Advertisement

மறுநாள் எப்போதும் போல லேஸியாக கடந்துக் கொண்டிருந்தது.. 

இன்று ஜனனியின் சமையல். தானே சமைப்பதாக சொல்லி, காயத்ரியை வரவேண்டாம்.. ‘டேக் ரெஸ்ட்’ என பெருந்தன்மையாக சொல்லிவிட்டாள்.

தன் தந்தையை ஹெல்பிற்கு வைத்துக் கொண்டு.. காலையில் வெற்றிகரமாக பூரி மசால் செய்தாகிவிட்டது. மதியம் இவள் பிரியாணி என சொல்ல.. ராகவ் ‘வேண்டாம்.. உன் பிரியாணிக்கு, சாம்பார் சாதம் பெட்டெர்.. ப்ளீஸ், வெஜ் செய்திடு..’  என்று விட்டான்.  

இவளுக்கு ‘அப்பாடா’ என்றானது. கண்டிப்பாக தன் பிரியாணி எப்படி இருக்கும் என தெரியுமே அவளுக்கும். எனவே, அமைதியாக எதோ யூடிப் பார்த்து செய்ய தொடங்கினாள்.

சமையல் முடிந்து, ஒரு குளியல் போட்டு.. அமர்ந்தாள். 

ராகவ் உறக்கத்தில் இருந்தான். காயத்ரியும் அப்படியே. தேஜு தாத்தா இருவரும்.. எதோ பேசி, வரைந்துக் கொண்டிருந்தனர்.

தேஜுக்கு சாதம் பிசைந்து எடுத்து வந்தாள் ஜனனி. தேஜு “தாத்தா.. ஊட்டுங்க” என்றாள். 

ராகவ், எழுந்து வந்தான்.. “வா ஜானு சாப்பிடலாம்” என்றான்.

ஜனனி “காயத்ரி..” என்றாள்.

ராகவ் “அவ எழுந்துகல்ல.. எனக்கு பசிக்குது.. வா” என்றான்.

ஜனனி அண்ணனுக்கு பரிமாறிவிட்டு தான் உண்டு.. தந்தைக்கும் பரிமாறினாள். கார்த்திகேயன் உண்டு உள்ளே சென்றார்.

தேஜு மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தாள், உறங்கமாட்டேன் என. ஜனனி அங்கேயே சோபாவில் படுத்துக் கொண்டாள், குழந்தைக்கு துணையாக.

மாலையில்தான் காயத்ரி எழுந்து, குளித்து வந்தாள். தான் உண்டு, எல்லோருக்கும் காபி கலந்துக் கொடுத்தாள்.

மாலையில் தேஜுவும், ஜனனியும் மதி அத்தை வீட்டிற்கு சென்றனர்.

தேஜு “பாட்டி, அத்தைக்கு மட்டும் டிபன் கொடுத்தீங்க.. எனக்கு” என்றாள். நேற்று நடந்ததை சரியாக நினைவு வைத்துக் கொண்டு.

மதி சிரித்துக் கொண்டே.. “இன்னிக்கு ஸ்வீட் அடைடா செல்லம்.. உனக்கும் சேர்த்துதான் செய்திட்டு இருக்கேன்.. நானே எடுத்துட்டு மேலே வரலாம்ன்னு நினைச்சேன்..” என்றார்.

குழந்தைக்கு ஒரு சின்ன தட்டி.. போலி வைத்து கொடுத்தார். தேஜு அதை வாங்கிக் கொண்டே “மஹா, அங்கிள் எங்க” என்றாள்.

மதி “அவன் தானே.. காலையிலேயே வந்துட்டான்.. கழுத்து வலின்னு எந்திரிக்கவே இல்லை.. ச்சு, தூங்கிட்டே இருங்கான்.. சோம்பேறி” என்றார்.

ஜனனிக்கு, அனிச்சையாய் சிரிப்பு வந்தது அவனை திட்டவும்.. கொஞ்சம் கொஞ்சம் பழைய ஜனனி வருகிறாள் இப்போது. எனவே சிரித்துக் கொண்டாள்.

மது “ஜானு, ஏதாவது மாத்திரை இருக்கடா” என்றார்.

தேஜு “எங்க அப்பாக்கு, அத்த இப்படி இப்படி பண்ணுவா சரியாகிடும்” என தன் தலையை தன் கையால் இந்த பக்கமும் அந்தபக்கமும் திருப்பி சொன்னது குழந்தை.

மதி, ஜனனியை பார்த்தார். 

ஜனனி “அது அண்ணாக்கு.. லாப் பார்த்து பார்த்து.. அதான், நான் சும்மா..” என்றாள்.

மதி “ஏதாவது மாத்திரை வைச்சிருக்கியா டா..” என்றார்.

ஜனனி “தெரியலையே அத்த.. பார்க்கணும்” என பேசிக் கொண்டிருந்தாள்.

அங்கே தன் அறையின் உள்ளே, மஹாக்கு எதோ பேச்சு சத்தம் விடாமல்  கேட்டுக் கொண்டிருந்தது.. இருந்தும், உறக்கத்தை விட முடியாமல்.. வருந்தி வருந்தி உறங்க முயன்றான். 

ஒன்று.. இரண்டு…. நான்கு… ஐந்தாவது நொடியில்… எதோ சத்தத்தில்  ஜானுவின் சாயல் தெரிந்தது போல.. சட்டென எழுந்து அமர்ந்தான். இன்னும் கேட்க.. குழந்தையின் குரல் கேட்டது. பதறி எழுந்தான் மஹா.

‘என்ன, இங்கே.. அவளா… அவள்தானா..’ என தோன்ற.. எப்படி வெளியே சென்று பார்ப்பது.. என யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அத்தோடு.. இன்னும் உறங்கேன் என கழுத்தும் தோளும் கெஞ்சியது அவனிடம். 

ஆனாலும், இன்பதேனாய்.. அவளின் குரல் தொடர்ந்து கேட்கவும்.. எழுந்து குளிக்க சென்றான். அழுக்காக அவள்முன் நிற்க மனமில்லை அவனுக்கு.

பத்து நிமிடத்தில் அவசர அவசரமாக ஒரு ஷாட்ஸ்.. டி-ஷர்ட் அணிந்து வந்தான் தன்னறையிலிருந்து வெளியே. 

அவளின் பேச்சுக் குரல் மெல்லிசையாய் அவனுள் நுழைந்தது. ஹாலுக்கும், கிட்செனுக்கும் இடைப்பட்ட டைனிங் ஹாலில்.. அந்த சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டு.. தன் அன்னையிடம் பேசியபடியே.. எதோ உண்டுக் கொண்டிருந்தாள், ஜானு. உண்மையாகவே அவள்தான்.

முகம் தெரியாத விரித்துவிட்ட ஃபிஸிஹேர்… சுருள் சுருளாய்.. நெளிந்து கிடக்க.. லாங் சுடி டாப்.. ஒரு ஜெக்கின்ஸ்.. அணிந்து, அமர்க்களமாக தன் பேச்சால் அவனின் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.. ஜனனி.

லேசாக கழுத்தை சாய்த்தார் போல வைத்துக் கொண்டு,  சத்தமில்லாமல் வந்தான் கிட்செனுக்கு.

மதி  பார்த்துவிட்டு “இப்போ, எப்படிடா இருக்கு” என்றார்.

மஹா “ச்சு, அப்படியேதான் இருக்கு.. பசிக்குது” என்றான், மெல்லியக் குரலில். ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டான். அவளின் எதிரே இப்படி எதோ போல இருப்பது சங்கடமாக இருந்தது. ஆனாலும், அவள் தன் வீட்டில் இருக்கையில்.. அதை தன் மனதில் நிரப்பிக் கொள்ளாமால் போனால்.. அது பாவம் அல்லவா.. சில கனங்களை தவறவிட்டு விட்டேன் என எத்தனை நாட்கள் வாடியிருப்பான். அதனால், வலி, சங்கடம் என எதையும் பொருட்படுத்தாமல்.. வந்து பார்த்தான் அவளை.

மதி “இப்போதான் சொல்லிட்டு இருந்தேன்.. ஏதாவது மாத்திரை இருக்கான்னு கேட்டுட்டிருந்தேன்.” என்றார்.

மஹா, அவளையே பார்த்தான்.

ஜனனிக்கு, அந்த பார்வையை பார்க்க பாவமாக இருந்தது.. வலி அவனின் கண்ணில் தெரிந்தது. கழுத்தும் திருப்ப முடியாமல் இருந்தது, அது அவனின் உடல்மொழியில் தெரிந்தது. அது அவளை என்னமோ செய்ய..  அவனை பார்ப்பதை லேசாக தவிர்த்துவிட்டு “சரி அத்தை நான் கிளம்பரேன்” என்றாள் அமைதியானக் குரலில்.

மதி,  மஹாவை பார்த்ததும்.. மதியம் சமைத்ததை அவசரமாக சூடு செய்துக் கொண்டிருந்தார்.

தேஜு இப்போது “பாட்டி சூப்பர்” என உள்ளே வந்தது.

மஹாவை பார்த்து “ஹாய் அங்கிள்.. “ என்றாள். ஜனனி குழந்தைக்கு கை கழுவி விட்டு, தாங்கள் உண்ட ப்ளேட்சை கழுவிக் கொண்டிருந்தாள்.

மஹாவும் தேஜுவும் எதோ பேசும் சத்தம் கேட்டது. 

ஜனனி “அத்தை பை, அப்புறம் மேலே வாங்க..” என்றவள் அவசரமாக வாசல் நோக்கி நகர்ந்தாள்.

மஹாவின், பார்வை அவளையே தொடர்ந்தது. அவள் சோபாவை கடக்கும் முன் மஹா “டாக்டர், போன தடவை.. உன்கிட்ட பார்க்க வந்தப்ப.. உன் பிஸியோ டாக்டர் எதோ போர்முல சொன்னார்.. உனக்கு தெரியாதா..” என்றான்.

மதியும் “அப்படியா டா, ஜானுகிட்டதான் பார்த்தியா… பாரு ஜானு, ஏதாவது இப்போதைக்கு செய்.. நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகட்டும்” என்றார்.

ஜனனியால் மறுக்க முடியவில்லை.. அவனை பார்க்கவும் பாவமாக இருந்தது. ஜனனி “அது அத்த..” என இழுக்க..

மதி “என்ன ஜானு.. என்ன வேணும் எண்ணை ஏதாவது வேணுமா” என்றார்.

ஜனனிக்கு ஒன்றும் சொல்ல முடியாத நிலை.. “ஹாட் வாட்டர் பாக் இருக்கா அத்த.. ரெடி பண்ணுங்க” என்றாள் ஒரு பெருமூச்சு எடுத்து விட்டுக் கொண்டு. 

மதி கிட்சென் சென்றார்.

ஜனனி “கீழ உட்காருங்க” என்றாள் ஏதுமில்லா குரலில்..

அவன் கீழே அமர்ந்தான். ஜனனி, அவனின் பின் கழுத்தில்.. தெரியும்   முட்டியை, தன் விரல்களால் இந்தபக்கமும் அந்த பக்கமும் சுற்றினாள் அழுத்தமாக. பின் இரு தோள்பட்டை சதையை நன்றாக பிடித்து அழுத்தி.. முப்பது கவுன்ட் எண்ணி.. அழுத்தி இழுக்க.. மஹா வலியில் “ஹேய்..” என்றான். பின் கொஞ்சம் கொஞ்சமாக.. விடுவித்தாள். இதே போல நான்குமுறை செய்ய.. மஹாவின் கழுத்து சற்று திரும்பியது. பின் நடு முதுகில் ஒரு தட்டு தட்டி.. அவனை மேலும் கீழும் பார்க்க செய்து.. கழுத்தை இடவலமாக படக்கென் இழுக்க.. மஹாக்கு வலித்தாலும்.. அவளின் உறுதியில்.. இரண்டு முறை பட் பட்டென சத்தம் வந்தது.

மஹா.. அப்படியே கீழே படுத்துக் கொண்டான். கண்ணில் லேசாக கண்ணீர் தளும்பி நின்றது. 

ஜனனி “அப்படியே.. கழுத்தை திருப்புங்க.. இந்தபக்கமும், அந்த பக்கமும்..” என்றாள்.

மதி ஹோட்பாக் எடுத்து வந்தார். மஹா எழுந்து அமர்ந்தான்.

ஜனனி “பத்துநிமிஷம் இதை ஷோல்டரில் வைச்சிக்கோங்க..” என்றாள், சேரில் அமர்ந்துக் கொண்டு.

மதி, அப்படியே செய்தார். மகனின் முதுகில்.. மென்மையாக ஒத்தடம் கொடுத்தார் வெந்நீரால்.

வலி போன திக்கு தெரியவில்லை.. ஆனால், அதன் அழுத்தம் இருந்தது அவனிடம். அதைவிட மனம் போன வழி.. சுகமாக இருந்தது இப்போது அவனுள்.

“உயிரே என் உயிரே.. 

என்னமோ நடக்குதடி..

அடடா.. இந்த நொடி.. 

வாழ்வில் இனிக்கிதடி..

ஒருநிமிடம் ஒருநிமிடம்..

என்னை நீ பிரியாதே…”

 

Advertisement