Advertisement

மாமனார் “ம்.. ஒண்ணுமில்ல டா, இத அவன் சொல்லமாட்டான். நம்ம வீட்டு பெண் நீ.. அதனால் நானே சொல்றேன். காலேஜ்ஜில் ஒரு லவ். அந்த பாழா போன காதல்தான் எல்லாத்துக்கும் காரணம். 

ம்.. அந்த பெண் இவனை பிடிக்கலைன்னு சொல்லிடுச்சி போல.. அதை தாங்க முடியலை இவனால்.. குழந்தை மனசும்மா… அப்போ, கோவத்தில் காரேடுத்துட்டுப் போய் ஒரு அக்சிடென்ட்.. கொஞ்ச நாள் எந்த நினைவும் இல்லாமல் இருந்தான்.” என கண்ணை துடைத்துக் கொண்டார். 

மீண்டும் அவரே “அதான் வசந்த் இப்படி ஒடுங்கி போயிட்டான். உனக்கு புரியாதது இல்ல, யாராவது ஏதாவது சொல்லுவாங்க குழப்பிக்காம இரு.. இங்க என்ன குறைன்னாலும் சொல்லு.. அவன் இப்படி என்றாவது செய்வான். மற்றபடி வெளியேவே போகமாட்டான்.. உன்னை தொந்திரவும் செய்யமாட்டான்.. நீ படி, ப்ரெக்ட்டீஸ் பண்ணு.. உன் விருப்பம்தான்.. எல்லாம். 

இதெல்லாம் பெருசு பண்ணாத… ஒரு இரண்டு மூணு மாசம் உன்னை, பழக்கிட்டா, தானே சரியாகிப்பான் அவன்…” என்றார் நிதானமானக் குரலில் ஒன்றுமில்லையே என்ற பாவனையில்.

ஜனனிக்கு, இப்போது வேலையாட்கள் சொன்னது பொய்யாக தெரிந்தது. தயங்கினாலும் தலையசைத்தாள். என் குடும்பம் இது,  எதோ ஆக்ஸிடன்ட்.. நாம் பார்த்துக்கலாம்.. என தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.

அடுத்த ஒருவாரம் அவளின் மாமியார் இங்கேயே இருந்தார். இருவரும் பேசி வெளியே சென்று வந்தனர். வசந்த் எங்கும் வரவில்லை.

அடுத்த வாரம் எப்போதும் போல மாமியார் ஊருக்கு சென்றுவிட்டார். ஜனனிக்கு இப்போது ஓரளவு பயமெல்லாம் போய் இருந்தது. தனக்கு தெரிந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டாள். அவர், ‘உன் கணவரின் மெடிக்கல் ரிபோர்ட் அனுப்பு, பார்க்கிறேன்’ என்றார்.

ஜனனிக்கு, இப்போதுதான் அதன் நினைவு வர.. ஒரு அக்கறையில் இன்று கணவனுடம் பேசிவிட வேண்டும் என எண்ணி.. காலையில் அவனுக்கு உணவு எடுத்துக் கொண்டு மேலே வந்தாள்.

வசந்த், மேற்சட்டை இல்லாமல் ஒரு ஷாட்ஸ் அணிந்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இந்த நாட்களில் இந்த காட்சி அவளுக்கு பழக்கமானதுதான்.

உணவு எடுந்து வந்த ப்ளேட்டை அவனின் முன் நீட்டினாள். நிமிர்ந்துக் கூட பார்க்காமல் “அங்க வை” என்றான்.

இவள் தயங்கியபடியே நின்றாள். நீண்ட நொடிகள் சென்று “என்ன” என்றான், நிமிர்ந்து, ஒரு மார்க்கமாக அவளை பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவனின் பார்வையில், தயங்கினாலும்.. தன் கணவனின் உடல்நலன் என எண்ணி “ஏங்க…உங்க ரிபோர்ட் எல்லாம் எங்க இருக்கு…” என்றாள்.. அவனின் கப்போர்ட் நோக்கி சென்றுக் கொண்டே.

வசந்த் பதட்டமானான்.. “என்ன… எந்த ரிபோர்ட்…” என்றான் தன் கையிலிருந்த தட்டை டேபிள் மேலே வைத்து விட்டு.. அந்த தட்டை வைப்பதற்குள், அவனின் கைகள் தன்போல உதற தொடங்கியது..

ஜனனிக்கு ‘என்னாச்சு..’ என தோன்ற..

வசந்த்.. எதையோ தேடினான்.. கைகள், உதறியதில்.. மனது பதட்டத்தில் தண்ணீர் தெரியவில்லை. எதையோ எடுத்தான்.. அவனின் பர்ஸ் அது.. கீழே விழுந்தது. அதில் ஒரு பெண்ணின் போட்டோ.. அது அவளின் முகம் இல்லை. அதை கண்டுக் கொண்டாள். அந்த வேலையாட்கள் சொன்னது உண்மையோ.. என தோன்றியது ஜனனிக்கு 

இப்போது எழுந்துக் கொண்டான்.. வசந்த் “வெளிய போ..” என்றான் என்னமோ ஒரு நிலையில்லை அவன்.. என புரிந்தது. மீண்டும் எதையோ தேடினான்..

ஜனனி, அவன் தண்ணீர்தான் தேடுகிறான் என எண்ணி.. தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். வாங்க நினைத்தவன் தடுமாறி அவள் மேல் சாய்ந்தான்.. பெண்ணின் மேனி, புதிதான வாசம்.. என எல்லாம் அவனை எதோ செய்ய.. ஆண் இயல்பாக அணைத்தான். 

ஜனனி அனிச்சையாய் அவனை தள்ளினாள்.. என்னமோ இன்னும் அவன் கணவனாக நினைக்கும் படி, அவள் மனம் தொடவில்லையே.. மேலும், அவளுக்கு டென்ஷன்.. என்ன செய்கிறோம்.. என புரியவில்லை, மாமனார் சொன்னது, வேலையாட்கள் சொன்னது என எல்லாம் சேர்ந்து குழப்பம்…  எனவே சட்டென தள்ளினாள்… அவ்வளவுதான் வசந்த் “என்ன, புருஷன் தொட்டால் என்ன” என்றான்.

ஜனனி “இல்ல.. இல்ல… இப்போ.. வேலை இருக்கு..” என எதோ சொல்ல வர.

வசந்த் பெரிதாக சிரித்தான்.. கொஞ்சம் அவனின் உதறல் நின்றது, தன்னை தானே பார்த்துக் கொண்டான்.. “என்ன ஷிவரிங் நின்னுடுச்சு… எங்க” என அவளை முன்னும் பின்னும் எல்லா இடங்களிலும் தொட்டான் கணக்கில்லாமல்.

ஜனனி “ஐயோ, ஏங்க.. இல்ல” என தடுத்தாள் அவனை. அவள் தடுக்க தடுக்க… அவனிற்கு இன்னும்  வேகம் அதிகமானது.. அவளின் உடைகளை களைந்தான்.. பெண்ணுக்கு பயம்.. வசந்தின் முகம் முழுவதும் வெறிதான்.. காதல் இல்லை. சட்டென என்னென்னவோ நடக்கிறது.. ஜனனிக்கு இயல்பாக உடல் கூசியது.. ஓடி மறைந்துக் கொண்டாள். என்னமோ ஒரு பெரிய போராட்டம், அங்கு. அவளை இறுக்கி பிடித்துக் கொண்டான்.. ஆனால், அவனுக்கு அந்த நொடியை கையாள முடியவில்லை.. தோற்று போனான். பெண் போராடி.. ஓய்ந்து போய்.. அவனை தள்ளி எழ நினைக்க.. அவளின் நிலை பரிதாபமாக இருந்தது.

இப்போது வசந்த் தன் இயலாமையை வன்மமாக அவளின் உடலில் காட்டினான். மலர்பாகங்கள் எல்லாம் கொய்து எறிந்தான்.. சொல்லமுடியாத வேதனையை அவளுக்கு உணர்த்தினான் வசந்த்.

சற்று நேரம் சென்று வேகம் கொண்டு அவனின் தலையை கீழே அடித்து.. அவனை மயங்க செய்து எழுந்தால் பெண்.. மீண்டும் வசந்திற்கு உதற தொடங்கியது. இப்போது அவனிடமிருந்து ஈசியாக மீண்டாள்.

அவ்வளவுதான், என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என புரியாமால், தன் உடையை எடுத்து அணிந்துக் கொண்டாள்.. கையில் ஒன்றும் எடுக்கவில்லை.. கைகால் ஒருவித நடுக்கத்தில் இருக்க… பரபரவென.. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டாள்.

ஓடினாள் எங்கோ, ஓடினாள்.. சற்று நேரம் சென்றுதான் அவளுக்கு உணர்வே வந்தது.. எல்லோரும் தன்னை பார்ப்பதாக தோன்ற.. ஒரு மரத்தடியில் அமர்ந்தாள். முகத்தை தன் துப்பட்டா கொண்டு மூடிக் கொண்டாள். எதுவுமே தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.

மதியம் உச்சி வெயிலில்.. எதோ பஸ் கண்ணில் பட, ஏறினாள்.. ‘சென்னை சென்னை’ என்றாள், வேறு தெரியவில்லை. அந்த நடத்துனர், பாதி வழியில் இறக்கிவிட்டு.. எதோ சொன்னார். இவளுக்கு புரியவில்லை. மீண்டும் அங்கேயே அமர்ந்துக் கொண்டாள்.

யாரோ ஒரு வயதான அம்மா என்னவென கேட்க.. சென்னை என்றாள். அந்த அம்மா பாவம் பார்த்து.. பஸ் ஏற்றி விட்டது. கையில் காசில்லை.. அந்த நடத்துனர் இறங்கு என்க… தன் வளையலை கழற்றி அவரிடம் கொடுக்க.. அவளின் கைகள் நடுங்கியது. அவருக்கு என்ன புரிந்ததோ.. ஒன்றும் சொல்லாமல் வளையலை அவளிடமே கொடுத்தார். சென்னையில் இறக்கி விட்டார்.. அப்படியே ஒரு ஆட்டோகாராரிடம் வளையலை கொடுத்து வீடு வந்தாள்.. ஜனனி.

இதெல்லாம் இப்போது கண்முன் ஓடியது அவளிற்கு. அவள் அனுபவித்த பாதி கொடுமைகள் யாரிடமும் சொல்லவில்லை.. சூரிக்கு கூட தெரியாது. ராகவ் அருகில், சூரி வந்து “ஜானு, வா..” என கை பிடிக்க.. கைகள் சில்லிட.. மயக்கமானாள் பெண். சட்டென அவள் சரிய.. பக்கத்தில் நின்றிருந்த மஹா… சட்டென தாங்கி பிடித்தான் அவளை.

“உடம்பில் வழிந்தோடும்..

உதிரம் உன்னை கேட்க்கும்…

நான் செய்த தீங்கு என்ன…

நான் செய்த தீங்கு என்ன..

விடுகதையா இந்த வாழ்க்கை…”

அவளை அங்கேயே அமர வைத்து.. தண்ணீர் கொண்டு கண் துடைத்து.. அவளின் அதிர்ச்சியை போக்கி, அவளை நினைவுக்கு திருப்பினான் சூரி. 

ராகவ் வக்கீலிடம் பேசிக் கொண்டிருந்தான். ஜனனி எழுந்து அமர்ந்தாள்.. அருகில், மஹா நிற்க.. சட்டென தள்ளி அமர்ந்துக் கொண்டாள் பெண். மஹா, தானே தள்ளி நின்றுக் கொண்டான்.

சூரி, அவளின் கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்தான் ஏதும் பேசவில்லை.

மஹா, “காரெடுத்து வரேன்.. வெயிட் பண்ணுங்க” என சொல்லி சென்றான்.

 

Advertisement