திருப்பாள் போல.. கடகடவென மென்மையாக, அதிராமல், முகம் மாறாமல் சொன்னாள் பெண்.

மஹா இப்போது என்ன சொல்லுவது என தெரியாமல் ஹாலில் சென்று அமர்ந்துக் கொண்டான்.. ‘புரியாது டி உனக்கு’ எந்தன் தோன்றியது அவனுக்கு.

“உள்ளமே உள்ளமே உள்ளே.. 

உன்னை காண வந்தேனே..

உண்டாகிராய்.. துண்டாகிராய்..

உன்னால் காயம் கொண்டேனே…

காயத்தை நேசிக்கிறேன்..

என்ன சொல்ல நானும் இனி…” 

 

Advertisement