Advertisement

மயக்கும் மான்விழியாள் 33(இறுதி பதிவு)

சிவரூபன்,மதுமிதா திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.இருவரும் தங்களின் திருமண வாழ்வை மிகவும் உணர்ந்து வாழ்ந்தனர்.செல்ல சண்டைகள்,சீண்டல்கள் என்று எதற்க்கும் பஞ்சம் இருக்காது அவர்களிடம்.சில நேரங்களில் சண்டை கோழிகளாக சிலிர்த்துக் கொண்டு நின்றாலும் அடுத்த சில நிமடங்களிலே சமாதானமும் ஆகிவிடுவார்கள்.சிவரூபன் வீட்டில் மதுமிதாவின் வரவால் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.மோகனாவையும்,தேவகியையும் ஏதாவது சீண்டுவது பின் அவர்கள் இருவரிடமும் திட்டுவாங்குவது என்று பொழுதுகள் கழிந்தது மதுவிற்கு.

தேவகியிடம் எந்த ஒதுக்கமும் காட்டாமல் பேச தொடங்கியிருந்தாள் மது.சில நேரங்களில் தேவகியே ஒதுங்கி சென்றாலும் மது அவரை இழுத்து வைத்து பேசுவாள்.தேவகியும் மதுவிடம் இயல்பாக இருப்பார்.தன் மகனின் சந்தோஷம் மது என்று தெரிந்தவர் அல்லவா அதனால் மதுவிடம் நல்லவிதமாகவே தன் உறவை வளர்த்தார்.சிலநேரங்களில் மதுவின் சேட்டை அதிகமாகும் போது அவளிடம் கத்துவார் தான் ஆனால் சில நிமிடங்களிலே இருவரும் எப்போதும் போலவே பேசிவிடுவர்.ரூபனுக்கு தான் இவர்களை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும்.அந்த சமயங்களில் அவனைக் காப்பாற்றும் ஒரே ஜீவன் செந்தில்நாதன் மட்டுமே.இவ்வாறு ரூபன்,மதுவின் வாழ்வு வண்ணமயமாக சென்றது.

ரூபனுக்கு தான் வந்த வேலை இன்னும் இருவாரங்களில் முடியும் தருவாயில் இருந்ததால் முழுநேரமும் தன் அலுவலகமே கதி என்று கிடந்தான்.கௌதமும் ரூபனுக்கு உதவியாக சிலநேரங்களில் அவனுடனே இருப்பான்.இந்நிலையில் மகேஷ் திடீர் என்று சென்னை வந்தவன் தன் காதலை பற்றி ரூபனிடம் கூற அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.தன் நண்பனை ஆறதழுவி தன் வாழ்த்தை கூறினான்.மகேஷூம் ரூபனிடம் நீ தான் நித்யாவின் வீட்டில் பேசவேண்டும் என்று கூறினான்.ரூபனும் அதற்கு சம்மதித்து நண்பனிடம் தான் பேசுவதாக கூறி அனுப்பி வைத்தான்.

ரூபனுக்கு மகேஷ் நித்யாவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியதிலிருந்து மனதில் ஒருவித நிம்மதி பரவுவதைப் போல உணர்ந்தவன்.தன் சந்தோஷத்தை  தன் விழியிடம் பகிர வீட்டிற்கு வந்தான்.ஆனால் வீட்டிலோ ஒரு பெரிய பஞ்சாயத்தையே இழுத்து வைத்திருந்தாள் அவனது விழி.

“எத்தனை தடவை சொல்லிருக்கேன் உனக்கு என் இப்படி புரியாமலே இருக்க….”என்று தேவகியின் குரல் வாசல் வரைக் கேட்டது.

“இப்ப என் பேத்தி என்ன பண்ணிட்டானு இவ்வளவு கோபப்படுற தேவகி…”என்று மோகனா எப்போதும் போல் அவரிடம் சண்டையிட்டு கொண்டிருந்தார்.

“இன்னக்கி என்ன செஞ்சுவச்சானு தெரியலையே ராட்சசி”என்று மனதில் தன் விழியை செல்லமாக திட்டியவறே உள்ளே நுழைந்தான் ரூபன்.

வரவேற்பறையில் தேவகியும்,மோகனாவும் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர்.செந்திலநாதனோ தன் ஆஸ்தான சாய்வு நாற்காலியில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொணடிருந்தார்.தனக்கும் நடந்து கொண்டிருப்பதற்கும் எந்தவித சம்மதமும் இல்லை என்பதை போல இருந்தது அவரின் தோற்றம்.இவை அனைத்திற்கும் காரணமானவளோ சமையல் அறையில் எதையோ உருட்டிக் கொணடிருந்தாள்.

“நான் தான் பக்கத்துல இருந்து பார்த்துக்குறேன்ல அப்புறம் எதுக்கு இப்படி சத்தம் போடுற….”என்று மோகனா தேவகியிடம் கேட்டுக் கொண்டிருக்க அப்போது சரியாக சமையல் அறையில் இருந்து வெளி வந்த மது வாயிலி்ல் ரூபன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு,

“அத்தான்…எப்ப வந்தீங்க உள்ள வாங்க….ஏன் அங்கேயே நின்னுட்டீங்க…”என்று கூறிக் கொண்டே அவனின் அருகில் சென்றாள்.மது அருகில வந்ததும் ரூபன்,

“ஏய் ராட்சசி….என்னடி செஞ்ச…”என்று கேட்க,அவளோ அவனை பார்த்து கண்களை சிமிட்டி விட்டு உள்ளே சென்றுவிட்டாள்.அவளின் செய்கையில் ரூபன் முழித்துக் கொண்டிருக்க,

“உள்ள வா ரூபா…ஏன் அங்கேயே நிக்குற…”என்றார் தேவகி.

“ம்ம்…வரேன் அம்மா…”என்றவன் தன் அன்னையின் அருகில் சென்று அமர,

“என்னப்பா இந்த நேரத்துக்கு வந்திருக்க….”என்று கேட்டார் தேவகி.

“இன்னைக்கி வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சுமா அதான் வந்துட்டேன்…..”என்றவன்.

“என்னமா பாட்டிக் கூட சண்டை…”என்றான்.அவனுக்கு தெரியும் தேவகியாக எதுவும் கூறமாட்டார் என்று அதனாலே அவனே கேட்டுவிடுவான்.

“ஒண்ணுமில்ல ரூபா…”என்று தேவகியுன் குரல் சற்று கம்மி ஒலிக்கவும்,அவரின் கைகளை பிடித்துக் கொண்டவன்,

“என்னமா என்ன பிரச்சனை….”என்று கேட்க,

“அட ஒண்ணுமில்லப்பா பேத்தி இன்னைக்கி உனக்கு கேசரி செய்வோம்னு சொல்லிச்சு…அதான் நான் அவளுக்கு சொல்லிக் கொடுத்தேன்…அதுக்கு தான் சண்டை போடுறா உன் அம்மா…”என்று மோகான கூற,ரூபனுக்கு ஒன்றும் புரியவில்லை அவன் திரும்பி தன் அன்னையை காண அவரோ தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார்.

“கேசரி செய்யுறேன் பேர்வழினு உன் பேத்தி கையில சுடு தண்ணி ஊத்திக் கிட்டு நம்மள ஒருவழி பண்ணளே அதை ஏன் சொல்லமாட்டேங்குற…அதுக்கு தான மருமக திட்டுனுச்சு….சொல்லறத எப்போதும் உனக்கு சாதகமாகவே சொல்றது….”என்று எடுத்துக் கொடுத்தார் செந்தில்நாதன்.

“ம்க்கும்…இவருக்கு வேற வேலையே இல்லை எப்ப பாரு என்னை ஏதாவது சொல்லனா தூக்கமே வராது….”என்று மோகனா நொடித்துக் கொள்ள,தேவகியோ ரூபனிடம்,

“நல்ல கொதிக்கிற தண்ணிடா….கையில ஊத்திக்கிட்டா நான் பயந்தே போயிட்டேன்….”என்று பதட்டமாக கூற,ரூபனோ

“கேசரிக்கு எதுக்குமா கொதிக்கிற தண்ணி…”என்று புரியாமல் கேட்டான்.

“அது தாத்தா அவங்களுக்கு கால் வலிக்கு ஒத்தடம் கொடுக்க தண்ணி போட்டுருந்தாங்க…நான் அதை எடுத்து வச்சுட்டு செய்யலாம்னு பார்த்தேன்..கை நழுவிடுச்சு….”என்று பேசியபடி  ஒரு கையில் காப்பியும்,ஒரு கையில் கேசரி பிளேட் உடன் வந்தாள் மது.அவளை முறைத்த ரூபன்,

“எனக்கு வேண்டாம்…”என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.

“அச்சோ….அத்தானுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு போல…”என்று நினைத்தவள்,பக்கத்தில் அமர்ந்திருந்த தேவகியின் கையில் காபியை திணித்துவிட்டு,

“அத்தை நீங்க இந்த காபியை குடிங்க…நான் போய் உங்க பையன சமாதான படுத்தனும் அதனால நான் இந்த காபியை குடிச்சுட்டு போறேன்….”என்றுவிட்டு தன் காபி அருந்த,

“உனக்கு எல்லாம் விளையாட்டு தான்….”என்று தேவகி கோபமாக கேட்க

“அத்தை ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க…அதான் எனக்கு ஒண்ணும் ஆகலை இல்லை….”என்று கூற அவளை முறைத்த தேவகி,

“உன்னை திருத்த முடியாது…தேவையில்லாம நான் தான் டென்ஷன் ஆகுறேன்…”என்றுவிட்டு சென்றுவிட்டார்.தன் தாத்தா,பாட்டிக்கும் காபியையும்,கேசரியையும் கொடுத்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றாள் மது.

அறையின் உள்ளே நுழைந்த மது கண்டது,கோபமாக அமர்ந்திருந்த ரூபனை.அவனது முகமே இறுக்கமாக இருந்தது.

“போச்சு அத்தான் ரொம்ப காரமா இருக்காறே….இந்த கேசரியை கொடுத்து சரி செஞ்சுடுடி மது….”என்று தனக்குள் பேசியவாறே ரூபனின் அருகில் வந்து அமர,

“ப்ச்…விழி உன் கிட்ட பேசுற மூடுல இல்லை…”என்று கூறிவிட்டு எழப்பார்க்க அவனை எழவிடாமல் தடுத்த மது,

“அத்தான்…..”என்று கெஞ்சலாக கேட்க,ரூபனோ அவளை முறைத்துவிட்டு அவளது காயம் பட்ட கைகளை ஆராய்ந்தான்.காயம் பெரியது இல்லை என்றாலும் தன் அன்னை கூறியது போல ஆகியிருந்தால் நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.அவளின் கையை மென்மையாக தடவிட,அவனது மென்மையான தொடுகையில் தேகம் சிலிர்த்தவள்,

“ம்ம்…அத்தான்….சின்ன காயம் தான் பயப்படாதீங்க….”என்றாள் நெலிந்தவாறே.திருமணம் முடிந்த பிறகு முதன் முதலாக அவனின் மென்மையான தொடுகை.ஆம் ரூபனின் அணைப்பு எப்போதும் இறுக்கமாக தான் இருக்கும்.அதனாலே சிலநேரங்களில் மது திணறி தான் போவாள்.

“என்ன சின்ன காயம்….பாரு எப்படி சிவந்திருக்குனு…”என்று அவளது கையை காட்டினான்.

“ம்ம்…கொஞ்சம் எரியுது தான்…அத்தை ஆயிண்மெண்ட் கொடுத்தாங்க போட்டுருக்கேன்….”என்று மது கூற,

“ம்ம் சரி…”என்று சின்ன குரலில் ரூபன் கூற,அவனின் குரல் வேறுபாட்டில் அவனது கைகளை பற்றி தன் திரும்புமாறு செய்த மது,

“அத்தான்….சாரி…இனி கவனமா இருக்கேன்…ஏன் இப்படி இருக்கீங்க ப்ளீஸ்…”என்றாள்.

“ப்ச்…மது கவனமா இருக்க வேண்டாமா…அம்மா சொன்ன மாதிரி பெருசா எதாவது ஆகியிருந்தா….”என்று குரல் நடுங்க கூற அவனை அழுத்தமாக அணைத்துக் கொண்டவள்,

“அத்தான்…அப்படி எதுவும் ஆகாது…இனி கவனமா இருக்கேன்…”என்றாள்.அப்பொழுதும் ரூபனின் முகம் தெளியாமல் இருக்க “இது சரிவராது….”என்று தனக்குள் கூறிக் கொண்டவள் எம்பி ரூபனின் அதரங்களை தன் அதரங்களால் மூடினாள்.திருமணம் முடிந்து மனைவி தரும் முதல் இதழ் முத்தம் ரூபனை நிலைகுலைய செய்ய,மனைவி ஆரம்பித்த வேலையை தனதாக்கியவனின் கைகள் மனைவியின் இடையை இறுக்கமாக பிடித்தது.

நீண்ட நேர இதழ் யுத்ததிற்கு பிறகே மனைவியை விட்டவன் அவளை பூ போல் கைகளில் ஏந்த கணவனின் எண்ணம் புரிந்த மது,

“அத்தான்…விடுங்க…யாராவது வந்துட போறாங்க……”என்று சன்னக் குரலில் கூற,ரூபனோ,

“வந்தா வந்துட்டு போறாங்கடி பொண்டாட்டி…”என்று உல்லாசமாக கூறியவறே தங்கள் கட்டிலில் விட்டு அவளின் மேல் படற தொடங்கி தன் முத்த ஊர்வலத்தை தொடங்க மது கொஞ்சம் கொஞ்மாக தன் வசமிழக்க,ரூபனும் மனைவியின் மயங்கிய நிலையை ரசித்தவாறே,தன் அதரங்களின் முற்றுகையால் முழுமையாக மயங்க செய்தவன் அவளுள் மூழ்கி போனான்.

இரவு கவிழும் நேரத்தில் ரூபனின் காதில் ஏதோ குரல் ஒலிப்பது போல தோன்றியது.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாவனை எழுப்பிக் கொண்டிருந்தாள் மது.

“அத்தான் எழுந்திரிங்க….”என்று அவனின் தோள்களை உலுக்க அதில் முற்றிலுமாக கலைந்தவன் சலிப்பாக,

“ப்ச்…ஏன்டி ராட்சசி இப்படி உலுக்குற…”என்று கேட்டவாறே எழந்தான்.

“பின்ன எவ்வளவு நேரமா எழுப்புறேன் போங்க போய்  குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்….”என்று அவனை பாராமல் திரும்பி நின்று கூற,முதலில் கவனிக்காதவன் பின்,

“ஓய் அதை என் மூஞ்சிய பார்த்து சொல்றதுக்கு என்ன…”என்று அவளின் கைகளை பிடிக்க வர இரண்டி பின் சென்ற மது ஒற்றை விரல் நீட்டி எச்சரிப்பது போல் செய்து,

“ஒதைவாங்குவீங்க…போங்க முதல்ல குளிங்க போங்க…”என்று கண்களை உருட்ட ரூபனும் அப்போது தான் மனைவியை நன்றாக பார்த்தான் அவளும் தலை குளித்துவிட்டு வந்திருப்பாள் போலும் முடியில் ஆங்காங்கே நீர் திவளைகள் தெரிந்தன அதனைக் கண்ட ரூபனின் முகத்தில் மர்ம புன்னகை விரிந்தது.சிரித்தபடியே குளியல் அறையில் நுழைந்தவன் அங்கு இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தை எதெர்ச்சையாக பார்க்க அதில் மதுவின் நெற்றிக் குங்குமம் அவனது கன்னத்தில் வால் நட்சத்திரம் போல் பதிந்து இருந்தது.

“இத பார்த்துட்டு தான் மூஞ்சிய திருப்பிக் கிட்டு நின்னாளா……”என்று நினைத்த ரூபனின் முகத்தில் முழுமையான மலர்ச்சி.குளித்து முடித்து வெளியில் வர மது அவனது உணவை அங்கு இருக்கும் சிறிய டீப்பாயில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஓய் ஏன்டி சாப்பாட்ட இங்க கொண்டு வந்த….”என்று கேட்டவாறே தன் அலமாரியை திறந்து உடையை எடுக்க மதுவோ,

“ம்ம்…மணி பார்த்தீங்களா….”என்றுவிட்டு அறையில் இருந்த கடிகாரத்தைக் காட்ட அது பத்து என்று காட்டியது.

“ஓ…ரொம்ப நேரம் தூங்கிட்டனா…”என்று கேட்டவாறே அமர மது அவனை முறைத்தாளே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை.

“ஓய் என்னடி முறைக்கிற…”என்று அவளை சீண்டினான்.

“ப்ச் சும்மா இருங்க அத்தான்….எல்லாம் உங்களால…”என்று சிணங்களாக வந்தது மதுவின் குரல் அதில் மேலும் கவரப்பட்டு,

“அப்ப ஏதோ இருக்கு சொல்லு…..”என்று மேலும் சிண்ட அழகாக சிவந்த முகத்தை மறைத்தவறே பதில் கூறினாள்.

“நான் குளிச்சுட்டு வெளில போனேனா…அப்ப பாட்டி என் மூஞ்சில என்ன பார்த்தாங்குனு தெரியல என் பின்னாடியே வந்து எனக்கு சுத்தி போட்டுட்டு இப்படியே சந்தோஷமா இருங்கடானு சொல்லிட்டு போறாங்க….இதுல அத்தை வேற என்னை பார்த்து சிரிச்சிட்டு போறாங்க…எனக்கு தான் எனவோ போல போச்சு…”என்று கூற ரூபனின் முகத்தில் புன்னகை விரிந்தது.

“சிரிச்சது போதும் சாப்பிடுங்க…”என்று பல்லைக் கடித்துக் கொண்டு மது கூற.இப்போது ரூபன் அடக்கமாட்டாமல் சத்தமாகவே சிரித்தான்.

“அய்யோ….போதும் சிரிக்காதீங்க….”என்று அவனின் வாயை பொத்தினாள் மது.பின் இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு சாப்பிட்டுவிட்டு மது பாத்திரங்களை ஒதுங்க வைத்துவிட்டு வர,ரூபன் கட்டிலில் சாய்ந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தான்.அவனின் அருகில் வந்த மது,

“என்ன அத்தான் என்ன ஓடிக்கிட்டு இருக்கு…”என்று அவனின் தலையை தட்டிக் கேட்க,தட்டிய கைகளை பிடித்து இழுத்து அவளை தன் மீது போட்டுக் கொண்டவன்,

“ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி யோசிச்கிட்டு இருக்கேன்டி…”என்றான்.உடல் இலகுவாக அவளை அணைத்திருந்தாலும் குரலில் ஒரு தீவிரம் அதை உணர்ந்த மது,

“என்ன அத்தான்…சைட்ல ஏதாவது பிரச்சனையா…”என்றாள்.ஏற்கனவே ஒருமுறை சைட்டில் பிரச்சனை என்று ரூபன் சற்று டென்ஷனாக இருந்தான் அதனால் கேட்டாள்.அவளது தலையை ஆதரவாக தடவிய ரூபன்,

“இல்லடா…இது வேற விஷயம்….எப்படி ஆரம்பிக்கிறதுனு தான் யோசிக்குறேன்…”என்று பிடிகையையோடு பேச,அவனது நெஞ்சிலிருந்து எழுந்தவள்,

“அத்தான்…என்ன என்ன சொல்லுங்க…ஏன் ஒருமாதிரி பேசிறீங்க….”என்று படப்படப்பாக மது பேச,அவளது வாயை மூடிய ரூபன்,

“ஏய் கத்தாதடி ராட்சசி…”என்றவன் மகேஷ் வந்ததையும் நித்யாவை திருமணம் செய்ய விரும்புவதையும் கூற,மதுவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை,

“அத்தான்…நிஜமா தான் சொல்லுரீங்களா….”என்று ஆர்பரிக்க,அவளது மலர்ந்த முகத்தை ரசித்தவாறே,

“ம்ம் எனக்கும் சந்தோஷம் தான்….ஆனா உன் அக்காகிட்ட நீ தான் பேசனும் மது….அவங்க மனசுல என்ன இருக்குனு நீ தான் தெரிஞ்சிக்கிட்டு சொல்லனும்….”என்று கூற மதுவின் மலர்ந்த முகம் சற்று நேர யோசனைக்கு பின்,

“அதெல்லாம் கண்டிப்பா ஒத்துப்பா அத்தான்….”என்று நம்பிக்கையாக கூறினாள்.

“ம்ம்…ஆனா மது நித்யாவை நீ எக்காரணத்தைக் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது புரியுதா…இது உங்க அக்காவோட வாழ்க்கை அவங்க தான் முடிவு பண்ணனும்….”என்று கூற மது,

“ம்ம் அத்தான் அப்ப நான் என்ன பேசனும்….”என்று கேட்க ரூபன்,

“நீ அவங்க இப்ப கல்யாணத்துக்கு ரெடியா இருக்காங்களானு கேளு….அப்படி அவங்க ரெடி சொன்னா மட்டும் நீ மகேஷ் சொன்னது சொல்லி அவங்க விருப்பத்தைக் கேளு புரியுதா…”என்று ஏதோ சிறு குழந்தைக்கு கூறுவது போல கூற மதுவும் ரூபன் கூறுவது தான் நல்லது என்று உணர்ந்து நாளை நித்யாவிடம் பேசுவதாக கூறினாள்.

மறுநாள் மாலை நித்யாவின் பள்ளி அருகில் உள்ள ஒரு காபி ஷாப்பில் தன் நகங்களை கடித்தபடி அமர்ந்திருந்தாள்.அப்போது பள்ளி நேரம் முடிந்து மது கூறியபடி அந்த காபி ஷாப்பிற்கு வந்த நித்யா,மதுவின் இருக்கை அருகே வந்து தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு,

“ஏய் இந்த பழக்கம் இன்னும் போகலையா உனக்கு….”என்று நித்யா மதுவின் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

“ப்ச் அக்கா ஏன் இப்ப கொட்டுன…”என்று கோபமாக கேட்க நித்யா சிரித்துக் கொண்டே,

“சரி சரி கோச்சிக்காதடி…எதுக்கு இங்க கூப்பிட்ட…”என்று தன்னை அழைத்த காரணத்தைக் கேட்க மது,

“அது வந்து அக்கா…”என்று மது தடுமாறினாள்.அவளுக்கு தயக்கம் தன் அக்கா இதை எவ்வாறு எடுத்துக்கொள்வாளோ என்ற பயம் மனதில் இருக்க அது அவளது முகத்திலும் தெரிந்தது.நித்யாவோ மதுவின் முகத்தில் கண்ட மாற்றத்தைக் கண்டு,

“என்னடி மது எதாவது பிரச்சனையா…”என்று நித்யா பதட்டமாக கேட்டாள்.மது மீண்டும் ரூபனுடன் ஏதாவது பிரச்சனை செய்துவிட்டாளோ என்று நித்யா பயப்பட்டாள்.

“இல்ல அக்கா அதெல்லாம் இல்ல…..”என்றவள் பதட்டமாகவே கூற,

“ஏய் என்னனு சொல்லுடி எனக்கு பதறுது…”என்று நித்யா சற்று கடுப்பாகவே கேட்டாள்.

“அக்கா…நீ உன்னோட அடுத்த கட்ட வாழ்க்கை பத்தி நீ யோசிச்சியா….”என்று கேட்டுவிட்டு நித்யாவின் முகத்தையே பார்த்தாள்.நித்யாவிற்கு சற்று ஆசுவாசம் பிறந்தது மது எதும் சண்டை இழுத்துக் கொண்டு வரவில்லை என்று நினைத்தவள் தன் அருகே இருந்த தண்ணீரை குடித்தவிட்டு தன்னை சற்று சமன்படுத்தியவள் நிதானமாக மதுவிடம்,

“ம்ம் இன்னும் இல்ல மது…ஏன் கேட்குற….”என்றாள்.நித்யாவின் பதிலில் சற்று திருப்தி அடைந்த மது,

“அக்கா…இன்னும் அந்த ரோக்க பத்தி நினைச்சிட்டு இருக்கியா…”என்று கேட்க,நித்யா முகம் சுழித்தவறே,

“ச்ச…ச்ச…இல்ல மது அவனெல்லாம் நான் மறந்து ரொம்ப நாள் ஆகுது…என்ன அவன் ஏற்படுத்திட்டு போன காயம் தான் இன்னும் மனசுல அப்பப்ப நியாபகம் வருது…அதனால தான் என் கவனம் முழுசும் இப்ப ஸ்கூல்,பசங்கனு மனச அலைப்பாயவிடாம பார்த்துக்குவேன்….”என்று சகோதரி நீண்ட விளக்கம் தந்தாள்.

மதுவிற்கு ஏக திருப்பதி தன் அக்கா முடங்கவில்லை நடந்த சம்பவத்திலிருந்து வெளி வர நினைக்கிறாள் என்பதே மதுவிற்கு மேலும் தைரியத்தைக் கொடுக்க,

“அக்கா இப்ப உன்னை யாராவது பிடிச்சு உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு பொண்ணு கேட்டா ஒத்துக்குவியா….”என்று கேட்க நித்யா அமைதியாக,

“ம்ம் வரவங்க என் பக்க நியாத்தை புரிஞ்சு என்னை கேட்டு ,எனக்கும் மனசுக்கு பிடிச்சு இருந்தா கண்டிப்பா ஒத்துக்குவேன் மது….”என்று நித்யா திடமாக கூற மது எழுந்து வந்து அணைத்துக் கொண்டாள் நித்யாவை.ஒரு நெகிழ்ச்சியான தருணம் இருவருக்கும் அதை உணர்ந்து அனுபவித்தனர்.சுற்றம் உணர்ந்த நித்யா தான் முதலில் நிகழ்வுக்கு வந்து மதுவை தன்னிடம் இருந்து பிரித்தாள்.அதற்குள் ஒன்று இரண்டு பேர் இவர்கள் இருவரையும் ஒருமாதிரியாக பார்க்க நித்யாவிற்கு சற்று சங்கடமாக இருந்தது.ஆனால் மதுவிற்கு அதெல்லாம் இல்லை போல நித்யாவின் தெளிவான பதிலில் மனதில் இருந்த பாரம் நீங்கியது போல் உணர்வு அதானல்,

“அக்கா…அக்கா…நீ…நீ நிஜமா தான் சொல்லுறியா….”என்று கண்கள் கலங்க கேட்டாள்.

“ஆமாம்…”என்பதாக நித்யா பதில் தர,மது ரூபனின் நண்பன் மகேஷ் உன்னை பிடித்து கேட்பதாக கூறி ரூபன் கூறியவற்றைக் கூறினாள்.மது கூறிய அனைத்தையும் கேட்ட நித்யா,

“ம்ம்…இப்படி திடீர்னு நீ…”என்றவள் யோசனை செய்ய,

“அக்கா…நீ நல்ல யோசிச்சு சொல்லு ஒண்ணும் அவசரமில்ல…”என்று கூற நித்யாவும் சரி என்பதாக தலையாட்டினாள்.பின் இருவரும் சிறிது நேரம் பொதுவாக பேசிவிட்டு அவரவர் வீடு திரும்பினர்.மது நடந்த அனைத்தையும் ரூபனிடம் கூற அவனும்,

“நல்லதே நடக்கும்னு நம்புவோம் விழி…”என்று நம்பிக்கை அளித்தான்.

இரு தினங்கள் கழித்து நித்யா மதுவை அழைத்தாள்,

“மது…அது நீ சொன்னத நான் யோசிச்சேன்…ரூபன் சொல்லிருக்கார்னா கண்டிப்பா நல்லவரா தான் இருக்கும்…இருந்தாலும் அவங்க வீட்டல முழுமனசா சம்மதிச்சா…எனக்கும் ஓகே….”என்று கூற மதுவோ,

“அக்கா அவர நீ பார்க்காம எப்படி பிடிச்சிருக்குனு சொல்லுற…”என்று தன் அதி முக்கிய சந்தேகத்தை எழுப்பினாள்.

“ஏய் மண்டு அதான் உன் கல்யாணத்துக்கு வந்திருந்தார்னு சொன்னல…உன் கல்யாண ஆல்பத்துல பார்த்தேன் போதுமா…”என்று கூறினாள்.அவர்கள் திருமணத்தில் ரூபனின் நண்பன் என்று மகேஷ் ஒருவன் தான் வந்திருதான் என்பதை தன் தங்கையின் உதவியால் அறிந்திருந்தாள் நித்யா.

நித்யா மதுவிடம் சம்மதம் கூறியவுடன் மது ரூபனக்கு அழைத்து விஷயத்தைக் கூற,ரூபனும் மகேஷூக்கு அழைத்து தகவல் கூறியவன் நித்யா கூறிய அவனின் பெற்றோர்கள் முழுமனதாக சம்மதிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கூறினான்.மகேஷோ ரூபனுக்கு ஒருபடி மேல் சென்று,

“டேய் நான் ஏற்கனவே எங்க வீட்ல பேசிட்டேன்டா…அவங்க இரண்டு பேரும் எப்ப போய் பொண்ணு கேக்களாம்னு என்னை நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க…அதனால தான் உன்னை தூது விட்டேன்…”என்று கூற,ரூபனோ,

“டேய் பலே கில்லாடிடா நீ…”என்றவன் முதலில் தான் நித்யாவின் வீட்டிலும் பேசிவிட்டு உனக்கு தகவல் சொல்வதாக கூறி வைத்தான்.ரூபன் கூறியது போல அடுத்த நாள் காலை மதுவுடன் அவளின் பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டான்.மதுவும் தாங்கள் இன்று வீட்டிற்கு வருவதாக கூறி நித்யாவை இன்று விடுமுறை எடுக்க சொல்லியிருந்தாள்.

மதுவின் வீட்டில் வரவேற்பறையில் ரூபன் அமர்ந்து பூமிநாதனிடம் சில நிமிடங்கள் பொதுவாக பேசிவயவன் பின் மகேஷ் நித்யாவை திருமணம் செய்ய விரும்புவதாகவும்,திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூற மது வீட்டில் உள்ளவர்களின் முகத்தில் மலர்ச்சி தாண்டவாமாடியது.

“மாப்பிள்ளை நிஜமா தான் சொல்லுரீங்க….”என்று பூமிநாதன் அகமகிழ்ந்து கேட்டார்.

“கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கனும்….”என்று சுந்தரி கடவுளுக்கு அப்போதே வேண்டுதல் வைத்தார்.இங்கு நடந்த பேச்சு வார்த்தைகளை வெறும் பார்வையார்களாக வசந்தா பார்த்துக் கொண்டு இருந்தாரே தவிர எதுவும் பேசவில்லை அதை கவனித்த ரூபன்,

“அத்தை உங்களுக்கு இதுல விருப்பம் இல்லைனா வேணாம் வேற பார்க்கலாம்….”என்று வசந்தாவிடம் கூற அவரோ,

“அய்யோ இல்லை மாப்பிள்ளை…எனக்கு நான்…”என்று  வசந்தா தடிமாற,அவரது கைகளை ஆதரவாக தட்டிக் கொடுத்தவன்,

“அத்தை நீங்க உங்க மனசுல என்ன இருக்குனு தைரியமா சொல்லுங்க…”என்று கூறினான்.

“அண்ணி மது மாதிரி தான் நித்யாவும் எனக்கு பொண்ணுதான்…அவ வாழ்க்கை நல்ல ஆகுற வரைக்கும் எங்களுக்கு மனசு பதறிக்கிட்டு தான் இருக்கும்….”என்று கூற

“தம்பீ…”என்று குரல் உடைய அழுதேவிட்டார் வசந்தா.மனது பிசைந்தது தங்கள் குடும்பம் அவ்வளவு செய்தும் தன் மகளின் வாழ்வை சீராக்க நினைக்கிறார்களே என்று மனதின் பாரம் எல்லாம் வெடித்து அழுகையாக வெடித்தது. வசந்தாவின் அழுகை குரல் கேட்டு தங்கள் அறையில் இருந்த மதுவும்,நித்யாவும் கூட பதட்டத்துடன் ஓடி வந்தனர்.நிவேதாவிற்கு கடைசி வருட பரிட்சை நடப்பதாள் அவள் கல்லூரிக்கு சென்றிருந்தாள்.ஆனந்தும் பள்ளிக்கு சென்றிருந்தான் அவர்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் வீட்டில் இருந்தனர்.

எப்போதும் ஒருவித நிமிர்வுடனே சுற்றும் தன் பெரியம்மா இவ்வாறு கலங்கிவது பொறுக்காமல் அவரிடம் ஓடி வந்த மது,

“பெரிம்மா என்னதிது எழுந்திரீங்க ப்ளீஸ் அழாதீங்க….”என்று அவரை சமாதானப் படித்தினாள்.சற்று நேரத்திற்கு எல்லாம் அங்கு ஒரு கனமான சூழ்நிலை யார் முதலில் பேசுவது என்பதே தயக்கமாக இருந்தது.அவர்களது தயக்கத்தை உணர்ந்த வசந்தாவே பேச்சை தொடங்கினார்,

“மாப்பிள்ளை எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு….நீங்க ஒரு பையனை சொன்னா நல்ல பையனா தான் இருக்கும்….ஆனா அந்த பையனுக்கு நித்யாவோட கடந்த காலத்தை பத்தி தெரியுமா…அவங்க வீட்ல எல்லாரும் இதுக்கு ஒத்துக்குவாங்களா….”என்று ஒரு தாயாக கேட்டார்.

ரூபன் மகேஷ் ஏற்கனவே தன் தாய்,தந்தையிடம் நித்யாவை பற்றி முழுமையாக பேசி அவர்குளும் சம்மதம் தெரிவத்த விவரத்தை கூறினான்.அனைவர் முகமும் தெளிய வச்ந்தாவோ இன்னும் யோசிப்பது போல இருக்க,ரூபன் அவரிடம் கேட்டான்அவரோ நித்யாவை அர்த்தமாக பார்தார் அவரின் மனநிலையை உணர்ந்த நித்யாவே முன் வந்தது தன் சம்மதத்தை கூற மீண்டும் அங்கே ஒரு சந்தோஷ அலை பரவியது.

நித்யாவின் சம்மதம் கிடைத்த உடன் மகேஷிற்கு தகவல் சொல்லப்பட அவன் இதற்காக தான் காத்திருந்தேன் என்பது போல் அடுத்த நாளே தன் பெற்றோர் உடன் வந்துவிட்டான்.மகேஷின் பெற்றோருக்கும் நித்யாவை பிடித்துவிட அவர்களும் திருமணத்தை பற்றிய பேச்சில் மூழ்கிவிட்டனர்.மூன்று மாதம் கழித்தே நல்ல முகூர்த்தம் வருவதால் மூன்று மாதங்களுக்கு பிறகே திருமணம் என்று பெரியவர்கள் பேசி முடித்திருந்தனர்.மகேஷ் தான் மூன்று மாதம் கழித்து தான் திருமணம் என்பதில் உர்ரென்று இருந்தான்.அவனை ரூபன் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

மூன்று மாதங்கள் முடிந்து இதோ நித்யாவின் திருமணத்தின் முதல் நாள் மணமகன் வரவேற்ப்பு நடந்து கொண்டிருந்தது.மகேஷின் தந்தை வடநாடு என்பதால் அவரது முறைப்படி மணமகனை அழைத்து வந்தனர்.தன் மகள் திருமணத்தில் செய்ய முடியாததை அனைத்தையும் தன் பெரிய மகளின் திருமணத்தில் செய்தார் பூமிநாதன்.அவர் இப்போது தங்களின் குடும்ப தொழிலான பட்டு தரி செய்யும் தொழிலை செய்தார்.

பூமிநாதனின் கடையும் முக்கிய வீதியில் இருந்ததால் அவருக்கு வருமானமும் நல்லமுறையில் வந்தது.அதானல் நித்யாவின் திருமணத்திற்கு உதவுகிறேன் என்று வந்த ரூபனையும் நாசுக்காக மறுத்துவிட்டார்.ரூபனும் அவரின் மனநிலையை புரிந்து கொண்டு அவரை வற்புறுத்தாமல் விட்டுவிட்டான்.இதோ பூமிநாதனின் ஆசைப்படி வரவேற்ப்பு நடந்து கொண்டிருந்தது.

ஒரு இருக்கையில் மது அமர்ந்து இருக்க அவளின் எதிரே முறைத்தபடி அமர்ந்திருந்தார் தேவகி.அவளோ பார்வையால் கெஞ்ச தேவகியின் பார்வை கூர்மையாகியதே தவிர இலக வில்லை.அப்போது அங்கு கையில் ஒரு பழச்சாறுடன் வந்த மோகனா,

“இந்தா இந்த ஜீஸ்ஸ குடி…அப்ப தான் கொஞ்சம் தெம்ப இருக்கும்….”என்று மதுவின் கையில் திணித்தார்.மது கொஞ்சம் கொஞ்சமாக மிடறு விழுங்க அவளையே முறைத்தபடி இருந்தார் தேவகி.

“அத்தை இனி எங்கேயும் போகமாட்டேன்…கொஞ்சம் சிரிங்க…”என்று அப்போதும் மது அவரை கிண்டல் செய்வது போல பேசிக் கொண்டிருக்க,தேவகியோ,

“நீ செய்யுற வேலை எல்லாம் அப்படி தான் இருக்கா….வாயும் வயிறுமா இருக்கிறியேனு பார்க்குறேன் இல்ல…”என்று கடுமையாக கூற,

“ஏன் அண்ணி இவகிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க ஓங்கி நாலு அறை அறைய வேண்டியது தானே…”என்று தேவகியை ஏற்றிவிடும் படி பேசிக் கொண்டே வந்து அமர்ந்தார் சுந்தரி.

“நீங்க போங்க அண்ணி…போய் சாப்பிடுங்க…நான் இங்க தான் இருப்பேன்…நான் பார்த்துக்குறேன்….”என்று கூறி தேவகியை அனுப்பி வைத்தார் சுந்தரி.தேவகி சென்றவுடன் மகளை முறைத்தவர் பக்கத்தில் அமர்ந்திருந்த சொந்தக்கார பெண்ணுடன் பேசி தொடங்கினார்.

மது கருத்தரித்து ஒரு மாதம் தான் ஆகிறது அதனால் அவளை மருத்துவர்  சற்று  கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.ரூபன் சென்னை வேலையை நல்ல முறையில் முடித்துவிட்டு இப்போது டெல்லி சென்றுவிட்டான் தன் குடும்பத்துடன்.டெல்லியில் அவனது வீட்டில் முதன் முதலில் மது நுழையும் போது அவளது முகம் அவ்வளவு பிராகசித்தது.ரூபன் தன்னிவளின் முகமாறுதல்களை ரசித்தவறே இருக்க அவளோ வீடு முழுவதையும் சுற்றிவிட்டு,

“அய்யோ…அத்தான் வீடு ரொம்ப நல்ல இருக்கு…எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு….”என்று ஆர்ப்பாட்டமாக கூற ரூபனுக்கு மனதில் எதையோ வென்றுவிட்ட உணர்வு.பின்னே தன்னவளுக்காகவே பார்த்து பார்த்து கட்டிண வீடு அல்லவா அவள் என்ன கூறுவாள் என்ற எதிர்பார்ப்போடு வந்தவனுக்கு மனைவி வீடு பிடித்துள்ளது என்பதை ஆர்பாட்டமாக கூறியது கணவனுக்கு ஒரு கர்வத்தைக் கொடுத்தது.

இந்நிலையில் அவர்களின் மகிழ்ச்சியை மேலும் கூட்டும் வகையாக மது கரு தரிக்க ரூபனின் வீடே அவளை தாங்கியது.இதில் தேவகிக்கு தான் மதுவின் சேட்டைகளால் விழி பிதிங்கியது.எதை செய்யாதே என்று கூறுகிறோமோ அதை தான் மது செய்துவிட்டு அவரிடம் வாங்கி கட்டிக் கொள்வாள்.அவளுக்கு எப்போது உதவும் மோகனா கூட இப்போது தேவகியின் பக்கம் பேச மது இப்போது ரூபனை ஒரு வழி செய்வாள்.

ரூபனுக்கு மதுவின் சேட்டைகள் எப்போது ரசிக்க செய்யும் என்பதால் அவனும் மனைவி கூறியவற்றை கேட்டு அவளை அவன் முறையில் சமாதானப்படுத்துவான்.நித்யாவின் திருமணம் நெருங்க ரூபனின் வீட்டில் உள்ளவர்களுக்கு மதுவை எவ்வாறு சமாளிப்பது என்பதே கவலையாகி போனது.இதோ டெல்லியில் இருந்து வந்ததிலிருந்து அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று செய்து வரவேற்பில் மயங்கி விழுந்திருந்தாள்.அதனாலே தேவகி அவளை முறைத்துக் கொண்டு நின்றார்.இப்போது தேவகி,மோகனாவுடன் சுந்தரியும் சேர்ந்துவிட்டதால் மது சற்று அடக்கி வாசித்தாள்.

மறுநாள் காலை அனைவருக்கும் அழகாக விடிந்தது.நித்யாவின் கழுத்தில் மங்கல நாணனைப் பூட்டி அவளை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான் மகேஷ்.வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மட்டும் பத்தாது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர் பூமிநாதனும்,வசந்தாவும்.ஒரு நிறைவான வாழ்விற்கு அன்பும்,பாசமும் காட்டும் மனிதர்கள் தேவை என்பதை தேவகி,ரூபன் போன்றோர் அவர்களுக்கு உணர்த்தி இருந்தனர்.

சில வருடங்களுக்கு பிறகு,

ஊட்டியில் உள்ள விருந்தினர்கள் தங்கும் விடுதியில் இருந்தனர் ரூபன் மற்றும் மதுவின் குடும்பத்தினர்.மூன்று நாட்கள் சுற்றுலா போல் வந்திருந்தனர்.ரூபனும்,மகேஷூம் தங்கள் நண்பன் ஒருவரின் காட்டேஜை புக் செய்திருந்தனர்.அப்போது தான் ஊட்டி வந்தடைந்தனர் அதனால் அவரவர் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வந்திருந்தனர்.ரூபன் தன் அறைக்கு வந்து கட்டிலில் சாய்ந்த நேரம்,

“ப்பா…ப்பா…”என்று மழலையில் அழைத்தவரே ஓடி வந்தாள் ரூபன்,மதுவின் புதல்வி நான்கு வயதான ரிதன்யா.மகள் ஓடிவருவதைக் கண்டு எழுந்து அவளை மடியில் அமர வைத்த ரூபன்,

“என்னடா செல்லம்…ஏன் இப்படி ஓடி வரீங்க…”என்று கேட்க,மகளோ

“அப்பா…மது என்னை அடிச்சுட்டா….”என்று குற்றபத்திரிக்கை வாசித்தாள்.

“மதுனு சொல்லக்கூடாது…அம்மானு சொல்லு…”என்று மெதுவாக தன் மகளுக்கு சொல்ல அவளோ,

“இல்லை மது தான் சொல்லுவேன்….”என்றாள் அழுத்தமாக.

“அப்படியே அம்மா போல தான்…எல்லாத்திலேயும் பிடிவாதம்…”என்று மனதிற்குள் நினைத்தான்.பின்னே வெளியில் சொல்ல முடியாதே அதற்கும் மகள் பினங்குவாள் என்று அறிந்தவன் அவளின் போக்கிலேயே சமாதானம் செய்ய தொடங்க,

“அப்பாவும்,பொண்ணும் என்ன கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க…”என்றபடி கையில் ஒன்றை வயதான புதல்வன் சிவாவை தூக்கிக் கொண்டு வந்தாள் மது.அன்னை வந்ததும் ரித்து முறைத்துக் கொண்டு இருக்க,

“பார்த்தீங்களா எப்படி முறைக்குறானு…”என்று மது கணவனிடம் முறையிட தகப்பனைக் கண்டவுடன் அவனிடம் தாவியது சிவா.

“எதுக்கு மது அவளை அடிச்ச…”என்று தகப்பன் மகளுக்காக கேட்க,

“கேளுங்கப்பா….என்னை இங்க அடிச்சாங்க…”என்று மகள் அடித்த இடத்தை காட்டி தகப்பனிடம் முறையிட்டாள்.

“என்னடி அடிச்சாங்க…ஊர்லேந்து வந்து டிரஸ் கூட மாத்தாம விளையாட போறேன்னு சொல்லுற அதனால கண்டிச்சா அடிச்சாங்கனு சொல்லுவியா….”என்று மது மகளிடம் எகிற ரித்து உதடு பிதுங்கி அழ தொடங்கினாள்.மனைவியை அதட்டலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மகளை சமாதானம் செய்ய தொடங்கினான் ரூபன்.இது எப்போதும் நடக்கும் ஒன்று தான்.ரிதன்யா அப்படியே மதுவைக் கொண்டு பிறந்திருந்தாள் அதனாலே தாய்க்கும் மகளுக்கும் அவ்வபோது முட்டிக் கொள்ளும் ரூபன் தான் இவர்கள் இடையில் மாட்டிக் கொண்டு திண்டாடுவான்.

“ம்க்கும்…பொண்ணை ஒன்னும் சொல்லிடக் கூடாது…”என்று நொடித்தவள் மகனை குளிப்பாட்டி உடை மாற்றிவிட்டாள்.அதற்குள் ரூபன் மகளை சமாதானம் செய்து அழைத்து வந்தவன் அவளை குளிப்பாட்டி உடை மாற்றிவிட்டு தானும் குளித்து வந்தான்.

மதுவும்,நித்யாவும் இரவு உணவிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.அங்கு வந்த வசந்தா,

“நித்தி…போ தம்பி முழிச்சிக்கிட்டான்….”என்று கூற,

“அச்சோ…அதுக்குள்ள முழிச்சிக்கிட்டானா…”என்று புலம்பியவாரே சென்றாள்.நித்யாவிற்கு இரு மகன்கள் ஒருவனுக்கு இரண்டு வயது ஆகிறது,இன்னொருவனுக்கு ஒரு வயது ஆகிறது.இருவரும் மிகவும் சேட்டைகார்கள் சமாளிப்பது சற்று கடினம்.நித்யா புலம்பியவாறே அறையின் உள்ளே வர அவள் வருவதற்குள் அறை முழுவதும் அவர்களின் துணிகளை பரப்பிவிட்டு இருவரும் அதற்கு நடுவில் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

மகேஷோ இருவரையும் அடக்கும் வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க,அறையின் உள்ளே வந்த நித்யா மகேஷை முறைத்துவிட்டு,

“டேய் ராம்…ரகு…இப்ப இரண்டு பேரும் சொல் பேச்சு கேட்டா ஆளுக்கு ஒரு சாக்லெட் தருவேன்….”என்று நித்யா கூறியவுடன்.தங்கள் சண்டையை விட்டுவிட்டு சமத்து பிள்ளைகளாக அம்மாவுடன் குளிக்க சென்றனர்.

“இவ்வளவு நேரம் நான் சொன்னேன் கேட்கல….இப்ப அம்மா சாக்லேட்னு சொன்னவுடனே எப்படி ஓடுறானுங்க…”என்று புலம்ப,அவனின் அருகில் வந்த நித்யா,

“போதும் புலம்பனது போங்க போய் எல்லா துணியையும் எடுத்து வைங்க…”என்று செல்லமாக மிரட்டிவிட்டு சென்றாள்.அவளது மிரட்டலில் இல நகை குடி கொண்டது மகேஷின் இதழ்களில்.

ரூபனும்,ரித்துவும் குளித்துவிட்டு வர அங்கே உணவருந்தும் அறையில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.செந்தில்நாதனும்,மோகனாவும் முன்பே உணவருந்திவிட்டு படுக்க சென்றிருக்க,தேவகி,சுந்தரி,வசந்தா மற்றும் மகேஷின் பெற்றோர்கள் என்று பெரியவர்கள் உணவருந்தி கொண்டிருக்க மது அவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

சிவா தேவகியிடம் சமர்த்தாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.ரித்து தன் தந்தையுடன் வந்தவள் ரூபனுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.அப்போது மகேஷின் குடும்பமும் இணைந்து கொண்டது.அனைவரும் உண்டுவிட்டு பெரியவர்கள் தங்கள் அறைக்கு செல்ல இளையவர்கள் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.நாளை எங்கு செல்லாம் என்று திட்டமிட்டு கொண்டிருக்க அப்போது மதுவின் கைபேசி அழைத்தது.நிவேதா தான் அழைத்திருந்தாள்.அவள் இப்போது யூஸ்-ல் இருக்கிறாள்.

நிவேதா இப்போது திருமதி.நிவேதா கௌதம்.ஆம் கௌதமுடன் திருமணம் முடிந்து ஒருவருடம் ஆகிறது.நிவேதா கல்லூரி படிப்பு முடித்து அவளது விருப்படி வெளி நாட்டில் வேலையும் கிடைத்தது.வசந்தா திருமணம் ஆகாத பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருந்தார்.நிவேதாவிற்கு திருமணம் என்றவுடன் கௌதமின் நினைவுகள் ஆக்கரமித்தன.நித்யாவின் திருமணத்தில் கௌதம் காதலை கூறியிருந்தான்.நிவேதா முதலில் மறுத்தவள் பின் கௌதமின் கன்னியமான அணுகுமுறையில் விரும்ப தொடங்கியிருந்தாள்.

நிவேதாவிற்கு கௌதம் மேல் பிடித்தம் இருந்தது தான் ஆனால் வீட்டில் கூறுவதற்கு சற்று தயக்கம் அதனால் அவள் ரூபனிடம் கூற அவன் இருவர் வீட்டிலும் பேசி சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தான்.இதோ நிவேதா அவளது விருப்படி வேலையில் இருக்கிறாள்.அவளுடன் ஆனந்தும் மேல் படிப்பிற்காக அவளுடன் இருக்கிறான்.கௌதம் அவ்வபோது சென்று பார்த்திவிட்டு வருவான்.

இன்னும் இருமாதங்களில் ஆனந்தின் படிப்பும்,நிவேதாவின் புராஜக்டும் முடிவடைவதாள் இருவரும் இந்தியா வரவிருக்கிறார்கள்.அவர்களை அழைத்து வருவதற்காக கௌதம் தற்பொழுது சென்றுள்ளான்.நிவேதா,ஆனந்த்,கௌதம் என்று ஒருவர் பின் ஒருவராக பேசிவிட்டு வைத்தனர்.

மறுநாள் காலை ஊட்டியை சுற்றி பார்க்க சென்றனர் அனைவரும்.ஊட்டி ஏரி,தாவரவியல் பூங்கா,ரோஜா தோட்டம் என்று ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை சுற்றிவிட்டு மூன்று நாட்கள் சுற்று பயணத்தை நிறைவு செய்து அனைவுரும் அவரவர் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.ரூபன் குடும்பமும் டெல்லிக்கு வந்துவிட்டனர்.அதீத களைப்பு காரணமாக அனைவரும் தூங்க சென்றுவிட ரூபன் தனக்கும் தன் மனைவிக்குமான பாலை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தான்.

மதுவோ மடிக்கணினி முன் அமர்ந்து ரூபனின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் விருப்பட்ட படியே சிஏ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவள்.தன் கணவனுக்கு இப்போது தொழிலில் உதவுகிறாள்.மதுவிடம் இருந்த மடிக்கணினியை பொறுமையாக வாங்கியவன்,

“விழி..முதல்ல பாலை குடி அப்புறம் பார்க்கலாம்…”என்று கூற மதுவும் எதுவும் வாதாடாமல் கணவன் கொடுத்த பாலை குடித்துவிட்டு மீண்டும் கணிணியை கேட்க அவளை முறைத்த ரூபன்,

“இன்னைக்கே முடிக்க வேண்டிய வேலையா…”என்று கேட்க,

“இல்ல…அத்தான் கொஞ்சம் தான் இருக்கு முடிச்சுட்டா எனக்கும் கொஞ்சம் பிரியா இருக்கும் அதான்….”என்றாள்.அவளது முகமே கூறியது களைப்பாக உள்ளாள் என்பது தெரிய,

“பரவாயில்லை விழி…நாளைக்கு பார்த்துக்கலாம் படு….”என்றவன் கணினியை அணைத்துவிட்டு மனைவியை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு படுக்க,

“என்ன இன்னைக்கு தான் நான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சேனா…”என்று சிணுங்கலாக கேட்டாள் மது.ரிதன்யா பிறந்த பிறகு ரித்து தான் எப்போதும் தந்தையின் மீது படுப்பது.இன்று அவளும்,சிவாவும் தேவகியுடன் தூங்க சென்றுவிட நீண்ட நாட்களுக்கு பிறகு மனைவியுடான தனிமை கிடைத்தது.சிரித்துக் கொண்டே,

“உன்னை யாரு தள்ளி இருக்க சொன்னா விழி…”என்று மனைவியை இறுக்கமாக அணைத்தபடியே கேட்டவன் அவள் பதில் கூறும் முன் அவளது இதழ்களில் தன் இதழ்லால் கவிபாட தொடங்க தன் மன்னவனின் காதலில் கரைந்தாள் அவனது மான்விழியாள்.அவனது மனதை மயக்கிய மான்விழியுடனான அவனது வாழ்வும் மேலும் செழிக்கட்டும்.

                      (நிறைவுற்றது)

Advertisement